பரபரப்பான நேரமது
ஒவ்வொருவரும் ஒவ்வொரு
விதமாய்
கடந்து செல்கின்றனர் என்னை,
சிலர் சிரித்தபடி,
சிலர் சிணுங்கியபடி,
இன்னும் சிலர்
ஏதோ சிந்தனையில் மூழ்கியபடி
சிலர் எட்டாக்கனிக்கு வித்திட்டபடி,
தினப்படி நடக்கும்
செயல்களை திட்டமிட்டபடி,
கைக்குள் வந்துவிட்ட
காதலோடு உறவாடியபடி,
பசிக்கு மருந்தாகும்
உணவிற்க்காய் உழைத்தபடி,
தன்னுள் ஒரு உயிரை சுமந்தபடி,
கண்ணுக்கு விருதாகும் அழகை ரசித்தபடி,
முதுமையதை சபித்தபடி,
குழந்தையொன்று பொதி சுமந்தபடி,
இன்னொருவன் தோல்வியை
தான் வெற்றியாய் புசித்தபடி,
இன்னும் சிலர் தன்னையே மறந்தபடி,
சிலர் தனக்கான வரவை எதிர்பார்த்தபடி,
சிலர் தான் வாழும் வாழ்வை சபித்தபடி
என ஒவ்வொரு முகங்களிலும்
ஏதோ ஒரு உறவின் முகப்பூச்சை
உணரமுடிகின்றது..
இந் நிகழ்வுகளை
உள்வாங்கியபடியே,
விறகில் அடுக்கிவைக்கப்பட்ட
நேற்றைய மனிதனுக்கு தீமூட்ட
மறந்து விடுகின்றேன்
வெட்டியான் என்பதை மறந்து ..
மூட்டிய தீயில் வெந்து சாகும்
மனித இச்சைகளைக் கண்டு
மறத்தும் விடுகின்றேன்
மனிதன் என்பதை மறந்து....
ஒவ்வொருவரும் ஒவ்வொரு
விதமாய்
கடந்து செல்கின்றனர் என்னை,
சிலர் சிரித்தபடி,
சிலர் சிணுங்கியபடி,
இன்னும் சிலர்
ஏதோ சிந்தனையில் மூழ்கியபடி
சிலர் எட்டாக்கனிக்கு வித்திட்டபடி,
தினப்படி நடக்கும்
செயல்களை திட்டமிட்டபடி,
கைக்குள் வந்துவிட்ட
காதலோடு உறவாடியபடி,
பசிக்கு மருந்தாகும்
உணவிற்க்காய் உழைத்தபடி,
தன்னுள் ஒரு உயிரை சுமந்தபடி,
கண்ணுக்கு விருதாகும் அழகை ரசித்தபடி,
முதுமையதை சபித்தபடி,
குழந்தையொன்று பொதி சுமந்தபடி,
இன்னொருவன் தோல்வியை
தான் வெற்றியாய் புசித்தபடி,
இன்னும் சிலர் தன்னையே மறந்தபடி,
சிலர் தனக்கான வரவை எதிர்பார்த்தபடி,
சிலர் தான் வாழும் வாழ்வை சபித்தபடி
என ஒவ்வொரு முகங்களிலும்
ஏதோ ஒரு உறவின் முகப்பூச்சை
உணரமுடிகின்றது..
இந் நிகழ்வுகளை
உள்வாங்கியபடியே,
விறகில் அடுக்கிவைக்கப்பட்ட
நேற்றைய மனிதனுக்கு தீமூட்ட
மறந்து விடுகின்றேன்
வெட்டியான் என்பதை மறந்து ..
மூட்டிய தீயில் வெந்து சாகும்
மனித இச்சைகளைக் கண்டு
மறத்தும் விடுகின்றேன்
மனிதன் என்பதை மறந்து....
முந்தய கவிதை : காணமல் போன அப்பா
17 கருத்துகள்:
MEEEEEEEE THE FIRSTU COMENTU...
