உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

காதல் புரிந்து கொள்ளும்...

நன்றி  : கூகிள்

கட்டுப்பாடுகளை  தகர்த்தெறிந்த
ஓர் மாலை....
உன் விழிமொழியை வாங்கியபடியே
பலமையில் கடந்த
என் காதலை,
உன் மொழி சம்மதத்தில் உணர்த்திய
நேரம் அது...

பூட்டி வைத்திருந்த
எந்தன் காதலை,
உன் ஊடல்  வழியே
நீ உடைத்தெரிந்து,
உணர்த்திய காலம் அது...

உணர்வுகள் உயிர் தீண்ட,
ஒன்றும் அறியா
எந்தன் நெஞ்சில்,
அலைகடலென கனவுகள் மையல்
கொண்ட காலம் அது...

அர்த்தம் இல்லா
பேச்சில்,
அன்பு மேலிட்ட காலம் அது...

ஒன்றாய் வாழ்வதற்கு
முன்னே....
இப்படித் தான் நம் வாழ்க்கை
என்ற, எண்ணங்கள்
மனக்கூட்டில் சிறுகச்
சிறுகச் வளர்ந்த
காலம் அது....

உன் கரம் பற்றி நடக்கையிலே,
என் உலகமே நீயாய்,
நான் உணர்ந்த காலம் அது...

புற்றீசல்  என
வந்து சேர்ந்த
விதி என்னும்  வில்லன்,
விரட்டியே,
நாம்,  நம் காதல் தொலைக்க,
உன் விரல் பற்றிய நான்
வழி தெரியாமல்,
வலியில் இருக்கின்றேன்....

நீ என்னை புரிந்து கொள்ளவில்லை
என்பது உன் நிராகரிப்பில்
நான் அறிந்தேன்...
ஆனாலும்,
என்னை நம்
காதல் புரிந்து கொள்ளும்.....

அன்புடன் 
ரேவா 

( வணக்கம் நண்பர்களே, நலமா?... மதுரைல சித்திரை திருவிழா நடந்ததால ஒரு பத்து நாள் பதிவுலகம் பக்கமே வரல, அதனால யார் பதிவையும் படிக்க முடியல, இனி வழக்கம் போல் என் பயணம் தொடரும்.... ஹி ஹி... )

40 கருத்துகள்:

Unknown சொன்னது…

காதல் வலியுடன் காதலில் விழாதவருக்கு உணர்த்தும் கவிதை அழகு!

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அர்த்தமுள்ள காதல் கவிதை...

Chitra சொன்னது…

நீ என்னை புரிந்து கொள்ளவில்லை
என்பது உன் நிராகரிப்பில்
நான் அறிந்தேன்...
ஆனாலும்,
என்னை நம்
காதல் புரிந்து கொள்ளும்.....

...nice.

Chitra சொன்னது…

சித்திரை திருவிழா பற்றியும் எழுதுங்க. :-)

வேங்கை சொன்னது…

//நீ என்னை புரிந்து கொள்ளவில்லை
என்பது உன் நிராகரிப்பில்
நான் அறிந்தேன்...
ஆனாலும்,
என்னை நம்
காதல் புரிந்து கொள்ளும்.....//

புரியுது புரியுது ......

வாழ்த்துக்கள் ...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//பூட்டி வைத்திருந்த
எந்தன் காதலை,
உன் ஊடல் வழியே
நீ உடைத்தெரிந்து,
உணர்த்திய காலம் அது..//

அசத்தல்....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//புற்றீசல் என
வந்து சேர்ந்த
விதி என்னும் வில்லன்,
விரட்டியே,
நாம், நம் காதல் தொலைக்க,
உன் விரல் பற்றிய நான்
வழி தெரியாமல்,
வலியில் இருக்கின்றேன்.//

கண்ணீர்.....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//நீ என்னை புரிந்து கொள்ளவில்லை
என்பது உன் நிராகரிப்பில்
நான் அறிந்தேன்...
ஆனாலும்,
என்னை நம்
காதல் புரிந்து கொள்ளும்..//

நெஞ்சு கரையுது மக்கா......

