உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 8 அக்டோபர், 2011

இரவுகளில் நான்...

 
நெருங்கி நெருங்கி
வரும் இருட்டு,
கிட்ட கிட்ட உன் நினைவுகளை
கொண்டு வர,
உறக்கம் வரும் அந்த
அந்தி ஜாமத்திலும்
உன்னைப் பற்றிய
சிந்தனையில் லயித்துப்போகிறேன்
நான்....

இரவில்
கடிகார ஓசையையும்,
சுவர் பல்லிகளின் சத்தத்தையும்,
தூரத்தில் குறி சொல்ல வந்திருக்கும்
சாமக்கோடங்கியின் ஓசையையும்
உள்வாங்கிக்கொண்டே
ஆளரவமற்ற அந்திஜாமத்தில்
விழித்திருக்கும் உன் நினைவுகளோடு
தனித்திருக்கிறேன்
நான் ...

தொலைவில் இருந்துவரும்
அமானுஷ்ய சத்தத்தில்,
இதயத்துடிப்பு நிற்கும் அளவு
பயம் கவ்வி இழுக்க,
உள்ளிருக்கும் பயத்தை
வெளிக்காட்ட வகையில்
என்னை மீட்டெடுக்கிறேன்
உன்னை பற்றிய நினைவுகளிருந்து...

இந்த அடர்ந்த பயம் கக்கும்
இருட்டில் ஆறுதல் என்னவோ
நிலவு மட்டும் தான்...
என்னைப் போல
இரவுகளில் அதுவும்
தனித்திருப்பதால்...

மெல்ல மெல்ல இரவின் மடியில்
இருந்து இறங்கும் நிலவுக் குழந்தை
உறங்கிப் போக,
எல்லோரும் விழிக்க
தொடங்கும் போது
உறங்கிப் போகிறேன்
நான்...

27 கருத்துகள்:

சம்பத்குமார் சொன்னது…

மெல்ல மெல்ல இரவின் மடியில்இருந்து இறங்கும் ////நிலவுக் குழந்தைஉறங்கிப் போக,எல்லோரும் விழிக்கதொடங்கும் போதுஉறங்கிப் போகிறேன்நான்...//

ரசித்த வரிகள்

சூப்பர் கவிதை நண்பரே

நட்புடன்
சம்பத்குமார்

SURYAJEEVA சொன்னது…

அது சரி!!!!!!!!!!

vetha (kovaikkavi) சொன்னது…

''....இந்த அடர்ந்த பயம் கக்கும்
இருட்டில் ஆறுதல் என்னவோ
நிலவு மட்டும் தான்...''
vaalthukal sakothary.
http://www.kovaikkavi.woedpress.com

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வழக்கம் போல ரேவா கவிதைகள் அழகு...!!!

Unknown சொன்னது…

super

நாவலந்தீவு சொன்னது…

கவிதை அருமை.

K சொன்னது…

தொலைவில் இருந்துவரும்
அமானுஷ்ய சத்தத்தில்,
இதயத்துடிப்பு நிற்கும் அளவு
பயம் கவ்வி இழுக்க,
உள்ளிருக்கும் பயத்தை
வெளிக்காட்ட வகையில்
என்னை மீட்டெடுக்கிறேன்
உன்னை பற்றிய நினைவுகளிருந்து...//////

வாவ்வ்வ்வ்வ்வ்! சூப்பர் ரேவா! ரேவாவின் கவியாற்றலில் நல்ல முன்னேற்றம்! வாழ்த்துக்கள் தோழி!

Unknown சொன்னது…

வாவ்வ்வ்வ்வ்வ்! சூப்பர் ரேவா! ரேவாவின் கவியாற்றலில் நல்ல முன்னேற்றம்! வாழ்த்துக்கள் தோழி!
//

REPEATU..

Unknown சொன்னது…

கவிதைனாலே அழகுதான்..அதுவும் ரவா கவிதைனா சொல்லாவா வேணும் சூப்பர்:)

'பரிவை' சே.குமார் சொன்னது…

சூப்பர் கவிதை.

Ungalranga சொன்னது…

அட..தூங்குமூஞ்சி...!!

Unknown சொன்னது…

சம்பத்குமார் கூறியது...

