
கண்கள் உறக்கம் அற்று,
கால்கள் தேடுதல் அற்று,
இதயமும் இயக்கம் அற்று,
தவிக்குது தவிக்குது...
ஏன் இந்த தவிப்பு,
எதற்கிந்த பிழைப்பு,
என் நிழலும் எனை பார்த்து
சிரிக்குது சிரிக்குது...
ஆறுதல் தந்தேனோ?
ஆற்றாமை மறைத்தேனோ?
என் நிழல் நீ என்ற
நினைவினில் இருந்தேனோ?
இன்று குழப்பம்
என்னை சூழ நடப்பதை
நானறியேன்....
நிழலென...

விட்டுப் பிரிந்த வார்த்தைகளிலும்,
கொட்டித் தீர்த்த கோவங்களிலும்,
மனதின் ரணம் மறைத்து,
இதழோரம் வலிக்கும்
புன்னகைகள் புரியவைக்கும்
வாழ்க்கை முறைகளை....
மௌனமாய் கடந்தாலும்,
குத்தல் பேச்சுகளின்
அஸ்த்திரத்தில் சிக்குண்டாலும்,
காயம் படாததைப் போன்ற
பழக்கங்கள் புரியவைக்கும்
வாழ்க்கை வழி(லி)களை..
புரிந்தவைகளையும்,
புரியாதவைகளையும்,
பிரித்துப்...

யாரோ ஒருவனுக்காய்
உள்ளிருக்கும் ரகசிய
ஆசை முடிச்சுகளை
நான் அறியாமல் அவிழ்க்கிறது
என் கவிதை...
பெண் என்ற வட்டத்தில்
ஒளிந்து கொள்ள,
ஆளுமைகள் வாய்க்கு
அவி(ல்)லாகாமல் இருக்க,
ஒரு மனித புழுவாய்
என் சுயம் தேட
சிலநேரங்களில்,
எனக்கும் கவிதை
தேவைப்படுகிறது...
தனிமைச் சிறைகளை,
வாழ்வின் ரணங்களை,
நினைவின்...

உன்னைக் காணும் போதெல்லாம்கர்வப் படச்செய்யும்அந்த கண்களில் என்ன தான் ஒளித்துவைத்திருக்கிறாய்...
பட்டாம்பூச்சியாய் படபடக்கிறதுஎன் கண்கள்உன் விழிகண்டு..
உன் பார்வை தீண்டும ஒவ்வொரு நிமிடத்திலும்பலவாறாய் எனக்குள்நீ...
சிலநேரப் பார்வைஅரவணைப்பாய்,சிலநேரப் பார்வைகதகதப்பாய்..சிலநேரப் பார்வை குறுகுறுப்பாய்...சிலநேரப்...

அம்மா என் பெயர் சொல்லி
அழைக்கும் போதெல்லாம்
மறக்காமல் வந்து விடுகிறது
உன் நினைவு...
பேரழகை இன்னும் இன்னும்
அழகாக்குகிறது
நீ சூடிக்கொண்டு வரும்
வெட்கம்
விட்டுவிட நினைத்தாலும்
முடியவில்லை
எதிலாவது உன்னை நினைவு படுத்தும்
இந்த நினைவுகளை..
சிறகில்லாமல் பறந்து வரும்
காதல்...

தேங்க்ஸ் : கூகிள்
கண்ணாடியில் வீசிய
கல்லாய்
உன் பார்வைகள்,
என்னுள் சிதறிக்கிடந்தாலும்
ஒவ்வொன்றிலும் வித விதமாய்
தெரிகிறாய்
நீ
காதலோடு...
♥
விதையிலே இருக்கும்
மரங்களைப் போல்,
உன்னுள் விதைக்காமலே
காத்திருக்கிறது,
என்னுள் வேர்கொண்ட
நம் காதல்....
♥ பார்க்காமல் இருக்க
ஆயிரம் காரணம்...