உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 18 டிசம்பர், 2012

உன்னோடிருக்கிறேன்இருப்பிடங்களை வெற்றிடமாக்கி
வெற்றிடங்களில் நுரைத்து தழும்பும்
நினைவுகளில் கோலேச்சில்
உன்னோடிருக்கிறேன்..

விடுவதாயும் இல்லை
விடைபெறுவதாயும் இல்லையென்ற
சமாதான சாஸ்திரங்களை
காதல்

கட்டவிழ்க்கும் காலமதில்
உன்னோடிருக்கிறேன்

சோகத்தின் அடர் இருளிலின்
கோரமுகத்திற்கு பயந்து
காட்சிகொண்ட
காட்டிக்கொண்ட தைரியத்தின்
பெரும் நிழலில்
காதலென்னை காட்டிக்கொடுக்க
உன்னோடிருக்கிறேன்

கொஞ்சம் கொஞ்சமாய்
உனதறைகள் திருடி
அவசியப்படுகையில் புணர்ந்து வெடிக்கும்
கவிதை விந்தின் பாய்ச்சலில்
உன்னோடிருக்கிறேன்

அவசியங்கள் காதலாகாதென்று
அறியவைக்க
அடர் இருளை போன்றதொரு
அமானுஸ்யம்
உனதருகில்
உண்டென உணர்ந்தும்
உன்னோடிருக்கிறேன்

நீ காட்டிக்கொடுத்தவைக்கு
காதலென்று பெயரிட்டு
கழுவிலேற்றும் கனவுகள்
எனதென்று அறிந்தும்
உன்னோடிருக்கிறேன்

வேறென்ன
எப்போதும் போல ஏமாந்த சிந்தாந்தம்
விடுவதாயும் இல்லை
விடைபெறுவதாயும் இல்லை
கொஞ்சம் கொஞ்சமாய்
இருட்டில் கலந்து
கரைந்து போகிற
சுயத்தின் சிதைவுகளை
ரசித்தபடியே

உன்னோடிருக்கிறேன்


-ரேவா

6 கருத்துகள்:

Ramani சொன்னது…

வேறென்ன
எப்போதும் போல ஏமாந்த சிந்தாந்தம்
விடுவதாயும் இல்லை
விடைபெறுவதாயும் இல்லை
கொஞ்சம் கொஞ்சமாய்
இருட்டில் கலந்து
கரைந்து போகிற
சுயத்தின் சிதைவுகளை
ரசித்தபடியே/

/ஆழமான சிந்தனை
அழுத்தமான வரிகளாய்
மனம் கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்

Ramani சொன்னது…

tha.ma 1

ஆத்மா சொன்னது…

அழகான கவிதைகளை நாங்கள் கேட்காமலேயே நீங்கள் தரும்போது...
நாங்களும் உங்களோடு இருப்போம் :)

முக நூலில் படித்திருந்தேன் அற்புதமாக கவிதை

முத்தரசு சொன்னது…

//நீ காட்டிக்கொடுத்தவைக்கு
காதலென்று பெயரிட்டு
கழுவிலேற்றும் கனவுகள்
எனதென்று அறிந்தும்//

உன்னோடு இருக்கிறேன்..செம செம

அருமை ரசித்தேன் - பாராட்டுக்கள்

NADINARAYANAN MANI சொன்னது…

கவிதை விந்தின் பாய்ச்சலில்
உன்னோடிருக்கிறேன்?////

மிகவும் கவர்ந்த வரிகள்

சே. குமார் சொன்னது…

அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.