பூப்பெய்த பிள்ளையை ஈர விழியில்
வாங்கிக்கொள்கிற தாயைப்போலவே தயங்கி நிற்கிறோம் பேசத் தொடங்கும் முன் புன்னகை மையிட்டு எழுதிப் பார்க்கவோ பார்வை உரசலோ எண் பரிமாற்றமோ கை குலுக்கலோ அமைதி உடைக்கும் எதுவோ சட்டென்று நிகழும் கணத்திற்காய் நீயும் காத்திருக்கலாம் விலகி வந்த பின்னும் விட்டுப் பிரியா தேசத்து வாசமென மாறிப்போன பின் இப்படியாய் நிகழும் சந்திப்புகளில் பேசித்தான் புரியவைக்க வேண்டுமா என்ன?...
வியாழன், 12 பிப்ரவரி, 2015
வழிப்போக்கனின் வீதி
தீர்மானங்களில் இசைக்கிறாய்

ஒரு சாமானியனைப்போல் என் முன் நிற்காதே
வேசம் களை வெளுத்துப் போன சட்டை அவிழ்
மாந்திரீக வார்த்தைகளின் பின்னிருக்கும் நிர்வாணம் காண் நிதானித்து பேசு நிதர்சனத்தில் நில் மூச்சுவாங்க உனைத்தேடு கிடைத்ததில் பிழையிருந்தால் கண்ணீர் சிந்து உண்மையிருப்பின் உயிர்தொட்டு உன்னைத் திருத்து கருத்து சொல்வதாய் கடந்து...
கனவில் இருப்பு
கவலை

இனி கவலையில்லையென்ற பாவனையில் எழுதத் தொடங்குகின்ற வரிகளுக்குள் எங்கோ ஒளித்து வைக்கப்படுகிறது கவலை குறித்த பயம்
பயமற்று தொடர்வதாய் நினைத்து ஒவ்வொரு நிறுத்தத்திலும் தன்னை சரிசெய்து கொள்ள ஆரம்பித்த இடத்தில் ஒளித்துவைக்கப்பட்டதாய் நினைத்த கவலை கொஞ்சம் கொஞ்சமாய் தன்னை அவிழ்த்துவிட கவலைகுறித்த கவலையொன்றை...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)