உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திமிருக்கு அவனென்று பேர்


      நீ என்னைக் காதலிப்பதாய் சொல்லி, வெகு நாட்கள் ஆகிவிட்டது தெரியுமா என்றேன்...
 

உன்னைக் காதலிப்பதாய் சொன்னவன் நான் தானே..!!

"பிறகு எப்படி மறப்பேன்" என்றான்.. 

பிறகு "ஏன் எனக்கு அன்பாய் எதுவும் வாங்கித் தரவில்லை" என்றால்

"உன் காதல் மொத்தமும் என்னக்காய் இருக்கட்டும் என்று தான், பாகுபடுத்தும் பரிசுப் பொருள்களை வாங்கித் தரவில்லை" என்றான் திமிராய்.... 

பரிசுப் பொருட்கள் வாங்கித்தந்தால் , அன்பு கூடும் என்று தானே என் நண்பர்கள் சொல்லி இருக்கிறார்கள்....என்று கேட்டால்,

 
"அட அசட்டுப் பெண்ணே, போன மாதம் உன் பிறந்த நாளுக்காய் பரிசளித்த, கரடி பொம்மை உன் படுக்கை அறையை அழகுபடுத்துகிறது என்று நீ தானே சொன்னாய்"...
 

"ஆம் நான் தான் சொன்னேன்"....

"உன் இரவை அழகு படுத்த, அழகாய் நான் இருக்கையில், என்னைவிட அதிக முத்தம் வாங்கிய  அந்த கரடி பொம்மை, உன் அன்பை என்னிடம் இருந்து பிரித்தது உண்மை தானே" என்றான்....

"நீ கொடுத்த பொருள் என்றதால், கூடுதல் பிரியம் கொண்டேன் அந்த கரடி பொம்மையுடன் இதில் என்ன தவறு" இருக்கிறதென்றேன் வழக்கம் போல,

"இருக்காத பின்னே, நான் இருக்கிற இடத்தில், அந்த பொம்மை இருக்கையில்"......என்று அவன் தொடங்கிய வார்த்தையின் அர்த்தம் புரிந்தவளாய், அதட்டினேன் செல்லமாய்... 

 

        ஒரு மாலையில், அழகுப் பொருட்கள் வாங்க செல்வதாய் தீர்மானித்திருந்தேன், "நீயும் வருகிறாயா" என்று அவனை அழைத்தேன்....அமைதியாய் வந்தவன், கொஞ்சம் அமைதி கலைத்து, 

"எதற்கு இத்தனையும் வாங்குகிறாய்" என்றான்..."

அழகுப் பொருட்கள், என்னை அழகுபடுத்திக் கொள்ளத்தான்" என்றால்,
அதெல்லாம், அழகா இருக்கிறவங்க போட்டாத்தான் அழாகா இருக்கும்...நீ போடதே"....என்றவன், என் விழி நீரின் அர்த்தம் புரிந்தவனாய், "உன்னை அழகுபடுத்தும், உன் அழகு சாதனம் நான் இல்லையா" என்றான் அனைவர் முன்பும்.....

"உனக்கு வரவர திமிர் அதிக மாகிடுச்சு டா"...என்றால்
 

"அழகு சேர்ந்தால் திமிர் வரத்தானே செய்யும்"
 

"ஆமா இவரு பெரிய ஆண் அழகன்", என்று சொல்லி முடிப்பதுக்குள்

"என் அழகி நீயும், என்னுள் கலந்து விட்டதால், கொஞ்சம் எனக்கும் திமிர் பிடித்து விட்டது தான்" என்றான் திமிராய்...
             இணையத்தில் உலாவி கொண்டு இருக்கையில், அவன் இருப்பது தெரிந்து, அவனை தொடர்பில் அழைத்தேன்......வெகு நேரம் ஆகியும் ஒரு பதிலும் இல்லை...கோபம் கொண்டு, "இனி என்னோடு பேசாதே" என்று இணைப் துண்டித்தால்..


