உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

மீண்டும் ஓர் மழைநாளில்

படம் : நன்றி கூகிள்

கசங்கிய ரேகைகளுக்குப் பின்
களவு போன என் வாழ்க்கை,
இன்னொரு ஆணிடம் 
கவனமாய் இருக்கச் சொல்கிறது...

மீண்டும்
முதலில் இருந்து தொடக்கமா?
என்று நினைக்கையில்
தொண்டைக்குழியில் ஈரம்
விஷமாய் கசக்கிறது...

சலனமே இல்லாமல்
நடக்கும் ஒவ்வொரு
பெண்பார்க்கும்  படலத்திலும்,
ஏளனப் பார்வைக்கு மத்தியில்
உடலெங்கும் உணர்ச்சி தீ 
கட்டுக் கடங்காமல் எரிகிறது..

சில நேரங்களில் மனுஷி
என்ற அடையாளம் எதுவும்
இன்றி மனிதப் பார்வைகளுக்கு 
நடுவே தொலைந்து போகிறேன் நான்....
எனக்கென்ற தனி அடையாளம்
எதுவுமற்று மௌனிக்கச் சொல்கிறது 
சுற்றியுள்ள கூட்டம்...

தனக்குப் பிடித்தவைகளை
பட்டியல் இட்டு,
பட்டியலின் கடைசியில்
என் பெயரையும் எழுதிச் செல்கிறது
ஆணைப் பெற்ற கூட்டம்..

வந்தவர் செல்ல,
ஒப்பனைகள் களைய
கண்ணாடியின் காட்சியும் 
எனைப் பார்த்து சிரிக்கிறது....

இன்னும் ஒருமுறை
இயலாமை எனும் முடிச்சி
ரகசியமாய் அவிழ்க்கப்படுகிறது..
அப்பாவின் பென்சன் பணத்தின் பாதியிலும்,
அண்ணனின் அலுவலக லோனின் மீதியிலும்,
எடை போடப்படுகிறது
என் வாழ்க்கை...

இல்லை எனும் வார்த்தை
மீண்டும் ஒரு முறை தன் 
கோரமுகம் காட்டி
என்னைப் பார்த்து சிரிக்கிறது..

மீண்டும் மீண்டும் எழுதப்பட்டு
அழிக்கப்படும் இந்த
பழையகதையில், புதிய கதைக்கு
இடம் இருக்கா? இல்லையா? என்று
என்று ஜோதிடம் பார்த்தே
கசங்கிப் போகிறது என் ரேகை...

இறுதியில் ராசியற்றவள்
என்ற முத்திரைகுத்தி
தன் இயலாமைக்கு முகத்திரை
சூடிக்கொள்கிறது சொந்தம்...

இளமையின் ரணம் கணக்க,
இந்த இளமையை சபிக்கிறேன்..
கனவில் மட்டுமே காதல் பேசும்
அந்த ஆண்மையைச் சபிக்கிறேன்...

மீண்டும் ஒரு மழைநாளில்,
தேநீர்க் குவளைக்கு மத்தியில்
அடுக்கப்படுகிறது என் வாழ்க்கை
புதியக் கதை ஒன்று எழுத....

25 கருத்துகள்:

Unknown சொன்னது…

வலி நிறைந்த கவிதை சகோ!

'பரிவை' சே.குமார் சொன்னது…

//சில நேரங்களில் மனுஷி
என்ற அடையாளம் எதுவும்
இன்றி மனிதப் பார்வைகளுக்கு
நடுவே தொலைந்து போகிறேன் நான்....
எனக்கென்ற தனி அடையாளம்
எதுவுமற்று மௌனிக்கச் சொல்கிறது
சுற்றியுள்ள கூட்டம்...//

கவிதை முதிர்கன்னியின் சோகம் சுமந்து நிற்கிறது.
வலிகளை விதைத்துச் செல்லும் கவிதை.

எவனோ ஒருவன் சொன்னது…

வந்தவர் செல்ல,
ஒப்பனைகள் களைய
கண்ணாடியின் காட்சியும்
எனைப் பார்த்து சிரிக்கிறது....

