உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 10 மே, 2012

என் பார்வையில் வழக்கு எண் 18/9




வணக்கம் உறவுகளே, இதுவரை கவிதை பதிந்த என் தளத்தில் ஒரு ரசிகையாய் என் தளத்தில் வழக்கிற்க்கான தடத்தை பதிந்திட எண்ணியதன் விளைவே இந்த பதிவு...இது விமர்சனம் அல்ல, பல கோலோச்சும் சாம்ராட்கள் இருக்கும் இடத்தில் அது எனக்கு சாத்தியமும் இல்லை, ஆயினும் என்னை பாதித்த விடயங்களை ஒரு பெண் பார்வையில் பதிந்திட உந்திய விசயங்களை என் எழுத்தில் ஏற்றுகின்றேன்.........

காலையிலும், மாலையிலும், இல்லை நாம் நடந்து போகும் வீதிகளிலும் நாம் கேள்விபட்ட ஒரு செய்தியாய் கதைகளம் விரிகின்றது..... ஒரு பெண் முகத்தில் தீரவக வீச்சு.. அதன் காரணகர்த்தாக்களை தேடும் வேட்டையில் கதை நகர, ஒரளவு யூகித்தலை கதை உண்டு பண்ணிவிடிகின்றது, பின் நம் யுகம் தவறென்பதையும் கதைகளம் நிருபித்துவிடுகிறது...

சினிமா பற்றிய தொழிட்நுட்ப அறிவு எனக்கு இல்லை.. இருப்பினும் நம்மை எதைப்பற்றியும் சிந்திக்க விடாமல் இருந்த இடத்திலே அறைந்து போடுகின்ற வித்தையை இயக்குனர் பாலாஜி சார் நன்றாக தெரிந்துவைத்திருக்கிறார்... புதுமுகங்கள் என்று சொல்ல முடியா நடிப்பை வேலு மற்றும், சின்னசாமியாய் வந்து போகும் சிறுவன் தந்துவிட்டு போகின்றனர்...

கதைபற்றி ஓரளவு கேட்டும் பார்த்தும் ஆகிவிட்ட நிலையில் அனைவரும் அறிந்த கதையை இங்கு பகிர்ந்திடாது, என்னை பாதித்த இடத்தை பகிர்கின்றேன்... இன்றைய காலகட்டத்தில் இரண்டே வகை ஆண்கள் தான் காசுக்கும் காமத்திற்க்கும் ஆசைபட்டு காதல் என்ற பெயர் சொல்லி இளமையின் திமிரில் திரிபவர் ஒரு ரகம், இன்னொன்று தாயின் சாயலில் தனக்கான தேடலை கண்டுவிட்டு அவர்களுக்காகவே வாழ்கின்றவர்கள் இன்னொரு ரகம் (இது பெண்ணுக்கும் பொருந்தும்...)

இந்த இரண்டு ரக ஆண்களையும் இயக்குனர் கண்முன் படைத்துவிடுகின்றார்... பக்கத்துவீட்டு சிறுவன் மீது காட்டுகின்ற அன்பை தன் தாய் தன் மீது காட்டும் அன்பு போல் பாவித்து தன் தாய்க்கு சமமாய் ஜோதியை எண்ணி அவளுக்காகவே வாழத்துணிகின்ற ஆண்....

இன்றைய அறிவியல் வளர்ச்சியால் அத்தனையும் கண்முன்னே வந்துவிட்ட நிலையில், இந்த வளர்ச்சியை நாம் சரியாக பயன்படுத்துகின்றோமா? என்ற கேள்விக்கு  இல்லை என்பதன் பதிலாய், பணக்கார கதாநாயகனாய் வந்து போகும் தினேஷ் என்ற நடிகரின் செயல் நம் கண்ணுக்கு கிடைக்கிறது..இதே இடத்தில் அந்த பெற்றோரின் அலட்சியமும், நாம் எப்படி இருக்கவேண்டும் என்ற உதாரணத்தை எடுத்துகாட்டிவிட்டு செல்கின்றன...

