வணக்கம் நண்பர்களே... நான் நேசிக்கும் என் மதுரையைப் பற்றியும் , மதுரையின் சிறப்பாய் இருக்கும் மீனாக்ஷி அம்மன் சித்திரைத் திருவிழா நாட்களைப் பற்றியும் பதிவு போடுவதில் மகிழ்ச்சியும், தாயின் மடியில் தவழும் நிம்மதியும் அடைகின்றேன்...
.இந்த சித்திரைத் திருவிழா பத்து நாட்கள் மிக விமர்சையாக நடக்கும். சைவமும், வைணவமும், இணைந்து கொண்டாடும் ஒரு பெருவிழா என்றால், அது மதுரை சித்திரைத் திருவிழா தான்..
சைவமும் வைணவமும் போட்டிப் போட்டுக்கொண்டிருந்த நேரத்தில், இருவரையும் இணைக்கும் விதத்தில் ,வேறு வேறு காலங்களில் நடந்து கொண்டிருந்த, மதுரை மீனாக்ஷி அம்மனின் திருவிழாவையும், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தையும் ,திருமலை நாயக்கர் மன்னர், ஒன்றாய் இணைத்து கொண்டாடும் வழக்கத்தை உருவாக்கினார் என்பது வரலாறு...
படங்கள் : என் சகோதரன் எடுத்தது |
படங்கள் : என் சகோதரன் எடுத்தது |
அதோடு மட்டும் அல்லாது மீனாக்ஷி அம்மன் கோவிலில் மாதந் தோறும் திருவிழாக்கள் நடக்கும்...வருடத்தில் எங்கும் இல்லாத படி இங்கு தான் 294 நாட்களில் திருவிழாக்கள் நடைபெறும்...இது வேறு எங்கும் காணப் பெறாத ஒன்று எனபது இக் கோவிலின் சிறப்பு..
சித்திரைத் திருவிழா நடைபெறும் பத்து நாளும் அம்மனும் சுந்தரேஸ்வரரும் வித விதமாய் பல்வேறு வாகனத்தில் காட்சி தருவார்கள்
முதல் நாள்: கர்ப்பக விருட்சம் மற்றும் சிம்ம வாகனம்
சித்திரை திருவிழாவின் முதல் நாள், சொக்கர் கர்ப்பக விருச்சத்திலும், அம்மன் : சிம்ம வாகனத்திலும் காட்சி தருவார்கள்....
இந்த காட்சியின் நோக்கம் இறைவன் உலகத்தின் ஆதாரமாய் இருப்பவன் என்பதைக் குறிக்கும் பொருட்டு...கற்பக விருட்சம் கேட்டதை எல்லாம் கொடுக்கும் என்ற பொதுவான கருத்துக்கு, உயிர் சேர்க்க, மக்கள் எந்த வரம் வேண்டி நின்றாலும் இங்கு கிடைக்கும் என்பதை குறிக்க ஐயனும், கேட்டது எல்லாம் கிடைத்து விட்டால் மனித உயிர்கள் ஆணவப் பேய்கொண்டு ஆடுவார் என்பதால் அதை அடக்க அம்மன் சிம்மவாகனத்திலும் வருவதாய் பொருள்,
இரண்டாம் நாள் : அன்ன வாகனம் மற்றும் பூத வாகனம்
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாள்,
மீனாச்சியும், சொக்கரும், அன்ன மற்றும் பூத வாகனத்தில் எழுந்தருள்வர்..ஐம் பூதங்களையும், மனிதன் அடக்கி வாழ்வில் முக்தி பெறவேண்டும், என்பதற்காய் அய்யன் பூத வாகனத்திலும், நல்லது கெட்டதும் கலந்திருக்கும் இந்த உலகத்தில் நல்லதை மட்டும் நாம் கருத்தில் வைக்க வேண்டும் என்பதற்காய் மீனாக்ஷி அம்மன் அன்ன வாகனத்திலும் காட்சி தருவார்கள்...