எவனோ ஒருவன் சொன்னது…

////நீ என்னை புரிந்து கொள்ளவில்லை
என்பது உன் நிராகரிப்பில்
நான் அறிந்தேன்...
ஆனாலும்,
என்னை நம்
காதல் புரிந்து கொள்ளும்.....////

இந்த வரிகள் என்னை மிகவும் பாதித்துவிட்டன. என்னால் உணர மட்டுமே முடிந்த ஒன்றை, நீங்கள் வார்த்தைகளாக செதுக்கி இருக்கிறீர்கள். அருமை ரேவா....

logu.. சொன்னது…

\\நீ என்னை புரிந்து கொள்ளவில்லை
என்பது உன் நிராகரிப்பில்
நான் அறிந்தேன்...
ஆனாலும்,
என்னை நம்
காதல் புரிந்து கொள்ளும்.....\\

நிச்சயமாக.

Ram சொன்னது…

இதை எப்படி விமர்சிப்பது.. நிரூபன் நண்பரே.!! வந்துட்டு போய்டீங்களா.? இல்ல இனிமேல் தான் வரணுமா.?

இவுங்க சோகமா சொல்லியிருக்காங்க.. வந்து சிரிப்பு மூட்ட யார கூப்பிடலாம்.. ம்ம்.. மனோ.!! நாஞ்சில் மனோவை கூப்பிடலாம்னு பாத்தா மனுசன் சீரியஸா கமண்ட் போட்டுட்டு எஸ் ஆகிட்டாரே.!! யார கூப்பிடுறது.? நானே சிரிக்க வைக்கிறேன்.. அய் சிரிங்க.. அய் சரிங்க.. கிக்கிலிக்காம்..

நிரூபன் சொன்னது…

தம்பி கூர்மதியன் said...
இதை எப்படி விமர்சிப்பது.. நிரூபன் நண்பரே.!! வந்துட்டு போய்டீங்களா.? இல்ல இனிமேல் தான் வரணுமா.?//

நான் நினைத்தேன், சகோ கூர் மதியன் விமர்சித்திருப்பார், நாம கொஞ்சம் லேட்டா வரலாம் என்று, நம்மளை வம்பில் மாட்டி விட்டிட்டீங்களே...

ஹி...ஹி...

நிரூபன் சொன்னது…

கட்டுப்பாடுகளை தகர்த்தெறிந்த
ஓர் மாலை....
உன் விழிமொழியை வாங்கியபடியே
பலமையில் கடந்த
என் காதலை,
உன் மொழி சம்மதத்தில் உணர்த்திய
நேரம் அது...//

கவிதையின் ஆரம்ப வரிகளில் காதல் பிறப்பெடுத்துக் கொள்கிறது.

நிரூபன் சொன்னது…

பூட்டி வைத்திருந்த
எந்தன் காதலை,
உன் ஊடல் வழியே
நீ உடைத்தெரிந்து,
உணர்த்திய காலம் அது...//

கீ போர்ட்டில் பிழை போல..

உடைத்தெறிந்து...என வந்தால் நன்றாக இருக்கும்.

நிரூபன் சொன்னது…

ஒன்றாய் வாழ்வதற்கு
முன்னே....
இப்படித் தான் நம் வாழ்க்கை
என்ற, எண்ணங்கள்
மனக்கூட்டில் சிறுகச்
சிறுகச் வளர்ந்த
காலம் அது....//

காதல் தோல்விகளின் பின்னரான மிகப் பெரும் மன அழுத்தத்திற்குரிய முதலாவது காரணம்...
நாம் காதலிக்கும் நாட்களில் கட்டிக் கொள்ளும் மனக் கோட்டைகள் தான்..

இந்த கற்பனைக் கோட்டைகள் உடைகையில் தான் வலியும் வேதனைகளும் வந்து சேர்கின்றன.

இவ் வரிகளில் சிறுகச் சிறுக எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்த காதற் பராயத்தைக் கவிதை அழகாகச் சொல்லுகிறது.

நிரூபன் சொன்னது…

உன் கரம் பற்றி நடக்கையிலே,
என் உலகமே நீயாய்,
நான் உணர்ந்த காலம் அது.......//

இது ஒரு வசந்த காலம் தானே?
வாழ்வில் என்றுமே மறக்க முடியாத கால்ம் இது தான், இதனை அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் என்பது போல கவிதாயினியின் வார்த்தைகளும் இங்கே பொருள் விளம்பி நிற்கின்ற்ன.