மெல்ல மெல்ல இரவின் மடியில்இருந்து இறங்கும் ////நிலவுக் குழந்தைஉறங்கிப் போக,எல்லோரும் விழிக்கதொடங்கும் போதுஉறங்கிப் போகிறேன்நான்...//

ரசித்த வரிகள்

சூப்பர் கவிதை நண்பரே

நட்புடன்
சம்பத்குமார்

நன்றி அண்ணா உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்...தொடர்ந்து வாருங்கள்

Unknown சொன்னது…

suryajeeva கூறியது...

அது சரி!!!!!!!!!!

:)

Unknown சொன்னது…

kavithai (kovaikkavi) கூறியது...

''....இந்த அடர்ந்த பயம் கக்கும்
இருட்டில் ஆறுதல் என்னவோ
நிலவு மட்டும் தான்...''
vaalthukal sakothary.
http://www.kovaikkavi.woedpress.com

நன்றி சகோதரி உங்கள் மறுமொழிக்கும் வருகைக்கும்

Unknown சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...

வழக்கம் போல ரேவா கவிதைகள் அழகு...!!!

ரொம்ப நன்றி மனோ அண்ணா :)

Unknown சொன்னது…

விக்கியுலகம் கூறியது...

super

ரொம்ப நன்றி விக்கியுலகம் அண்ணா :)

Unknown சொன்னது…

MUTHARASU கூறியது...

கவிதை அருமை.

உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி சகோ..தொடர்ந்து வாருங்கள் :)

Unknown சொன்னது…

Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...

தொலைவில் இருந்துவரும்
அமானுஷ்ய சத்தத்தில்,
இதயத்துடிப்பு நிற்கும் அளவு
பயம் கவ்வி இழுக்க,
உள்ளிருக்கும் பயத்தை
வெளிக்காட்ட வகையில்
என்னை மீட்டெடுக்கிறேன்
உன்னை பற்றிய நினைவுகளிருந்து...//////

வாவ்வ்வ்வ்வ்வ்! சூப்பர் ரேவா! ரேவாவின் கவியாற்றலில் நல்ல முன்னேற்றம்! வாழ்த்துக்கள் தோழி!


அவ்வவ் எனி உள்குத்து... ஹி ஹி நன்றி நண்பா உன் வாழ்த்துக்கும் வருகைக்கும்

Unknown சொன்னது…

siva கூறியது...

வாவ்வ்வ்வ்வ்வ்! சூப்பர் ரேவா! ரேவாவின் கவியாற்றலில் நல்ல முன்னேற்றம்! வாழ்த்துக்கள் தோழி!
//

REPEATU..

அட பாவி இதையுமா கோப்பி பண்ணி போடுற... ஹி ஹி நன்றி சிவா

Unknown சொன்னது…

மழை கூறியது...

கவிதைனாலே அழகுதான்..அதுவும் ரவா கவிதைனா சொல்லவா வேணும் சூப்பர்:)

மழை நட்பே உங்களுக்கு ஓவர் குசும்பு...ஹி ஹி நன்றி நண்பரே உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

Unknown சொன்னது…

சே.குமார் கூறியது...

சூப்பர் கவிதை.

நன்றி சே.குமார் அண்ணா :)

Unknown சொன்னது…

ரங்கன் கூறியது...

அட..தூங்குமூஞ்சி...!!

ஹி ஹி ஹி

எவனோ ஒருவன் சொன்னது…

அருமை ரேவா. உங்களால மட்டும் தான் இம்மாதிரிக் கவிதைகள் எழுத முடியும். மிக அழகு :-)

இந்த அடர்ந்த பயம் கக்கும்
இருட்டில் ஆறுதல் என்னவோ
நிலவு மட்டும் தான்...
என்னைப் போல
இரவுகளில் என்னைப்போல அதுவும்
தனித்திருப்பதால்...

என் மனசுல உள்ளதை சொன்ன மாதிரி இருக்கு :-)

C.P. செந்தில்குமார் சொன்னது…

கவிதை நீட்

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

நல்ல கவிதை சகோதரி.... ரசிச்சேன்...

ஆமினா சொன்னது…

உங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரம் கிடைக்கும் போது பார்வையிடவும்

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_4769.html

வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

ஆமினா கூறியது...

உங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரம் கிடைக்கும் போது பார்வையிடவும்

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_4769.html

வாழ்த்துக்கள்

என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி தோழி....