இன்று நடக்கும் எதார்த்த நிகழ்வுகளை படம் பிடித்து காட்டும் தைரியம் அவ்வளவு சீக்கிரம் எவருக்கும் வந்துவிடுவதில்ல.. அப்படியே வந்தாலும் அது ஈரானிய படங்களோடு நின்றுவிடுகின்ற அவலம் இந்த படத்தில் தீர்ந்தது.. சினிமாவை பணம் பார்க்கும் தொழிற்சாலையாய் பார்த்து பழக்கப்பட்ட பலர் கண்ணுக்கு இந்த சமூதாயத்தை பற்றிய அக்கறை இருத்தாலும் பணம் என்ற மாயை அனைத்தையும் மறைத்துவிடும்..இன்று இணையத்தில் கொட்டிக்கிடக்கின்ற பல ஆபாச பதிவுகள் இன்றைய இளைய தலைமுறையை எத்தளவுக்கு சீரளிக்கும் அதற்கு பெற்றவர்கள் எப்படி நடக்கவேண்டும் என்று பாடம் சொல்லும் கதை தான் வழக்கு எண் 18/9... புதிய பாணியில் யாரும் முயற்சி பண்ணாத கேமிரா அமைப்பு என்று கேள்விபட்டேன் அது என்னவோ உண்மைதான். கதை நடக்கும் இடத்திற்கு நாமும் சேர்ந்து பயணிப்பதை போன்ற உணர்வை தருகிறது அந்த உணர்வை தந்த விஜய் மில்டன் சாருக்கு நன்றி... இசை கதையோடே இணைத்திருக்கின்றது..ஒரு குரல் கேட்குது, வானத்தையையே எட்டிப்பிடிப்பேன் இந்த இரு பாடல்களும் இன்னும் முனுமுனுக்க செய்கின்றன...

ஆர்த்தியாய் வந்து போகும் 12ம் வகுப்பு பெண் நாயகன் தினேஷ் வைத்திருக்கும் மொபைல்க்கு ஆசைப்படுவது சற்று நெருடலாய் தெரிந்தாலும் இல்லாத ஒன்றுக்கு ஆசைப்படும் சிறுபிள்ளைத்தனம் இன்னும் இருக்கின்ற நிலையில் இனக்கவர்ச்சி எந்த அளவுக்கு நம் வாழ்வை மாற்றிப்போட்டுவிடும் என்பதற்க்கான ஆர்த்தியின் கதாபாத்திரம், அதோடு இன்றைய தலைமுறைக்கே இருக்கும் அசாத்திய தைரியத்தால் தினேஷ்னின் மெமரிகார்டை எடுத்துவிட்டு அவன் நட்பை தவர்ப்பது போன்ற இடங்கள் இன்னும் பெண்கள் எவ்வள்வு பாதுகாப்பாய் இருக்கவேண்டும் என்பதை காட்டுகின்றது...

அடுத்து வேலு என்ன நடிப்புடா சாமி, போலிஸ் ஸ்டேசனுக்கு கொண்டு செல்லப்படும் காட்சியாகட்டும், மற்ற அதிகாரிகளால் அடிக்கப்பட்டு, உயர் அதிகாரியாய் வரும் அந்த பாம்பின் பேச்சுக்கு மயங்கும் இடமாகட்டும், ஜோதியின் முகமாற்று சிகிச்சைக்காய் தன் 10வருட வாழ்வை இழக்க தயாராய் இருந்த இடமாகட்டும், உணர்வுகளில் ஒன்றாகி அவரின் தனிமையின் வலியை  நமக்கு தந்து விட்டு செல்கிறார்... எதார்த்தமாய் சென்ற கதைக்களம் முடிவில் சற்று சினிமாத்தனம் திணிக்கப்பட்டது என்று தான் சொல்லவேண்டும்.....

அரசியல்வாதியாய் வரும் அந்த முகம் தெரியாத நபர் எப்போதும் பெண்களோடு சல்லாபம் செய்யும் காட்சியும் சினிமாத்தனமா தான் எனக்கு தெரிந்தது....பழிக்கு பழி தீர்வாகது என்ற போதிலும் ஜோதி அந்த போலிஸ் அதிகாரி மீது தீராவகம் வீசியது கண்டு ஏனோ என்னை அறியாமல் கைதட்டிவிட்ட இடம்... ஜோதியின் மீதும் அவர் கதாபாத்திரம் மீதும் அப்போது தான் எனக்கு மதிப்பு வந்தது...

