உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 25 ஏப்ரல், 2011

இனிக்க இனிக்க காதல் செய்யும் காதல் தோழன் அப்டேட்ஸ்....(காதல் + ரொமான்ஸ்)

மாலையில் ஓர் நாளில், குளிர் காற்று அழகி அவள்  தேகம் தொட, மண்வாசம் சுவாசம் தொட, வானவில் கொஞ்சம் வளைந்து வந்தே அவள் அழகைப் பார்க்க ஆயத்தமாகும் முன் விரைந்து வந்த வானமகன்,அனுமதி இன்றே அவள் மேனி நனைக்க, இருக்கைகள் நீட்டி அவன் அன்பை மழைத்துளியாய் வாங்கிய நேரம், அவள் கோலம் கலைத்தது அந்த குறும்செய்தி,

ஹாய் செல்லம் என்னடி பண்ற?....   

புன்னைகைத்து  விட்டு பதில் அனுப்பினாள்

மழையில நனைஞ்சுகிட்டு இருக்கேன் டா?.....

மீண்டும் சிறு குருவி போல் பறந்து சென்று, சிறகை விரித்து மழைத்துளியை முத்தம் மிட்டு கொண்டிருக்க,

எப்போடா உன்ன பார்ப்பேன், எப்போடா என் பேச்சை கேட்ப  பையா என அவள் கைபேசி அலற, அழகி அவள் பறந்தே வந்து அவன் அழைப்பை எடுக்க,
அழைப்பின் முனையில் அவன்:

என்ன டி பண்ணுற?...

அப்போவே சொன்னேன்ல டா, மழைல நனைஞ்சு கிட்டு இருக்கேன்....

ஏன் டி என் அத்தை இல்ல,

ஏன் டா அவங்களையும் கூட சேர்த்துட்டு நனையவா?.........

அடி என் லூசே, மழைல நணையிரையே, அதான் உங்க அம்மா உன்ன எதுவும் சொல்லலையானு கேட்டேன்....

ஓஹ...சாரி டா...அம்மா இல்ல, நான் மட்டும் தான் வீட்டுல இருக்கேன்... 

ஓஓஓஓ....இத முதலையே சொல்லி இருக்க கூடாதா?

சொல்லிருந்தா, என்ன பண்ணிருப்ப,
மழைக் கம்பிகள்
உன் மேனி தொடுவதற்குள்,
குடைக் கம்பியாய்
உன்னுள் படர்ந்திருப்பேன்னு .
. மொக்கையா எதாவது கவிதை சொல்லிருப்ப,
தெரியாதாடா உன்னப் பத்தி.... 

ஹ ஹ...நல்லாவே என்ன புரிஞ்சு வச்சு இருக்கடி....

ஆமாம் ஆமாம்....அங்க அங்க சாமியாருங்க எல்லாம், கதவ திற கமலா வரட்டும்னு கவிபாடுதுங்க...நீயும் தான் இருக்கையே.......

ஓவரா பேசுறடி நீ.... 

சரி செல்லம் நான் ஒன்னு கேப்பேன் தருவியா?

என்னடி கேக்குற தோனியே சரி இல்லையே...சரி கேளு..
இல்ல......................

என் காதல் வாழ்க்கைக்கு
அழகு சேர்க்க, உன் இதழ் தூரிகையால் அழகான ஓவியம்  என் கன்னத்தில் வரையனும் .........முடியுமா? ..

ஏய்ய்ய்ய்ய்ய்...............ச்சே ஏன் டி இப்படி பேசுற?...

என்னடா ?.பேசுனேன் ?......

சரி நான் நாளைக்கு ஆபீஸ் ல கொடுக்க வேண்டிய கணக்கெல்லாம் கரெக்ட் அஹ முடிச்சிட்டயா?......

உன் ஆபீஸ் கணக்கெல்லாம் முடிச்சாச்சு, உன் மெயில்க்கும் அனுப்பியாச்சு, உன் கணக்கு தான் இன்னும் முடிக்க முடியாம இருக்கு...

என் கணக்கா?... என்ன கணக்கு புதுசா சொல்லுற....

ஒய் அன்னைக்கு, காத்து வாக்குல, நீ போறப்போ  நான் கொடுத்த பறக்கும் முத்தத்தை பத்திரமா
எடுத்து பதியம் போட்டேன்னு போன் ல சொன்ன...

ஆமாம் சொன்னேன்...

எனக்கு திருப்பி வேணும்..

முடியாது...கிடைக்கிறப்போ வட்டியோட கிடைக்கும்...இப்போ ஆளவிடு...

சரி அழுது தொலைக்காத, வேற எதாவது பேசு...

சரி, உனக்கு எந்த புத்தகம் படிக்க பிடிக்கும்டி சொல்லேன் நான் மறந்துட்டேன்...

இப்போதைக்கு,

உன் இதழ் என்னும்
இருவரி புத்தகம் தான் படிக்க ஆசைப் படுறேன்...

பாத்தியா?....என்னையவே வாருற பாரேன்...

டேய்...அங்க அங்க போய் பாருடா...அவன் அவன், பார்க்குக்கும் பீச்சுக்கும் அவங்க காதலிய எப்படி கூட்டிட்டு போறங்கனு?.....

