உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 29 ஜூன், 2012

சின்ன சின்னதாய் காதல்...5

காதலுக்கென்று
தனிமொழியேதுமில்லாமல்
போனாலும் போய்விடும்
கொஞ்சம் வாய் திறந்து பேசிவிடு....




 
விதைத்தவனாய் 
நீ இருக்க
தன்னை தானாய் 
வளர்த்துக்கொள்கிறது
இந்த காதல்.....

ஆணியம் பேசிய உன்னையும்
பெண்ணியம் பேசிய என்னையும்
பார்த்து சிரித்துகொள்கிறது
இந்த காதலியம்...
தீர்ந்துவிடுமோ
என்ற பயத்தில்
நீ பத்திரப்படுத்தும்
புன்னகை தான்
என்னை
பாதிப் பைத்தியமாக்குகிறது
என்பதை அறிவாயா
நீ?....
வரங்கள் சில நேரம்
சாபங்களாய் போவதுண்டு
இதழ் முத்தம் கொஞ்சம்
கன்னத்திற்கு ஈயப்படும் போது......


= ரேவா
 
 
 
 

13 கருத்துகள்:

Admin சொன்னது…

சின்ன சின்னதாய் கவிதை.எனக்கு மிகவும் பிடித்தது..படங்களும் அருமை..

ஆத்மா சொன்னது…

ரொம்பத்தன் ரிஸ்க் எடுத்திருக்கிறீங்க....இதுக்கு மேல என்ன சொல்ல எல்லாம் அருமை...

சசிகலா சொன்னது…

வரிகள் என்னை கவர்ந்தன. அருமை.

சுதா சொன்னது…

அழகான பதிவுகள்... அருமை

கோவி சொன்னது…

supero super..

சித்தாரா மகேஷ். சொன்னது…

//ஆணியம் பேசிய உன்னையும்
பெண்ணியம் பேசிய என்னையும்
பார்த்து சிரித்துகொள்கிறது
இந்த காதலியம்...//

உண்மைக் காதல் கொண்ட தங்கள் கவிகள் மிகவும் அருமை அக்கா.
Excuse me நீங்க யாரையாச்சும் Love பண்றீங்களா?

MARI The Great சொன்னது…

அனைத்தும் அருமை சகோ!

வெற்றிவேல் சொன்னது…

ஆணியம், பெண்ணியம், காதலியம்...
மிகவும் அருமையான படைப்பு...

Seeni சொன்னது…

sinna kavithaikal!
inithathu!

Athisaya சொன்னது…

கடைசிக்கவிதை மிகமிகமிக ரசித்தேன்.வாழ்த்துக்கள் சொந்தமே...!

'பரிவை' சே.குமார் சொன்னது…

கவிதை அருமை...
அழகு...
கவிதைகள் காதலால் சிரிக்கின்றன....

கீதமஞ்சரி சொன்னது…

காதலியம் பேசும் கவிதைகளில் மனம் பறி கொடுத்தேன். அத்தனையும் அசத்தல். பாராட்டுகள் ரேவா.

Unknown சொன்னது…

மதுமதி கூறியது...

சின்ன சின்னதாய் கவிதை.எனக்கு மிகவும் பிடித்தது..படங்களும் அருமை..


மிக்க நன்றி சகோ உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் :)