Very Very Nice Post...
பதிவுலகில் ஒரு புரட்சி...
தெரிந்துக் கொள்ள இந்த பதிவை வாசியுங்கள்..
http://ungaveetupillai.blogspot.com/2011/12/blog-post.html
வெட்டியானும் மனிதன் தானே... நல்ல கவிதை
பல விதமான மனித உணர்வுகள்... அன்று நந்த வனத்தில் ஓர் ஆண்டி... இன்று வெட்டியான்.. அவன் பிற மனிதனின் கவலைகளை அறியாதவன் தனெக்கென்று நேரும் வரை.. இவனோ அனைத்து உணர்வுகளை அறிந்தவன்..
வாழ்த்துக்கள் தோழி...
வாழ்த்துக்கள் தோழி...
இன்னொருவன் தோல்வியை
தான் வெற்றியாய் புசித்தபடி,
இன்னும் சிலர் தன்னையே மறந்தபடி,
சிலர் தனக்கான வரவை எதிர்பார்த்தபடி,
சிலர் தான் வாழும் வாழ்வை சபித்தபடி
என ஒவ்வொரு முகங்களிலும்
ஏதோ ஒரு உறவின் முகப்பூச்சை//
ஒவ்வொரு கேரக்டர்களும் ஆயிரம் கதைகள் சொல்கின்றன அசத்தலா இருக்கு...!!!
வணக்கம் அக்கா,
நல்லதோர் கவிதை,
தம் புற உணர்வுகளை மறைத்து மற்றவர்களிடம் ஏதோ ஒன்றை எதிர்பார்த்துச் செல்வோர் பற்றிய மறைமுகச் சாடல் நிறைந்த கவிதை அழகாக இருக்கிறது.
ena athukkulle... appadi oru sogam... reva..
மனித உணர்வுகளை உணர கற்றுக்கொடுக்கும் கவிதை. அருமை. பகிர்வுக்கு நன்றி!
அருமை.
what's up revakavithaikal.blogspot.com admin found your website via search engine but it was hard to find and I see you could have more visitors because there are not so many comments yet. I have discovered website which offer to dramatically increase traffic to your website http://xrumerservice.org they claim they managed to get close to 1000 visitors/day using their services you could also get lot more targeted traffic from search engines as you have now. I used their services and got significantly more visitors to my website. Hope this helps :) They offer homepage service seo link exchange backlinks back link Take care. Jay
///குழந்தையொன்று பொதி சுமந்தபடி,///
வேகமாய் வாசித்த என்னை நிறுத்தி வைத்த இடம்... அது தான்..
நன்றி நன்றி...
ம்ம்.. அருமை..
//இன்னொருவன் தோல்வியை
தான் வெற்றியாய் புசித்தபடி//
நல்லா இருக்கு..
you lines are simply super super super. i written some tamil kavithai in my blog.
please check and give ur comments
http://alanselvam.blogspot.com/
என்ன ரேவாவிற்கு மனுஷங்க மேல இவ்வளவு கோபம் ன்னு புரியாம வாசிச்சிட்டு இருந்தேன். கடைசி வரிகளைப் படித்ததும் தான் புரிந்தது :-)
இந் நிகழ்வுகளை
உள்வாங்கியபடியே,
விறகில் அடுக்கிவைக்கப்பட்ட
நேற்றைய மனிதனுக்கு தீமூட்ட
மறந்து விடுகின்றேன்
வெட்டியான் என்பதை மறந்து ..
மூட்டிய தீயில் வெந்து சாகும்
மனித இச்சைகளைக் கண்டு
மறத்தும் விடுகின்றேன்
மனிதன் என்பதை மறந்து...
அருமை ரேவா. எப்படி இவரு angle ல இருந்து யோசிக்கிறீங்க..
சரி எதுக்கு நான் கடவுள் ஆர்யா படம் :-)
கருத்துரையிடுக