உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 17 மே, 2011

இது காதலா?...காமமா?....சிந்திக்க ஒரு நிமிடம்...நல் விடை தேடியே இந்த பயணம்.....வணக்கம் என் நண்பர்களே.....நம்ம வாழ்க்கையில நடக்குற ஒவ்வொரு விஷயமும், நமக்கு ஏதாவது ஒரு விதத்துல, அனுபவத்தையும், தைரியத்தையும் தருகிறது....எத்தனையோ பேரை நம்ம கடந்துபோக சிலர் மட்டும் தான் நம்மை நட்பாகவும், காதலாகவும், அன்பால கடத்திச் செல்கிறார்கள்....இதுல நல்லது மட்டுமே கொடுக்கிற நட்பு ஒரு ரகம்....தன் சுயநலத்துக்காக, காதல்ங்கிற பேருல, நம்ம சுத்தியிருக்கிற, நண்பர்கள் உலகத்த சுருக்கிக்கிற காதலர்கள் ஒரு புறம் (வெகு சிலர் )....(வழக்கம் போல காதல் பதிவான்னு நினைக்க வேணாம்.....)...காதலால நட்ப புறம் தள்ளி வைத்த என் தோழியின் தோழி கதையை அவங்கள் வேண்டுதல் பேருல, கொஞ்சம் நிதர்சன உண்மைகளை மறைத்து, நாகரீக முறையில் பதிவிடுகிறேன்...

அவர்கள் தன் காதலை பதிவிட சொன்னதன் நோக்கம் : காதல் பித்து பிடித்து அலையும் பலருக்கு வெறுப்பாக இருக்கலாம் இந்த பதிவு, ஆனாலும் எங்கயோ தன் சுயம் தொலைத்து கொண்டு இருக்கும் ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ என் வாழ்க்கை ஒரு படமாக இருக்கும்....அதற்காக வேண்டும் என் காதலை கதையாகவோ...இல்லை கவிதையாகவோ சொல்லிவிடுங்கள் என்று சொன்னார்....

அதோடு, அந்த தோழியின் சுய அறிவில்லா முன்னால் காதலன், என் வலைத்தளம் வருவானாம் ...உங்கள் நண்பர்கள் இதற்கு இடும் கருத்து அவன் மனதிற்கு எட்டவேண்டும்,  என்று என்னிடம் கூறினார்......

அதோடு என் மனதில் நல் மாற்றம் வேண்டி உங்களிடம் என் கதையை பகிர்கிறேன்னு அவங்க கதைய சொல்லிடாங்க...இதோ உங்களுக்காய்

இளமையின் முதல் சந்தோஷ காலம் எதுன்னு கேட்டா எல்லோரும் கண்ண மூடிட்டு  நம்ம கல்லூரி காலத்தை தான் பதிலாய் சொல்வோம்...அப்படிப்பட்ட கல்லூரி காலம் முடிவடைந்தவுடன் அவரவர் வேலை தேடி பயணப்படுவர்...அனிதா பிறப்பில் வசதியாய் பிறந்து, காலமாற்றத்தால் கடன் பட்ட குடும்பத்தின் சுமையைக் குறைக்க சென்னை  நோக்கிப் பயணப்பட்டவள்....இதுவரை கட்டுக் கோப்பாய் வளர்ந்த சூழலில், சென்னை சுதந்திரம் அவளுக்கு புது வித பயத்தை தந்தது, இருப்பினும் ஒரு நல்ல அலுவலகத்தில் பணியில் சேர்ந்தாள்..அவள் பெற்றவர்களை விட அதிகம் பாதுக்காப்பை அவள் நட்பு அவளுக்கு தர, அழகான அலுவலக காலம் நயமாய்ச் செல்ல,  தன் தோழியின் நண்பனாய் அறிமுகமானான் அரவிந்த்...

அரவிந்த் பார்த்ததும் பற்றிக்கொள்ளும் காந்தக் கண்களுக்குச் சொந்தக்காரன்....அரவிந்தனின் முதல் பார்வையே, அனிதாவின் மீதான காதல் படையெடுப்பாய் மாறியது..அதை பார்வையில் உணர்ந்த அனிதா, சற்றும் பொருட்படுத்தாமல் நட்பு ரீதியில் நாட்களைக் கடத்தினாள்..நாட்கள் நட்பின் போர்வையில் நகல, அனிதா மீதான் தன் காதலை அரவிந்தன் அவளிடம் சொன்னான்...

இது அவள் எதிர்பார்த்த ஒன்று தான், இருந்தாலும் அவன் காதலை ஏற்காத அனிதா அவன் நட்பை விட்டு விலக நினைத்த நேரம், சிறு சிறு பிரச்சனைகள் மற்றவர்களால் இவளுக்கு முளைக்க, இவள் தான் நண்பர்களிடம் பகிர்வதை குறைத்து, அரவிந்தனிடம் அந்த பிரச்னைக்கு தீர்வு நாடி சென்றாள். அரவிந்தனும் அவளின் பிரச்சனைகளுக்கு முடிவு காண, நாட்கள் இவன் என் நண்பன் என்ற ரீதியில் நகல, அரவிந்தனின் அன்பும், அரவணைப்பும், காதலும் இவளுக்குள் புதுவித கற்பனை உலகத்தை வளர்க்க, இதுவரை தன்னை சுற்றயுள்ள தன் சுற்றத்தை கொஞ்சம் மறந்தே போனாள்...

அனிதா தன் காதலை மறைக்க முடியாமல், அரவிந்தனிடம் காதலை சொல்ல, இனிய பரபரப்புடன் சந்தோஷ வானில், அழகாய் பறந்தனர் இந்த காதலர்கள். ஏக்கங்களும், தவிப்புகளும்,கனவுகளும், காதலும், கற்பனையும் அவர்கள் வாழ்வை காதலால்  நிரப்ப, அன்பு காதலர்களாய், அழகோடு பவனி வந்தனர்....

பிறிதொரு நாட்களில் அரவிந்தன் அனிதாவிற்காய், அனுப்பிய
சின்ன சின்ன பரிசுகளும், நலம் விசாரிக்கும் குறும்செய்திகளும், அக்கறை அழைப்புகளும் கொஞ்சம் கொஞ்சமாய் குறைய, அனிதா கொஞ்சம் தடுமாறியே போனாள்...அனிதா வர தாமதம் ஆனாலும் தவியாய் தவித்து அவள் அலுவலகத்தை படையெடுத்த அரவிந்தன், அவள் விரும்பி அழைத்தும், அவளை சந்திப்பதை தவர்க்கத் தொடங்கினான்...தவறான ஒருவனை காதலித்து விடமோ என்று மனக்கிடங்கில், பயத்தின் தீயைப் பற்ற வைத்தாள் அனிதா..