ஹி ஹி அதான் பாத்தோம்ல....
டெபாசிட் இழந்த அரசியல்வாதி தலைல துண்டப் போட்டு, போறமாதிரி தானே போராங்க....

.ச்சிப் போ நீ வேஸ்ட் டா....

சரி நான் வேஸ்ட் அஹ வே இருக்கேன்...உனக்கு என்ன என்ன விஷயம்  பிடிக்கும்...

எனக்கா, உன் காதல் பேசுற கண்கள் பிடிக்கும்...
கர்வத்தையும், காமத்தையும் ஒளிச்சி வச்சு சிரிக்கிற உன் இதழும், உன் இதழ் குழந்தையை, இப்போதைக்குஎன்கிட்ட கொடுக்காம ஒளிச்சி வச்சி இருக்காளே, என் சக்காளத்தி?... அதான் அந்த மீசை, அதுவும் ரொம்ப பிடிக்கும்...அப்பறம், எப்பவும் நான் மட்டுமே சாய்ந்து கொள்ளும், உன் சந்தன நிறத் தோள்கள் பிடிக்கும்...

ஏய்ய் ய் ய்ய்...இரு இரு நான் உனக்கு பொதுவா என்ன பிடிக்கும்னு தான் கேட்டேன்.. நீ என்ன பத்தி சொல்லிட்டே இருக்கே...

இம்ம்ம்... பொதுவாவா ?... என்ன எதப்பத்தியும் யோசிக்க விடாம, ஒன்னப் பத்தி மட்டுமே யோசிக்க வச்ச உன்ன பிடிக்கும்....

என்னடி நீ... என்ன தவிர்த்து என்ன பிடிக்கும்...

உன்ன தவிர்த்து எதுவும் பிடிக்காது டா...

சரி டி நீ தான் கவிதை எல்லாம் எழுதுறயே, எங்க என்னப் பத்தி இப்போ ஒரு கவிதை சொல்லேன்...

கவிதையா?...உனக்கு நான் கவிதை சொல்லனும்னா?...இந்த மாலை மறஞ்சு இரவு வரணும் பரவா இல்லாயா?..

நீ எங்க வரேன்னு தெரியுது...
சரி ராது, அம்மா இல்லையே நீ என்ன சாப்பிட்ட?....

உன்னோட போடோவையும், தொட்டுக்க உன் குரும்செய்தியையும் தான் சாப்டேன்...

கடிக்காதடி....சரி உன் அம்மாவீட்டுக்கு போய் இத்தன நாள் ஆகுதே, இந்த புருசன வந்து பாக்கனும்னு உனக்கு தோனுச்சாடி?....

கொன்னுடுவேன் உன்ன, நீ தானே நான் மாட்டேன் மாட்டேன் னு சொல்லியும், இது தலப் பிரசவம், அம்மா வீட்டுக்கு போ னு சொல்லி அனுப்பி வச்ச, இப்போ வந்து மூணு நாலு தான் ஆகுது அதுக்குள்ளே இப்படி பேசுற?....

இல்ல ராதுமா (ராதா), நீ இல்லாத இந்த மூணு நாளும், மூன் அஹ பாக்க கூட பிடிக்கலடி...உன்ன ரொம்ப மிஸ் பண்ணறேன்....சீக்கிரம் என் குழந்தைய எப்போ பாப்பேன்னு இருக்கு...

பாத்தியா, நான் அழுவேன், இப்போதானே என்ன மிஸ் பண்றேன்னு சொன்ன, அதுக்குள்ள, உன் குழந்தய பாக்கனும்னு சொல்லுற, போடா,நான் இனிமேல் அங்க வர மாட்டேன்....

அட பைத்தியமே, நான் கொழந்தைன்னு சொன்னதே உன்னைத்தாண்டி...

ஹி ஹி அப்படியா?.....ஐ லவ் யூ சோ மச் டா.....

மீ டூ செல்லம்...நீ நம்ம குழந்தைய பெத்துக்க போற நேரம், நம்மக்குள்ள இருக்கிற அழகான காதல் குழந்தைய, பத்திரமா பாத்துக்கோ ராது....

நான் பாத்துகிறேன்...இது தான் சாக்குன்னு, நீ எதிர் வீட்டு பொண்ண பத்து பல் இளிச்சதா தெரிஞ்சது, மவனே கொன்னுடுவேன்...

சரி டா சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்...சரி உடம்ப பாத்துக்கோ...டைம் க்கு சாப்புடு....உன் டெலிவரி டைம் அப்போ நான் வந்துறேன்.....

இமம் ஓகே மை டியர்..யூ டூ டேக் கேர்....

இரண்டு மாதங்களுக்கு பிறகு...............

 வாடிய மலர் போல, வாட்டத்துடன் ராதா மருத்துவமனையில் இருக்க, ராகேஷ் விரைந்து வந்து அவள் கரம் பற்ற, தன் காதல் குழந்தை,தன் கரம் பற்றிய மகிழ்ச்சியில், அல்லி மலர் போல் கண் விழித்தால் ராதா....

எப்படி மா இருக்க,

டாக்டர் இன்னும் ஒன் அவர் ல டெலிவரி நடந்துரும்னு சொன்னங்க,

இம்மம்ம்ம்....