நிரூபன் சொன்னது…

நீ என்னை புரிந்து கொள்ளவில்லை
என்பது உன் நிராகரிப்பில்
நான் அறிந்தேன்...//

ஆண்களின் சுய ரூபமா? இல்லை விதி செய்த சதியா காதலுக்கு காரணம் எனக் கவிதையின் அடிப்படையில் நோக்குகையில் ஆணின் சதி என்பதை மறைத்து, நீங்கள் விதிக்கு முதன்மையளித்திருக்கிறீர்கள். காரணம்- காதலன் கவிதையிலும் தண்டிக்கப்படக் கூடாது எனும் நல்ல எண்ணத்திற்காகவா?

நிரூபன் சொன்னது…

ஆனாலும்,
என்னை நம்
காதல் புரிந்து கொள்ளும்.....//

இவ் வரிகள் காதல் என்றுமே முதலிடத்தில் உங்கள் மனதில் அழியாதிருக்கும் என்பதனை அழகுறச் சொல்லி நிற்கிறது.

நிரூபன் சொன்னது…

காதல் புரிந்து கொள்ளும்.....

விதியின் சூழ்ச்சியால் சிறகொடிந்த காதற் பறவையின் வலி நிறைந்த நினைவுகளை, பாடி நிற்பதோடு, காதல் மீதான வைராக்கியத்தையும் உணர்த்தி நிற்கிறது.

சித்தாரா மகேஷ். சொன்னது…

/////நீ என்னை புரிந்து கொள்ளவில்லை
என்பது உன் நிராகரிப்பில்
நான் அறிந்தேன்...////

உயிரோட்டமாய் அமைந்த வரிகளாய் உள்ளது மிக மிக அருமைங்க...

என் உயிரே.

ரேவா சொன்னது…

விக்கி உலகம் said...

காதல் வலியுடன் காதலில் விழாதவருக்கு உணர்த்தும் கவிதை அழகு!

நன்றி சகோ, உன் வருகைக்கும் மறுமொழிக்கும் :-)

ரேவா சொன்னது…

# கவிதை வீதி # சௌந்தர் said...

அர்த்தமுள்ள காதல் கவிதை...

நன்றி நண்பரே :-)

ரேவா சொன்னது…

Chitra said...

நீ என்னை புரிந்து கொள்ளவில்லை
என்பது உன் நிராகரிப்பில்
நான் அறிந்தேன்...
ஆனாலும்,
என்னை நம்
காதல் புரிந்து கொள்ளும்.....

...nice.

நன்றி சகோ உங்கள் மறுமொழிக்கு :-)

ரேவா சொன்னது…

Chitra said...

சித்திரை திருவிழா பற்றியும் எழுதுங்க. :-)

சகோ பதிவு எழுதிட்டு தான் இங்க மறுமொழியே போட வந்தேன்.. ஹி ஹி நன்றி சகோ

ரேவா சொன்னது…

வேங்கை said...

//நீ என்னை புரிந்து கொள்ளவில்லை
என்பது உன் நிராகரிப்பில்
நான் அறிந்தேன்...
ஆனாலும்,
என்னை நம்
காதல் புரிந்து கொள்ளும்.....//

புரியுது புரியுது ......

வாழ்த்துக்கள் ...

புரியுதா?.... என்ன ...ஹி ஹி இப்போ தான் எனக்கு புரியுது ஹ ஹ நன்றி நண்பா, உங்கள் மறுமொழிக்கு...

ரேவா சொன்னது…

MANO நாஞ்சில் மனோ said...

//பூட்டி வைத்திருந்த
எந்தன் காதலை,
உன் ஊடல் வழியே
நீ உடைத்தெரிந்து,
உணர்த்திய காலம் அது..//

அசத்தல்....

ஹ ஹ நன்றி நண்பா

ரேவா சொன்னது…

MANO நாஞ்சில் மனோ said...