"பேசாட்டி போடி" என்று பதில் அளித்தான் திமிராய்.....
"போடா பிசாசே".... என்றால்,
 

"என் தூக்கத்தை களவாடிய குட்டி பிசாசு நீ தான்"... என்றான் வழக்கம் போல காதலோடு....
 

"ஏன் ஆன்லைன் ல இருந்த பேசமாட்டியா?"....
 

"பேசுவேனே"...
 

"அப்பறம் ஏன் என் கூட பேசல"......
 

"இல்லை நீ எவ்வளவு தூரம் எனக்காய் துடிக்குறேனு, பார்க்க இது போல செய்தேன்"...
"பரவா இல்லை...இந்த மெசேஜ் ஓட சேர்த்து 108 ஆகிடுச்சு".....

"உனக்கு திமிரா, இந்நேரம் ஸ்ரீ ராம ஜெயம் எழுதுனா ஒரு புண்ணியமாவது கிடைச்சிருக்கும்....போயும் போயும் உன் பேர போய், உனக்கே மெசேஜ் பண்ணிருக்கேன் பாரு, என்ன என்ன சொல்லுறதுன்னு எனக்கே தெரியல"...

"அதனால என்ன உனக்கு தான் நான் காதல் வரம் கொடுத்திருக்கேன்ல...இந்த 108 காதல் ஜெயத்துக்கும், நான் ஒவ்வொரு முத்தம் பரிசளிக்கிறேன்...சம்மதமா" என்றான்....

"போ"....என்றேன் திமிராய்...
                  "எதுக்காக என்ன காதலிக்கனும்னு உனக்கு தோனுச்சுன்னு" விளையாட்டாய் அவனிடம் கேட்டேன் ஒரு நாள்,

"முதலில் உன்னை சும்மா தான் பாத்தேன்...அப்பறம் சும்மா சும்மா பாத்தேன்...நீயும் என்ன பார்க்கிறேன்னு தெரிஞ்சதுக்கப்பறம் உன்ன தான் காதலிக்கனும்னு முடிவு பண்ணிட்டேன்" என்று சொன்னவனை, இடைமறித்து, 

"நான் உன்ன பாக்கவே இல்லையே"

"நடிக்காத டி....என் அத்தைகிட்ட, அதான் உன் அம்மாகிட்ட நான் உன் வீட்டுக்கு வராதது குறித்து, பேசுனியே" ...
 
"ஆமா  நீ என் அத்த பையன் ஆச்சே....எங்க வீட்டுக்கு வராம இருக்கேனு கிட்டேன்" இதுல என்ன தப்பு இருக்கு...
 

"இம்ம்ம் அப்போ ஏன் சாய் னு என் பேரோட உன் பேரையும் உன் டைரி ல எழுதி வச்சயாம்"...

"ஒய் நான் உன் பேர எழுதுனது உனக்கு எப்படி தெரியும்",

"என் அத்தை அத பாத்து, என்கிட்ட சொல்லிட்டாங்க"...

ஐயோ இது அம்மாவுக்கு தெரியுமா?...
 

தெரியும்...என் மாமாவுக்கும் தெரியும்...

என்ன குண்டப் போடுற?...என் அப்பாவுக்கும் தெரியுமா?

"ஆமா தெரியும்....ஒரு ஞாயிறு  உங்க வீட்டுக்கு சாப்பிட வந்த போது, உன் அம்மாகிட்டயும், உன் அப்பாகிட்டயும் உன்ன காதலிக்கிறேன்னு சொல்லி சம்மதம் வாங்குனதுக்கப்பறம் தான், என் காதலை  உங்கிட்ட சொன்னேன்"...  

"எனக்கு தலைய சுத்துது...ஒரு குடும்பமே, என் கிட்ட இருந்து இதை மறைச்சிடுச்சே"...சரி அம்மா அப்பா நீ என்ன காதலிக்கிறேன்னு சொன்னவுடனே என்ன சொன்னங்க...?" என்று அவன் தரும் பதிலுக்காய் ஆவலோடு காத்திருந்தேன்...