ஏதாவது பேசுடி...எப்பவும், வாய் மூடாம பேசிட்டே இருப்பயே, இப்போ பேசு...

என்ன பேச, எனக்கு தெரியல டா, உன்ன மிஸ் பண்ணிடுவேனோனு  பயமா இருக்கு....

ச்சீ...லூசே அப்படிலாம் பேசாத....

இம்.....அம்மாஆஆஆஆ...

டாக்டர்.......ராதாவுக்கு வலி வந்துருச்சு...விழி நீரைத் துடைத்துக் கொண்டே, அவள் கை பற்றியபடி பிரசவ அறைக்குள் நுழைந்தான்...

சாரி ஜென்டில் மேன், ஜென்ட்ஸ் நாட் அலோவ்ட்....

பயப்படாத டா...நான் நம்ம குழந்தையோட பத்திரமா திரும்பி வருவேன்....

இம்ம்ம்....

பிரசவ வலியில் துடிதுடித்து கொண்டிருந்த ராதாவிற்கும், அவள் வலியின் துடிப்பதைப் பார்த்து, மனதில் துடித்து கொண்டிருந்த ராகேஷின்காமம் மறைத்து, அவள் மீதான, அழகான காதல் குழந்தையை அவன் பிரசவிக்க.....
மறுமுனையில் ராதா அழகானா ஆண் குழந்தை பிரசவித்தாள்.....

ராதா...இம்ம்ம் இப்போ எப்படி பீல் பண்ணற....

இம்ம்ம் ஐ பீல் பெட்டெர் நொவ்..

 .உன் குழந்தைய பாரு....

நோ டாக்டர் நான் என் கண்வர பாக்கணும்.....

இம்ம்ம் ஓகே.....

ராகேஷ், உங்க குழந்தை உங்கள மாதிரியே இருக்கான்,

நோ டாக்டர்...என் ராது மாதிரியே இருக்கான்...

இம்ம்ம்..குட்...நைஸ் கப்பில்ஸ்

தேங்யூ டாக்டர்....

டாக்டர்...

இம் சொல்லுங்க ராகேஷ்..

 .இல்ல ஆபரேஷன் தேட்டர்ல, ஜென்ட்ஸ் நாட் அலோவ்ட் னு சொன்னேங்க,

ஆமாம் சொனேன்....

இப்போ என் பையன  மட்டும் எப்படி விட்டேங்க....
யூ நாட்டி.................

 .just for fun ...thankyou  so much டாக்டர்....

டேய்....இங்க நான் ஒருத்தி குத்துக் கல்லாட்டம் இருக்கேன்ல, அங்க என்ன அந்த டாக்டர் கிட்ட பேச்சு வேண்டி கிடக்கு....

இல்ல ராது, நான் நம்ம அடுத்த கொழந்த டெலிவரிக்கும், இந்த ஹோஸ்பிடல் தான் வருவோம்...கொஞ்சம் பாத்து பண்ணுங்க னு அந்த டாக்டர் கிட்ட சொன்னேன்....

ச்சீ....லூசு டா நீ.....திருந்தவே மாட்ட....

ஹ ஹ ஹ....................தேங்யூ செல்லம்......
சுபம் 

( சின்ன சின்ன சீண்டலிலும், ஊடலிலும், அதன் பின் வரும் சமாதானத்திலும் தானே அன்பு பலப்படும்...கொஞ்ச நாளா ரொம்ப சீரியஸ் அஹ, எல்லாத்தையும் அழவைக்கிற மாதிரியே பதிவு போட்டாச்சு...அதான் ஒரு சேஞ்சுக்கு காதல் + ரொமான்ஸ் கலந்த பதிவு...இந்த பதிவ எழுத சொன்ன நல்லவருக்கு நன்றிகள் பல..... வழக்கம் போல உங்கள் கருத்துகளை நோக்கி, பதிவை சமர்பிக்கிறேன்....இந்த பதிவை என் இணையநண்பன் எவனோ ஒருவனுக்காவும்.....)

67 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

புதிய முயற்சி என்று நினைக்கிறேன்...

நன்றாகவே வந்திருக்கிறது...
வாழ்த்துக்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

கவிதை படிக்க வந்தேன்..
கவிதை போலவே ஒரு ரொமான்ஸ் கதை.. வாழ்த்துக்கள்..

ரேவா சொன்னது…

# கவிதை வீதி # சௌந்தர் said...

புதிய முயற்சி என்று நினைக்கிறேன்...

நன்றாகவே வந்திருக்கிறது...
வாழ்த்துக்கள்..

ஆமாம் நண்பரே, புது முயற்சி தான்... நன்றி உங்கள் வாழ்த்துக்கு :-)

ரேவா சொன்னது…

# கவிதை வீதி # சௌந்தர் said...

கவிதை படிக்க வந்தேன்..
கவிதை போலவே ஒரு ரொமான்ஸ் கதை.. வாழ்த்துக்கள்..

ஹி ஹி நன்றி கவிதை வீதி நண்பரே...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

முதலில் இந்த துணிச்சல் மிக்க தலைப்புக்கு முதலில் வாழ்த்துக்கள்!!