பிறகு அரவிந்தனின் செயலும், பார்வையும் இவள் பயத்தை உறுதி படுத்த, நிலைகுலைந்து போனாள் அனிதா..அவன் நிராகரிப்பின் காரணம் அறிய, அவனை அலைபேசியில் தொடர்புகொண்டாள்...அதுவரை அனிதா, அரவிந்தனை தொடர்புகொள்ள வேண்டும் என்று நினைத்தாலே, தொலைபேசியில் அழைக்கும் அரவிந்தன், இன்று அவள் பலமுறை அழைத்தும், தொடர்பை ஏற்க்க வில்லை...

அனிதா இதுவரை அனுபவிக்காத வலியை உணர, சுற்றி உள்ள அனைத்தும், இவளுக்கு சூனியமாய் தெரிய,எதிலும் இவள் கவனம் செல்லாமல், தன் காதலே கெதி என்று, அவன் பெயரையும், அவனோடு களித்த அந்த இடங்களுக்கும், சென்று தன்னோடு அவன் என்றும் இருக்கிறான் என்ற எண்ணத்தில், பொழுதை கழித்தாள் அனிதா...வேலையிலும் கவனமின்றி, நட்பின் பார்வையில் , தன் விசயங்களை பகிர்தலின்றி தனக்கென்ற ஒரு உலகத்தை கற்பனையிலே உருவாக்கி, அவனோடு உறவாடி வந்தாள்...

பின் ஒரு நாளில் அரவிந்தனிடம் இருந்து அழைப்பு வர, பறந்து சென்றாள் அனிதா அவனை சந்திக்க, அரவிந்தன் இந்த ஊடலுக்கு ஏதேதோ, காரணம் சொல்லி அவளை சமாதானப் படுத்த, அனிதாவின் உண்மையன்பை உணர்ந்த அரவிந்தன், பின் அவளை விட பன்மடங்கு அனிதாவை நேசித்தான்...வருடங்கள் ஐந்து காதலோடு கழிய, அனிதாவின் குடும்பம் அவளை திருமணத்திற்கு நிர்பந்திக்க, அரவிந்தனிடம் இதை பற்றி பேச முடிவு செய்தாள் அனிதா....

அரவிந்தனும் இதற்க்கு ஒப்புதல் அளிக்க, திருமணம் பற்றி பெற்றோர்களிடம் பேசும் முன்பே,  கனவுகளோடு காலம் களித்தனர் காதலர்கள்..இந்த நேரத்தில் அரவிந்தனின் அலுவலகத்தில், புதிய பணியில் வந்து சேர்ந்தாள் ராகினி...ராகினி அல்ட்ரா மார்டன் அழகி...வசதி படைத்தவள்...ஆரம்பத்தில் அரவிந்தனிடம் நட்போடு பழக ஆரம்பித்தவள், நாளைடவில் அரவிந்தனின் துடுக்குப் பேச்சும், அவன் குணமும் இவளை ஈர்க்க, காதல் வலையில் அவன் அனுமதி இன்றி விழுந்தாள் ராகினி...

ஒரு மாலையில் வழக்கம் போல் அனிதாவும், அரவிந்தனும்  சந்தித்துக் கொண்ட அந்த அந்தி நேரம் ராகினியைப் பற்றியும், அவள் பணபலத்தைப் பற்றியும் பேசி முடித்தான் அரவிந்தன்,,,அனிதாவிற்கு அவன் பேச்சு சந்தோஷத்தையும், கொஞ்சம் மிரட்சியையும் தந்தது...தன் காதலன் தன் மீது உள்ள நம்பிக்கையால் ஒரு பெண் பற்றி தன்னிடம், பேசுவது அவளுக்கு சந்தோஷம் தந்தாலும், அதற்காய் அவன் பிரயோகப் படுத்திய வார்த்தைகள் அவளுக்கு மிரட்ச்சியை தந்தது...எதற்கும் ராகினியிடம் தள்ளியே இருங்கள் என்று அன்பு கட்டளை இட்டுவிட்டு, அன்றைய சந்திப்பை காதலோடு முடித்தனர்.

ராகினி கொஞ்சம் கொஞ்சமாய் அரவிந்தனை, ஆளநினைத்தாள்...
அரவிந்தனும், ஒரு கட்டத்தில் வளைந்து கொடுத்தான்...இருவரும், நட்பின் வாசலில் நுழையும்போதே, அரவிந்தன் இதுவரை எந்த பெண்ணையும் நேசிக்கவில்லை என்ற, காதல் அனுமதி சான்றிதழுக்கு கையொப்பம் இட்டுச் செல்ல, ராகினியும்  இவன் தனக்கானவன் என்றே தன் மனதில் எண்ணிக்கொள்ள, ராகினி தன் காதலை அரவிந்தனிடம் சொல்ல, தன் குடும்ப சூழல் காரணமாய், பணக்கார பெண்ணை பயன்படுத்திக் கொள்ள நினைத்த அரவிந்தனுக்கு, ராகினியின் காதல் வரமாய் வந்தது என்று நினைத்து தன் வாழ்வை, பணம் கொண்டு வளப்படுத்தினான்..

அனிதாவை சந்திக்கும் ஒரு வாரத்திற்குள், இவன் வாழ்வில் வந்திட்ட இந்த மாற்றத்தை உணராத அனிதா, வழக்கம் போல் காதலோடு அவனுக்காய் காத்திருந்தாள்..அரவிந்தனும், அன்றைய சந்திப்பில் நடந்தவைகளை, மறைத்து ராகினி அவனை விரும்புவதாகவும், தான் அதற்கு சம்மதிக்கவில்லை என்றும் சொல்லி விட்டு சென்றான்... ஆனாலும் இவன் கண்கள் பேசும்வார்த்தையின் அர்த்ததின்  பொருள் அறிந்த அனிதா, கண்ணீர் கொண்டு தன் காதலை மீண்டும் அவனிடம் சொல்ல, இதுவரை அன்போடு  இருந்த அரவிந்தன், ராகினியிடம் தான் ஆறு வருடம் ஒரு பெண்ணைக் காதலித்ததாகவும், இன்று நாங்கள் நண்பர்கள் என்றும் சொல்ல, ராகினி அனிதாவை சந்திக்க வேண்டும் என்று அரவிந்தனிடம் கட்டளை விதிக்க, அனிதா அறியாமல், அவர்கள் சந்திக்கும் அந்த மாலையில் ராகினி அரவிந்தனோடு வந்தாள்..

இதை சற்றும் எதிர்பார்க்காத அனிதா , ராகினி வருகையின் காரணம் அறிந்து செய்வதறியாமல், திணற, இறுதியில் ராகினியே தாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும், உங்கள் பழைய காதல் தனக்கு தெரியும், உங்களின் நெருக்கமும் தெரியும் அதைப் பற்றி தான் கவலை கொள்ளவதாக இல்லை என்று சொல்லிவிட்டு, அவ் விடத்தை விட்டு நீங்கிச் சென்றாள்.... இது கனவாய்  இருக்குமோ என்று தன்னை தேற்ற நினைத்து கொண்டு இருக்கையில், அரவிந்தன் ராகினி வசம் சென்றதை அவன் வார்த்தைகள் அவளுக்கு காட்டியது...

