உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

புதன், 2 அக்டோபர், 2013

என்ன செய்ய?
பேசுவதற்காகத்தான்
உனை வரச்சொன்னேன்
வரும்வழியெல்லாம் மனம்
பேசியச்சொற்களின் அயற்சி
உனைபார்த்ததும் ஓய்வெடுத்துகொள்ளுமென
சத்தியமாய் நினைக்கவேயில்லை
மெளனமாய் இந்த நிமிடம்
துளி புன்னகையில்லை
சினேக விசாரிப்புகள் இல்லை
நம்மிடையே சூழ்ந்திருந்த
அந்த உன்னத உணர்வும்
இந்நிமிடம் கிடைக்கவில்லை
உன் பார்வையின் வழியே நினைவோட்டம்
கொஞ்சம் நிதானித்து இருக்கலாம் தான்
என்ன செய்ய
பேசமாலே கிடக்கும்
என் சொற்களை5 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசித்தேன்... சில சமயம் அப்படித்தான்...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பள்ளிக் குழந்தைகளிடம் ஒரு சுவாரஸ்யமான உரையாடல்... பறப்பதற்கு தயாராக இருங்கள்...!

Link : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/If-you-are-a-BIRD.html

கீத மஞ்சரி சொன்னது…

ஓய்ந்துமுடித்துவிட்டது வானம் என்று
அலட்சியமாயிருந்திடமுடியாது.
அடுத்த அடைமழைக்கு
ஆகாய முகில்களைக்
கலந்தாலோசித்துக்கொண்டிருக்கலாம் அந்நேரம்.

அழகான கவிதை. பாராட்டுகள் ரேவா.


Ramani S சொன்னது…

வார்த்தைகள் ஓய்வு பெறுதல் கூட
தன்னை உரப்படுத்திக் கொள்வதற்காய் இருக்கலாம்
கொஞ்சம் பொறுங்கள் தெரியும்

Ramani S சொன்னது…

tha,ma 2