உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 26 நவம்பர், 2011

எனக்கும் கவிதை தேவைப்படுகிறதுயாரோ ஒருவனுக்காய்
உள்ளிருக்கும் ரகசிய
ஆசை முடிச்சுகளை
நான் அறியாமல் அவிழ்க்கிறது
என் கவிதை...

பெண் என்ற வட்டத்தில்
ஒளிந்து கொள்ள,
ஆளுமைகள் வாய்க்கு
அவி(ல்)லாகாமல் இருக்க,
ஒரு மனித புழுவாய்
என் சுயம் தேட
சிலநேரங்களில்,
எனக்கும் கவிதை
தேவைப்படுகிறது...

தனிமைச் சிறைகளை,
வாழ்வின் ரணங்களை,
நினைவின் சுமையினை,
பிரிந்த உறவினை,
உள்ளிருக்கும் ஏக்கத்தினை,
ஏமாந்த கதைதனை,
ஆனந்த நிகழ்வினை,
அழவைக்கும் நிஜத்தினை,
அன்பான  காதலை,
உள்ளிருக்கும் அன்பினை,
வருங்கால ஒருத்தனை,
வளம் சேர்க்கும் பொழுதினை,
உயிர் கொடுத்த நட்பினை,
என ஏதேனும் ஒற்றை
நிகழ்வில் நிதர்சனத்தை
புரியவைக்க,
நிகழ்கால வலியின்
சுவடை நிஜத்திற்கு
தெரியவைக்க,
புரியாமல் முடிந்து போன
வாழ்வியல் வலியில் இருந்து
என்னை மீட்டெடுக்க
எனக்கும் தேவைபடுகிறது
கவிதை...


என் சுயப்போராட்டத்தில்,
என்னை நான் வெல்ல,
நிஜங்களை நேசிக்க,
உறவுச் சுமைகளை சுகமாய் சுமக்க,
பழக்கப்பட்ட கவலைகளை
காகிதத்தில் சிறைவைக்கயென
எனக்கும் சில நேரங்களில்
கவிதை தேவைபடுகிறது....
ஆம் எனக்கும் கவிதை தேவைப்படுகிறது...

21 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அத்தனை வலிகளுக்கு மருந்தாகவும்...
வாழ்க்கையின் பயணத்தில் விருந்தாகவும்...
போர்களத்தில் நமக்கு ஒரு ஆயுதமாகவும்...
இல்லத்தில் ஒரு ஆளாகவும்..

நவரசங்களுக்குள் இருந்துக்கொண்டு நம்மை வழிநடத்துவது கவிதையே...

இதை புரிந்துக்கொண்வர்கள் கவிஞர்கள்...


கவிதை தங்களுக்கு துணையாக இருக்க வாழ்த்துக்கள்...

Ramani சொன்னது…

அருமை அருமை
எல்லோருக்குமே கவிதை
இப்படித்தான இதற்குத்தான் தேவைப்படுகிறது
மனம் கவர்ந்த அருமையான பதிவு
வாழ்த்துக்கள்
த.ம 3

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கவிதை தேவைபடுகிறது....
ஆம் எனக்கும் கவிதை தேவைப்படுகிறது..//

மனதின் வலிகளை ஒன்று யாரிடமாவது கொட்டி தீர்க்கவேண்டும் இல்லை கவிதை வடிக்க வேண்டும் ம்ம்ம்ம் அருமை....!!!!

siva சொன்னது…

Great effort.

Well done.

Tamilraja k சொன்னது…

நிகழ்கால வலியின்
சுவடை நிஜத்திற்கு
தெரியவைக்க,
புரியாமல் முடிந்து போன
வாழ்வியல் வலியில் இருந்து
என்னை மீட்டெடுக்க
எனக்கும் தேவைபடுகிறது
கவிதை...
என்ன சொலவது? கவிஞன் எல்லா உணர்வுகளைப் பற்றியும் எழுதுகிறான்.ஒரு உண்மையான கவிஞனின் தேவைகளை பதிவு செய்திருக்கிறீர்கள். அருமை. நீண்ட நாட்களுக்கு முன் சோர்வடைந்திருந்த பொழுது நான் எழுதிய கவிதை, படித்துப் பார்க்கவும்


http://tamilraja-thotil.blogspot.com/2007/11/blog-post.html

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

Nice

சித்தாரா மகேஷ். சொன்னது…

//என் சுயப்போராட்டத்தில்,
என்னை நான் வெல்ல,
நிஜங்களை நேசிக்க,
உறவுச் சுமைகளை சுகமாய் சுமக்க,
பழக்கப்பட்ட கவலைகளை
காகிதத்தில் சிறைவைக்கயென
எனக்கும் சில நேரங்களில்
கவிதை தேவைபடுகிறது....//

ம்ம்.நிஜங்களின் நிழலினை மிக அருமையாக பிரதிபலித்திருக்கிறது தங்களது கவிதை.

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

class revathi..

மழை சொன்னது…

கவிதை கிடைக்க வாழ்த்துக்கள்:)
பெண் என்ற வட்டத்தில்
ஒளிந்து கொள்ள,
ஆளுமைகள் வாய்க்கு
அவி(ல்)லாகாமல் இருக்க,
ஒரு மனித புழுவாய்
என் சுயம் தேட
சிலநேரங்களில்,
எனக்கும் கவிதை
தேவைப்படுகிறது...
////

அட அட அட சூப்பர்ப்:)

ரேவா சொன்னது…

கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...

