உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 5 மே, 2011

உனக்காக ஓர் வாழ்த்து
* உன் பிறந்தநாள் அன்று,
உனக்காய் பிறந்த
இந்த கவிதை,
என் அன்பையும்,
என் வாழ்த்தையும் உன்னிடம்
கொண்டு சேர்க்கட்டும்....

* அம்மாவின் ஆண்பிள்ளைக்
கனவுக்கும், 
அப்பாவின் தலைமுறை
விந்துக்கும்,
வளம் தந்த,
செல்ல மகன்  நீ தானே...

* தத்தி தத்தி நீ நடக்க
தங்க மயில் ஆடுதுன்னு,
சொல்லிவச்ச பாட்டிக்கு,
இன்றும் சொக்கத் தங்கம்
நீ தானே...

* கொஞ்சிப் பேச ஒரு அக்காவும்,
சண்டை போட மறு அக்காவும்,
சமாதானம் பண்ண
குடும்பமுமாய்,
நாம் அடித்த கூத்துக்கள்
நெஞ்சுக் கூட்டில்
நினைவுகாளாய் ஏராளம்...

* நிலாச் சோறு ஊட்டிய
நாளும்,
உன் கைபிடித்து
உன்னை நான் பள்ளியனுப்பிய
நாளும்,
அப்பா உனக்கு வாங்கித்தந்த
பொம்மைக்காருக்காய்
உன்னிடம் சண்டை போட்ட
நாளும் என,
அழகான நம் மழலைக் காலம்
மனக்கண்ணில் ஓடுதடா....

* காலங்கள் உருண்டோட,
கனவுகளும் சேர்ந்தோட,
காலத்தின் கோலத்தில்
பொறுப்புகளும் சேர்ந்தாட,
நெருங்கியே இருந்த
நம் அன்பு,
இன்று,
உன் வேலைப் பயணத்தால்,
இருமடங்கு அதிகமாக,
இதுவரை உன் அருகில் இருந்து 
வாழ்த்திய நான்
வார்த்தையைத் தேடுகிறேன்...

* வெயிலும், மழையும்
உன்னை நெருங்காம
பொத்திப் பொத்தி
வளர்த்த நாட்கள்,
புழுதி  நிறைந்த
மாநகரில் நீ அலையத் தானோ?.....

* கஷ்டமே அறியாமல்,

காத்திட்ட
எங்கள் அன்பின்,
பொறுப்புக்காய் பொருள்
சேர்க்க புறப்பட்டாய்.....

* இங்கு பிடி சோறும்
நீ இன்றி 
உள்ளிறங்க மறுத்து
உள் நாட்டு கலவரம்
செய்யும்
காரணம் அறிவாயோ?...

* இன்று உந்தன் பிறந்த நாளில்,

கடவுள் உன்னை காத்திடவும்,
காலம் நம்மை கரைசேர்த்திடவும்,
வக்கத்த உன் அக்கா
வெறும் வார்த்தையிலே வாழ்த்துகின்றேன்..

* வயோதிகம் வந்தாலும்,
வளமாக நீ வாழ,
வாஞ்சையோடு வாழ்த்துக்கிறேன்...
ஏழுப்பிறப்பென்பதில்,
எனக்கு நம்பிக்கை இல்லை...
அப்படி ஒன்று இருப்பின்,
என் ஏழுபிறவிக்கும்,
அன்னையாக, தந்தையாக
தம்பியாக, தங்கையாக
நீங்களே  வேண்டும்
என்று,
இல்லாத கடவுளிடம்
மண்டியிட்டு வேண்டுகின்றேன்....

* உன் பிறந்தநாள் அன்று,

உனக்காய் பிறந்த
இந்த கவிதை,
என் அன்பையும்,
என் வாழ்த்தையும் உன்னிடம்
கொண்டு சேர்க்கட்டும்....  
பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி....

என்றும் நீ நலமாய் வாழ வாழ்த்துகிறோம்...

( சாக்லேட்ஸ் எடுத்துக்கோங்க...இன்னைக்கு என் தம்பிக்கு பிறந்தநாள்....இன்னைக்கு பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்......)