தனக்கான உலகம் சூனியமாய்ப் போனதை உணர்ந்த அனிதா, செய்வதறியாமல் விழிநீர் வழிய, தான் ஒருவனால் ஏமாற்றப் பட்டோம் என்பதை உணர்ந்து, தற்கொலைக்கு முயல, உணர்வுகள் இணைத்த அவள் நட்பு, என்றும் இல்லாமல் அவளை தொடர்பு கொள்ள
தன் நிலையைச் சொல்லி அழுத அனிதாவை, ஆறுதல் சொல்லி, அவள் உண்ட விஷத்தை மருத்துவர் துணையுடன் வெளியேற்றினர்....

இவள் விஷம் அறிந்திய காரணம் அறிந்த நண்பர்கள், அரவிந்தன் அலுவலகத்தில் படையெடுக்க, அவனை தாக்கினர்...ராகினி நிலைமை உணர்ந்து அவர்களை விலக்கி விட, அரவிந்தன் பாதுகாக்கப்பட்டான்... தான் ராகினி  முன் தண்டிக்க பட காரணமாய் இருந்த அனிதாவை  எப்படியும் கொன்று விட வேண்டும் என்ற உறுதியோடு இருந்த அவனை, அந்த மருத்துவமனைக் காட்சி கொஞ்சம் மாற்றிப் போட்டது....

இருப்பினும் கொச்சை வர்த்தைகாளால் வசைபாடி விட்டு, தனக்கும், ராகினிக்கும் இன்னும் இரண்டு மாதங்களில் பெற்றோர்களால் நிச்சயிக்க பட்ட அந்த திருமண அழைப்பிதழை அனிதாவிற்கு தந்து விட்டு சென்றான்,

தோழி அனிதா இன்று நட்பின் துணையோடு நலமாக சென்னையில், தன் பணிகளோடும், அவன் நினைவு தந்த வலிகளோடும் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்...அரவிந்தன் தன் புது காதல் மனைவியோடு, உறுத்தாமல் உலா வருக்கிறார்....

நண்பர்களே...இது என் தோழியின் தோழிக்கு நடந்த கதை....எது காதல், எது காமம்...எங்கே நமது தேடல்?....என் தோழியின் காதலன் போல் தெளிவான அறிவில்லாமல், சஞ்சலப் படும் மனதிற்கு, இன்னொருவர் பலியாகலாமா?.....நமக்கு தெரிந்ததெல்லாம், காதலை பெண்கள் புறம் தள்ளுவார்கள் என்று, இங்கு என் தோழியின் சுயநல காதலன்.அந்த தோழியின் உண்மைக் காதலை புறம் தள்ளினார்...

இது ரொம்ப தேவையான பதிவான்னு நீங்க கேக்கலாம்...ஆனா இன்னைக்கு தற்கொலைகள் அதிகமா இருக்க இரண்டு காரணம் ஒன்னு:கடன்
இன்னொன்னு : காதல்....
கடன் தன் சுற்றியுள்ள சுழலின் நிலைமையை பெருக்க இல்ல சமாளிக்க வாங்குற விஷயம்....
ஆனால் காதல்....இலகுவாய் ஒருவர் உள்ளம் நுழைத்து, உயிரை இழக்கும் அளவிற்கு துணிய  வைக்கும் மாய கொள்ளைக்காரன் அல்லவா இந்த காதல்....

இப்போ என் தோழியின் வீட்டில் திருமண பேச்சுக்கள் நடக்க, தோழி அவற்றை புறம் தள்ளி, சுயமாய் வாழ விரும்புவதாய், அவர் பெற்றோரிடம் சொல்லி வருகிறார்...என் இனிய நண்பர்களே... என் தோழிக்கு நல்ல நடப்பாய் தாங்கள் தரும் பதில் என்ன என்று அவர் அறிய ஆவலாய்  உள்ளார்.நீங்கள் இந்த பதிவுக்கு தரும் வரவேற்ப்பை பொறுத்தே இதை போன்ற உண்மை சம்பவங்களை பகிர இருக்கிறேன்..

வழக்கம் போல் இந்த பதிவை உங்கள் பார்வை பயணத்தில் பயணப் படவைக்கிறேன்....(இப் பதிவை நகைச்சுவையாய் எடுக்காமல் ஒரு பெண்ணின் வாழ்க்கை இப் பதிவில் உள்ளதென்ற எண்ணத்தில் உங்கள் கருத்துக்களை இடவும்...அதோடு நாகரீக மான பின்னூட்டங்கள் மட்டுமே இங்கே வெளியிடப்படும், நகைச்சுவையாய் அல்லது வேறுவிதமாய் நீங்கள் அளிக்கும் பின்னூட்டம் புறம் தள்ளப்படும் என்பதையும் தெரிவிக்கிறேன்.புரியுறவங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்.... )53 கருத்துகள்:

ssiva சொன்னது…

தோழி அனிதாவிற்கு, கடந்த கால நினைவுகளை முற்றிலும் அழித்துவிட்டு, வருங்கால பிரதிகளை செழுமைப்படுத்தி கொள்ளுங்கள். "வருங்காலம் வசந்த காலம்" ...... இனிவரும் நாட்களில் உங்களை சந்தோசம் மட்டும் ஆக்கரமித்து கொள்ளட்டும். அடியேனின் வாழ்த்துகள்.......

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

புரியுறவங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்..../// எனக்கு நிஜமாகவே புரியல..

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

நிஜமாகவே காதல் சிலபேரிடம் தடுமாறுகிறது..

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

கோடைக்கு சுற்றுலா போகலாம் வாங்க ...

சௌந்தர் சொன்னது…

அனிதாவை ஏமாற்றிய அரவிந்தன் இப்பொழுது நிம்மதியாக இருக்கமாட்டான்...பணத்திற்கா சென்றவன் எப்போதும் நிம்மதியாக இருந்ததில்லை...காதலை விட பணம் தான் பெரியது என்று சென்றவன் காதல் என்ற வார்த்தையை கூட சொல்ல தகுதி இல்லாதவன்

உங்கள் தோழி இப்பொழுது திருமணம் செய்து கொள்ளலாம் அவன் ஏங்க வேண்டும் இப்படி ஒரு நல்ல பெண்ணை இழந்து விட்டோமே என..அப்படி ஒரு வாழ்கையை அவன் கண் முன் வாழ்ந்து காட்ட வேண்டும்.

Mahan.Thamesh சொன்னது…

ARUMAI

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

பணம் பிரதானம் ஆகிவிட்ட இக்காலத்தில் பலியானவர்கள் பட்டியலில் உங்கள் தோழியும் ஒருவர்..

வேங்கை சொன்னது…

" உணர்ச்சிகள் ஆரம்பித்து வைக்க
முடித்து வைக்கும் அனுபவ அறிவே காதல் " - இது நான் சொன்னதல்ல
யாரோ சொன்னது ---... இதை போல் அனுபவ அறிவால் கடந்த கால வலியை மறந்து
நல்ல வாழ்வை அடைய வாழ்த்துக்கள் ...