//புற்றீசல் என
வந்து சேர்ந்த
விதி என்னும் வில்லன்,
விரட்டியே,
நாம், நம் காதல் தொலைக்க,
உன் விரல் பற்றிய நான்
வழி தெரியாமல்,
வலியில் இருக்கின்றேன்.//

கண்ணீர்.....

:-) :-(

ரேவா சொன்னது…

MANO நாஞ்சில் மனோ said...

//நீ என்னை புரிந்து கொள்ளவில்லை
என்பது உன் நிராகரிப்பில்
நான் அறிந்தேன்...
ஆனாலும்,
என்னை நம்
காதல் புரிந்து கொள்ளும்..//

நெஞ்சு கரையுது மக்கா......

நன்றி நண்பா...சாரி நன்றி மக்கா... உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் :-)

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

////நீ என்னை புரிந்து கொள்ளவில்லை
என்பது உன் நிராகரிப்பில்
நான் அறிந்தேன்...
ஆனாலும்,
என்னை நம்
காதல் புரிந்து கொள்ளும்.....////

இந்த வரிகள் என்னை மிகவும் பாதித்துவிட்டன. என்னால் உணர மட்டுமே முடிந்த ஒன்றை, நீங்கள் வார்த்தைகளாக செதுக்கி இருக்கிறீர்கள். அருமை ரேவா....

நன்றி நன்றி நன்றி ஆனந்த்...

ரேவா சொன்னது…

logu.. said...

\\நீ என்னை புரிந்து கொள்ளவில்லை
என்பது உன் நிராகரிப்பில்
நான் அறிந்தேன்...
ஆனாலும்,
என்னை நம்
காதல் புரிந்து கொள்ளும்.....\\

நிச்சயமாக.

ம்ம்ம்ம்ம் நிச்சயமாக புரிந்து கொள்ளும் நன்றி நண்பா...

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

இதை எப்படி விமர்சிப்பது.. நிரூபன் நண்பரே.!! வந்துட்டு போய்டீங்களா.? இல்ல இனிமேல் தான் வரணுமா.?

இவுங்க சோகமா சொல்லியிருக்காங்க.. வந்து சிரிப்பு மூட்ட யார கூப்பிடலாம்.. ம்ம்..
மனோ.!! நாஞ்சில் மனோவை கூப்பிடலாம்னு பாத்தா மனுசன் சீரியஸா கமண்ட் போட்டுட்டு எஸ் ஆகிட்டாரே.!! யார கூப்பிடுறது.? நானே சிரிக்க வைக்கிறேன்.. அய் சிரிங்க.. அய் சரிங்க.. கிக்கிலிக்காம்..

ஹி ஹி..சோகமா சொல்லிருக்கேனா, நான் என் முடிவுல தீரக்கமா இருக்கேன்கிற மாதிரிதானே கவிதை... போங்க சகோ...அப்பறம் நான் நல்லா சிரிச்சேன்.... ஹ ஹ ஹ...

ரேவா சொன்னது…

நிரூபன் said...

தம்பி கூர்மதியன் said...
இதை எப்படி விமர்சிப்பது.. நிரூபன் நண்பரே.!! வந்துட்டு போய்டீங்களா.? இல்ல இனிமேல் தான் வரணுமா.?//

நான் நினைத்தேன், சகோ கூர் மதியன் விமர்சித்திருப்பார், நாம கொஞ்சம் லேட்டா வரலாம் என்று, நம்மளை வம்பில் மாட்டி விட்டிட்டீங்களே...

ஹி...ஹி...சகோ நீயுமா?....

ரேவா சொன்னது…

நிரூபன் said...

கட்டுப்பாடுகளை தகர்த்தெறிந்த
ஓர் மாலை....
உன் விழிமொழியை வாங்கியபடியே
பலமையில் கடந்த
என் காதலை,
உன் மொழி சம்மதத்தில் உணர்த்திய
நேரம் அது...//

கவிதையின் ஆரம்ப வரிகளில் காதல் பிறப்பெடுத்துக் கொள்கிறது.

கரெக்ட் அஹ சொன்னேங்க சகோ

ரேவா சொன்னது…

நிரூபன் said...

பூட்டி வைத்திருந்த
எந்தன் காதலை,
உன் ஊடல் வழியே
நீ உடைத்தெரிந்து,
உணர்த்திய காலம் அது...//

கீ போர்ட்டில் பிழை போல..