மீனாச்சியும், சொக்கரும், அன்ன மற்றும் பூத வாகனத்தில் எழுந்தருள்வர்..ஐம் பூதங்களையும், மனிதன் அடக்கி வாழ்வில் முக்தி பெறவேண்டும், என்பதற்காய் அய்யன் பூத வாகனத்திலும், நல்லது கெட்டதும் கலந்திருக்கும் இந்த உலகத்தில் நல்லதை மட்டும் நாம் கருத்தில் வைக்க வேண்டும் என்பதற்காய் மீனாக்ஷி அம்மன் அன்ன வாகனத்திலும் காட்சி தருவார்கள்...
மூன்றாம் நாள் : இராவண கைலாச பர்வதம் - கேட்டதை தரும் காமதேனு
சித்திரைத் திருவிழாவின் மூன்றாம் நாள் மீனாச்சியும், சொக்கரும், இராவண கைலாச பர்வதம் - கேட்டதை தரும் காமதேனுவாகனத்தில் எழுந்தருள்வர்...
நான்காம் நாள் : தங்கப் பல்லக்கில் பவனி
சித்திரைத் திருவிழாவின் நான்காம் நாள்,
மீனாச்சியும் சொக்கரும் தங்கப் பல்லக்கில் உலா வருவார்கள்..இந்தப் பவனியின் நோக்கம், இந்தப் பலக்கில் சாமியின் திருவுருவங்களை திரைச்சீலை மறைத்திருக்கும்... நம் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று இறைவன் அன்றி யாவரும் அறியோர்.நல்லதும்,கெட்டதும் கலந்திருக்கும் உலகத்தில், நல்லவைகளுக்கு மட்டுமே மனதில் இடம் கொடுத்து நெறியோடு மனிதர்கள் வாழவேண்டும் என்பதை உணரத்தவே இந்த பவனி...
ஐந்தாம் நாள் : குதிரை வாகனம்
சித்திரைத் திருவிழாவின் ஐந்தாம் நாள்,
அம்மனும், சுந்தரேஸ்வரரும் குதிரை வாகனத்தில் உலாவருவார்கள்..அறம், பொருள், இன்பம், வீடு பேறு, என்பவை குதிரையின் நான்கு கால்களைக் குறிக்கும் தம் மனக் குதிரையை அடக்கி சரியான வழியில் செல்பவன், இறைவனை அடைவான் என்பதே இந்த காட்சியின் நோக்கம்..
வணக்கம் நண்பர்களே, நம்ம சகோ சித்ரா கேட்டு கொண்டதன் பெயரில் இந்த சித்திரைத் திருவிழா பதிவை வாய்மொழியாக கேட்டும், நான் படித்தும், தெரிந்தும் இருந்த விசயங்களை பதிவாய் வடித்திருக்கின்றேன்.. மொத்தம் பத்து நாள் நடக்கும் திருவிழாக்களில் ஐந்து நாட்களின் விழாக்களை பதிவாய் தொகுத்து விட்டேன்... மீதம் நாளையப் பதிவில்... இந்த பதிவில் தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டவும்.. திருத்திக் கொள்கின்றேன் நண்பர்களே....
படங்கள் : நன்றி கூகிள், நன்றி தினமலர்
24 கருத்துகள்:
நேரில் ரசித்த அனுபவம் கிடைத்தது...
நன்றி மற்றும் வாழ்த்துக்கள் ரேவா...
இதை படிச்சு படிச்சு போர் அடிச்சிடுச்சுங்க.. மதுரைன்னா எனக்கு பிடிக்கும் தான்.. அதுக்குன்னு இப்ப எந்த பக்கம் திரும்பினாலும் மதுரையே வா.? இதுல தமிழ்வாசி ப்ரகாஷ் வேற சாட்ல வந்து மதுரை பெருமையை ஓதுறார்.. ஹி ஹி..
ஆன்மீகத்துல நான் படு வீக்..
very nice photos. நல்ல பகிர்வுங்க.
PRESENT MISS
PILLYARAPPA ELLARIUM KAAPATHU...
PRESENT MISS
PILLYARAPPA ELLARIUM KAAPATHU...
படங்கள் நிறைந்த அருமையான பதிவு.
மதுரை சித்திரை திருவிழாவை நேரில் பார்த்தது போன்ற உணர்வு.
வாழ்த்துக்கள் அம்மா.