அவனோ, "உன் நிலமைய நினைச்சா பாவாமா இருக்கு சாய் னு சொன்னங்க"...   

"இப்படிலாம் பேசுனா, நான் அழுவேன்" என்றால்...
 

"அழு இனி காலம் காலத்துக்கும் நான் தானே உன்ன கட்டிக்கிட்டு அழனும் என்று
கண் சிமிட்டி" சொன்னான் திமிராய்.....

அவன் திமிரும்...அவனின் திமிரும் அழகும் என்றுமே அழகுதான்....
LOVE IS A COMMITMENT...NOT JUST AN ENTERTAINMENT.............

29 நேசித்த உள்ளங்கள்:

{ சி.பி.செந்தில்குமார் } at: 6/27/2011 9:54 முற்பகல் சொன்னது…

முதல் மழை எனை நனைத்ததே

{ விக்கியுலகம் } at: 6/27/2011 9:54 முற்பகல் சொன்னது…

அடடா என்ன அழகு கவிதை!

{ சி.பி.செந்தில்குமார் } at: 6/27/2011 9:57 முற்பகல் சொன்னது…

<<<அழு இனி காலம் காலத்துக்கும் நான் தானே உன்ன கட்டிக்கிட்டு அழனும் என்று
கண் சிமிட்டி"

ஆஹா...அழகு

{ சி.பி.செந்தில்குமார் } at: 6/27/2011 10:00 முற்பகல் சொன்னது…

இது காதல் கட்டுரையா? கவிதையா? கலக்கல்

{ சி.பி.செந்தில்குமார் } at: 6/27/2011 10:04 முற்பகல் சொன்னது…

தமிழுக்கும் அமுதென்று பெயர் தானே டைட்டில் இன்ஸ்பிரேஷன்? செம

{ சே.குமார் } at: 6/27/2011 10:12 முற்பகல் சொன்னது…

"LOVE IS A COMMITMENT...NOT JUST AN ENTERTAINMENT"

Correct....

ungal kavinayamana pakirvum azhagu. vazhththukkal.

{ MANO நாஞ்சில் மனோ } at: 6/27/2011 10:41 முற்பகல் சொன்னது…

பேசாட்டி போடி" என்று பதில் அளித்தான் திமிராய்.....
"போடா பிசாசே".... என்றால்,

"என் தூக்கத்தை களவாடிய குட்டி பிசாசு நீ தான்"... என்றான் வழக்கம் போல காதலோடு....//

ஹா ஹா ஹா ஹா காதல் காதல் காதல் ரசம் சூப்பர் ரேவா....!!!

{ சௌந்தர் } at: 6/27/2011 11:45 முற்பகல் சொன்னது…

நீ என்னைக் காதலிப்பதாய் சொல்லி, வெகு நாட்கள் ஆகிவிட்டது தெரியுமா என்றேன்...///

ஆமா அதெல்லாம் ஏன் இப்போ நினைவு படுத்துறே கேட்டு இருப்பார்...!!!!

{ சௌந்தர் } at: 6/27/2011 11:47 முற்பகல் சொன்னது…

பிறகு "ஏன் எனக்கு அன்பாய் எதுவும் வாங்கித் தரவில்லை" என்றால்,///

ஆமா உண்ணா கூப்பிட்டு போய் அவர் பர்ஸ் காலி ஆகும் அதான் கூப்பிட்டு போகலை

"உன் காதல் மொத்தமும் என்னக்காய் இருக்கட்டும் என்று தான், பாகுபடுத்தும் பரிசுப் பொருள்களை வாங்கித் தரவில்லை" என்றான் திமிராய்....///

அவர் எப்படி எல்லாம் பிட்ட போடுறார் அதையும் நம்பும் ஒரு ஏமாளி..!!!

{ சௌந்தர் } at: 6/27/2011 11:48 முற்பகல் சொன்னது…

இருக்காத பின்னே, நான் இருக்கிற இடத்தில், அந்த பொம்மை இருக்கையில்"......என்று அவன் தொடங்கிய வார்த்தையின் அர்த்தம் புரிந்தவளாய், அதட்டினேன் செல்லமாய்...///


பாவம் அவர் அவர் வாயிலே அவர் கரடின்னு சொல்றார்..!!!