Lali சொன்னது…

மற்றவர்களை மாற்றுவதோ இல்லை திருத்துவதோ அனிதாவின் வேலை இல்லை..
அரவிந்தனுக்கு காலம் உணர்த்தும் பாடங்கள் பல இருக்கின்றன.
அனிதாவிற்கு அது தேவை இல்லை.. சில நேரங்களில் சுயநலத்தோடு பெண்களும் நடந்துகொள்ள வேண்டியது கட்டாயமாகி விடுகிறது.
யாரையும் ஏமாற்ற வேண்டாம், அதே நேரம் ஏமாறாமல் இருக்கவாவது சுயநலம் தேவையாகிறது.
ஒருவன் ஏமாற்றியதால் எல்லாரும் அப்படி இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை, எல்லாருடைய வாழ்க்கையிலும் கசப்பான ஒரு காதல் இல்லை கண்களை நிறைத்த ஒரு காதல் என்று வகை வகையாய் இருக்கிறது.
மறந்து விடு அவனை.. ஆனால் அவனை மன்னித்து விடாதே என்றுமே உன் வாழ்க்கையில்.
காலம் உன் காயத்தை ஆற்றும் என்றாலும்.. எங்கிருந்தாவது ஒரு நல்ல இதயம் உனக்காய் உனக்கே உனக்காய் விரைவில் வந்து சேரும்.
மீண்டும் ஒரு உண்மை காதல் பூக்கும் தோழி.. அன்பு வாழ்த்துக்கள்!

A.R.RAJAGOPALAN சொன்னது…

காதல் இது
உணர்ச்சிகளின் உளறல் அல்ல
உணர்வின் உயிர்

காதல் குழந்தையை போன்றது ,
உண்மையாய்
காதலிப்பவர்களும் கூடத்தான்

அந்த அனிதா
குழந்தையை
ஆறுதல்படுத்துங்கள்!

காலம் ஒரு இரவில் முடிந்து விடுவதில்லை
காதல் ஒரு தோல்வியில் முடிந்துவிடுவதில்லை
என உணர்த்துங்கள்

வாழ்க்கை வாழ ,
வீழ அல்ல சகோதரி

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

அன்புள்ள ரேவா!

எனது பின்னூட்டத்தை நீங்கள் வெளியிடுவீர்களா இல்லையா என்று தெரியவில்லை! ஆனாலும் நான் சில விஷயங்கள் சொல்லியே ஆக வேண்டும்!

காதலும் காமமும் வேறு வேறல்ல இரண்டுமே ஒன்றுதான் என்று ஆயிரம் முறை சொன்னாலும் யாருமே கேட்பதில்லை! அதனைப் பொருட்படுத்துவதுமில்லை! காமம் வேறு காதல் வேறு என்று, விஞ்ஞானத்துக்கு புறம்பாக, இயற்கைக்கு புறம்பாக சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்! காதல் புனிதமானது என்றும், தெய்வீகமானது என்றும் கதையளக்கின்றனர்!

இதனால் தான் சுலபமாக காதலில் வீழ்கின்றனர்! காமத்தில் தூண்டுதல் இல்லாமல் ஒரு போதுமே காதல் வருவதில்லை! காதலர்கள் முத்தமிட்டுக்கொள்வதும், அணைத்துக் கொள்வதும் காமத்தின் வெளிப்பாடே! இதனை வெளிப்படையாக சொன்னால் யாருமே ஏற்பதில்லை!

காமத்தை கடந்துவிட்டால் காதல் என்ற ஒன்றே இருக்காது! காதலிக்கும் பலர் காமத்தையும் பரிசோதித்து பார்ப்பதுண்டு! முத்தமிடுவது கூட காமத்தில் வெளிப்பாடே! அது சரியா தவறா என்பது ஒரு புறம் இருக்க, சில பெண்கள் தமது காதலனை நம்பி, தங்களை முழுமையாக ஒப்படைப்பதுண்டு! இதற்கு ஏற்றால் போல், அந்த ஆணும் பெண்ணை மயக்க பல ஆசை வார்த்தைகளை உதிர்ப்பதுண்டு!

நான் ஒரு ஆணாக சொல்கிறேன்! பெண்களே திருமணத்துக்கு முன்பு,ஒரு போதுமே ஆண்களை நம்பாதீர்கள் அவர்களது ஆசை வார்த்தைகளுக்கு பலியாகாதீர்கள்! பெண்கள் மீது கொண்ட காமமே ஆண்களின் காதல்! காமம் தீர்ந்தால் - காதலும் தீர்ந்து போகும்! அப்புறம் கல்யாணமாவது கத்திரிக்காயாவது!

ஒரு பெண்ணின் உடலை முழுமையாக தரிசித்த ஒரு ஆணுக்கு, அவள் மீதான ஈர்ப்பு குறைந்து விடுகிறது! முன்பு பேசிய காதல் மொழிகள், கொஞ்சல் மொழிகள் பின்பு இருக்காது! இது விஞ்ஞான ரீதியாகவும் உண்மை!

மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள் என்று சொன்ன எமது முன்னோர்கள் முட்டாள்கள் அல்லர்! அது நூறு வீத உண்மை!

எனவே பெண்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும்! உலகில் எல்லா ஆண்களும் இந்த விஷயத்தில் ஒரே மாதிரிதான்! சில பேதைப் பெண்கள் சொல்வதுண்டு " என்னவன் ரொம்ப நல்லவன்! என்னை ஏமாற்ற மாட்டான்! " என்று - ஹி .....ஹி .....ஹி ..... பாவம் !!

ரேவா, இப்போது உங்கள் தோழியின் தோழி கதைக்கு வருகிறேன்! அவரது கதையில் பாதி உங்கள் பதிவில் இருக்கிறது! மீதி எங்கே???

இருந்தாலும் என்ன நடந்திருக்கும் என்பதை என்னால் ஊகிக்க முடியாதென்றில்லை! அதற்காக நான் அந்தப் பெண்ணை குற்றம் சுமத்தவோ, அந்த ஆணை நல்லவன் என்று சொல்லவோ வரவில்லை!

இதில் தவறு இருவர் மீதும் இருக்கிறது! இந்தக்கதை எல்லாப் பெண்களுக்கும் ஒரு பாடம்! இனிமேலாவது காதல் புனிதமானது, தெய்வீகமானது என்று கதையளப்பதை எல்லோரும் நிறுத்த வேண்டும்!

காதல் என்பது காமத்தின் வெளிப்பாடு! - காதல் செய்பவர்கள் - கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் காமத்தை தீர்த்துக்கொள்கின்றனர் என்று அர்த்தம்! - இந்த உண்மைகளை எல்லோரும் புரிந்து கொண்டால், யாவரும் நலமாக இருக்கலாம்!

ரேவா, உங்கள் தோழியின் தோழிக்கு சொல்லுங்கள்! - தற்கொலை முடிவை மாற்றச்சொல்லி! மகிழ்ச்சியாக இருக்கச்சொல்லி!