41 கருத்துகள்:

♔ம.தி.சுதா♔ சொன்னது…

தங்கள் தம்பிக்கு என் வாழ்த்துக்களும் சகோதரி... உணர்வை அப்படியே கொட்டியுள்ளிர்கள்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)

ரேவா சொன்னது…

♔ம.தி.சுதா♔ said...

தங்கள் தம்பிக்கு என் வாழ்த்துக்களும் சகோதரி... உணர்வை அப்படியே கொட்டியுள்ளிர்கள்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)

மிக்க நன்றி சகோதரம் :-)

siva சொன்னது…

சாக்லேட் எனக்குத்தான்
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
தினமும் பிறந்த நாள் போல கொண்டாட வாழ்த்துகிறேன் ....
வழக்கம் போல பாசக் கவிதை கலக்கல்...

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

அசத்தல் கவிதை... தங்களின் சகோதரனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்....

சௌந்தர் சொன்னது…

கவிதை ரொம்ப அழகா இருக்கு...உங்க பாசம் தெரியுது....

உங்கள் தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...என்றும் நலமுடம் வாழ உங்களை போல இல்லாத கடவுளிடம்
வேண்டி கொள்கிறேன்.....

பிடித்த வரிகள்..!!
இல்லாத கடவுளிடம்
மண்டியிட்டு வேண்டுகின்றேன்....

பலே பிரபு சொன்னது…

என் நண்பன் ஒருவனுக்கும் இன்று பிறந்த நாள். உங்கள் தம்பிக்கும் "பிறந்த நாள் வாழ்த்துகள்"

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

தங்கள் சகோதரனுக்கு என் வாழ்த்துக்களை சொல்லவும் ...

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

" A joke " visit
http://rajamelaiyur.blogspot.com/2011/05/blog-post_586.html

எவனோ ஒருவன் சொன்னது…

தம்பிக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துகளையும் சேர்த்து விடுங்கள் :-)

இதுவரை உன் அருகில் இருந்து
வாழ்த்திய நான்
வார்த்தையைத் தேடுகிறேன்...

இந்த வரிகளிலேயே தங்கள் தம்பியின் பிரிவு தங்குளுக்குள் ஏற்படுத்திய வலியை உணர்த்துகிறது. என்ன செய்ய தோழி பொருள் சேர்க்க வேண்டி வீட்டில் இருந்து பிரிந்து இருக்க நேரிட்டு விடுகின்றது நம்மில் 90 சதவீதம் பேருக்கு :-(

வக்கத்த உன் அக்கா
வெறும் வார்த்தையிலே வாழ்த்துகின்றேன்..

இதை நானு ஏற்றுக்கொள்ள மாட்டேன். தம்பிக்கு தாங்கள் அளித்த பரிகளில் மிகச் சிறந்தது இந்த வாழ்த்துக் கவிதையாகத் தான் இருக்கும் :-)

Have a blast :-)

நிரூபன் சொன்னது…

இப்போது தளத்தில் உள்ள பிரச்சினைகளை சரி பார்த்து விட்டேன் சகோ. இப்போ டாஷ் போர்ட்டில் என் பதிவு வருகிறதா?

நிரூபன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நிரூபன் சொன்னது…

தத்தி தத்தி நீ நடக்க
தங்க மயில் ஆடுதுன்னு,
சொல்லிவச்ச பாட்டிக்கு,
இன்றும் சொக்கத் தங்கம்
நீ தானே...//

மதுரையின் வட்டார மொழி வழக்கும்,
கிராமிய நாட்டார் பாடல் மெட்டும் இவ் வரிகளில் தெரிகிறது.

நிரூபன் சொன்னது…

அம்மாவின் ஆண்பிள்ளைக்
கனவுக்கும்,
அப்பாவின் தலைமுறை
விந்துக்கும்,
வளம் தந்த,
செல்ல மகன் நீ தானே..//

அப்போ, வீட்டில் நீங்க தான் மூத்த பிள்ளையா சகோ.

ஆர்வக் கோளாறில் பின்னூட்டத்தை, மாறிப் போட்டு விட்டேன்.

