உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

ஆதலால் காதல் செய்



காதல்,

நம் உயிர் வாழ்வின் உன்னத தருணத்தை
நினைவுகளால் உயிர்ப்பிக்கும்  

ஒற்றை மந்திரம்  காதல்...
நாம் மறந்த நிமிடத்தை,
மறக்க நினைக்கும் தருணத்தை
நினைவால் கிட்ட வந்து
கட்டி போடும் ஒற்றை சொல்
...  காதல்.....

~ உயிர்க்குள்ளே உயிர் பறிக்கும்
ஓர் உன்னத வலி தான் காதல்....

~ நிழலாய் நினைவை தொடர்ந்து
நினைவால் அகம் தொடும் ஓர் உன்னத
கலை தான் காதல்.....

~ உயிர் வாழ்வின் அடிப்படை
தேடலே, தேடலின் பொருளே, 
காதல்....

~ பிரபஞ்சமே நீயாக....
பிதற்றலும் கவியாக உருமாறும்
வித்தையே காதல்....

~ அன்னையின் வடிவாக,
ஆதார பொருளாக நம்மை நாடி
வரும் உயிர் தான் காதல்...

~ கனவுகளின் வடிவாக,
கடமையின் வேறாக நம்மை
வளர்ப்பதும், வடிவமைப்பதும்
தான் காதல்...

~ முன்னுரை தெரியாமல்
முகவரி அறியாமலே  ஒற்றை
பார்வையிலே ஆட்டி படைக்கும்
அகிம்சை இம்சை  தான் காதல்.....

~ பார்த்தமாத்திரத்தில் உயிருக்குள்
உட்புகுந்து உன்னை ஆட்சி செய்யும்
ஆனந்த அவஸ்த்தை  தான் காதல்

~ எதிர்மறைகள் ஒரே புள்ளியில்
சங்கமிக்கும் சாரம் தான் காதல்....

~ நம்மையறியாமல் களவு போகும்
கலைக்குப் பொருள்  தான் காதல்...

~ கண்களில் தொடங்கி,
இதயத்தின்  வழியாய் இருமனங்கள்
இணைவது தான் காதல்....

~ முரண்பட்ட மனதினை
பண்படுத்தும் உன்னத நிலை தான் காதல்....

~ மதத்திரையை அகற்றும் மனம்
கொண்டது தான் காதல்....

~ கண்ணீரில் கரைந்தாலும்,
காலத்தை  தொலைத்தாலும்
நம்மில் இருக்கும் நம்மை,
நமக்கே அடையாளம் காட்டும்
கருவி தான் காதல்....

~ தனிமைப்பொழுதின் ரணங்களை
நினைவின் மூலம், திருப்பித்தரும்
 வலிநிவாரணி தான் காதல்...

~ எட்டி உள்ள மனிதரையும்,
எட்டாத தூரம் என
ஏங்கி நிறுக்கும் மனிதரையும்,
அன்பால் ஆட்டிப்படிக்கும் இந்த காதல்....  

~ ஓற்றை சொல்லில் உயிர் வாழ்வதும்
ஓற்றை சொல்லுக்காய் உயிர் வாழ்வதும் தான் காதல்...


~ மொத்தத்தில் நம்,  

வாழ்வியல் வளர்ச்சியில்,
வளர்பிறை காண வயதினில்,
முதல் முதல் இச்சைகொண்ட பொழுதினில்,
அன்பை ஆதாரமாய் அவன் வசம் கண்டபொழுதினில்,
பார்த்த மாத்திரத்தில் பறிபோன பொழுதுகளில்,
இவள் இன்றி உலகம் இல்லை என்ற எதார்த்தங்களில்,
என்று பலபேர்க்கு பலமுகம் காட்டி நம்மை
பண்படுத்தும் இந்த பாடத்திற்கு
பெயர் தான் காதல்...

