உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 31 டிசம்பர், 2012

விடியும் நாளை அமைதிக்காக விடியவே..

வலையுலக உறவுகளுக்கு வணக்கம்,

வருடத்தின் கடைசி நாள் வாழ்த்துச்சொல்லவோ இல்லை நன்றிகளை பரிமாறிக்கிறவோ எழுதப்பட்ட பதிவு இல்லை இது...ஒவ்வொரு வருட முடிவும் அதன் நியாபகங்களை தக்கவச்சிக்க, அழிக்க முடியா ஒரு சுவடை ஏற்படுத்திட்டு போகும், போன வருடம் தானே புயல் மூலம் தன் இருப்பை தக்கவச்சுட்டு போனது 2011.. இந்த வருடம் 2012 பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளின் தேசமா புது அவதாரமெடுத்திருக்கு நம் நாடு...
எங்க போயிட்டு இருக்கோம்ன்னு சத்தியமா தெரியலை..

வலியவர் விசயங்கள் என்னைக்கும் மேடை ஏறாதுங்கிற விஷயங்களை தெளிவா காட்சி படுத்திக்கிட்டு வருற விசயங்கள், 4 வயது குழந்தையில் தொடங்கி 45 வயது பெண்மையையும் சூரையாடும் வெறி, இதனால ஏற்பட்ட விவாதம், பிரச்சனை, ஆடை குறைப்பு தான் அடிப்படைக்காரணம்ன்னு சொல்ல அர்த்தமற்ற பேச்சு எல்லாமே நடந்த தவறுக்கு முகமூடி போடவைக்கிற நிலை தானே தவிர பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிற களமா இல்லை...


இனி பிறக்கும் வருடமாவது வன்கொடுமைகளில்லா ஒரு தேசமாய் மலரட்டும்...அப்படி இல்லாம இந்த நிலை நீடித்தால் நிச்சயம் இந்த தேசம் மலடாய்ப்போகும்...

வெள்ளைப்பூக்கள் உலகம் எங்கும் மலரவே
விடியும் பூமி அமைதிக்காக விடியவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் வீழ்கவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே
தாயின் கதகதப்பில்
உலகம் விடியட்டுமே
பிள்ளையின் சிறுமுக சிரிப்பில்.....


சந்தோஷமா இவ்வாண்டை வழியனுப்பி வைக்கமுடியா நிலையில் இருந்தாலும், நடந்தவைகள் நடப்பில் இருப்பவர் கண்களுக்கு எட்டட்டும்...
அடுத்தவர் சங்கடங்களை வெறும் செய்தியாய் கடங்கின்ற மனதும் மறைந்து போகட்டும்.

நல்லவை எதிர்பார்த்து காத்துகிடக்கிறோம்... நீயாவது எங்களை ஏமாற்றாதே 2013..

 நடந்தவைக்கும் கிடைத்தவைக்கும் நன்றி 2012...

வன்கொடுமைகளின் தேசத்திற்குள் வருக 2013.......

நண்பர்களுக்கும் ஏற்றங்களை கொண்டுவரட்டும் இந்த புத்தாண்டு....

மாற்றம் படைக்க மனிதம் போற்றுவோம்.....


-ரேவ

6 கருத்துகள்:

Sasi Kala சொன்னது…

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தங்களுக்கும்.

ஆத்மா சொன்னது…

சரியான ஆதங்கம்
பொருத்தமான பாடல்வரிகள் பாடல் வரிகளை வாசித்தவுடன் மனதில் ஆயிரம் இடிகள்...
செல்லவிருக்கும் வருடத்தில் நடந்தவைகளை அன்றே பாடலாசிரியர் சொல்லிவிட்டார்

உங்களுக்கும் உங்கள் அன்புக் குடும்பத்துக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

ezhil சொன்னது…

பழையனவற்றை எரித்த வருடமாக புதிய செயல்களுக்கு அஸ்திவாரமாக புதிய வருடமாக புத்தாண்டு அமைய வாழ்த்துக்கள்

வேடந்தாங்கல் - கருண் சொன்னது…

என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

முத்தரசு சொன்னது…


இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

AshIQ சொன்னது…

ஒரு ஆண்டினைப்பற்றி கூறும் போது அதன் இறுதி நிறத்தை மட்டும் எடுத்து அந்த ஆண்டை முழுவதும் நிறமிடுதல் சிந்தனையின் தெளிவுக்கு உகந்ததோ?

இவ்வாறு கருத்திட்டதால்...அக்கொடுமைகளை துச்சம் என சொல்லிடவில்லை, உணர்வுகள் கொண்டநேரத்திலும் கூட சிந்தனையில் தடுமாற்றம் கூடாது என்றேன்
-பஹ்ருதீன்