உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 22 மே, 2015

இன்மையின் பெருவெளிச் சுவடுகள்


*
அத்தனை நம்பிக்கைக்குப் பிறகும்
சுவடற்று திரும்புகிற பாதைகள்
வழித்துணையாக்கிக் கொள்கின்றன
தெருவிளக்கை


எதிர்பார்ப்பின் எல்லா வாசலிலும்
துக்கத்தின் சாயலோடு நிற்பவர்களை
நிறமாற்றிப் பெய்கிறது மழை


ஒளியடைத்துக் கேவவிடும் இருள்
தக்கவைத்திருக்கின்ற தருணத்தின் வெளிச்சம்
காலத்திற்குமான தலைக்கவசம்


இருப்பதில் இல்லாமல் போகும் தூரம்
திருத்திக் கொடுக்கின்ற பயண வழியின்
சுவடுகளாகிறது
திரும்பமுடியா பெருவெளி- ரேவா

painting : Alina Cristina

0 கருத்துகள்: