உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 3 அக்டோபர், 2013

தினசரி கவிதை
இன்றைக்கான நாள்
எப்போதும் போல
புன்னகை தவழ
எதிரினில் இருக்கும் எவருக்கும் புரிந்திடா
உதட்டுசாயமென மாறின பழக்கம்
அலுவலக தொடர்பு
மாலை தாண்டிய களைப்பு
தவறவிட்ட வாய்ப்பு
தட்டிக்கழிக்க காரணம்
தடுமாற்றம் தந்த அவமானம்
பதிலடி கொடுத்த வன்சொல்
பேருந்து நெரிசல்
எதிரினில் எரிச்சலென
ஏகபோகமாய் இந்நாள் கழிய
இன்றைக்கு தனியாய் கவிதைகளில்லை
என்னிடம்...

4 கருத்துகள்:

Ramani S சொன்னது…

வாழ்வே கவிதையானபின்
கவிதைக்கெதற்கு வாழ்வு
மனம் கவர்ந்த படைப்பு
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

Ramani S சொன்னது…

tha.ma 1

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எப்போதும் போல புன்னகை தவழ வேண்டும்... வாழ்த்துக்கள்...

சே. குமார் சொன்னது…

அருமை...