எவனோ ஒருவன் சொன்னது…

மிக்க நன்றி தோழி. என் வேண்டுகோளை ஏற்று ஒரு கதை, இல்லை இல்லை கவிதையாய் ஒரு கதை வரைந்ததற்கு. ஒவ்வொரு வரியையும் மிகவும் ரசித்து படித்தேன். படிக்கும் பொழுது ஒரு படம் பார்ப்பது போன்ற ஒரு உணர்வு எனக்குள் ஏற்பட்டது. தங்களிடம் இருந்து இப்படி ஒரு கவிதைத்துவமான காதலைத் தான் பல நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். என் எதிர்பார்ப்பை பன்மடங்கு பூர்த்தி செய்துவிட்டீர்கள். இரண்டு காதலர்கள் தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்த பொழுது கல்யாணத்திற்கு பின்பும் அவர்கள் காதலர்களாகத் தான் வாழ்கின்றார்கள் என்பதை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். காதல் அழியாமல் இருந்தால் வாழ்வில் என்றும் சுபம் தான்....

காதல் அழகு. வாழ்த்துக்கள் தோழி :-)

கார்க்கிபவா சொன்னது…

ஆவ்வ்வ்வ்..

நல்லா இருக்குங்க :))

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) சொன்னது…

சூப்பரா இருக்குங்கோ,,,,

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) சொன்னது…

சூப்பரா இருக்குங்கோ,,,,

Unknown சொன்னது…

ஏதோ கேக்கணும் நினச்சேன் மறந்துட்டேன்
சொல்லனும் நினச்சேன் அதையும் மறந்துட்டேன்
பதிவு அருமை அப்படி எல்லாம் சொல்லமாட்டேன் :)
ரொம்ப நல்ல இருக்குன்னு அப்டினும் அள்ளிவிட மாட்டேன் :)
பின்றீங்க அப்படினும் சொல்லமாட்டேன்:)

(revathi ஒழுங்கா enaku kudukka vendiya பேமென்ட் செட்டில் பண்ணிட்டு வா அப்போதான் கமெண்ட் போடுவேன்)

Unknown சொன்னது…

தேங்யூ செல்லம்
தேங்யூ செல்லம்
தேங்யூ செல்லம்
தேங்யூ செல்லம்
தேங்யூ செல்லம்....
தேங்யூ செல்லம்.....

so nice post..

nanum choluvenla...eppudi.

ரேவா சொன்னது…

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

முதலில் இந்த துணிச்சல் மிக்க தலைப்புக்கு முதலில் வாழ்த்துக்கள்!!

நன்றி நண்பரே

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

மிக்க நன்றி தோழி. என் வேண்டுகோளை ஏற்று ஒரு கதை, இல்லை இல்லை கவிதையாய் ஒரு கதை வரைந்ததற்கு. ஒவ்வொரு வரியையும் மிகவும் ரசித்து படித்தேன். படிக்கும் பொழுது ஒரு படம் பார்ப்பது போன்ற ஒரு உணர்வு எனக்குள் ஏற்பட்டது. தங்களிடம் இருந்து இப்படி ஒரு கவிதைத்துவமான காதலைத் தான் பல நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். என் எதிர்பார்ப்பை பன்மடங்கு பூர்த்தி செய்துவிட்டீர்கள். இரண்டு காதலர்கள் தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்த பொழுது கல்யாணத்திற்கு பின்பும் அவர்கள் காதலர்களாகத் தான் வாழ்கின்றார்கள் என்பதை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். காதல் அழியாமல் இருந்தால் வாழ்வில் என்றும் சுபம் தான்....

காதல் அழகு. வாழ்த்துக்கள் தோழி :-)

நன்றி நண்பா....என்ன மறுமொழி இடுவது என்று எனக்கு தெரியவில்லை..ஆனாலும் உன் அன்புக்கு நன்றி

ரேவா சொன்னது…

கார்க்கி said...

ஆவ்வ்வ்வ்..

நல்லா இருக்குங்க :))

நன்றி நண்பரே உங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்....

ரேவா சொன்னது…

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...

சூப்பரா இருக்குங்கோ,,,,

நன்றி நண்பரே உங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்....

ரேவா சொன்னது…

siva said...

ஏதோ கேக்கணும் நினச்சேன் மறந்துட்டேன்
சொல்லனும் நினச்சேன் அதையும் மறந்துட்டேன்
பதிவு அருமை அப்படி எல்லாம் சொல்லமாட்டேன் :)
ரொம்ப நல்ல இருக்குன்னு அப்டினும் அள்ளிவிட மாட்டேன் :)
பின்றீங்க அப்படினும் சொல்லமாட்டேன்:)

(revathi ஒழுங்கா enaku kudukka vendiya பேமென்ட் செட்டில் பண்ணிட்டு வா அப்போதான் கமெண்ட் போடுவேன்)

அட பாவி நேத்து தானே உன் அக்கௌன்ட் ல போட்டுவிட்டேன்...அதுக்குள்ள திருப்பி செட்டில்மன்ட் பண்ண சொல்லுற... ஹி ஹி

ரேவா சொன்னது…

siva said...

தேங்யூ செல்லம்
தேங்யூ செல்லம்
தேங்யூ செல்லம்
தேங்யூ செல்லம்
தேங்யூ செல்லம்....
தேங்யூ செல்லம்.....

so nice post..

nanum choluvenla...eppudi.

