உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 9 ஜனவரி, 2014

எப்படியோ முடிந்துவிடுகிறதுஎப்படியோ முடிந்து விடுகிறது
எதிர்பார்த்த எதுவும்
அப்படியில்லாமல்..

எப்போதும் போலவே
இன்னும் சில நாட்கள்
அதிகமாய் கொல்லும்
அப்படியில்லாமல் போனது பற்றி

ஒவ்வொரு நாளில் முடிவில்
நுழைந்து கொள்கிற
அப்படியில்லாமல் போனதின் வலி
அடுத்து நாளுக்கான குறிப்பின் முனையையும்
கூர்தீட்டியே வைத்திருக்க

எப்படியோ மாறியிருக்கலாம்
நாம் ஆசைபட்ட படியோ
பிறர் ஆசைபட்டவாறோ
அப்படி மாறாதது போனதன்
குறிப்பு
மாறியதன் தோல்வியிலோ வெற்றியிலோ எழுதப்படலாம்
எழுதியவை அரித்துக்கொண்டேதானிருக்கும்
வேறு வழிகளில்லை
விதைத்துப்போட்ட எதிர்பார்ப்புகளிலிருந்து
துளிர்த்திருக்கும் அதிருப்தியோடு
கடந்து போகும்
நேற்றைப்போல இன்றும்
இன்றைப்போல இனிவரும்
என்றும்

எப்படியோ முடிந்துவிடுகிறது
எதிர்பார்த்த எதுவும்
அப்படியில்லாமல்..4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எதிர்ப்பார்ப்பே வேண்டாம்...

Chellappa Yagyaswamy சொன்னது…

எதிர்பார்ப்புகள் என்றுமே ஏமாற்றம் அளிப்பவை தாம்..

இந்திரா சொன்னது…

//வேறு வழிகளில்லை
விதைத்துப்போட்ட எதிர்பார்ப்புகளிலிருந்து
துளிர்த்திருக்கும் அதிருப்தியோடு
கடந்து போகும்
நேற்றைப்போல இன்றும்
இன்றைப்போல இனிவரும்
என்றும்
//

சே. குமார் சொன்னது…

கவிதை அருமை....
வாழ்த்துக்கள்.