அன்பின் ரேவா - மதுரையா - மகிழ்ச்சி - படங்களூம் இடுகையும் அருமை - தொடர்க மீதத்தினை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
சித்திரை திருவிழா கொண்டாட்டங்களை அருமையாக தொகுத்திருக்கிறீர்கள். படங்கள் அருமை நண்பா
சித்திரைத் திருவிழாக் காட்சிகள் அருமை.
பாட்டு ரசிகன் said...
நேரில் ரசித்த அனுபவம் கிடைத்தது...
நன்றி மற்றும் வாழ்த்துக்கள் ரேவா...
நன்றி நண்பரே, தாங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் :-)
தம்பி கூர்மதியன் said...
இதை படிச்சு படிச்சு போர் அடிச்சிடுச்சுங்க.. மதுரைன்னா எனக்கு பிடிக்கும் தான்.. அதுக்குன்னு இப்ப எந்த பக்கம் திரும்பினாலும் மதுரையே வா.? இதுல தமிழ்வாசி ப்ரகாஷ் வேற சாட்ல வந்து மதுரை பெருமையை ஓதுறார்.. ஹி ஹி..
சகோ இந்த பதிவு என் இணைய நண்பர்கள் கேட்டுக் கொண்டதன் பெயரில், நான் பதிவு செய்தேன்...
Chitra said...
very nice photos. நல்ல பகிர்வுங்க.
தாங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.:-)
siva said...
PRESENT MISS
PILLYARAPPA ELLARIUM KAAPATHU...
:-)
Rathnavel said...
படங்கள் நிறைந்த அருமையான பதிவு.மதுரை சித்திரை திருவிழாவை நேரில் பார்த்தது போன்ற உணர்வு.வாழ்த்துக்கள் அம்மா.
நன்றி ஐயா...உங்கள் முதல் முதல் வருகைக்கும், முத்தான மறுமொழிக்கும் மிக்க நன்றி...
cheena (சீனா) said...
அன்பின் ரேவா - மதுரையா - மகிழ்ச்சி - படங்களூம் இடுகையும் அருமை - தொடர்க மீதத்தினை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
வணக்கம் ஐயா...முதலில் , என் தளத்திருக்கு வந்த்தமைக்கு மிக்க நன்றி, மீதியை நிச்சயம் தொடர்கின்றேன்... நன்றி ஐயா, உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்....
தமிழ்வாசி - Prakash said...
சித்திரை திருவிழா கொண்டாட்டங்களை அருமையாக தொகுத்திருக்கிறீர்கள். படங்கள் அருமை நண்பா
நன்றி நண்பா :-)
மாதேவி said...
சித்திரைத் திருவிழாக் காட்சிகள் அருமை.
நன்றி மாதேவி, உங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்...இனி தொடர்ந்து வாருங்கள்...
நன்றி மற்றும் வாழ்த்துக்கள் படங்கள் மிக அருமையாக இருக்கின்றன.
ஊருக்கு போயிட்டு வந்த திருப்தி
புகைப்படங்களை பார்க்கும் போது நம்மூர் கோவில் திருவிழா நினைவுகள் (யாழ்பாணத்தில் )வந்து போகுது.... மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பற்றி அறிந்திருக்கிறேன். வந்து தரிசிக்க சந்தர்பம் கிடைக்காமலா போய்விடும்.
இராஜராஜேஸ்வரி said...
நன்றி மற்றும் வாழ்த்துக்கள் படங்கள் மிக அருமையாக இருக்கின்றன.
நன்றி தோழி தங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்,,,
கந்தசாமி. said...
புகைப்படங்களை பார்க்கும் போது நம்மூர் கோவில் திருவிழா நினைவுகள் (யாழ்பாணத்தில் )வந்து போகுது.... மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பற்றி அறிந்திருக்கிறேன். வந்து தரிசிக்க சந்தர்பம் கிடைக்காமலா போய்விடும்.
கண்டிப்பாக அந்த சந்தர்ப்பம் விரைவில் அமையும் நண்பரே....நன்றி தங்கள் வருகைக்கு :-)
ஜ.ரா.ரமேஷ் பாபு said...
ஊருக்கு போயிட்டு வந்த திருப்தி
நன்றி நண்பரே தங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் :-)
கருத்துரையிடுக