நான் போட்ட அமௌன்ட் வந்த்துருச்சா?..... ஹி ஹி நன்றி சிவா

அன்புடன் மலிக்கா சொன்னது…

கவிதையுடன் கூடி கதை மிக அருமை. வாழ்த்துக்கள் ரேவா..

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) சொன்னது…

முதல் வருகையா?? அப்போ இதுக்கு முன்னாடி வந்தது கணக்குல வரலையா !!! :):)

எவனோ ஒருவன் சொன்னது…

ரேவா,

உங்களை ஒரு தொடர்பதிவிற்கு(பிடித்த பத்து பெண்குரல் பாடல்கள்) அழைத்துள்ளேன்.

http://muthalpirivu.blogspot.com/2010/12/blog-post_31.html

உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது என் வேண்டுகோளை நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன் :-)

என்றும் நட்புடன்,
~எவனோ ஒருவன்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அட்டகாசமான புது முயற்ச்சி வாழ்த்துகள் ரேவா.....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
முதலில் இந்த துணிச்சல் மிக்க தலைப்புக்கு முதலில் வாழ்த்துக்கள்!!//

அடகொன்னியா அப்போ நீ பதிவை படிக்கவே இல்லையா....

ரேவா சொன்னது…

அன்புடன் மலிக்கா said...

கவிதையுடன் கூடி கதை மிக அருமை. வாழ்த்துக்கள் ரேவா..

மிக்க நன்றி தோழி....உங்கள் வருகைக்கும், மறுமொழிக்கும் நன்றிகள்....

ரேவா சொன்னது…

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...

முதல் வருகையா?? அப்போ இதுக்கு முன்னாடி வந்தது கணக்குல வரலையா !!! :):)

ஐயோ சாரி நண்பா...இதற்க்கு முன்பு தாங்கள் என் தளம் வந்ததை கவனிக்க வில்லை நான்....அதனாலேயே அப்படி பின்னூட்டம் இட்டேன்...தவறெனில் மன்னிக்கவும் தோழமையே.....ஹி ஹி இனி எப்படி கவனிக்கிறேன்னு பாருங்க....நன்றி உங்கள் வருகைக்கு

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

ரேவா,

உங்களை ஒரு தொடர்பதிவிற்கு(பிடித்த பத்து பெண்குரல் பாடல்கள்) அழைத்துள்ளேன்.

http://muthalpirivu.blogspot.com/2010/12/blog-post_31.html

உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது என் வேண்டுகோளை நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன் :-)

என்றும் நட்புடன்,
~எவனோ ஒருவன்

கண்டிப்பாக இந்த தொடர்பதிவை ஏற்றுக் கொண்டு பதிவிடுகிறேன் நண்பா...நன்றி என்னை தொடர் பதிவிற்கு அழைத்தமைக்கும், உங்கள் வருகைக்கும் :-)

ரேவா சொன்னது…

MANO நாஞ்சில் மனோ said...

அட்டகாசமான புது முயற்ச்சி வாழ்த்துகள் ரேவா.....

வாங்க மனோ நலமா?..... உங்கள இந்த பக்கமே பாக்க முடியல அதான்...ஹி ஹி நன்றி நன்றி

ரேவா சொன்னது…

MANO நாஞ்சில் மனோ said...

//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
முதலில் இந்த துணிச்சல் மிக்க தலைப்புக்கு முதலில் வாழ்த்துக்கள்!!//

அடகொன்னியா அப்போ நீ பதிவை படிக்கவே இல்லையா....

அதானே...நானே ரஜீவன் கிட்ட இத கேக்கணும்னு ினைச்சேன்..நல்லவேள நம்ம பலமொழி பகலவன் கேட்டுட்டாறு...மக்கா வந்தமேனிக்கு இதுக்கொரு தீர்ப்ப சொல்லிபுட்டு போங்க...ஹ ஹ நன்றி மனோ அவர்களே உங்கள் வருகைக்கும்....நான் கேட்க நினைத்த கேள்வியை நீங்கள் கேட்டமைக்கும்....பதில் வருதான்னு பாப்போம்?,.........

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

ரேவா....அருமையான பகிர்வு,

மாணவன் சொன்னது…

நல்லாருக்குங்க சகோ,

வாழ்த்துக்கள் :)

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

ஹையோ என்னாச்சு ரேவதி உங்களுக்கு திடீர்னு காதல்சாமி எதும் வரம் கொடுத்துட்டாரா என்ன? காதல் விருந்தே வச்சிருக்கீங்க..

சின்ன சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் இருக்கு அதையும் கவினிங் அம்மிணி!!!

ரேவா சொன்னது…

தமிழ்வாசி - Prakash said...

ரேவா....அருமையான பகிர்வு,

உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி தமிழ்வாசி நண்பரே....

ரேவா சொன்னது…

மாணவன் said...

நல்லாருக்குங்க சகோ,

வாழ்த்துக்கள் :)

வாங்க சகோ நலமா?....கொஞ்ச நாளா உங்களை பதிவுலகம் பக்கம் காணவில்லையே...நன்றி சகோ உன் வருகைக்கும், வாழ்த்துக்கும்

ரேவா சொன்னது…

ப்ரியமுடன் வசந்த் said...

