உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 1 ஜனவரி, 2013

யாருக்கும் தெரியாமல்




சட்டென்று நீயெனை கடந்திருக்கலாம்
ஆனால்
கூடவே வந்த்தில்
கூடுதல் மகிழ்ச்சிதான்
எனக்கு

ஏதேதோ பேசுகிறாய்
எல்லா பேச்சுலும்
உணர்கிறேன்
உன் நேசத்தை

கைகளை நீட்டுகிறாய்
நட்பென்று சொல்லி
பற்றுதல் சுகமெனினும்
ஏதோ ஒன்று தடுக்கிறது

விடியல் மறந்த பேச்சுகளில்
விட்டுக்கொடுத்த சுபாவங்களில்
தட்டிக்கேட்கும் ஆளுமையில்
உன் வேரை உணர்கிறேன்

படர்தல் முடியாதெனினும்
உயிரோடு இருத்தலில்
உருக்கொள்ளட்டும்
என் அன்பு
உன் மீதான நட்பில்

பின்னாதாய்
எல்லோரைப்பற்றிய கவிதையொன்றில்
உன்னையும் சேர்த்திட துடிக்கிறாய்
பெயரற்ற இந்த கவிதைக்குள்
நீ இடம் பெற்றிருக்கிறாய்
என்பதை அறியாமல்

6 கருத்துகள்:

ஆத்மா சொன்னது…

படர்தல் முடியாதெனினும்
உயிரோடு இருத்தலில்
உருக்கொள்ளட்டும்
என் அன்பு
உன் மீதான நட்பில்வ்
////////////////

அழகான வரிகள்...
வருடத்தின் முதல் பதிவு :)
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Seeni சொன்னது…

mmmm....


rasanai...

Avargal Unmaigal சொன்னது…

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

முத்தரசு சொன்னது…

ரசித்தேன் - பகிர்வுக்கு நன்றி

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

sury siva சொன்னது…

வலைச்சரம் வழியே இங்கு வந்தேன்.
இதுதானே என் முதல் வருகை. அப்படித்தான் இருக்கவேண்டும்

இது ஓர் நந்தவனம் போல அல்லவா இருக்கிறது.

வார்த்தைகளா இவை ... இல்லை..
மலர்ச்செடிகள் அல்லவா ஆங்காங்கே மணம் பரப்புகின்றன..
என்ன ஒரு அழகு, என்ன ஒரு நளினம்.

அச்சம் மடம் நாணம் பயிற்பு எனப் பெண்மையின்
பண்புகள் அனைத்தையுமே ஒரு
பல்லவியில் அமைத்துவிட்டீர்களே !!

உங்களைப் பற்றி என்ன சொல்ல ?
இருப்பினும் சொல்வேன்.
இங்கு அல்ல ..
வலைச்சரத்தில் ...எனது பின்னூட்டமாக.

சுப்பு ரத்தினம்.

sury siva சொன்னது…

வலைச்சரம் வழியே இங்கு வந்தேன்.
இதுதானே என் முதல் வருகை. அப்படித்தான் இருக்கவேண்டும்

இது ஓர் நந்தவனம் போல அல்லவா இருக்கிறது.

வார்த்தைகளா இவை ... இல்லை..
மலர்ச்செடிகள் அல்லவா ஆங்காங்கே மணம் பரப்புகின்றன..
என்ன ஒரு அழகு, என்ன ஒரு நளினம்.

அச்சம் மடம் நாணம் பயிற்பு எனப் பெண்மையின்
பண்புகள் அனைத்தையுமே ஒரு
பல்லவியில் அமைத்துவிட்டீர்களே !!

உங்களைப் பற்றி என்ன சொல்ல ?
இருப்பினும் சொல்வேன்.
இங்கு அல்ல ..
வலைச்சரத்தில் ...எனது பின்னூட்டமாக.

சுப்பு ரத்தினம்.