அத்தனை வலிகளுக்கு மருந்தாகவும்...
வாழ்க்கையின் பயணத்தில் விருந்தாகவும்...
போர்களத்தில் நமக்கு ஒரு ஆயுதமாகவும்...
இல்லத்தில் ஒரு ஆளாகவும்..

நவரசங்களுக்குள் இருந்துக்கொண்டு நம்மை வழிநடத்துவது கவிதையே...

இதை புரிந்துக்கொண்வர்கள் கவிஞர்கள்...


கவிதை தங்களுக்கு துணையாக இருக்க வாழ்த்துக்கள்...

மிக்க நன்றி நண்பா :)

ரேவா சொன்னது…

Ramani கூறியது...

அருமை அருமை
எல்லோருக்குமே கவிதை
இப்படித்தான இதற்குத்தான் தேவைப்படுகிறது
மனம் கவர்ந்த அருமையான பதிவு
வாழ்த்துக்கள்
த.ம 3

மிக்க நன்றி ஐயா....

ரேவா சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...

கவிதை தேவைபடுகிறது....
ஆம் எனக்கும் கவிதை தேவைப்படுகிறது..//

மனதின் வலிகளை ஒன்று யாரிடமாவது கொட்டி தீர்க்கவேண்டும் இல்லை கவிதை வடிக்க வேண்டும் ம்ம்ம்ம் அருமை....!!!!

உண்மைதான் அண்ணா :) நன்றி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் :)

ரேவா சொன்னது…

siva கூறியது...

Great effort.

Well done.

Thank you so much:)

ரேவா சொன்னது…

Tamilraja k கூறியது...

நிகழ்கால வலியின்
சுவடை நிஜத்திற்கு
தெரியவைக்க,
புரியாமல் முடிந்து போன
வாழ்வியல் வலியில் இருந்து
என்னை மீட்டெடுக்க
எனக்கும் தேவைபடுகிறது
கவிதை...
என்ன சொலவது? கவிஞன் எல்லா உணர்வுகளைப் பற்றியும் எழுதுகிறான்.ஒரு உண்மையான கவிஞனின் தேவைகளை பதிவு செய்திருக்கிறீர்கள். அருமை. நீண்ட நாட்களுக்கு முன் சோர்வடைந்திருந்த பொழுது நான் எழுதிய கவிதை, படித்துப் பார்க்கவும்


http://tamilraja-thotil.blogspot.com/2007/11/blog-post.html

நன்றி உங்கள் வருக்கைக்கும் மறுமொழிக்கும், கண்டிப்பாய் தங்கள் கவிதையை படிக்கிறேன் நண்பரே :)

ரேவா சொன்னது…

T.V.ராதாகிருஷ்ணன் கூறியது...

Nice

Thank you so much :)

ரேவா சொன்னது…

சித்தாரா மகேஷ். கூறியது...

//என் சுயப்போராட்டத்தில்,
என்னை நான் வெல்ல,
நிஜங்களை நேசிக்க,
உறவுச் சுமைகளை சுகமாய் சுமக்க,
பழக்கப்பட்ட கவலைகளை
காகிதத்தில் சிறைவைக்கயென
எனக்கும் சில நேரங்களில்
கவிதை தேவைபடுகிறது....//

ம்ம்.நிஜங்களின் நிழலினை மிக அருமையாக பிரதிபலித்திருக்கிறது தங்களது கவிதை.

நன்றி சித்தாரா மகேஷ் :)

ரேவா சொன்னது…

ப்ரியமுடன் வசந்த் கூறியது...

class revathi..

தேங்க்ஸ் பாஸ் :)

ரேவா சொன்னது…

மழை கூறியது...

கவிதை கிடைக்க வாழ்த்துக்கள்:)
பெண் என்ற வட்டத்தில்
ஒளிந்து கொள்ள,
ஆளுமைகள் வாய்க்கு
அவி(ல்)லாகாமல் இருக்க,
ஒரு மனித புழுவாய்
என் சுயம் தேட
சிலநேரங்களில்,
எனக்கும் கவிதை
தேவைப்படுகிறது...
////

அட அட அட சூப்பர்ப்:)
]
நன்றி மழை நண்பரே :)

எவனோ ஒருவன் சொன்னது…

எனக்கும் கவிதை தேவைப்படுகிறது - தலைப்பை பார்த்த போது காதல் கவிதை என்று நினைத்தேன்.
ஆனால், வாழ்வின் உண்மைகளை கவிதை மூலம் உணர்த்தி உள்ளீர்கள். நல்லா இருக்கு.

அப்புறம் உங்களைப் பற்றி எழுதி உள்ள "புரியாத வாழ்க்கைக்குள், புதைந்து கிடைக்கும் அன்பின் புதையலை, அன்போடு அனுபவிப்பவள்..." - இதுவும் அற்புதம் :-)

பெயரில்லா சொன்னது…

நல்லா இருக்கு!

இரவின் புன்னகை சொன்னது…

அருமையான வரிகள்...