வலிமிக்க வரிகள் :-(

எவனோ ஒருவன் சொன்னது…

மீண்டும் மீண்டும் எழுதப்பட்டு
அழிக்கப்படும் இந்த
பழையகதையில், புதிய கதைக்கு
இடம் இருக்கா? இல்லையா? என்று
என்று ஜோதிடம் பார்த்தே
கசங்கிப் போகிறது என் ரேகை...

பெண் பார்க்கும் படலத்தில் வெறும் காட்சிப் பொருளாய் மட்டுமே பார்க்கப் படும் ஒரு பெண்ணின் உணர்வை மிக அழகாக கூறி உள்ளீர்கள்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கண்ணில் கண்ணீர் மழை.......!!!

SURYAJEEVA சொன்னது…

ஜோசியத்தில் எனக்கு உடன்பாடு இல்லாத அதே நேரத்தில் மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு திருமணம் மட்டுமே உத்திரவாதம் என்று கூறுவதிலும் எனக்கு உடன்பாடு இல்லை..

நிரூபன் சொன்னது…

இனிய மதிய வணக்கங்கள் அக்காச்சி,

பெண் பார்க்கும் படலத்தின் மத்தியிலும், சீதனச் சுமையினாலும் தொலைந்து போகும் பெண்ணின் இளமைக்கால வலி நிறைந்த வாழ்வின் உணர்வுகளைக் கவிதை சொல்லி நிற்கிறது.

Unknown சொன்னது…

வலி:-(

Harini Resh சொன்னது…

//வந்தவர் செல்ல,ஒப்பனைகள் களையகண்ணாடியின் காட்சியும் எனைப் பார்த்து சிரிக்கிறது....//ம்

உண்மைதான் பெண்ணின் உள்ள குமுறல் தன்னை அருமையாக கவி வடித்துள்ளீர்கள் தோழி

பெயரில்லா சொன்னது…

பெண் பார்க்கும் படலம்... பல முறை அரங்கேற்றம் கண்ட கவிதையின் நாயகியின் வேதனை கவிதையின் வரிகளில் தெளிவாக உணரமுடிகிறது...

இன்னார்க்கு இன்னாரென்று தங்கமும், வெள்ளியும் தான் தீர்மானிக்கின்றன....

Unknown சொன்னது…

திருமணத்தை எதிர்நோக்கும் முதிர்கன்னி பெண்களின் மன வலிகளை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

கவிதை அற்புதம்.

Unknown சொன்னது…

விக்கியுலகம் கூறியது...

வலி நிறைந்த கவிதை சகோ!

உண்மைதான் சகோ நன்றி உங்கள் வருகைக்கும் வருகைக்கும் மறுமொழிக்கும்

Unknown சொன்னது…

சே.குமார் கூறியது...

//சில நேரங்களில் மனுஷி
என்ற அடையாளம் எதுவும்
இன்றி மனிதப் பார்வைகளுக்கு
நடுவே தொலைந்து போகிறேன் நான்....
எனக்கென்ற தனி அடையாளம்
எதுவுமற்று மௌனிக்கச் சொல்கிறது
சுற்றியுள்ள கூட்டம்...//

கவிதை முதிர்கன்னியின் சோகம் சுமந்து நிற்கிறது.
வலிகளை விதைத்துச் செல்லும் கவிதை.

உண்மைதான் சகோ. இவர்கள் வாழ்க்கை வலி நிறைந்த வாழ்க்கையும் கூட :)

Unknown சொன்னது…

எவனோ ஒருவன் கூறியது...

வந்தவர் செல்ல,
ஒப்பனைகள் களைய
கண்ணாடியின் காட்சியும்
எனைப் பார்த்து சிரிக்கிறது....

வலிமிக்க வரிகள் :-(

ஆமாம் நண்பா :(

Unknown சொன்னது…

எவனோ ஒருவன் கூறியது...

மீண்டும் மீண்டும் எழுதப்பட்டு
அழிக்கப்படும் இந்த
பழையகதையில், புதிய கதைக்கு
இடம் இருக்கா? இல்லையா? என்று
என்று ஜோதிடம் பார்த்தே
கசங்கிப் போகிறது என் ரேகை...