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! சொன்னது…

உங்களின் இந்தப் படைப்பு தோழி அனிதாவின் உணர்வுகளை தெளிவாக காட்டுகிறது . சில நேரங்களில் தவறான புரிதல் காதலாகிவிடுகிறது சிலநேரங்களில் அதே தவறான புரிதல் காமமாகிவிடுகிறது ஆனால் இவர்களின் உறவில் எது நிஜம் என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை . பகிர்ந்தமைக்கு நன்றி

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பணத்துக்கு ஆசைபட்ட காதல் உருப்புடாது....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஹே ஹே தமிழ்மணம் ஏழாவது ஓட்டு...

நிரூபன் சொன்னது…

சகோ காதல், காமம், நட்பு பற்றி ஓர் அருமையான அலசலைத் தந்திருக்கிறீர்கள்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

அன்பு தோழி ரேவா

உங்கள் தோழியின் வாழ்வில் நடந்தது பல பெண்களின் வாழ்வில் நடப்பதுதான். திருமணத்துக்கு முன்பே எல்லை மீறும் பெண்கள் அனுபவிப்பதுதான். ஆணுக்கு அது விளையாட்டு, பொழுது போக்கு. ஆனால் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். என்னதான் காதலன் சொக்கத்தங்கம் என்ராலும் திருமணத்துக்கு முன் எல்லை மீறுதல் கூடாது. அவனுக்கு பின் சலித்ஹ்டு விடும்.. புது மலர் தேடும் வண்டாக மாறுவான். 90 % காதல்கள் அப்படித்தான்.

எனவே நடந்ததை நினைத்து கவலைப்படாமல் வேறொரு வாழ்க்கை தேடுவது நல்லது. உண்மையை சொல்றேன் பேர்வழி என வரப்போகும் கணவனிடம் சொல்லாமல் புது வாழ்க்கை வாழ உங்கள் தோழிக்கு வாழ்த்துக்கள்

சித்தாரா மகேஷ். சொன்னது…

சரியாகச் சொன்னீர்கள் இலகுவாய் ஒருவர் உள்ளம் நுழைத்து, உயிரை இழக்கும் அளவிற்கு துணிய வைக்கும் மாய கொள்ளைக்காரன் அல்லவா இந்த காதல்....எல்லாக் காதலையும் தப்பாக சொல்ல முடியாது,ஒருசில காதல்கள் காமத்திற்காகவும் பணத்திற்காகவும் மட்டும்தான் உருவாகுது,என்னைப் பொறுத்தவரை நல்ல காதலுக்காக உயிருள்ளவரை காத்திருக்கலாம்.அரவிந்தோட காதல் உண்மைக் காதல் அல்ல.அதுக்காகவெல்லாம் தோழி தன்னோட வாழ்க்கையை வீணடிக்கணுமா?அவரை புறந்தள்ளியவன் முன் அவன் பொறாமைப்படக் கூடிய வகையில்,அவன் தன் தவறை உணர்ந்து கொள்ளக் கூடிய வகையில் தோழி சந்தோசமா வாழ்ந்து காட்டணும்.

ரேவா சொன்னது…

ssiva said...

தோழி அனிதாவிற்கு, கடந்த கால நினைவுகளை முற்றிலும் அழித்துவிட்டு, வருங்கால பிரதிகளை செழுமைப்படுத்தி கொள்ளுங்கள். "வருங்காலம் வசந்த காலம்" ...... இனிவரும் நாட்களில் உங்களை சந்தோசம் மட்டும் ஆக்கரமித்து கொள்ளட்டும். அடியேனின் வாழ்த்துகள்.......

கண்டிப்பாக உன் மறுமொழி தோழியை சென்றடையும் சிவா...நன்றி உன் கருத்துக்கு

ரேவா சொன்னது…

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

புரியுறவங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்..../// எனக்கு நிஜமாகவே புரியல..

ஹ ஹ புரியலையா? இன்னும் சின்ன புள்ளயாவே இருக்கேங்கள்

ரேவா சொன்னது…

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நிஜமாகவே காதல் சிலபேரிடம் தடுமாறுகிறது..

உண்மைதான் நண்பா...நன்றி உங்கள் கருத்திற்கும் வருகைக்கும்

ரேவா சொன்னது…

சௌந்தர் said...

அனிதாவை ஏமாற்றிய அரவிந்தன் இப்பொழுது நிம்மதியாக இருக்கமாட்டான்...பணத்திற்கா சென்றவன் எப்போதும் நிம்மதியாக இருந்ததில்லை...காதலை விட பணம் தான் பெரியது என்று சென்றவன் காதல் என்ற வார்த்தையை கூட சொல்ல தகுதி இல்லாதவன்

உங்கள் தோழி இப்பொழுது திருமணம் செய்து கொள்ளலாம் அவன் ஏங்க வேண்டும் இப்படி ஒரு நல்ல பெண்ணை இழந்து விட்டோமே என..அப்படி ஒரு வாழ்கையை அவன் கண் முன் வாழ்ந்து காட்ட வேண்டும்.

கண்டிப்பாக செய்வார் என நம்புகிறேன் சகோ...வாழ்கையில் ஒரு பகுதியே காதல், மீதி வாழ்கை நமக்கானது, மாறுதல் கண்டிப்பாய் எல்லார் மனதிருக்கும் கிடைக்கட்டும் தோழிக்கும் சேர்த்து

ரேவா சொன்னது…

Mahan.Thamesh said...

ARUMAI

நன்றி நண்பரே உங்கள் முதல் வருகைக்கும் மறுமொழிக்கும்..இனி தொடர்ந்து வாருங்கள்

ரேவா சொன்னது…

வேங்கை said...

" உணர்ச்சிகள் ஆரம்பித்து வைக்க
முடித்து வைக்கும் அனுபவ அறிவே காதல் " - இது நான் சொன்னதல்ல
யாரோ சொன்னது ---... இதை போல் அனுபவ அறிவால் கடந்த கால வலியை மறந்து
நல்ல வாழ்வை அடைய வாழ்த்துக்கள் ...

...என்ன வெகு நாட்களாய் உங்களை காணாம்...சரியாகச் சொல்லி இருக்கிறேர்கள் நண்பரே..தெளிவான அறிவை இந்த நிகழ்வு அவருக்கு கொடுத்திருக்கும் என்று நம்புகிறேன்..

ரேவா சொன்னது…

ஆர்.கே.சதீஷ்குமார் said...

பணம் பிரதானம் ஆகிவிட்ட இக்காலத்தில் பலியானவர்கள் பட்டியலில் உங்கள் தோழியும் ஒருவர்..

உண்மைதான் சகோ...இங்கே பலி என்பதை விட இந்த தோழி நயவஞ்சக நாக்கிடம் இருந்து தப்பித்தாள்...என்னைப் பொறுத்தவரை அவள் அதிஷ்டசாலி....நன்றி சகோ உங்கள் வருகைக்கு :-)

ரேவா சொன்னது…

Lali said...