இறுதியாய் இந்த படம் பார்வையாளருக்கு செல்லவேண்டிய விஷயங்களை சரியாய் சொல்லியதா என்றால் ஆம் என்றே சொல்வேன்... நம் இளைய தலைமுறை பயணப்பட வேண்டிய தூரம் அதிகம், அதற்கு பெற்றோர்களின் பங்கும், இந்த இணையத்தின் பங்கும் அதிகம்... இன்றைய தலைமுறைக்கு நல்லதை சொல்லித்தருவதை முன் கெட்டதின் தாக்கத்தை முதலில் செல்லித்தந்துவிட வேண்டும், பெண் பிள்ளையை பெற்றவரும், பெண் பிள்ளைகளும் இன்றைய கட்டத்தில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதற்கு தீர்வு சொல்லும் கதை தான் வழக்கு எண் 18/9...இன்றைய தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்க்கு தூக்கி நிறுத்திய படம் இது என்று சொல்வதில் பெருமையே...

கதை வழக்கிற்க்கு தீர்வு சொல்லியாகிவிட்டது, வாழும் காலத்திற்க்கான் தீர்ப்பை நாம் தான் வழங்க வேண்டும்...வாகை சூடவா படத்திற்கு அடுத்தாற் போன்ற ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியில் இந்த பதிவை நிறைவு செய்கின்றேன்............... நன்றி உறவுகளே.


7 கருத்துகள்:

செய்தாலி சொன்னது…

இயக்குனர் பாலாஜி சக்திவேல் சார் படம்
காதல்
கல்லூரி
இந்த வரிசையில் இதுவும் நல்ல படமாக இருக்கும்
கண்டிப்பா பார்க்கணும்
உங்கள் திரை விமர்சனமும் அருமை

Unknown சொன்னது…

தேர்ந்த விமர்சனம், பாலாஜி சக்திவேலை போலவே நீங்களும் சொல்ல வந்ததை தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்...

Unknown சொன்னது…

செய்தாலி கூறியது...

இயக்குனர் பாலாஜி சக்திவேல் சார் படம்
காதல்
கல்லூரி
இந்த வரிசையில் இதுவும் நல்ல படமாக இருக்கும்
கண்டிப்பா பார்க்கணும்
உங்கள் திரை விமர்சனமும் அருமை

நன்றி சகோ என் முதல் முயற்சிக்கு தந்த அன்பிற்கு மகிழ்ந்தேன் :)

Unknown சொன்னது…

இரவு வானம் கூறியது...

தேர்ந்த விமர்சனம், பாலாஜி சக்திவேலை போலவே நீங்களும் சொல்ல வந்ததை தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்...

மிக்க மகிழ்ச்சி சகோ உங்கள் மறுமொழியில்... உற்சாகம் கொண்டேன் :)

கீதமஞ்சரி சொன்னது…

மாறுபட்ட பார்வையிலான திரைவிமர்சனத்தை முழுவதுமாய் ரசித்தேன். படத்தைத் தூக்கி நிறுத்த உதவும் இதுபோன்ற விமர்சனங்களை வரவேற்கிறேன். நல்லதொரு பதிவு. பாராட்டுகள் ரேவா.

Unknown சொன்னது…

//தாயின் சாயலில் தனக்கான தேடலை கண்டுவிட்டு அவர்களுக்காகவே வாழ்கின்றவர்கள் இன்னொரு ரகம் (இது பெண்ணுக்கும் பொருந்தும்...)//

எந்த படமும் சமீப காலத்தில் பார்க்கவில்லை.. இந்த படத்தையாவது பார்க்க வேண்டும்..

கல்லூரியும் காதலும் சிறந்த படங்கள்.. இயக்குனர் பாலாஜி சக்திவேல் மீது மிகுந்த மரியாதை ஏற்றபட்டுள்ளது..

Vijayan Durai சொன்னது…

//இன்றைய தலைமுறைக்கு நல்லதை சொல்லித்தருவதை முன் கெட்டதின் தாக்கத்தை முதலில் செல்லித்தந்துவிட வேண்டும்..//
ஒரு பெண் ஆணுடன் பழகும் போது எச்சரிக்கை உணர்வுடன் பழக வேண்டும்,ஆண்களுடனான நெருக்கத்துடன் இடைவெளியும் கலந்து இருக்கட்டும் என இக்கால பெண்களுக்கு இந்த படம் எடுத்து சொல்லி இருக்கும் என்றே நம்புகிறேன் .நிதர்சனத்தை பதிவு செய்துள்ளது "வழக்கு எண்:18/9"