உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

அதுவரை இது நிகழாதிருக்கட்டும்
வக்கிரம் நிறைந்த மனதின் வெயில் வாட்டுகிறது  
புறச்சூழலைநாம் நம் அறைகளுக்குத் திரும்புகிறோம்  
செண்ட்ரலைஸ் ஏசிகள் பொருத்தப்பட்டதாக நம்பப்படுகிற அறை  
ஓர் அட்டைப் பூச்சி
 

இன்க்கிரீஸ் மோடில் கூடுகிற குளிரின் எண்ணிக்கை
குசேலனின் கைப்பண்டம்


நமக்கு கவலைகள் இல்லை  
வெயில் தீர்ந்துவிட்டதாய் நம்புகிறது  
சொரணைக்குப் பழகிய தோலின் முதல் அடுக்குத் தகவல்
  


தனித்த செய்தியில் உரையாடுகிற 
கைகள் கொண்டிருக்கிற பழக்கம்
ரோட்டோர ஓவியக் கைகளுக்குக் கிடைப்பதில்லை
ஆனாலும் யாம் தெரிந்தே செய்கிறோம்


இச்சில்லறைகள்
தரையில் விரிந்திருக்கும் பிரம்மாண்டத்தின் கண்களைக்  
குருடாக்கப் போவதில்லை
  


விழுந்து கிடக்கிற ஒன்றின் தெளிவு
வானத்தை பார்க்கையில் வசப்படுவதும் வானமாகவே இருக்கிறதுஆனவரை அழிக்கிற உரிமையை மழைக்கே கொடுக்கிறோம்
  


சிறுதூரல் கிளப்புவது உஷ்ணத்தையென்றாலும் உள்ளிருப்பது வெளியேறுதல் பெருமழைக்குச் சமமே

அட்லீஸ்ட்  
இந்த மழை 
 மனதின் வெயிலை புறச்சூழலின் வழியாவது குறைக்கட்டும்  
அதுவரை இது நிகழாதிருக்கட்டும்

0 நேசித்த உள்ளங்கள்: