உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 3 ஜூலை, 2012

உனக்கும் பெண் பிறக்கலாம்...


சிறுகுழந்தையைப்போல
கவனமீர்க்கிறது
உன் வருகை...

உன் வருகைக்கு பின்னான
நியாயங்கள் ஒவ்வொன்றையும்
அளந்துபார்க்க ஆயத்தமாகிறது
மனது...

உனக்கு பிடித்ததில் தொடங்கி
பிரியமற்றதாய் நீ தவிர்க்கும்
விசயங்களென அத்தனையும்
அறிந்துவைத்திருக்கிறது
இந்த மனது...

என்னை பற்றிய
உன் நிலைப்பாடு எதுவென்றறிய
என் நிலையிலே இருந்துபார்க்கிறேன்,-பின்
உன் நிலைப்புரியாது
நிதானமிழக்கிறேன்..

உன் ஆசைக்காய் வாதாடும்
மனம்- ஏனோ
என்னைப்பற்றி நினைப்பதேயில்லை..

பெண்ணென்று எல்லாவற்றிலும்
 என்னை நிர்பந்திக்கும் மனம்
உன்னை எதிலுமே நிர்பந்திக்கவேயில்லை..

உனக்காய் சுயம் சுருக்கிய பொழுதுகளில்
எனக்குண்டான வலி
நீ அறியவே இல்லை..

பரீசிலணை செய்யாமலே
பலிகொடுக்கப்படுகின்ற
என் நெஞ்சத்து ஆசைகளை
அசைபோட
நீ ஒரு ஆடாய் கூட இல்லை..

அத்துமீறி அந்தரங்கம் திருடும்
கள்வனைப்போலல்லாது
சிறுகயிற்றின் நிமித்தம்
அன்னிச்சையாய் நடக்கும்
புணர்தல்
அதிகம் வலிகொடுக்கிறது,
உன் நேசிப்பின் தூரம் விளங்கியதன் பொருட்டு..

ஆயிரம் கனவுகளை சுமந்து
அரைகயிற்றில் அனைத்தையும்
தூக்கிலேற்றும் தந்திரம்
தெரிந்த ஆணே
உனக்கும் என் மூலம் பெண் பிறக்கலாம்..



(விதைப்பதை தான் அறுக்கமுடியும்.......) 



17 கருத்துகள்:

சாந்தி மாரியப்பன் சொன்னது…

அருமையான கவிதை..

ஆத்மா சொன்னது…

ஆஹா....
என்னது இப்பிடி கிளம்பிட்டீங்க,,,,

ஆத்மா சொன்னது…

கடைசி வரிகளில் கவலை சேர்ந்த ஏக்கம் வெளிப்படுகிறது....:(

அருமையான வரிகள்

சசிகலா சொன்னது…

விதைப்பதைத்தானே அறுக்க முடியும் அழகாக முடித்துள்ளீர்கள்.

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

ம்...

செய்தாலி சொன்னது…

இந்த ஆண் வர்க்கமே அப்படித்தான் (என்னையும் சேர்த்து )
கேள்வி நியாயமானது தான்
பதிலில் இன்னும் தடுமாறுகிறான் ஆண்

வலியை
சிறையை
ஆசையை
தன்னில் மட்டுமல்ல பிறரிலும்
உணரும்போது சுயம் உணரலாம் இந்த ...ண்கள்

ஆனால் உணர்த்தும் சிலர் காட்டிக் கொள்வதில்லை -

கண்டிப்பா விதைத்தையே அறுவடை செய்வோம்

MARI The Great சொன்னது…

அருமையான கவிதை., வேன்றோன்றும் சொல்ல தோணவில்லை!

இந்திரா சொன்னது…

//உனக்காய் சுயம் சுருக்கிய பொழுதுகளில்
எனக்குண்டான வலி
நீ அறியவே இல்லை..//

excellent Reva

இந்திரா சொன்னது…

//ஆயிரம் கனவுகளை சுமந்து
அரைகயிற்றில் அனைத்தையும்
தூக்கிலேற்றும் தந்திரம்
தெரிந்த ஆணே
உனக்கும் என் மூலம் பெண் பிறக்கலாம்..//


சாட்டையடி..
ஆனா இத யாரு யோசிக்கப் போறாங்க?
சுயநலம் என்பது இதுபோன்றவர்களின் இரத்தத்தில் ஊறிப்போய்விடுகிறது. இதில் தன் துணையின் விருப்பு வெறுப்புக்களுக்கு மதிப்பு கொடுப்பது என்பது நூற்றில் 99 சதம் இருப்பதில்லை..

'பரிவை' சே.குமார் சொன்னது…

அத்துமீறி அந்தரங்கம் திருடும்
கள்வனைப்போலல்லாது
சிறுகயிற்றின் நிமித்தம்
அன்னிச்சையாய் நடக்கும்
புணர்தல்
அதிகம் வலிகொடுக்கிறது,
உன் நேசிப்பின் தூரம் விளங்கியதன் பொருட்டு..

அருமையான கவிதை.
வரிக்கு வரி கலக்கல்.

Athisaya சொன்னது…

உனக்காய் சுயம் சுருக்கிய பொழுதுகளில்
எனக்குண்டான வலி
நீ அறியவே இல்லை..ஃஃஃஃஃ
இது போதுமே..வலி புரிகிறது..அருமை உறவே

Seeni சொன்னது…

ennamo uruthuthu ....

சிவக்குமார் சொன்னது…

நல்லாருக்கு

அன்பு துரை சொன்னது…

///***
ஆயிரம் கனவுகளை சுமந்து
அரைகயிற்றில் அனைத்தையும்
தூக்கிலேற்றும் தந்திரம்
தெரிந்த ஆணே
உனக்கும் என் மூலம் பெண் பிறக்கலாம்..
***///

அழுத்தமான வரிகள்...

செய்தாலி சொன்னது…

சகோ
அன்பின் விருது ஓன்று பகிர்ந்துள்ளேன் ஏற்றுக்கொள்ளவும்

நிரஞ்சனா சொன்னது…

அருமையான கவிதைங்க. வலியும் வேதனையும் என்னால் உணர முடிந்தது. முத்தாய்ப்பு சாட்டையடி. செய்தாலி அண்ணாவின் தளத்தில் பார்த்து முதல் வருகை இங்கு. அவரிடம் விருது பெற்ற உங்களுக்கு என் நல்வாழ்த்துக்கள்.

துயிலன் ஜோ சொன்னது…

தோழி ரேவா
நீங்கள் காதலை கொஞ்சினாலும்
வார்த்தைகளிடம் கெஞ்சுவதில்லை ,சமுக அவளங்களை
முகமூடிகளை
நீங்கள் உங்கள் மொழியில் சொல்கையில் அதிகமாய் யோசிக்க வைக்கின்றது தொடர்ந்து உங்களிடம் இதைபோன்று நிறைய எதிர்பார்க்கிறேன் :-)