{ சௌந்தர் } at: 6/27/2011 11:50 முற்பகல் சொன்னது…

என் அழகி நீயும், என்னுள் கலந்து விட்டதால், கொஞ்சம் எனக்கும் திமிர் பிடித்து விட்டது தான்" என்றான் திமிராய்...///

பாருய்யா இப்படியே ரெண்டு பெரும் அழகுன்னு சொல்லுங்க.... நீங்க அழகா இல்லையானு நாங்க சொல்லணும்..!!

{ !* வேடந்தாங்கல் - கருன் *! } at: 6/27/2011 11:51 முற்பகல் சொன்னது…

காதல் மனம் கமழும் வரிகள்,,

{ சௌந்தர் } at: 6/27/2011 11:52 முற்பகல் சொன்னது…

இணையத்தில் உலாவி கொண்டு இருக்கையில், அவன் இருப்பது தெரிந்து, அவனை தொடர்பில் அழைத்தேன்......வெகு நேரம் ஆகியும் ஒரு பதிலும் இல்லை...கோபம் கொண்டு, "இனி என்னோடு பேசாதே" என்று இணைப் துண்டித்தால்...////

அவர் ஆப்லைன் இருக்கும் போது கூப்பிட்டா அப்படி தான்..!!!

{ சௌந்தர் } at: 6/27/2011 11:52 முற்பகல் சொன்னது…

"ஏன் ஆன்லைன் ல இருந்த பேசமாட்டியா?"....

"பேசுவேனே"...

"அப்பறம் ஏன் என் கூட பேசல"......///

வேற ஒரு பொண்ணு கூட பேசிட்டு இருந்திருப்பார்..!!!

{ சௌந்தர் } at: 6/27/2011 11:53 முற்பகல் சொன்னது…

ஐயோ இது அம்மாவுக்கு தெரியுமா?..///

ஐயோ பாருய்யா பயமாம்...!!

{ சௌந்தர் } at: 6/27/2011 11:53 முற்பகல் சொன்னது…

"எனக்கு தலைய சுத்துது...ஒரு குடும்பமே, என் கிட்ட இருந்து இதை மறைச்சிடுச்சே".///

வயசு ஆகிபோச்சுல அப்படி தான் :))

{ சௌந்தர் } at: 6/27/2011 11:54 முற்பகல் சொன்னது…

அழு இனி காலம் காலத்துக்கும் நான் தானே உன்ன கட்டிக்கிட்டு அழனும் என்று///

நிச்சயம் உண்மையை சொல்லி இருக்கார்

பாவம் யார் வந்து அழ போறாங்களோ..!!!

{ பலே பிரபு } at: 6/27/2011 12:29 பிற்பகல் சொன்னது…

கலக்கல் தோழி.

{ வேங்கை } at: 6/27/2011 12:40 பிற்பகல் சொன்னது…

கலக்கல் ரேவா
அருமையான அழகான திமிரான (சும்மா) சிந்தனை

{ கந்தசாமி. } at: 6/27/2011 1:49 பிற்பகல் சொன்னது…

நல்லாய் இருக்கு , காதலர்களுக்கேயான உணர்வுகள் உரையாடல்கள் ............