ஹையோ என்னாச்சு ரேவதி உங்களுக்கு திடீர்னு காதல்சாமி எதும் வரம் கொடுத்துட்டாரா என்ன? காதல் விருந்தே வச்சிருக்கீங்க..

சின்ன சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் இருக்கு அதையும் கவினிங் அம்மிணி!!!

அட வாங்க வசந்த் வாங்க...ஹ ஹ ஆமாம் காதல் சாமி நிறைய வரம் குடுத்துருக்காரு...போங்க பாஸ்....ஹி ஹி எழுத்துப்பிழைகளை சரி செய்கிறேன் வசந்த்...நன்றி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

நிரூபன் சொன்னது…

மாலையில் ஓர் நாளில், குளிர் காற்று அழகி அவள் தேகம் தொட, மண்வாசம் சுவாசம் தொட, வானவில் கொஞ்சம் வளைந்து வந்தே அவள் அழகைப் பார்க்க ஆயத்தமாகும் முன் , விரைந்து வந்த வானமகன்,அனுமதி இன்றே அவள் மேனி நனைக்க, இருக்கைகள் நீட்டி அவன் அன்பை மழைத்துளியாய் வாங்கிய நேரம், அவள் கோலம் கலைத்தது அந்த குறும்செய்தி//

மழையில் நனையும் அழகிய தேவதையக் கண் முன்னே தரிசிக்கும் உணர்வினை ஆர்ம்ப வரிகள் தருகின்றன.

நான் கொஞ்சம் லேட் சகோ.
நிறைய ஆணி புடுங்கும் வேலைகள் இருந்திச்சு...

நிரூபன் சொன்னது…

அப்போவே சொன்னேன்ல டா, மழைல நனைஞ்சு கிட்டு இருக்கேன்....

ஏன் டி என் அத்தை இல்ல,

ஏன் டா அவங்களையும் கூட சேர்த்துட்டு நனையவா?.........

அடி என் லூசே, மழைல நணையிரையே, அதான் உங்க அம்மா உன்ன எதுவும் சொல்லலையானு கேட்டேன்....//

ஆஹஹ்ஹ்ஹா....ஆஹஹா..

என்ன ஒரு காமெடி..

நிரூபன் சொன்னது…

மழைக் கம்பிகள்
உன் மேனி தொடுவதற்குள்,
குடைக் கம்பியாய்
உன்னுள் படர்ந்திருப்பேன்னு //

இவ் இடத்தில் ஏதோ தொக்கி நின்று பொருள் மறைப்பதாகத் தெரிகிறதே?
அவ்......இரட்டை அர்த்தம்...ஹி...ஹி...

நிரூபன் சொன்னது…

ஆமாம் ஆமாம்....அங்க அங்க சாமியாருங்க எல்லாம், கதவ திற கமலா வரட்டும்னு கவிபாடுதுங்க...நீயும் தான் இருக்கையே.......///

சாமியாரும் மாட்டிக்கிட்டாரா...டவுசர் கிழியப் போகுதே...

நிரூபன் சொன்னது…

என் காதல் வாழ்க்கைக்கு,
அழகு சேர்க்க, உன் இதழ் தூரிகையால் , அழகான ஓவியம் என் கன்னத்தில் வரையனும் .........முடியுமா? ..//

இதெல்லாம் கேட்டா வரையணும்,
சைகை காட்டினால் கொடுக்க மாட்டாங்க.

நிரூபன் சொன்னது…

சரி, உனக்கு எந்த புத்தகம் படிக்க பிடிக்கும்டி சொல்லேன் நான் மறந்துட்டேன்...

இப்போதைக்கு,

உன் இதழ் என்னும்
இருவரி புத்தகம் தான் படிக்க ஆசைப் படுறேன்...//

அஃதே...........அஃதே...

கற்பனை வெள்ளம் இங்கே பதிவினூடாக உரை நடையில் தவழ்ந்து கவிதை இரதம் ஏறிக் கரை புரண்டு ஓடுகிறது.

டெபாசிட் இழந்த அரசியல்வாதி தலைல துண்டப் போட்டு, போறமாதிரி தானே போராங்க....//

அவ்.......முடியலை...

நிரூபன் சொன்னது…

.இந்த பதிவை என் இணையநண்பன் எவனோ ஒருவனுக்காவும்....//

ஆய்...நமக்காகத் தானே...ஹி..ஹி...

நிரூபன் சொன்னது…

முதல் பாதியில் மணமாகாத காதலர்கள் பேசுவது போன்ற உரை நடையினைத் தந்து விட்டு, இறுதியில்
பிரசவத்திற்காக மாமியார் வீட்டிற்கு போன மனைவியுடன் லவ்சு விடும் கணவனின் உணர்வுகளின் வெளிப்பாடு தான் இப் பதிவு என்று எண்ணும் அளவிற்கு அழகாக இப் பதிவினைச் செதுக்கியுள்ளீர்கள்.

நிரூபன் சொன்னது…

மொழிக் கையாள்கையும், உரை நடைத் தமிழினுள் நகைச்சுவை, கவிதை இரண்டையும் புகுத்தி நவரசமும் சொட்டச் சொட்ட எழுதிய விதமும் அருமை!

வாழ்த்துக்கள் சகோ!