மற்றவர்களை மாற்றுவதோ இல்லை திருத்துவதோ அனிதாவின் வேலை இல்லை..
அரவிந்தனுக்கு காலம் உணர்த்தும் பாடங்கள் பல இருக்கின்றன.
அனிதாவிற்கு அது தேவை இல்லை.. சில நேரங்களில் சுயநலத்தோடு பெண்களும் நடந்துகொள்ள வேண்டியது கட்டாயமாகி விடுகிறது.
யாரையும் ஏமாற்ற வேண்டாம், அதே நேரம் ஏமாறாமல் இருக்கவாவது சுயநலம் தேவையாகிறது.
ஒருவன் ஏமாற்றியதால் எல்லாரும் அப்படி இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை, எல்லாருடைய வாழ்க்கையிலும் கசப்பான ஒரு காதல் இல்லை கண்களை நிறைத்த ஒரு காதல் என்று வகை வகையாய் இருக்கிறது.
மறந்து விடு அவனை.. ஆனால் அவனை மன்னித்து விடாதே என்றுமே உன் வாழ்க்கையில்.
காலம் உன் காயத்தை ஆற்றும் என்றாலும்.. எங்கிருந்தாவது ஒரு நல்ல இதயம் உனக்காய் உனக்கே உனக்காய் விரைவில் வந்து சேரும்.
மீண்டும் ஒரு உண்மை காதல் பூக்கும் தோழி.. அன்பு வாழ்த்துக்கள்!

அழகான தெளிவான உங்கள் மறுமொழி கண்டு மகிழ்ந்தேன்...கண்டிப்பாய் உங்கள் வாழ்த்து அவர்களைச் சென்றடையும் தோழி...மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு...

ரேவா சொன்னது…

A.R.RAJAGOPALAN said...

காதல் இது
உணர்ச்சிகளின் உளறல் அல்ல
உணர்வின் உயிர்

காதல் குழந்தையை போன்றது ,
உண்மையாய்
காதலிப்பவர்களும் கூடத்தான்

அந்த அனிதா
குழந்தையை
ஆறுதல்படுத்துங்கள்!

காலம் ஒரு இரவில் முடிந்து விடுவதில்லை
காதல் ஒரு தோல்வியில் முடிந்துவிடுவதில்லை
என உணர்த்துங்கள்

வாழ்க்கை வாழ ,
வீழ அல்ல சகோதரி

வாழ்க்கை வாழ்வதற்கே, வீழ அல்ல அதுவும் வீணான ஒன்றுக்காய் என்ற உங்கள் மறுமொழி அவர்களை சேர்ந்திருக்கும்...நன்றி சகோ உங்கள் மறுமொழிக்கு

ரேவா சொன்னது…

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அன்புள்ள ரேவா!

எனது பின்னூட்டத்தை நீங்கள் வெளியிடுவீர்களா இல்லையா என்று தெரியவில்லை! ஆனாலும் நான் சில விஷயங்கள் சொல்லியே ஆக வேண்டும்!

////( நண்பா இத்தகைய வெளிப்படையான பின்னூட்டத்தை எங்கனம் நான் வெளி இடாமல் இருப்பேன்..)//////

காதலும் காமமும் வேறு வேறல்ல இரண்டுமே ஒன்றுதான் என்று ஆயிரம் முறை சொன்னாலும் யாருமே கேட்பதில்லை! அதனைப் பொருட்படுத்துவதுமில்லை! காமம் வேறு காதல் வேறு என்று, விஞ்ஞானத்துக்கு புறம்பாக, இயற்கைக்கு புறம்பாக சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்! காதல் புனிதமானது என்றும், தெய்வீகமானது என்றும் கதையளக்கின்றனர்!

////உண்மைதான் நண்பா காதல் காமத்தின் நுழைவாயில் என்பதை அறிவேன், ஆனாலும் தெரியா ஒருவனின் பாசாங்குக்காய் தான் சுயம் தொலைத்த நெஞ்சத்திற்க்காய் அவ்வாறு சொனேன்///////

இதனால் தான் சுலபமாக காதலில் வீழ்கின்றனர்! காமத்தில் தூண்டுதல் இல்லாமல் ஒரு போதுமே காதல் வருவதில்லை! காதலர்கள் முத்தமிட்டுக்கொள்வதும், அணைத்துக் கொள்வதும் காமத்தின் வெளிப்பாடே! இதனை வெளிப்படையாக சொன்னால் யாருமே ஏற்பதில்லை!

////////// இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்...ரசாயன மட்ட்ரமே காதல் அன்றி வேறு எதுவும் இல்லை /////////

காமத்தை கடந்துவிட்டால் காதல் என்ற ஒன்றே இருக்காது! காதலிக்கும் பலர் காமத்தையும் பரிசோதித்து பார்ப்பதுண்டு! முத்தமிடுவது கூட காமத்தில் வெளிப்பாடே! அது சரியா தவறா என்பது ஒரு புறம் இருக்க, சில பெண்கள் தமது காதலனை நம்பி, தங்களை முழுமையாக ஒப்படைப்பதுண்டு! இதற்கு ஏற்றால் போல், அந்த ஆணும் பெண்ணை மயக்க பல ஆசை வார்த்தைகளை உதிர்ப்பதுண்டு!

/////ஒத்துக்கொள்கிறேன் நண்பா /////

நான் ஒரு ஆணாக சொல்கிறேன்! பெண்களே திருமணத்துக்கு முன்பு,ஒரு போதுமே ஆண்களை நம்பாதீர்கள் அவர்களது ஆசை வார்த்தைகளுக்கு பலியாகாதீர்கள்! பெண்கள் மீது கொண்ட காமமே ஆண்களின் காதல்! காமம் தீர்ந்தால் - காதலும் தீர்ந்து போகும்! அப்புறம் கல்யாணமாவது கத்திரிக்காயாவது!

///// தெளிவான உன் சிந்தனை கண்டு மகிழ்ந்தேன்...உன் மறுமொழி பலருக்கு கோவத்தை கொடுத்தாலும் இதுவே உண்மை நண்பா /////

ஒரு பெண்ணின் உடலை முழுமையாக தரிசித்த ஒரு ஆணுக்கு, அவள் மீதான ஈர்ப்பு குறைந்து விடுகிறது! முன்பு பேசிய காதல் மொழிகள், கொஞ்சல் மொழிகள் பின்பு இருக்காது! இது விஞ்ஞான ரீதியாகவும் உண்மை!

//// ஆமாம் ////

மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள் என்று சொன்ன எமது முன்னோர்கள் முட்டாள்கள் அல்லர்! அது நூறு வீத உண்மை!

//// ஆமாம் ////

எனவே பெண்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும்! உலகில் எல்லா ஆண்களும் இந்த விஷயத்தில் ஒரே மாதிரிதான்! சில பேதைப் பெண்கள் சொல்வதுண்டு " என்னவன் ரொம்ப நல்லவன்! என்னை ஏமாற்ற மாட்டான்! " என்று - ஹி .....ஹி .....ஹி ..... பாவம் !!