பெண் பார்க்கும் படலத்தில் வெறும் காட்சிப் பொருளாய் மட்டுமே பார்க்கப்படும் ஒரு பெண்ணின் உணர்வை மிக அழகாக கூறி உள்ளீர்கள்.

மிக்க நன்றி நண்பா உன் மறுமொழிக்கு

Unknown சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...

கண்ணில் கண்ணீர் மழை.......!!!

:(

Unknown சொன்னது…

suryajeeva கூறியது...

ஜோசியத்தில் எனக்கு உடன்பாடு இல்லாத அதே நேரத்தில் மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு திருமணம் மட்டுமே உத்திரவாதம் என்று கூறுவதிலும் எனக்கு உடன்பாடு இல்லை..

அவர் அவர் பார்வையின் கோணங்களைப் பொறுத்து கருத்துக்கள் மாறுபடும்... நன்றி நண்பரே உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும்

Unknown சொன்னது…

ஜோசியத்தில் எனக்கு உடன்பாடு இல்லாத அதே நேரத்தில் மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு திருமணம் மட்டுமே உத்திரவாதம் என்று கூறுவதிலும் எனக்கு உடன்பாடு இல்லை..

Tuesday, September 27, 2011
நீக்கு
பிளாகர் நிரூபன் கூறியது...

இனிய மதிய வணக்கங்கள் அக்காச்சி,

பெண் பார்க்கும் படலத்தின் மத்தியிலும், சீதனச் சுமையினாலும் தொலைந்து போகும் பெண்ணின் இளமைக்கால வலி நிறைந்த வாழ்வின் உணர்வுகளைக் கவிதை சொல்லி நிற்கிறது.

வணக்கம் நிரூபன்,,, ஆமாம் சரியாகச் சொன்னீர்கள், நன்றி சகோ உன் மறுமொழிக்கும் வருகைக்கும் :)

Unknown சொன்னது…

siva கூறியது...

வலி:-(

:(

Unknown சொன்னது…

Harini Nathan கூறியது...

//வந்தவர் செல்ல,ஒப்பனைகள் களையகண்ணாடியின் காட்சியும் எனைப் பார்த்து சிரிக்கிறது....//ம்

உண்மைதான் பெண்ணின் உள்ள குமுறல் தன்னை அருமையாக கவி வடித்துள்ளீர்கள் தோழி

நன்றி தோழி, உங்கள் வருகைக்கும் மனமார்ந்த பாராட்டும் மறுமொழிக்கும் :)

Unknown சொன்னது…

ஷீ-நிசி கூறியது...

பெண் பார்க்கும் படலம்... பல முறை அரங்கேற்றம் கண்ட கவிதையின் நாயகியின் வேதனை கவிதையின் வரிகளில் தெளிவாக உணரமுடிகிறது...

இன்னார்க்கு இன்னாரென்று தங்கமும், வெள்ளியும் தான் தீர்மானிக்கின்றன....

சரியாகச் சொன்னீர்கள் நண்பரே, இன்னார்க்கு இன்னார் என்று இருப்புகளே தீர்மானிக்கின்றன, நன்றி உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் :)

Unknown சொன்னது…

மழை கூறியது...

திருமணத்தை எதிர்நோக்கும் முதிர்கன்னி பெண்களின் மன வலிகளை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

கவிதை அற்புதம்.


நன்றி நண்பரே :)

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>இன்னும் ஒருமுறை
இயலாமை எனும் முடிச்சி
ரகசியமாய் அவிழ்க்கப்படுகிறது.

குட் ஒன்

செய்தாலி சொன்னது…

பெண்மைகளுக்கு
எங்கோ ஓர் மூலையில்
நிகழ்ந்த நிகழ்கிற நிகழ்வு

கவி நடையும் சொல்லாக்கமும் அருமை தோழி
கவிதை சிறப்பு

நம்பிக்கைபாண்டியன் சொன்னது…

அழகான வரிகளில் அழுத்தமாக சொல்லியுள்ளீர்கள் முதிர்கன்னியில் மனநிலையை!