நிரூபன் சொன்னது…

வலையில் ஆணிகள் அதிகமாக அடித்து, என் பதிவுகளிற்கு வந்து பலர் பின்னூட்டம் போட்டுச் சென்ற காரணத்தால், அவர்களுடன் மல்லுக் கட்ட வேண்டியதாகிப் போச்சு, மன்னிக்கவும்!

ரேவா சொன்னது…

நிரூபன் said...

மாலையில் ஓர் நாளில், குளிர் காற்று அழகி அவள் தேகம் தொட, மண்வாசம் சுவாசம் தொட, வானவில் கொஞ்சம் வளைந்து வந்தே அவள் அழகைப் பார்க்க ஆயத்தமாகும் முன் , விரைந்து வந்த வானமகன்,அனுமதி இன்றே அவள் மேனி நனைக்க, இருக்கைகள் நீட்டி அவன் அன்பை மழைத்துளியாய் வாங்கிய நேரம், அவள் கோலம் கலைத்தது அந்த குறும்செய்தி//

மழையில் நனையும் அழகிய தேவதையக் கண் முன்னே தரிசிக்கும் உணர்வினை ஆர்ம்ப வரிகள் தருகின்றன.

நான் கொஞ்சம் லேட் சகோ.
நிறைய ஆணி புடுங்கும் வேலைகள் இருந்திச்சு...

வாங்க சகோ நலமா?....நானும் உங்கள் ஆணிகள் அனைத்தும் அறிவேன் சகோ.

ரேவா சொன்னது…

நிரூபன் said...

அப்போவே சொன்னேன்ல டா, மழைல நனைஞ்சு கிட்டு இருக்கேன்....

ஏன் டி என் அத்தை இல்ல,

ஏன் டா அவங்களையும் கூட சேர்த்துட்டு நனையவா?.........

அடி என் லூசே, மழைல நணையிரையே, அதான் உங்க அம்மா உன்ன எதுவும் சொல்லலையானு கேட்டேன்....//

ஆஹஹ்ஹ்ஹா....ஆஹஹா..

என்ன ஒரு காமெடி..

ஹி ஹி...

ரேவா சொன்னது…

நிரூபன் said...

மழைக் கம்பிகள்
உன் மேனி தொடுவதற்குள்,
குடைக் கம்பியாய்
உன்னுள் படர்ந்திருப்பேன்னு //

இவ் இடத்தில் ஏதோ தொக்கி நின்று பொருள் மறைப்பதாகத் தெரிகிறதே?
அவ்......இரட்டை அர்த்தம்...ஹி...ஹி...

சகோ...கூட்டத்துல கட்டு சோத்த அவுக்காதனு, எங்க ஊர்ல அடிக்கடி சொல்லுவாங்க, அதே அதே உனக்கும்...ஹி ஹ

ரேவா சொன்னது…

நிரூபன் said...

ஆமாம் ஆமாம்....அங்க அங்க சாமியாருங்க எல்லாம், கதவ திற கமலா வரட்டும்னு கவிபாடுதுங்க...நீயும் தான் இருக்கையே.......///

சாமியாரும் மாட்டிக்கிட்டாரா...டவுசர் கிழியப் போகுதே...

ஹ ஹ ஆமாம் ஆமாம்....

ரேவா சொன்னது…

நிரூபன் said...

என் காதல் வாழ்க்கைக்கு,
அழகு சேர்க்க, உன் இதழ் தூரிகையால் , அழகான ஓவியம் என் கன்னத்தில் வரையனும் .........முடியுமா? ..//

இதெல்லாம் கேட்டா வரையணும்,
சைகை காட்டினால் கொடுக்க மாட்டாங்க.

:-( ஹி ஹி

ரேவா சொன்னது…

நிரூபன் said...

சரி, உனக்கு எந்த புத்தகம் படிக்க பிடிக்கும்டி சொல்லேன் நான் மறந்துட்டேன்...

இப்போதைக்கு,

உன் இதழ் என்னும்
இருவரி புத்தகம் தான் படிக்க ஆசைப் படுறேன்...//

அஃதே...........அஃதே...

கற்பனை வெள்ளம் இங்கே பதிவினூடாக உரை நடையில் தவழ்ந்து கவிதை இரதம் ஏறிக் கரை புரண்டு ஓடுகிறது.

நன்றி நன்றி...சகோ

ரேவா சொன்னது…

நிரூபன் said...

ஹி ஹி அதான் பாத்தோம்ல....
டெபாசிட் இழந்த அரசியல்வாதி தலைல துண்டப் போட்டு, போறமாதிரி தானே போராங்க....//

அவ்.......முடியலை...

ஏன் சகோ.... நீ பாத்தது இல்ல....நம்ம கூர்மதியன் சகோ கூட ஜிமெயில் buzz ல இந்த போட்டோ வச்சு இருக்காரு பாரேன்..... ( ஏதோ என்னால முடிஞ்சது )ஹி ஹி

ரேவா சொன்னது…

நிரூபன் said...

.இந்த பதிவை என் இணையநண்பன் எவனோ ஒருவனுக்காவும்....//

ஆய்...நமக்காகத் தானே...ஹி..ஹி...

எல்லாருக்காகவும் தான்...ஆனாலும் spl அஹ ஆனந்த் http://muthalpirivu.blogspot.com/காகவும் சகோ :-)

ரேவா சொன்னது…

நிரூபன் said...