உடைத்தெறிந்து...என வந்தால் நன்றாக இருக்கும்.

மாற்றிக்கொள்கிறேன் சகோ

ரேவா சொன்னது…

நிரூபன் said...

ஒன்றாய் வாழ்வதற்கு
முன்னே....
இப்படித் தான் நம் வாழ்க்கை
என்ற, எண்ணங்கள்
மனக்கூட்டில் சிறுகச்
சிறுகச் வளர்ந்த
காலம் அது....//

காதல் தோல்விகளின் பின்னரான மிகப் பெரும் மன அழுத்தத்திற்குரிய முதலாவது காரணம்...
நாம் காதலிக்கும் நாட்களில் கட்டிக் கொள்ளும் மனக் கோட்டைகள் தான்..

இந்த கற்பனைக் கோட்டைகள் உடைகையில் தான் வலியும் வேதனைகளும் வந்து சேர்கின்றன.

இவ் வரிகளில் சிறுகச் சிறுக எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்த காதற் பராயத்தைக் கவிதை அழகாகச் சொல்லுகிறது.

அழகான புரிதல் சகோ...ஆச்சிரியப்பட்டேன் உங்கள் மறுமொழி கண்டு நன்றி சகோ :-)

ரேவா சொன்னது…

நிரூபன் said...

உன் கரம் பற்றி நடக்கையிலே,
என் உலகமே நீயாய்,
நான் உணர்ந்த காலம் அது.......//

இது ஒரு வசந்த காலம் தானே?
வாழ்வில் என்றுமே மறக்க முடியாத கால்ம் இது தான், இதனை அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் என்பது போல கவிதாயினியின் வார்த்தைகளும் இங்கே பொருள் விளம்பி நிற்கின்ற்ன.

ஹி ஹி நன்றி சகோ

ரேவா சொன்னது…

நிரூபன் said...

நீ என்னை புரிந்து கொள்ளவில்லை
என்பது உன் நிராகரிப்பில்
நான் அறிந்தேன்...//

ஆண்களின் சுய ரூபமா? இல்லை விதி செய்த சதியா காதலுக்கு காரணம் எனக் கவிதையின் அடிப்படையில் நோக்குகையில் ஆணின் சதி என்பதை மறைத்து, நீங்கள் விதிக்கு முதன்மையளித்திருக்கிறீர்கள். காரணம்- காதலன் கவிதையிலும் தண்டிக்கப்படக் கூடாது எனும் நல்ல எண்ணத்திற்காகவா?

கண்டிப்பாக அந்த எண்ணத்திற்காக மட்டுமே சகோ... நேசித்த ஒருவரை, வெறுத்தல் என்பது அத்துணை சுலபம் அன்றே..நன்றி சகோ

ரேவா சொன்னது…

நிரூபன் said...

ஆனாலும்,
என்னை நம்
காதல் புரிந்து கொள்ளும்.....//

இவ் வரிகள் காதல் என்றுமே முதலிடத்தில் உங்கள் மனதில் அழியாதிருக்கும் என்பதனை அழகுறச் சொல்லி நிற்கிறது.

ஆமாம் சகோ என்றுமே என் மனதில் காதலுக்கு (அன்புக்கு) தான் முதலிடம் :-)

ரேவா சொன்னது…

நிரூபன் said...

காதல் புரிந்து கொள்ளும்.....

விதியின் சூழ்ச்சியால் சிறகொடிந்த காதற் பறவையின் வலி நிறைந்த நினைவுகளை, பாடி நிற்பதோடு, காதல் மீதான வைராக்கியத்தையும் உணர்த்தி நிற்கிறது.

நன்றி நன்றி சகோ உங்கள் மறுமொழிகள் அத்தனைக்கும்...

ரேவா சொன்னது…

சித்தாரா மகேஷ். said...

/////நீ என்னை புரிந்து கொள்ளவில்லை
என்பது உன் நிராகரிப்பில்
நான் அறிந்தேன்...////

உயிரோட்டமாய் அமைந்த வரிகளாய் உள்ளது மிக மிக அருமைங்க...

நன்றி.சித்தாரா ..