உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 29 நவம்பர், 2011

புரிந்துகொள்ள முடியாதவர்கள்...
விட்டுப் பிரிந்த வார்த்தைகளிலும்,
கொட்டித் தீர்த்த கோவங்களிலும்,
மனதின் ரணம் மறைத்து,
இதழோரம் வலிக்கும்
புன்னகைகள் புரியவைக்கும்
வாழ்க்கை முறைகளை....

மௌனமாய் கடந்தாலும்,
குத்தல் பேச்சுகளின்
அஸ்த்திரத்தில் சிக்குண்டாலும்,
காயம் படாததைப் போன்ற
பழக்கங்கள் புரியவைக்கும்
வாழ்க்கை வழி(லி)களை..

புரிந்தவைகளையும்,
புரியாதவைகளையும்,
பிரித்துப் பார்த்து
பகிர்ந்து கொள்வதில்
புரிந்து போகிறது
வாழ்க்கையின் புரிதல்கள்...

பழகிப் போன வலிகளிலும்,
பாலாய்ப் போன பசிகளிலும்,
இன்னும் இன்னும் என
தாகம் கொண்ட தவிப்பிலும்,
சில நேரத் தனிமையிலும்,
தனல் கக்கும் இரவினிலும் ,
விடாது துரத்துகின்ற
கடமைகள் புரியவைக்கும்
வாழ்க்கையின் அர்த்தத்தை...

வாழ்க்கையில்
இன்னும் இன்னுமாய்
தேடல்கள் தொடர்ந்தாலும்
தேவைகள் நீண்டாலும்,
வாய்ப்புகள் வளர்ந்தாலும்,
புறம் தனில் சிரித்து
அகம்தனில் நடிக்கும்
சிலர் மட்டும்
இன்னும் புரிந்துகொள்ள முடியாதவர்களாய்............

20 கருத்துகள்:

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

“நான்“

தேடும் கவிதை..

அருமை..

விக்கியுலகம் சொன்னது…

"புன்னகைகள் புரியவைக்கும்
வாழ்க்கை முறைகளை.."

>>>>>>>>>>

சகோ நச்!

துரைடேனியல் சொன்னது…

Nice.

துரைடேனியல் சொன்னது…

TM 3.

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

//பழகிப் போன வலிகளிலும்,
பாலாய்ப் போன பசிகளிலும்,
இன்னும் இன்னும் என
தாகம் கொண்ட தவிப்பிலும்,
சில நேரத் தனிமையிலும்,
தனல் கக்கும் இரவினிலும் ,
விடாது துரத்துகின்ற
கடமைகள் புரியவைக்கும்
வாழ்க்கையின் அர்த்தத்தை.
//
அருமையான வரிகள்

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

உங்கள் பார்வைக்கு ..

பதிவர்களையும், அஜித் ரசிகர்களையும் கேவலப்படுத்திய "வினவு" தளம்

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

அருமை

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

தன்னை தானே புரிந்துக்கொண்டால் மனிதன் ஞானம் அடைந்துவிடுகிறான்...

நல்லதொரு படைப்பு வாழ்த்துக்கள்...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

புறம் தனில் சிரித்து
அகம்தனில் நடிக்கும்
சிலர் மட்டும்
இன்னும் புரிந்துகொள்ள முடியாதவர்களாய்..........//

இதுதான் மனித வாழ்க்கை...!!!

கவிதை அருமையாக இயல்பா இருக்கு வாழ்த்துக்கள்...!!!

சித்தாரா மகேஷ். சொன்னது…

//சில நேரத் தனிமையிலும்,
தனல் கக்கும் இரவினிலும் ,
விடாது துரத்துகின்ற
கடமைகள் புரியவைக்கும்
வாழ்க்கையின் அர்த்தத்தை...//
நிச்சயமாக.வாழ்க்கை என்பது வாழ்வதற்கே.புரிந்து கொண்டால் நம் வாழ்வு நம் கையில்.

என் மனதை திருடிய பாடல்கள்

rishvan சொன்னது…

arumai reva.... www.rishvan.com

ரேவா சொன்னது…

முனைவர்.இரா.குணசீலன் கூறியது...

“நான்“

தேடும் கவிதை..

அருமை..

மிக்க நன்றி நண்பரே :)

ரேவா சொன்னது…

விக்கியுலகம் கூறியது...

"புன்னகைகள் புரியவைக்கும்
வாழ்க்கை முறைகளை.."

>>>>>>>>>>

சகோ நச்!

நன்றி சகோ :)

ரேவா சொன்னது…

துரைடேனியல் கூறியது...

Nice.

மிக்க நன்றி சகோ உங்கள் முதல் வருகைக்கும் மறுமொழிக்கும்...தொடர்ந்து வாருங்கள் :)

ரேவா சொன்னது…

"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

//பழகிப் போன வலிகளிலும்,
பாலாய்ப் போன பசிகளிலும்,
இன்னும் இன்னும் என
தாகம் கொண்ட தவிப்பிலும்,
சில நேரத் தனிமையிலும்,
தனல் கக்கும் இரவினிலும் ,
விடாது துரத்துகின்ற
கடமைகள் புரியவைக்கும்
வாழ்க்கையின் அர்த்தத்தை.
//
அருமையான வரிகள்


நன்றி சகோ :)

ரேவா சொன்னது…

கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...

தன்னை தானே புரிந்துக்கொண்டால் மனிதன் ஞானம் அடைந்துவிடுகிறான்...

நல்லதொரு படைப்பு வாழ்த்துக்கள்...

மிக்க நன்றி நண்பா :)

ரேவா சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...

புறம் தனில் சிரித்து
அகம்தனில் நடிக்கும்
சிலர் மட்டும்
இன்னும் புரிந்துகொள்ள முடியாதவர்களாய்..........//

இதுதான் மனித வாழ்க்கை...!!!

கவிதை அருமையாக இயல்பா இருக்கு வாழ்த்துக்கள்...!!!

நன்றி அண்ணா :)

ரேவா சொன்னது…

சித்தாரா மகேஷ். கூறியது...

//சில நேரத் தனிமையிலும்,
தனல் கக்கும் இரவினிலும் ,
விடாது துரத்துகின்ற
கடமைகள் புரியவைக்கும்
வாழ்க்கையின் அர்த்தத்தை...//
நிச்சயமாக.வாழ்க்கை என்பது வாழ்வதற்கே.புரிந்து கொண்டால் நம் வாழ்வு நம் கையில்.

நன்றி சகோ உன் மறுமொழிக்கும் வருகைக்கும் :)

ரேவா சொன்னது…

rishvan கூறியது...

arumai reva.... www.rishvan.com

நன்றி சகோ :)

எவனோ ஒருவன் சொன்னது…

என்ன திடீர்னு சோகமா எழுத ஆரம்பிச்சுட்டீங்க?

உங்களுக்கு பரவா இல்லை சிலரை மட்டும் தான் புரிஞ்சுக்க முடியலை. எனக்கு யாரையுமே புரிஞ்சுக்க முடியல :-)