{ Harini Nathan } at: 6/27/2011 2:10 பிற்பகல் சொன்னது…

அருமையாய் இருக்கிறது காதல் உரையாடல்

{ தம்பி கூர்மதியன் } at: 6/27/2011 7:43 பிற்பகல் சொன்னது…

மாமா பெயர் சாய்னு சொல்லவே இல்லயே.! ஹி ஹி.. இந்த மொத்த கட்டூரையில இருந்து மாமா பெரிய அப்பாடக்கரா இருப்பாருனு தோணுது.. ஹி ஹி.. அவரும் உன்னய விட்டு போயிடலாம்னு நிறைய பண்ணி பாத்திருக்கார் எதையும் விடாம துரத்தி துரத்தி போயிருக்கே.! கரெக்டா தான் சொல்லியிருக்காரு பிசாசுனு.. ஹி ஹி.. உங்க வீட்டுல வந்து அப்பா அம்மாகிட்ட சொன்னாரா மாப்பு.. ஹி ஹி.. உங்க அப்பாகிட்ட சொல்லுற அளவுக்கு அவருக்கு தைரியம் இருக்கா..!? ஹி ஹி.. உங்க அப்பா ஒண்ணும் சொல்லலயா!? எப்ப கல்யாணம்!? அவரு பாத்தாராம், இவுங்க பாத்தாங்களாம் காதல் வந்துடுச்சாம்.. கண் வலி வேணா வரும்.. இப்படிலாம் இருந்தா காதல் வராது.. அவரக்கு கண்ணு தெரியாதுனு நினைக்கிறேன்.. நீ கொஞ்சம் செக் பண்ணு.. ஹி ஹி..


உரையாடல் நல்லா எழுதியிருக்க ரேவா.. ஆனால் நடுவில் உன்னுடைய விரிவாக்கம், அதாவது என்றேன், காத்திருந்தேன் போன்றவை சற்று நெருடலாக இருக்கிறது.. மற்றபடி உரையாடலில் காதல் ரசம் வடிகிறது.. மிக சிறப்பு அல்ல.. நன்று

{ தமிழ்வாசி - Prakash } at: 6/27/2011 9:57 பிற்பகல் சொன்னது…

ரேவா அருமை

{ எவனோ ஒருவன் } at: 6/29/2011 1:42 பிற்பகல் சொன்னது…

தபு ஷங்கர் படைப்பை வாசித்தது போல இருந்தது. மிக அருமை ரேவா.

எப்படி இப்படி எழுதுறதுன்னு எனக்கு டியுஷன் எடுக்க முடியுமா....? நான் பதிவு எழுதுறதுல மக்கா இருக்கேன்....

சரி இந்த பதிவுக்கும், கீழே இருக்கிற பதிவுக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கிற மாதிரி எனக்கு ஒரு பீலிங்....

http://revakavithaikal.blogspot.com/2011/05/blog-post_21.html

{ அம்பாளடியாள் } at: 6/30/2011 9:24 பிற்பகல் சொன்னது…

ஒ காதல் குசும்பு அருமையிலும் அருமை!..
தோழமையே இதைப் பார்த்துவிட்டு
நிட்சயமாக நம்ம உறவுகள் அவர்கள்
திறமையைக் காட்ட முயர்ச்சிப்பார்கள்
இது சத்தியம் சத்தியம் சத்தியம்..........

மிக்க நன்றி பகிர்வுக்கு. வாழ்த்துக்கள்

{ ♔ம.தி.சுதா♔ } at: 7/01/2011 10:06 பிற்பகல் சொன்னது…

உணர்வோடு பகிர்ந்துள்ளிர்கள்...


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
குழந்தைகளுக்கான நுண் அறிவு வளர்க்கும்(fine movement) இலகு கருவி (உள்ளுர் கண்டுபிடிப்பு)

{ அம்பாளடியாள் } at: 7/02/2011 5:48 பிற்பகல் சொன்னது…

என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள் உறவுகளே..........

{ siva } at: 7/09/2011 2:58 பிற்பகல் சொன்னது…

எப்படி இப்படி எழுதுறதுன்னு எனக்கு டியுஷன் எடுக்க முடியுமா....? நான் பதிவு எழுதுறதுல மக்கா இருக்கேன்....
//

teacher teacher appdiey eankum tution edunga, enaku matchla weaku...+2match romba kastam erukku..athvum entha alje..romba alarjiya erukku..enakum tution edunga.

{ siva } at: 7/09/2011 2:59 பிற்பகல் சொன்னது…

என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள் உறவுகளே.//freeya vidu mams..no worry,all will be over..you just read this blog...ok..take it easy...