ரேவா, இப்போது உங்கள் தோழியின் தோழி கதைக்கு வருகிறேன்! அவரது கதையில் பாதி உங்கள் பதிவில் இருக்கிறது! மீதி எங்கே???

இருந்தாலும் என்ன நடந்திருக்கும் என்பதை என்னால் ஊகிக்க முடியாதென்றில்லை! அதற்காக நான் அந்தப் பெண்ணை குற்றம் சுமத்தவோ, அந்த ஆணை நல்லவன் என்று சொல்லவோ வரவில்லை!

இதில் தவறு இருவர் மீதும் இருக்கிறது! இந்தக்கதை எல்லாப் பெண்களுக்கும் ஒரு பாடம்! இனிமேலாவது காதல் புனிதமானது, தெய்வீகமானது என்று கதையளப்பதை எல்லோரும் நிறுத்த வேண்டும்!

//// நிறுத்துவார்கள் என்று நம்புகிறேன் நண்பா ////

காதல் என்பது காமத்தின் வெளிப்பாடு! - காதல் செய்பவர்கள் - கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் காமத்தை தீர்த்துக்கொள்கின்றனர் என்று அர்த்தம்! - இந்த உண்மைகளை எல்லோரும் புரிந்து கொண்டால், யாவரும் நலமாக இருக்கலாம்!

ரேவா, உங்கள் தோழியின் தோழிக்கு சொல்லுங்கள்! - தற்கொலை முடிவை மாற்றச்சொல்லி! மகிழ்ச்சியாக இருக்கச்சொல்லி!

//// மிக்க நன்றி நண்பா... நான் உணர்வுப் பூர்வமாய் அளித்த ஒரு பதிவை, நீ அறிவுப் பூர்வமாய் ஏற்று அறிவியல் ரீதியில் பதில் அளித்ததற்கு...மாற்றத்தை அவர்கள் மனம் நாடி இருக்கும் என்று நம்புகிறேன்...நன்றி நண்பா உன் தெளிவான கருத்துக்கு /////

ரேவா சொன்னது…

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...

உங்களின் இந்தப் படைப்பு தோழி அனிதாவின் உணர்வுகளை தெளிவாக காட்டுகிறது . சில நேரங்களில் தவறான புரிதல் காதலாகிவிடுகிறது சிலநேரங்களில் அதே தவறான புரிதல் காமமாகிவிடுகிறது ஆனால் இவர்களின் உறவில் எது நிஜம் என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை . பகிர்ந்தமைக்கு நன்றி

உண்மைதான் நண்பா தவறான புரிதல் தான் பிரிதலுக்கு காரணமாய் அமைகின்றது...உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

ரேவா சொன்னது…

MANO நாஞ்சில் மனோ said...

பணத்துக்கு ஆசைபட்ட காதல் உருப்புடாது....

உண்மைதான் மனோ

ரேவா சொன்னது…

MANO நாஞ்சில் மனோ said...

ஹே ஹே தமிழ்மணம் ஏழாவது ஓட்டு...

நான் தமிழ்மணத்தில் அதிகம் பெற்ற ஓட்டுக்களே இவ்ளோ தான் ஹி ஹி

ரேவா சொன்னது…

நிரூபன் said...

சகோ காதல், காமம், நட்பு பற்றி ஓர் அருமையான அலசலைத் தந்திருக்கிறீர்கள்.

நன்றி... சகோ....

பெயரில்லா சொன்னது…

வேதனையான சம்பவம், ராஜீவனின் கருத்தோடு நானும் ஒத்து போகிறேன்.

ரேவா சொன்னது…

சி.பி.செந்தில்குமார் said...

அன்பு தோழி ரேவா

உங்கள் தோழியின் வாழ்வில் நடந்தது பல பெண்களின் வாழ்வில் நடப்பதுதான். திருமணத்துக்கு முன்பே எல்லை மீறும் பெண்கள் அனுபவிப்பதுதான். ஆணுக்கு அது விளையாட்டு, பொழுது போக்கு. ஆனால் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். என்னதான் காதலன் சொக்கத்தங்கம் என்ராலும் திருமணத்துக்கு முன் எல்லை மீறுதல் கூடாது. அவனுக்கு பின் சலித்ஹ்டு விடும்.. புது மலர் தேடும் வண்டாக மாறுவான். 90 % காதல்கள் அப்படித்தான்.

எனவே நடந்ததை நினைத்து கவலைப்படாமல் வேறொரு வாழ்க்கை தேடுவது நல்லது. உண்மையை சொல்றேன் பேர்வழி என வரப்போகும் கணவனிடம் சொல்லாமல் புது வாழ்க்கை வாழ உங்கள் தோழிக்கு வாழ்த்துக்கள்நீங்கள் சொல்வது உண்மை தான் நண்பரே...கண்டிப்பாக நீங்கள் இட்ட மறுமொழிக் கருத்து அவர்கள் பார்வைக்கு சென்றிருக்கும்..
நன்றி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

ரேவா சொன்னது…

சித்தாரா மகேஷ். said...

சரியாகச் சொன்னீர்கள் இலகுவாய் ஒருவர் உள்ளம் நுழைத்து, உயிரை இழக்கும் அளவிற்கு துணிய வைக்கும் மாய கொள்ளைக்காரன் அல்லவா இந்த காதல்....எல்லாக் காதலையும் தப்பாக சொல்ல முடியாது,ஒருசில காதல்கள் காமத்திற்காகவும் பணத்திற்காகவும் மட்டும்தான் உருவாகுது,என்னைப் பொறுத்தவரை நல்ல காதலுக்காக உயிருள்ளவரை காத்திருக்கலாம்.அரவிந்தோட காதல் உண்மைக் காதல் அல்ல.அதுக்காகவெல்லாம் தோழி தன்னோட வாழ்க்கையை வீணடிக்கணுமா?அவரை புறந்தள்ளியவன் முன் அவன் பொறாமைப்படக் கூடிய வகையில்,அவன் தன் தவறை உணர்ந்து கொள்ளக் கூடிய வகையில் தோழி சந்தோசமா வாழ்ந்து காட்டணும்.

இதே கருத்தைத் தான் நானும் அந்த தோழிக்கு பதிலாய் அனுப்பி இருந்தேன்...சகோ...கண்டிப்பாய் உன் மறுமொழி அவர்களை சென்றடையும்...நன்றி சித்தாரா உங்கள் கருத்துக்கு

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) சொன்னது…

ரேவா அவர்களுக்கு,
இதை படிக்கும் பொழுது ஏதோ புதிய் சம்பவம் போன்றோ அல்லது உங்கள் தோழி பாவம் என்றோ எனக்கு தோன்றவில்லை.100 இல் 99 பேரின் காதல் இப்படிதான் இருக்கு.
வீட்டுல பொருத்தம் பார்பதற்கு நாமலே பார்க்கலாமே என்று செய்பவரே அந்த சிலர்.....

