வணக்கம் என் வலையுலக உறவுகளே நலமா? வருடம் ஆரம்பித்து இப்பொழுதுதான் உங்களை சந்திக்க முடிந்தது. மகிழ்ச்சியா 2011 வழியனுப்பி வச்சாச்சா? பிறந்திருக்கும் வருடம் கண்ணிடிப்பா நல்ல விசயங்களை எல்லார் வாழ்க்கையிலும் தரும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை...(மாயன் காலண்டர் ஒரு பக்கம் பயமுறுத்தும்... இருந்தாலும் டோன்ட் வொர்ரி பி ஹாப்பி ) இந்த வருடத்தில இருந்து ஒவ்வொரு விசயத்தையும் மன நிறைவோட பண்ணனும்னு நினைச்சிருக்கேன், அதான் என் மனசுக்கு பிடிச்ச விசயங்களையும், பாதிச்ச விசயங்களையும் அசைபோடும் ஒரு நிகழ்வா இந்த பதிவ வடிச்சிருக்கேன்... 2011 நான் அதிகம் எதிர்பார்த்த வருடம்னு தான் சொல்லணும்....எனக்கான பல மாற்றங்களை கடந்த காலம் தரும்னு காத்திருந்தேன், உதாரணாம வேலையில இருந்து இன்னும் பல விஷயங்களை சொல்லலாம்...
வாழ்க்கையில நம்மளையும் மீறி சில விஷயங்கள் நடக்கும் தானே, அது மாதிரி தான் என் பதிவுலக பயணமும்...ஆனாலும் இங்க எல்லாருக்கும் இருக்கிற இந்த காதல் (பதிவுலகம் மேல ) எனக்கு அப்போ பதிவுலகம் மேல இல்லை..எனக்கு தெரிஞ்சு என்னோட ரேவா கவிதைகள் என் பர்சனல் டைரி அஹ தான் எனக்கு இருந்தது, இதுக்குப் பின்னாடி இப்படி ஒரு மாய உலகம் இருக்கும்னு நான் நினைச்சதே இல்லை. இரண்டாயிரத்து பத்திலேயே பதிவுகள் போட ஆரம்பிச்சாலும், பதிவுலகத்துக்கே இருக்கிற சில சம்பிரதாய சடங்குகள் நான் அறிய காரணமா இருந்தது சகோதரன் கார்த்திக், அவர் இல்லாட்டி இன்னைக்கு எனக்கு நல்ல உறவும் நட்பும் கிடைச்சிருக்காது,,அதற்க்கு நன்றி.
என்னப் பொறுத்தவரை பதிவுலகம் எனக்கு ஒரு தவச்சாலைன்னு தான் சொல்லணும்...என்னோட வாழ்வியல் வலிகளுக்கு மருந்தா இருந்ததால, இருக்கிறதால அப்படி சொல்றேன்..ஏதோ விளையாட்டா எழுத ஆரம்பிச்சேன், நல்லா எழுதுறேனோ இல்லையோ தெரியாது, ஆனா போலியாய் இல்லாமல் எனக்கு ஒன்னுனா உயிர் துடிக்கும் நல்ல மனிதர்களை நட்பாவும், உறவாவும் சம்பாதிச்சிருக்கேன்னு நினைக்கும் போது, என்னையும் அறியாம ஒரு கர்வம் காதலா என்ன தொற்றிக் கொள்ளுது...
பதிவுலகம் வந்தப்போ இருக்கிற என் எழுத்திற்கும், இப்போ இருக்கிற என் எழுத்துக்கும் மாறுதல் இருக்கு, சோ மாறுதல் தந்த இந்த உலகிற்கு நன்றிகள். என்னோட சின்ன சின்ன கவிதைகளையும் பாராட்டி, தப்புனா திருத்தச் சொல்லி, நல்ல இருந்தா வாழ்த்தி வருற அத்துணை மறுமொழிகளுக்கும், மறுமொழி இடும் நண்பர்களுக்கும் நன்றி...

கடந்த வருடத்தின் சந்தோஷ நிகழ்வுனா பதிவுலகத்துல இருந்து நல்ல நட்புகள் கிடைச்சது தான். வேதனையான விஷயம்னாலும் இதே பதிவுலகத்தில் நடந்த கசப்பான விஷயங்கள் தான்..
மிகப் பெரிய சந்தோஷம் னு சொல்லனும்னா என் தம்பி கல்லூரி படிப்பில இருந்து அடுத்தக் கட்ட வாழ்க்கைக்கு அதாவது வேலைக்கு அடியெடுத்து வச்சது தான்...இப்போதைக்கு எல்லா வலிகளையும் சுகங்களா எடுத்து வாழப் பழகிகிட்டேன்..இனிவரும் என் காலமும் அப்படியே தான் தொடரும்...இதுவரை என்னைத் தொடரும் அனைத்து சகோதர நட்புக்கும் நன்றிகள் பல... தவிர்க்க முடிய சில காரணங்களால் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் போட வேண்டிய பதிவு இப்போ தான் போட முடிஞ்சது...மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம் என் உறவுகளே....
