உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

மதுரையின் சித்திரைத் திருவிழா உங்களுக்காக...தொடர்ச்சி

வணக்கம் நண்பர்களே, இன்று

எங்கள் மதுரையின் சித்திரைத் திருவிழா உங்களுக்காக.....பகுதியின் தொடர்ச்சியினை நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தொடர்கின்றேன்...


ஆறாம் நாள் :  ரிஷப(காளை) வாகனம் 


சித்திரைத் திருவிழாவின் ஆறாம் நாள்,


அம்மனும், சொக்கரும், பிரியாவிடை தாயாரும்  ரிஷப வாகனத்தில் எழுந்தருள்வார்கள்...இந்த காட்சியின் நோக்கம், காளை (ரிஷப )வாகனம் தர்மத்தை குறிக்கும் ..
காளையின் உடல் போல் திடமான மனமும், அதிக சுமையைத் தாங்கும் காளைப் போல தன்னம்பிக்கை,  மனிதர்க்கு வேண்டும் என்பதையும், செவிகள் இறவன் நாமத்தையும், கண்கள் நல்லதையே பார்க்கவேண்டும். காளையின் வாழ் போல் தீயவையை  புறம் வைக்க வேண்டும் என்று உணர்த்தவே இந்த காட்சி...

ஏழாம் நாள் : யாளி மற்றும் நந்தி வாகனம்


சித்திரைத் திருவிழாவின் ஏழாம் நாள்,

அம்மன் யாளி வாகனத்திலும், சுவாமியும் பிரியாவிடையும் நந்தி வாகனத்திலும் காட்சி தருவர்...

இந்தக் காட்சியின் நோக்கம், 

அன்னை பவனி வரும் யாளி வாகனம் சிங்கம் மற்றும் யானை கலந்த உருவம்... மதம் பிடிக்கும் யானையும், தான் என்றும் கோவம் கொண்டு அலையும் சிங்கமும், அன்னையின் முன் அமைதியாய் இருப்பதைப் போல,  ஆணவம், தான் என்ற அகந்தை போன்ற கீழான குணங்களைக் கொண்ட மனிதனும், அன்னை அருளால் நற்பெயர் அடைவான் என்பதே இந்த காட்சியின் நோக்கம்...


எட்டாம் நாள் : ஊடல் உற்சவம் மீனாச்சி  பட்டாபிஷேகம்



சித்திரைத் திருவிழாவின் எட்டாம் நாள்,

அம்மனுக்கு பரிவட்டம் சாத்தப்படும், மன்னர் திருமலை நாயக்கர் வழங்கிய இரத்தின கிரீடத்திர்க்கும் அபிஷேகம் நடைபெறும்..இன்று இரவு அம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் மாசி வீதிகளில் உலா வருவாள்.இன்று மாலையில் இருந்து மீனாச்சி அம்மனின் அரசாட்சி துவங்கி, ஆவணி மாதம் வரை அன்னையின் அரசாட்சி தான்..இதன் அடையாளமாக அன்னைக்கு செங்கோல் வழங்கப்படும்.. 

ஒன்பதாம் நாள் : திக்கு விஜயம் இந்திர வாகன விமானம் 


 

சித்திரைத் திருவிழாவின் ஒன்பதாம் நாள்,
மீனாச்சியம்மன் இந்திர விமானத்தில் திக்விஜயம் புரிகிறாள். பட்டம் கட்டிய மன்னர்கள் தமது ஆட்சியை நிலைநிறுத்த நாலாபுறம் படியெடுத்துச் செல்வது போல்,பட்டாபிஷேகம் நடனத்த மறுநாள் மீனாஷி அம்மன் இனி இங்கு தன் ஆட்சி என்பதை பாக்களுக்கு அருவிக்கவே இந்த பவனி 
பத்தாம் நாள் : திருக்கல்யாணம், மாலை பூப்பல்லக்கு உலா  


  
 