நிரூபன் சொன்னது…

வாழ்த்துக் கவிதையினை, விமர்சிக்கக் கூடாதென்று சொல்லுவாங்க. அதனாலை எஸ்கேப் ஆகிறேன் -
காரணம் பாசக் கவிதையாய், உண்மையான உள்ளத்து உணர்வுகளை ஒப்பனை ஏதுமின்றி, சிறிதளவேனும் கற்பனைக்கு இடம் கொடுக்காது எழுதப்பட்டிருப்பதே ஆகும்,

நிரூபன் சொன்னது…

உங்கள் தம்பிக்கு, நாங்களும், இந்த நன் நாளில் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாழ்த்துக்கள் தம்பி!

நிரூபன் சொன்னது…

நீங்க எப்போ, இஸ்லாமியப் பெண்ணாக மாறினீங்க?
பர்தா எல்லாம் போட்டிருக்கிறீங்களே,

ரேவா சொன்னது…

siva said...

சாக்லேட் எனக்குத்தான்
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
தினமும் பிறந்த நாள் போல கொண்டாட வாழ்த்துகிறேன் ....
வழக்கம் போல பாசக் கவிதை கலக்கல்...

நன்றி சிவா

ரேவா சொன்னது…

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அசத்தல் கவிதை... தங்களின் சகோதரனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்....

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி கருண்

ரேவா சொன்னது…

சௌந்தர் said...

கவிதை ரொம்ப அழகா இருக்கு...உங்க பாசம் தெரியுது....

உங்கள் தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...என்றும் நலமுடம் வாழ உங்களை போல இல்லாத கடவுளிடம்
வேண்டி கொள்கிறேன்.....

பிடித்த வரிகள்..!!
இல்லாத கடவுளிடம்
மண்டியிட்டு வேண்டுகின்றேன்....

ஹி ஹி சகோ நீயும் என்னோட கேஸ் தானா...வெரி குட்,,,,, நன்றி சகோ உன் வாழ்த்துக்கு

ரேவா சொன்னது…

பலே பிரபு said...

என் நண்பன் ஒருவனுக்கும் இன்று பிறந்த நாள். உங்கள் தம்பிக்கும் "பிறந்த நாள் வாழ்த்துகள்"\

வாழ்த்துக்கு நன்றி நண்பா,,,உன் நண்பருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்

ரேவா சொன்னது…

"என் ராஜபாட்டை"- ராஜா said...

தங்கள் சகோதரனுக்கு என் வாழ்த்துக்களை சொல்லவும் ...

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

தம்பிக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துகளையும் சேர்த்து விடுங்கள் :-)

இதுவரை உன் அருகில் இருந்து
வாழ்த்திய நான்
வார்த்தையைத் தேடுகிறேன்...

இந்த வரிகளிலேயே தங்கள் தம்பியின் பிரிவு தங்குளுக்குள் ஏற்படுத்திய வலியை உணர்த்துகிறது. என்ன செய்ய தோழி பொருள் சேர்க்க வேண்டி வீட்டில் இருந்து பிரிந்து இருக்க நேரிட்டு விடுகின்றது நம்மில் 90 சதவீதம் பேருக்கு :-(

வக்கத்த உன் அக்கா
வெறும் வார்த்தையிலே வாழ்த்துகின்றேன்..

இதை நானு ஏற்றுக்கொள்ள மாட்டேன். தம்பிக்கு தாங்கள் அளித்த பரிகளில் மிகச் சிறந்தது இந்த வாழ்த்துக் கவிதையாகத் தான் இருக்கும் :-)

Have a blast :-)

நன்றி நண்பா உன் வாழ்த்துக்கு....மிக்க மகிழ்ச்சி உன் பின்னோட்டம் கண்டதில்..

ரேவா சொன்னது…

நிரூபன் said...

இப்போது தளத்தில் உள்ள பிரச்சினைகளை சரி பார்த்து விட்டேன் சகோ. இப்போ டாஷ் போர்ட்டில் என் பதிவு வருகிறதா?

sako intha kelvikku naan ungal thalaththil pathil aliththu vitten..

ரேவா சொன்னது…

நிரூபன் said...

