உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

புதன், 18 செப்டம்பர், 2013

நான் என்பவள் பைத்தியக்காரி




அனேகப்பெயர் வைத்தாகிவிட்டது
அதனாலென்ன
ஆண்டொன்று கூடும்பொழுதெல்லாம்
அவசரப்பிரிவு நோயாளியின்
வாழ்வை குறித்த பயமென
தொற்றிக்கொண்டே வருகிறது
நாட்களின் நகர்வை பற்றிய
இருள்...

இன்னதென்று சொல்லாமல்
இதனாலென தள்ளாமல்
தட்டப்படும் கதவுகளை
திறந்தே வைத்திருக்க
சலிப்புற்ற வார்த்தைகள்
சருகுகளாய் பெருநிலத்தில் பரவ
அத்தனையும் ஒரு மொழியெடுத்து
சுவாசப்பை நெறிக்க

கைகளை விரித்த படியே
காற்றில் நீந்த ஆரம்பிக்கின்ற கற்பனை
எனையுடுத்தி
உண்மையின் நிர்வாணம் மறைக்க
அவ்வவ்போது
எழும் கேள்விகள்- எதைக் குறித்தோ,
அதன் குறியுடைக்க கிளம்பும் கோபமெல்லாம்
இந்நாளில் இல்லாத உனைப்பற்றியே நீள
அவகாசமெதும் கொடுக்காத
தற்கொலைக்கு தயராகிறது
உனைப்பற்றிய என் குறிப்புகள்...

செத்துப்போ
கனவுகளை கொடுத்து
கனவினை விடுத்து
செத்துப்போ

வார்த்தையற்ற கவிதைக்குள்ளிலிருக்கும்
காதலும்
கோபமும்
சொல்லா மோகமும்
உனைத்தீண்டும் முன்
செத்துப்போ

விந்தற்ற விதைகொண்டு
மாதம் பூக்கும்
பூவினைத் தீண்டா வண்டென
தொலைந்துபோ

காட்சிகள் முடியும் மட்டும்
கனவுகள் தொலையும் மட்டும்
வாழ்க்கையே முட்டும் மட்டும்
வலிகொடுத்த உணர்வினை விட்டு
தொலைந்துபோ

வாழத்தகுதியற்ற அன்பைக்கொண்டு
வானம் படைத்த
உலகைவிட்டு
தொலைந்துபோ

அனேகப்பெயர் வைத்தாகிவிட்டது
அதனாலென்ன
பைத்தியக்காரியென்ற பெயரையும்
சேர்த்தெழுங்கள்
என் கனவுக் கல்லறையில்.......




2 கருத்துகள்:

இந்திரா சொன்னது…

ரொம்ப நாளாச்சு உங்க வலைப்பூ வந்து..
நிறைய மிஸ் பண்ணிட்டேன் ரேவா..
இனி அடிக்கடி வருவேன்.

//
அனேகப்பெயர் வைத்தாகிவிட்டது
அதனாலென்ன
பைத்தியக்காரியென்ற பெயரையும்
சேர்த்தெழுங்கள்
என் கனவுக் கல்லறையில்.......
//

பைத்தியக்காரிக்கு என் வாழ்த்துக்கள்.

இப்படிக்கு
மற்றுமொரு பைத்தியக்காரி
:D

சாய்ரோஸ் சொன்னது…

உணர்வுகளும், வார்த்தைகளும் கவிதையை வரி வரியாய் ரசிக்க வைத்தது... மிகவும் கவர்ந்தது...
அதிலும்...
அவசரப்பிரிவு நோயாளி, தட்டப்படும் கதவுகள் என உவமைப்படுத்தியதும்... எனையுடுத்தி நிர்வாணம் மறைக்க..., எத்தனையோ பெயர் வைத்தாகிவிட்டது... பைத்தியக்காரி என்ற பெயரையும் கல்லறையில் எழுதச்சொல்லியது... என வார்த்தை கோர்த்ததும் மிக மிக ரசிக்க வைத்தது...