உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 3 நவம்பர், 2012

அவள் அப்படித்தான்



அவளைப்போலவே
நீங்களும் வரைந்திருக்கலாம்
உங்களின் எண்ணங்களிற்கான
ஒரு வட்டத்தை...

இதுவரை
அவள் வரைந்துகொண்ட
அவளின் கட்டுப்பாடுகளைக் குறித்த
கவலையோ
அதிலிருந்து மீளவேண்டுமென்ற
தவிப்போ
தோன்றவேயில்லை
அவளுக்கு

மேலும்
மேலும்
அவளை நெருங்கும் யாரும்
அவளை நெருங்காதிருக்க
கட்டுப்பாடுகளின் வட்டத்தை
நெருக்கிக்கொண்டே இருக்கிறாள்

உங்கள் எண்ணங்களை
பற்றியோ
இது அடிமைத்தனமென்று
நீங்கள்
குறிப்பதை குறித்தோ
எந்த கவலையுமில்லை
அவளுக்கு

என்றேனும் ஒரு நாள்
அவளை சரியாய் படிப்பதன்
பொருட்டு
தளர்த்தப்படலாம்
அவளின் கட்டுப்பாடுகளின் வட்டம்
உங்களுக்காய்

இதை உணர்ந்த தருணம்
உங்களுக்காய் மட்டுமென
ஒரு வட்டத்தை
வரைந்திருப்பாள்
நீங்கள் அறிந்திறாதபடி..

11 கருத்துகள்:

அனைவருக்கும் அன்பு  சொன்னது…

//என்றேனும் ஒரு நாள்
அவளை சரியாய் படிப்பதன்
பொருட்டு
தளர்த்தப்படலாம்
அவளின் கட்டுப்பாடுகளின் வட்டம்
உங்களுக்காய்//

எதார்த்தத்தின் அழகிய
வெளிபாடு ஆழ்ந்த உண்மையும் கூட
ரேவாவின் எழுத்தில் அகம் அழகாக வெளிபடுகிறது வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமையாக முடித்துள்ளீர்கள்...

வாழ்த்துக்கள்...
tm2

சசிகலா சொன்னது…

அவள் அப்படித்தான் அப்படியே இருக்கட்டும் அதுவும் அழகுதான்.

Yaathoramani.blogspot.com சொன்னது…

அவளைத் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது
பதிவிலிட்ட ஓவியம் போலவே புரிந்து ரசிக்க
கவிதை மிக மிக அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

ஆத்மா சொன்னது…

கட்டுப்பாடுகளுக்கான வட்டம்
இறுதியில் எம்மையே கட்டுப்படுத்துவதாய் அமைந்துவிடாமல் இருக்குமா
அப்படியாயின் அவள் வரைந்த வட்டத்துள் நுழைய எனக்கு ஆசை...:)

நம்பிக்கைபாண்டியன் சொன்னது…

பெண்களின் இயலபு அழகிய வரிகளில்!

அ. வேல்முருகன் சொன்னது…

கட்டுப்பாடுகள்
தளர்த்தப்பட்டு கொண்டிருக்கின்றன
காதல் கோட்டையை
கைப்பற்றும் வரை

அ. வேல்முருகன் சொன்னது…

கட்டுப்பாடுகள்
தளர்த்தப்பட்டு கொண்டிருக்கின்றன
காதல் கோட்டையை
கைப்பற்றும் வரை

Dino LA சொன்னது…

அருமை

மாலதி சொன்னது…

அருமையாக .....

ezhil சொன்னது…

எப்போது தளர்த்துவாள்?என்ன செய்தால் வட்டத்தை விட்டு வெளிவருவாள் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்