தத்தி தத்தி நீ நடக்க
தங்க மயில் ஆடுதுன்னு,
சொல்லிவச்ச பாட்டிக்கு,
இன்றும் சொக்கத் தங்கம்
நீ தானே...//

மதுரையின் வட்டார மொழி வழக்கும்,
கிராமிய நாட்டார் பாடல் மெட்டும் இவ் வரிகளில் தெரிகிறது.

பாட்டி சொன்னதலா, அத அவங்க சொன்ன நடையிலே, அந்த பத்தியை பதிவிட்டேன் சகோ..

ரேவா சொன்னது…

நிரூபன் said...

அம்மாவின் ஆண்பிள்ளைக்
கனவுக்கும்,
அப்பாவின் தலைமுறை
விந்துக்கும்,
வளம் தந்த,
செல்ல மகன் நீ தானே..//

அப்போ, வீட்டில் நீங்க தான் மூத்த பிள்ளையா சகோ.

ஆர்வக் கோளாறில் பின்னூட்டத்தை, மாறிப் போட்டு விட்டேன்.

ஆமாம் சகோ நான் தான் மூத்த பிள்ளை... :-(

அதானே என்னடா, நம்ம நிரூபன் சகோ பின்னூட்டத்தைக் கணமேனு பாத்தேன்...ஹி ஹி

ரேவா சொன்னது…

நிரூபன் said...

வாழ்த்துக் கவிதையினை, விமர்சிக்கக் கூடாதென்று சொல்லுவாங்க. அதனாலை எஸ்கேப் ஆகிறேன் -
காரணம் பாசக் கவிதையாய், உண்மையான உள்ளத்து உணர்வுகளை ஒப்பனை ஏதுமின்றி, சிறிதளவேனும் கற்பனைக்கு இடம் கொடுக்காது எழுதப்பட்டிருப்பதே ஆகும்,

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு... ஹ ஹ

ரேவா சொன்னது…

நிரூபன் said...

உங்கள் தம்பிக்கு, நாங்களும், இந்த நன் நாளில் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாழ்த்துக்கள் தம்பி!

நன்றி சகோ...உன் வாழ்த்துக்கு...மிக்க மகிழ்ச்சி/

ரேவா சொன்னது…

நிரூபன் said...

நீங்க எப்போ, இஸ்லாமியப் பெண்ணாக மாறினீங்க?
பர்தா எல்லாம் போட்டிருக்கிறீங்களே,

சகோ, மதுரைல வெயில் ஜாஸ்த்தி, அதான்....(கடன் கொடுத்தவங்க தேடுறாங்கன்னு சொன்ன நீ நம்புவியா?...அவ்வ்வ்வ்)

நன்றி சகோ உன் வாழ்த்துக்கும்....அன்பான வருகைக்கும்

பெயரில்லா சொன்னது…

/// தத்தி தத்தி நீ நடக்க
தங்க மயில் ஆடுதுன்னு,
சொல்லிவச்ச பாட்டிக்கு,
இன்றும் சொக்கத் தங்கம்
நீ தானே...// பசங்க என்டாலே நம்ம வீடுகளில தனி செல்லம தானே..

பெயரில்லா சொன்னது…

/////* வெயிலும், மழையும்
உன்னை நெருங்காம
பொத்திப் பொத்தி
வளர்த்த நாட்கள்,
புழுதி நிறைந்த
மாநகரில் நீ அலையத் தானோ?../// இப்பிடி ஒரு அக்கா கிடைக்க கொடுத்து வைத்த தம்பி...

பெயரில்லா சொன்னது…

////* உன் பிறந்தநாள் அன்று,
உனக்காய் பிறந்த
இந்த கவிதை,
என் அன்பையும்,
என் வாழ்த்தையும் உன்னிடம்
கொண்டு சேர்க்கட்டும்.../// இந்த சிறியேனுடைய வாழ்த்துக்களையும் சேர்த்துக்கோங்க சகோதரி..

Chitra சொன்னது…

convey our birthday wishes to him. :-)

ரேவா சொன்னது…

கந்தசாமி. said...