17 கருத்துகள்:
////பதிவுலகத்துக்கே இருக்கிற சில சம்பிரதாய சடங்குகள் நான் அறிய////
என்னன்னு எனக்கும் சொல்லலாமே :-)
மேலும் பல நட்புகள் உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள் ரேவா :-)
தொடர்ந்து தங்கள் பதிவுச் சேவை தொடரட்டும் :-)
தொடர்ந்து எழுதுங்கள் ரேவா....
இதுவரை என்னைத் தொடரும் அனைத்து சகோதர நட்புக்கும்
உடன் இந்த தென்றலையும் இணைத்துக்கொள்ளுங்கள் நட்பே பகிர்வுக்கு நன்றி
வணக்கம் அக்காச்சி,
நினைவுகளை மீட்டிப் பார்த்திருக்கிறீங்க.
தொடர்ந்தும் எழுதுங்கள். பதிவுலகில் சில எதிர்பாராத நிகழ்வுகள் வருவது இயல்பு தான். ஆகவே இவற்றையெல்லாம் தூர விலக்கி நடை போடுங்கள்!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
mee the firstu..erunga padichtu varen..
புது வீடு
புது எழுத்து
புது ரேவா
கலக்குறீங்க
ரேவா.
வாழ்க வளமுடன்
நிச்சயம் எல்லாம் கடந்து போகும்
அட கவிதைகள்தான் சூப்பரா இருக்குன்னா, இந்த எழுத்து நடையும் அருமையா இருக்கே...வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சுகமுடன்...!!!
அருமையான பதிவுடன் இவ்வருடத்தை துவங்கியுள்ளீர்கள்
வரிகளில் அனுபவம் பளிச்சிடுகிறது
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
தொடர்ந்து சந்திப்போம்
த.ம 3
கடந்த வருட கசப்புகள் எல்லாம் நீங்கி.. இந்த வருடம் உங்களுக்கு இனிப்பான ஆண்டாக அமையட்டும் :))
வாழ்த்துக்கள்.... !!! :))
எவனோ ஒருவன் கூறியது...
////பதிவுலகத்துக்கே இருக்கிற சில சம்பிரதாய சடங்குகள் நான் அறிய////
என்னன்னு எனக்கும் சொல்லலாமே :-)
மேலும் பல நட்புகள் உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள் ரேவா :-)
தொடர்ந்து தங்கள் பதிவுச் சேவை தொடரட்டும் :-)3
உனக்கு சொல்லாமலா நண்பா சொல்லிட்டா போகுது...இருக்கும் நட்பிலே நிறைவாய் இருக்கிறேன் நண்பா...ஆயினும் நன்றி உன் மறுமொழிக்கு...
தமிழ்வாசி பிரகாஷ் கூறியது...
தொடர்ந்து எழுதுங்கள் ரேவா....
கண்டிப்பாக நண்பரே...தொடர்ந்து வாருங்கள் :)
sasikala கூறியது...
இதுவரை என்னைத் தொடரும் அனைத்து சகோதர நட்புக்கும்
உடன் இந்த தென்றலையும் இணைத்துக்கொள்ளுங்கள் நட்பே பகிர்வுக்கு நன்றி..
கண்டிப்பாக சகோ..தொடர்ந்து என் நட்பின் பக்கத்தில் இருப்பீர்கள்..தொடர்ந்து வாருங்கள்
நிரூபன் கூறியது...
வணக்கம் அக்காச்சி,
நினைவுகளை மீட்டிப் பார்த்திருக்கிறீங்க.
தொடர்ந்தும் எழுதுங்கள். பதிவுலகில் சில எதிர்பாராத நிகழ்வுகள் வருவது இயல்பு தான். ஆகவே இவற்றையெல்லாம் தூர விலக்கி நடை போடுங்கள்!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
நிச்சயம் சகோ...நடக்கும் நிகழ்வுகள் தான் பல அனுபவங்களை நமக்கு தருகின்றது என்பதில் சந்தேகம் இல்லை...உனக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் :)
siva sankar கூறியது...
புது வீடு
புது எழுத்து
புது ரேவா
கலக்குறீங்க
ரேவா.
வாழ்க வளமுடன்
நிச்சயம் எல்லாம் கடந்து போகும்
நிச்சயம் எல்லாம் கடந்து போகும்...வருகைக்கு நன்றி நண்பா :)
MANO நாஞ்சில் மனோ கூறியது...
அட கவிதைகள்தான் சூப்பரா இருக்குன்னா, இந்த எழுத்து நடையும் அருமையா இருக்கே...வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சுகமுடன்...!!!
உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கு நன்றி னா :)
Ramani கூறியது...
அருமையான பதிவுடன் இவ்வருடத்தை துவங்கியுள்ளீர்கள்
வரிகளில் அனுபவம் பளிச்சிடுகிறது
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
தொடர்ந்து சந்திப்போம்
த.ம 3
மிக்க நன்றி ஐயா... தொடர்ந்து சந்திப்போம் :)
சௌந்தர் கூறியது...
கடந்த வருட கசப்புகள் எல்லாம் நீங்கி.. இந்த வருடம் உங்களுக்கு இனிப்பான ஆண்டாக அமையட்டும் :))
வாழ்த்துக்கள்.... !!! :))
பார்ரா, ஹி ஹி நன்றி நன்றி நன்றி தம்பி :)
கருத்துரையிடுக