உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 6 டிசம்பர், 2012

அவசியம் தேவைப்படுகிறது


ஆழம் பார்க்காமல்
அதிகம் தேடாமல்
அவசரமாய் ஒரு திரைச்சீலை
அவசியம் தேவைப்படுகிறது
நமக்கு..

ப்ரியக்கண்கள் மத்தியில்
பிரியாமல் நமைத்தொடரும்
கேள்விகளை

பெரிதாய் - யாரும்
சட்டைசெய்யாத போதும்
சாட்டையடியாய் வந்துவிழும்
இப்பார்வைகளின் வீரியம்
விழித்திருப்பவனுக்கே
புரியுமாதலால்

இப்படியும்
அப்படியும்
எப்படியோ ஒப்பிட்டு
எதன் எதற்கோ
பொருளிட்டு
பொய்யை மெய்ப்பிக்கும்
பொருளில்லா
இவர் பொருளில்
புதைந்துள்ள
பொருளனைத்தும்
புறம் பேசும் மனமன்றோ...

ஓப்புக்காய் அன்புவைத்து
ஓயாமல் உழலும்
இவர் நாக்கில்
ஓப்புமை உயருமென்றால்
ஓங்கிவளரும் நம் நட்பின்
பொருள் தானென்ன?

இச்சிநேகத்தின் சிறு நாடி
சில்லு சில்லாய் நொறுங்கிப்போக
சிக்கிட்ட
இம்மனிதருக்காய்

ஆழம் பார்க்காமல்
அதிகம் தேடாமல்
அவசரமாய் ஒரு திரைச்சீலை
அவசியம் தேவைப்படுகிறது
நமக்கு..


- ரேவா

5 கருத்துகள்:

semmalai akash சொன்னது…

ஓப்புக்காய் அன்புவைத்து
ஓயாமல் உழலும்
இவர் நாக்கில்
ஓப்புமை உயருமென்றால்
ஓங்கிவளரும் நம் நட்பின்
பொருள் தானென்ன?


ரொம்ப ரொம்ப அனுபவித்து எழுதிய வரிகள். எல்லா வரிகளும் என்னை மிகவும் கவர்ந்தது, நான் இன்னைக்கே உங்க ரசிகனாயிட்டேன், உங்களை பின்தொடர்கிறேன்.

இதுபோல் சிறப்பாக எழுதுங்கள் ரசிக்கிறேன்.

உங்களுக்கு நேரம் கிடைக்கும்பொழுது எனது பக்கமும் வந்து போகவும்.

Seeni சொன்னது…

unarthum kavithai...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஆழம் பார்க்காமல்
அதிகம் தேடாமல்
அவசரமாய் ஒரு திரைச்சீலை
அவசியம் தேவைப்படுகிறது
நமக்கு..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஆழம் பார்க்காமல்
அதிகம் தேடாமல்
அவசரமாய் ஒரு திரைச்சீலை
அவசியம் தேவைப்படுகிறது
நமக்கு..

ezhil சொன்னது…

##இச்சிநேகத்தின் சிறு நாடி
சில்லு சில்லாய் நொறுங்கிப்போக
சிக்கிட்ட
இம்மனிதருக்காய்
##

கவிதையின் உயிர் நாடி இந்த வரிகளுக்குள் புகுந்துள்ளதாய் உணர்கிறேன்