/// தத்தி தத்தி நீ நடக்க
தங்க மயில் ஆடுதுன்னு,
சொல்லிவச்ச பாட்டிக்கு,
இன்றும் சொக்கத் தங்கம்
நீ தானே...// பசங்க என்டாலே நம்ம வீடுகளில தனி செல்லம தானே..

ஆமாம் சகோதரம்...பசங்க என்றாலே, வீட்டில் அவங்க தானே செல்லம்...

ரேவா சொன்னது…

கந்தசாமி. said...

/////* வெயிலும், மழையும்
உன்னை நெருங்காம
பொத்திப் பொத்தி
வளர்த்த நாட்கள்,
புழுதி நிறைந்த
மாநகரில் நீ அலையத் தானோ?../// இப்பிடி ஒரு அக்கா கிடைக்க கொடுத்து வைத்த தம்பி...

நன்றி நன்றி நன்றி சகோ.... :-)

ரேவா சொன்னது…

கந்தசாமி. said...

////* உன் பிறந்தநாள் அன்று,
உனக்காய் பிறந்த
இந்த கவிதை,
என் அன்பையும்,
என் வாழ்த்தையும் உன்னிடம்
கொண்டு சேர்க்கட்டும்.../// இந்த சிறியேனுடைய வாழ்த்துக்களையும் சேர்த்துக்கோங்க சகோதரி..

மிக்க நன்றி சகோ உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கு...

ரேவா சொன்னது…

Chitra said...

convey our birthday wishes to him. :-)

நன்றி சித்ராக்கா....நலமா தங்கள்?.....மிக்க மகிழ்ச்சி தங்கள் பின்னோட்டம் கண்டதில்...

அருண் K நடராஜ் சொன்னது…

belated Happy pirandhanaal day mani...

thozhsss sooperaa irukku uu kavidhai...

A.R.RAJAGOPALAN சொன்னது…

தமக்கையுடன்
பாசம்
பகிரும்
பரவசம் ஒரு
பிரவாஹம் ,

அக்காவும்
அம்மாதான் ...............
தம்பியே
தமக்கையின் முதல்
தவப்புதல்வன் , குட்டி பெண்கள்
தன் சுட்டி
தம்பியை கொஞ்சும் அழகே
தனி அழகு.

சகோதர பாசம்
சமுத்திரம்
சகலத்தையும் அதன்
அகலத்தையும்
அளவிடமுடியாது .

உங்களின் கவிதையில்
பாசமும் பரிவும்
வழிந்தோடுகிறது
பாக்கியசாலி உங்கள்
தம்பி.

பாராட்டுக்கள்
அற்புதமான கவிதை

ரேவா சொன்னது…

அருண் K நடராஜ் said...

belated Happy pirandhanaal day mani...

thozhsss sooperaa irukku uu kavidhai...

நன்றி அருண்

ரேவா சொன்னது…

A.R.RAJAGOPALAN said...

தமக்கையுடன்
பாசம்
பகிரும்
பரவசம் ஒரு
பிரவாஹம் ,

அக்காவும்
அம்மாதான் ...............
தம்பியே
தமக்கையின் முதல்
தவப்புதல்வன் , குட்டி பெண்கள்
தன் சுட்டி
தம்பியை கொஞ்சும் அழகே
தனி அழகு.

சகோதர பாசம்
சமுத்திரம்
சகலத்தையும் அதன்
அகலத்தையும்
அளவிடமுடியாது .

உங்களின் கவிதையில்
பாசமும் பரிவும்
வழிந்தோடுகிறது
பாக்கியசாலி உங்கள்
தம்பி.

பாராட்டுக்கள்
அற்புதமான கவிதை

மிக்க நன்றி நண்பரே உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கு :-)

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இன்று உந்தன் பிறந்த நாளில்,
கடவுள் உன்னை காத்திடவும்,
காலம் நம்மை கரைசேர்த்திடவும்,இன்று உந்தன் பிறந்த நாளில்,
கடவுள் உன்னை காத்திடவும்,
காலம் நம்மை கரைசேர்த்திடவும்,///
என்றென்றும் வாழ்த்துக்கள்.