முதல் பாதியில் மணமாகாத காதலர்கள் பேசுவது போன்ற உரை நடையினைத் தந்து விட்டு, இறுதியில்
பிரசவத்திற்காக மாமியார் வீட்டிற்கு போன மனைவியுடன் லவ்சு விடும் கணவனின் உணர்வுகளின் வெளிப்பாடு தான் இப் பதிவு என்று எண்ணும் அளவிற்கு அழகாக இப் பதிவினைச் செதுக்கியுள்ளீர்கள்.

நன்றி சகோ,....ஏனோ கல்யாணத்தின் ஆரம்ப காலங்களில் உள்ள காதல், நாளடைவில் குறைந்து போய் கசப்பாய் போகிறது...கல்யாணத்தின் பின்பும் காதலோடு இருந்தாள், வாழ்க்கை எவ்வளவு அழகாய் இருக்கும் என்பதை கொஞ்சம் இங்கே சொல்ல நினைத்தேன் சகோ :-)

ரேவா சொன்னது…

நிரூபன் said...

மொழிக் கையாள்கையும், உரை நடைத் தமிழினுள் நகைச்சுவை, கவிதை இரண்டையும் புகுத்தி நவரசமும் சொட்டச் சொட்ட எழுதிய விதமும் அருமை!

வாழ்த்துக்கள் சகோ!

மிக்க நன்றி சகோ....முதல் முயற்சி தான்...இருப்பினும் இப் பதிவை எழுத ஊக்கப்படுத்திய உள்ளத்திருக்கும் என் நன்றிகள் :-) ஹி ஹி

ரேவா சொன்னது…

நிரூபன் said...

வலையில் ஆணிகள் அதிகமாக அடித்து, என் பதிவுகளிற்கு வந்து பலர் பின்னூட்டம் போட்டுச் சென்ற காரணத்தால், அவர்களுடன் மல்லுக் கட்ட வேண்டியதாகிப் போச்சு, மன்னிக்கவும்!

சகோ நானும் அந்த மல்லுக்கட்டை அறிவேன்....இத்தனை மல்லுக்கட்டிலும், மறக்காத உன் வருகைக்கும், மனமார்ந்த உன் அன்புக்கும் நன்றி நன்றி நன்றி சகோ .....ஆனாலும் உன்னிடம் இருந்து, கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது, எங்களுக்கு :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

கவிதையுடன் கூடிய கதை.. நல்லா இருந்துச்சுங்க..

குட்டி கவிதை அனைத்தும்.. சூப்பர்-ஆ இருந்ததுங்க. :-))

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…

தோழி....ரசித்து படித்தேன்... உணர்வுகளோடு ஒன்றாகி போனேன்...

அருமை... வாழ்த்துகள்...

ரேவா சொன்னது…

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

கவிதையுடன் கூடிய கதை.. நல்லா இருந்துச்சுங்க..

குட்டி கவிதை அனைத்தும்.. சூப்பர்-ஆ இருந்ததுங்க. :-))

உங்கள் வருகைக்கும், மறுமொழிக்கும் நன்றி.தோழி.......

ரேவா சொன்னது…

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

தோழி....ரசித்து படித்தேன்... உணர்வுகளோடு ஒன்றாகி போனேன்...

அருமை... வாழ்த்துகள்...

உங்கள் வருகைக்கும், மறுமொழிக்கும் நன்றி நண்பா.

Instrospecting through சொன்னது…

Excellent revathy ,,,,,feel like want to marry tommorrow ....simply superb,,,nice delivery of thoughts

ரேவா சொன்னது…

Instrospecting through said...

Excellent revathy ,,,,,feel like want to marry tommorrow ....simply superb,,,nice delivery of thoughts

thanks kumar... happy to see your comments..... :-)

the critics சொன்னது…

அருமை........மனதில் காதலும் இதலில் புன்னகையும் கொண்டு ருசிக்க படித்தேன் .......

the critics சொன்னது…

அருமை........மனதில் காதலும் இதலில் புன்னகையும் கொண்டு ருசிக்க படித்தேன் .......

Gowri Ananthan சொன்னது…

//கர்வத்தையும், காமத்தையும் ஒளிச்சி வச்சு சிரிக்கிற உன் இதழும், உன் இதழ் குழந்தையை, இப்போதைக்கு, என்கிட்ட கொடுக்காம ஒளிச்சி வச்சி இருக்காளே, என் சக்காளத்தி?... அதான் அந்த மீசை, அதுவும் ரொம்ப பிடிக்கும்..//

மீசையை சக்களத்தி என்றுரைத்த உங்கள் உவமை நன்றாகவிருக்கிறது. நியாயமான கோபம். ஒருமுறை எனக்கும் வந்தது தான். ஆனால் சாரியான முறையில் வெளிப்படுத்த முடியவில்லை. ஆனால் நீங்க மிகச் சரியாகவே சொல்லிவிட்டீர்கள். :)

பெயரில்லா சொன்னது…

அப்பப்பா.. இவ்வளவு நாள் உங்கள் பதிவுகளை மிஸ் பன்னிருகேனே..! அட்டகாசம்.. அந்த மொக்கை என்று நீங்கள் சொன்ன கவிதை கூட..