சித்திரைத் திருவிழாவின் பத்தாம் நாள்,

உலகை வென்ற அம்மன்,  இறுதியாய் இறைவனையும் வென்றாள்...மீனாச்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை காண, விண்ணுலகமே, மண்ணுலகிற்கு வந்து, தம்பதியரை வாழ்த்துவதாய் ஐதீகம். இறைவன் திருமணத்தைக் காண கண் கோடி வேண்டும்.. திருமணம் முடிந்த இரவு சுந்தரேஸ்வரர் யானை வாகனத்திலும், அம்மன் பூப்பல்லக்கிலும் வீதி உலா வருவார்கள்  

பதினோராம் நாள் : திருத்தேரோட்டம், சப்தாவர்ணச்சப்பர உலா


 


சித்திரைத் திருவிழாவின் பதினோராம் நாள்,
வரலாற்றி மூன்று திரிபுர அசுரர்கள் ஆணவம் கொண்டு 
மூவுலகத்தை துன்புறுத்தியதாகவும் அவர்களை வதம் செய்யவே    சிவபெருமான் தேரேறிப் புறப்பட்டார் . இப்புராண நிகழ்வை நினைவூட்டும் விதத்தில் சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் மாசிவீதிகளில் பவனி வருகின்றனர்.
 இரவில் சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும்  சப்தாவர்ண சப்பரத்தில் பவனி வருவர். 

 பன்னிரெண்டாம் நாள் : தீர்த்தம் தேவேந்திர பூஜை, ரிஷப வாகன உலா.. 


சித்திரைத் திருவிழாவின் பனிரெண்டாம் நாள், 

அம்மன் ரிஷப வாகனத்தில் எழுத்தருள்வார்.. ஆறாம் நாள் ரிஷப வாகன காட்சியைத் தவற விட்டவருக்கெல்லாம், இந்த காட்சி பெறும் பேறு...சித்திரைத் திருவிழாவின் பனிரெண்டாம் நாள், அம்மன் ரிஷப வாகனத்தில் எழுத்தருள்வார்.. ஆறாம் நாள் ரிஷப வாகன காட்சியைத் தவற விட்டவருக்கெல்லாம், இந்த காட்சி பெறும் பேறு...
இதோடு மீனாக்ஷி அம்மன் சித்திரைத் திருவிழா இனிதே நிறைவு பெறும்... இதைத் தொடர்ந்து 

--   மதுரை- சித்திரைத் திருவிழா... ஸ்ரீ மீனாக்ஷியம்மை- சொக்க்நாதர் 
திருக்கல்யாணத்துடன் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும்  சித்திரை மாதம் வளர்பிறை ஏகாதசி அன்று துவங்கி ஒன்பது நாட்கள் நடைபெறும். 
நூபுர கங்கையில் நீராடி, பூஜையில் மூழ்கியிருந்த சுதபஸ் முனிவர், அங்கு வந்த துர்வாச
முனிவரைக்  கவனிக்கவில்லை இதனால்  கோபம் கொண்ட துர்வாசர், தவளையாகப் போகக்கடவது. என்று சுதபஸ் முனிவரைச் சபித்தார். மறுகணம் தவளையான முனிவர், சாப விமோசனத்தை வேண்டிக் கேட்க... வைகை கரையில்  தவம் இருந்து வா, சித்திரா பௌர்ணமிக்கு மறுநாள் கள்ளழகர்  வைகைக்கு வந்து உனக்கு சாபவிமோசனம் தருவார்’’  என்று  துர்வாச முனிவர் கூறியாதாகவும், அதனால் சுதபஸ் முனிவருக்கு சாப விமோசனம் வழங்கவே கள்ளழகர் வைகைக்கு எழுந்தருள்வதாகப் புராணங்கள் கூறுகின்றன.  
இது ஒருபுறம் இருக்க,

 தன் தங்கை, மீனாக்ஷியின் கல்யாணத்துக்கு சீர்வரிசையுடன் புறப்பட்ட அழகர் மதுரை செல்வதற்கு தாமமானது, அதற்குள் தன் தங்கையின் கல்யாணம்  முடிந்து விட்டதால், கோவம் கொண்டு மதுரைக்குள் செல்லாமல் வைகையில் சென்று, தன் கோவம் குறைய நீராடினார் என்றும் ஒரு காரணக் கதை உண்டு. 