~ இந்த காதலால்,
பிறர் மனத்தை  வென்று சாதித்தவன்
எல்லாம் பித்தனும் இல்லை.........
இந்த காதலின்றி,
பிறர்  மனதை சாதிப்பது என்பது சாத்தியமுமில்லை...
  
~ ஆம் ,
காதல் என்று சொன்னவுடன்
உயிர் துடிக்கும், உணர்வுகள் துடிக்கும்
நம் உயிர் வாழ்வின் உன்னத தருணத்தை
நினைவுகளால் உயிர்ப்பிக்கும் ஒற்றை மந்திரம்,

மறக்கும் நிமிடத்தை,
மறக்க நினைக்கும் தருணத்தை
நினைவால் கிட்ட வந்து
கட்டி போடும்
ஒற்றை சொல் தான்  
இந்தக்காதல்.....


அன்புடன் 
ரேவா 

15 கருத்துகள்:

div சொன்னது…

~ முரண்பட்ட மனதினை
பண்படுத்தும் உன்னத நிலை தான் காதல்...SUPERB LINE... KEEP ROCKINGBELE

ரேவா சொன்னது…

நன்றி தோழி

sathishsangkavi.blogspot.com சொன்னது…

//காதல் என்று சொன்னவுடன்
உயிர் துடிக்கும், உணர்வுகள் துடிக்கும்//

உண்மை தாங்க....


26.12.2010 ஈரோடு பதிவர் சந்திப்புக்கு வாங்க பழகலாம்...
http://sangkavi.blogspot.com/2010/12/26122010.html

venu சொன்னது…

முன்னுரை தெரியாமல்
முகவரி அறியாமலே ஒற்றை
பார்வையிலே ஆட்டி படைக்கும்
அகிம்சை இம்சை தான் காதல்.....
//

நிஜம் தான் தோழி!

எஸ்.கே சொன்னது…

அருமையான கவிதை!

பனித்துளி சங்கர் சொன்னது…

காதல் பற்றிய ஒவ்வொரு வார்த்தைகளும் உள்ளம் தொடுகிறது அருமை . வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்

ரேவா சொன்னது…

சங்கவி said...

//காதல் என்று சொன்னவுடன்
உயிர் துடிக்கும், உணர்வுகள் துடிக்கும்//

உண்மை தாங்க....

நன்றி சங்கவி அவர்களே

ரேவா சொன்னது…

venu said...

முன்னுரை தெரியாமல்
முகவரி அறியாமலே ஒற்றை
பார்வையிலே ஆட்டி படைக்கும்
அகிம்சை இம்சை தான் காதல்.....
//

நிஜம் தான் தோழி!

நன்றி தோழா வேணு அவர்களே

ரேவா சொன்னது…

எஸ்.கே said...

அருமையான கவிதை!


நன்றி எஸ்.கே அவர்களே

ரேவா சொன்னது…

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

காதல் பற்றிய ஒவ்வொரு வார்த்தைகளும் உள்ளம் தொடுகிறது அருமை . வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்

உங்கள் கருத்துக்களால் என் கருத்தை கவர்ந்த பனித்துளி சங்கர் அவர்களுக்கு மிக்க நன்றி....

தமிழ்த்தோட்டம் சொன்னது…

படமும் கவியும் அருமையா இருக்கு

ரேவா சொன்னது…

தமிழ்த்தோட்டம் said...

படமும் கவியும் அருமையா இருக்கு


***************
நன்றி தமிழ்த்தோட்டம்

எவனோ ஒருவன் சொன்னது…

'காதலித்துப் பார்' கவிதைக்கு போட்டிக் கவிதையா:-) அருமை தோழி

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

'காதலித்துப் பார்' கவிதைக்கு போட்டிக் கவிதையா:-) அருமை தோழி

போட்டியெல்லாம் இல்லை நண்பா, அதுவும் "காதலித்துப் பார்" கா... நான் ஒரு கத்து குட்டி.... ஹிஹ்ஹீ.. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

பெயரில்லா சொன்னது…

ரொம்ப நல்லாருக்குங்க