கள்ளழகர் ஆற்றில் இருக்குதல் 
 
Kallazhagar enters river Vaigai in Madurai - Tamilnadu News Headlines in Tamil
 
 
 
நண்பர்களே எனக்கு தெரிந்தவரை, மீனாச்சி அம்மன் வைபவத்தையும், அழகர் திருவிழாவையும் நான் கேட்டும், படித்தும் தெரிந்த விசயங்களை தொகுத்துள்ளேன்... தவறெனில் சுட்டிக் காட்டவும்...சித்திரைத் திருவிழாபற்றி  விரும்பி கேட்டவர்களுக்காகவே இந்த பதிவு...விரும்பாதவர்களுக்கு அல்ல (ஹ ஹ )
படங்கள்: நன்றி கூகிள் நன்றி : தினமலர்

11 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நம்ம மதுரையின் சிறப்பான திருவிழாக்களில் ஒன்றான சித்திரைத் திருவிழாவினை அழகாக தொகுத்துள்ளீர்கள் ரேவா! அழகரை எப்போது பார்த்தாலும் பரவசம் தான்! :)

ரேவா சொன்னது…

Balaji saravana said...

நம்ம மதுரையின் சிறப்பான திருவிழாக்களில் ஒன்றான சித்திரைத் திருவிழாவினை அழகாக தொகுத்துள்ளீர்கள் ரேவா! அழகரை எப்போது பார்த்தாலும் பரவசம் தான்! :)

உண்மை தான் நண்பா.. நன்றி உங்கள் வருகைக்கும், மறுமொழிக்கும் :-)
--

ஆனந்தி.. சொன்னது…

ரேவா...நீங்க மதுரையா....ம்ம்...மன்னிச்சுக்கோங்க..கவனிக்காமல் இருந்து இருக்கிறேன்...:((

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

super Reva kalakkiddeenga! i like to visit to Madhurai

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

சித்திரை திருவிழாவின் இரண்டாம் பாகம் மிக அருமை....பகிர்வுக்கு நன்றி...

ரேவா சொன்னது…

ஆனந்தி.. said...

ரேவா...நீங்க மதுரையா....ம்ம்...மன்னிச்சுக்கோங்க..கவனிக்காமல் இருந்து இருக்கிறேன்...:((


சகோ இதுக்கெல்லாம் எதுக்கு மன்னிப்புனு பெரிய வார்த்தை எல்லாம்... விடுங்க சகோ.... ..மிக்க மகிழ்ச்சி தாங்கள் என் தளம் வந்தமைக்கு ...இனி தொடர்ந்து வாருங்கள்

ரேவா சொன்னது…

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

super Reva kalakkiddeenga! i like to visit to Madhurai

நன்றி நண்பா... கண்டிப்பாக நீயும் மதுரை அன்னையின் அருளை நேராய்ப் பெறுவாய்...நன்றி உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்...

ரேவா சொன்னது…

தமிழ்வாசி - Prakash said...

சித்திரை திருவிழாவின் இரண்டாம் பாகம் மிக அருமை....பகிர்வுக்கு நன்றி...

நன்றி தமிழ்வாசி நண்பா :-)

Unknown சொன்னது…

:) present.

sammi..ellarum nalla erukkanum...

apram entha tholi kavithaiya eluthi konukitu erukka..ethukita ernthu engalai ellam neethan kaappatha venum..

then

entha blog owner nama blog pakkam varanum...vendikiren.

ரேவா சொன்னது…

siva said...

:) present.

sammi..ellarum nalla erukkanum...

apram entha tholi kavithaiya eluthi konukitu erukka..ethukita ernthu engalai ellam neethan kaappatha venum..

then

entha blog owner nama blog pakkam varanum...vendikiren.


நீ வேண்டிய வரம் கிடைக்கும் மகனே....உனக்கு என் நல்ஆசிகள்... ஹி ஹி சாமி தான் டைப் பண்ண சொல்லுச்சு...சிவா

Unknown சொன்னது…

:)thank you sami..