காதல்'ல ஆண்கள் மட்டும் ஆதாயம் அடையுரதா சித்தரிகப்படுவதால் ஒன்று சொல்கிறேன்,,தயவு செய்து ஆண்களை நம்பாதீர்கள்,,அவர்கள் செய்யும் சிறு சிறு விஷயங்கள் கூட பெண்களை அடையவே.....

என்ன விஷயம் நா நல்லா தெளிவா இருக்குற பெண்ணும் கூட இதுல விழுறாங்க....
காதல் பலவீனமானவர்களுக்கும் மற்றவர்களை பலமீனமாகுவதற்குமே

உங்கள் தோழி மனதை போட்டு குழப்பி கொள்ள வேண்டாம்.
அவர் திருமணம் செய்யவும் ,மகிழ்வாக இருக்கவும் வாழ்த்துகிறேன்

பலே பிரபு சொன்னது…

இந்த நிலையில் பழையன மறத்தல் நலம். தோழியின் முடிவுக்கே அவரை விட்டுவிடுவது நலம். இன்னொரு முறை அன்பு கிடைக்கும் போது நிச்சயமாய் வெற்றி பெற வாழ்த்துகள்.

சரியில்ல....... சொன்னது…

"உடல் மறைக்கின்ற காதல் மரிப்பதில்லை" என்று உயிரே படத்தில் வைரமுத்து எழுதியிருப்பார்...
முடிந்துவிட்டது... விட்டுக்கடாசுங்கள்.. மீதி வாழ்கை எதுக்கு இருக்கு? வாழ்ந்து காட்டுங்க அனிதா... நண்பர்களுடன் உங்கள் நேரத்தை செலவிடுங்கள்... மனதை அதுபோக்கிலேயே விட்டு விடுங்கள்.. இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிடும்.

பெயரில்லா சொன்னது…

anna padikave kashtama iruku.. but naanum oru anitha than.. the same story happend in my life... but instead of office colleage ragini,.. it is atthai ponnu.. now i am living my life in my own.. am 32yrs old now.. dont want to get married.. eventhough my parents forced me... aravindhan-kal vaazndhu kondu than irukirargal... :( :( :(

கந்தசாமி. said...

வேதனையான சம்பவம், ராஜீவனின் கருத்தோடு நானும் ஒத்து போகிறேன்.

இமம் நானும் அவர் கருத்தோடு ஒத்துப் போகிறேன் சகோ...நன்றி சகோ உங்கள் வருகைக்கு

ரேவா சொன்னது…

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...

ரேவா அவர்களுக்கு,
இதை படிக்கும் பொழுது ஏதோ புதிய் சம்பவம் போன்றோ அல்லது உங்கள் தோழி பாவம் என்றோ எனக்கு தோன்றவில்லை.100 இல் 99 பேரின் காதல் இப்படிதான் இருக்கு.
வீட்டுல பொருத்தம் பார்பதற்கு நாமலே பார்க்கலாமே என்று செய்பவரே அந்த சிலர்.....

காதல்'ல ஆண்கள் மட்டும் ஆதாயம் அடையுரதா சித்தரிகப்படுவதால் ஒன்று சொல்கிறேன்,,தயவு செய்து ஆண்களை நம்பாதீர்கள்,,அவர்கள் செய்யும் சிறு சிறு விஷயங்கள் கூட பெண்களை அடையவே.....

என்ன விஷயம் நா நல்லா தெளிவா இருக்குற பெண்ணும் கூட இதுல விழுறாங்க....
காதல் பலவீனமானவர்களுக்கும் மற்றவர்களை பலமீனமாகுவதற்குமே

உங்கள் தோழி மனதை போட்டு குழப்பி கொள்ள வேண்டாம்.
அவர் திருமணம் செய்யவும் ,மகிழ்வாக இருக்கவும் வாழ்த்துகிறேன்

ரேவா சொன்னது…

பலே பிரபு said...

இந்த நிலையில் பழையன மறத்தல் நலம். தோழியின் முடிவுக்கே அவரை விட்டுவிடுவது நலம். இன்னொரு முறை அன்பு கிடைக்கும் போது நிச்சயமாய் வெற்றி பெற வாழ்த்துகள்.

மாற்றம் சீக்கிரம் அவர்கள் கையில் கிட்டும் என்று நானும் வேண்டுகிறேன்..நன்றி நண்பா உன் மறுமொழிக்கு

ரேவா சொன்னது…

சரியில்ல....... said...

"உடல் மறைக்கின்ற காதல் மரிப்பதில்லை" என்று உயிரே படத்தில் வைரமுத்து எழுதியிருப்பார்...
முடிந்துவிட்டது... விட்டுக்கடாசுங்கள்.. மீதி வாழ்கை எதுக்கு இருக்கு? வாழ்ந்து காட்டுங்க அனிதா... நண்பர்களுடன் உங்கள் நேரத்தை செலவிடுங்கள்... மனதை அதுபோக்கிலேயே விட்டு விடுங்கள்.. இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிடும்.

சரியான ஒரு கருத்தை நண்பர் சரியில்ல சரியான நேரத்தில் சொன்னதற்கு நன்றி..நிச்சயம் உங்கள் கருத்து அவர்களை பொய் சேர்ந்திருக்கும்..நன்றி உங்கள் அன்பான மறுமொழிக்கு நண்பரே

ரேவா சொன்னது…

Anonymous said...

anna padikave kashtama iruku.. but naanum oru anitha than.. the same story happend in my life... but instead of office colleage ragini,.. it is atthai ponnu.. now i am living my life in my own.. am 32yrs old now.. dont want to get married.. eventhough my parents forced me... aravindhan-kal vaazndhu kondu than irukirargal... :( :( :(

அன்பு சகோதரிக்கு,
முகமில்லாமல் வரும் மறுமொழியை நான் என்றும் வெளியிடுவது இல்லை..இருப்பினும் உங்கள் மறுமொழி என்னை, உங்கள் துயரை உணரவைத்தது...கவலையை விடு..இங்கே இத்தனை சகோதர்களும், சகோதரிகளும் சொன்னது அந்த அனிதாவுக்கு மட்டும் அல்ல, உங்களுக்கும் தான்,....மிக விரைவில் நல் மாற்றம் உங்களை தேடி வர, அன்பெனும் ஆண்டவனை வேண்டுகிறேன்...

உங்கள் அன்புச்
சகோதரி
ரேவா

எவனோ ஒருவன் சொன்னது…

////இப்போ என் தோழியின் வீட்டில் திருமண பேச்சுக்கள் நடக்க, தோழி அவற்றை புறம் தள்ளி, சுயமாய் வாழ விரும்புவதாய், அவர் பெற்றோரிடம் சொல்லி வருகிறார்...////

உண்மையான காதலுக்காய் தங்கள் தோழி அனிதா இப்படி முடிவு எடுத்து இருந்தால் நானும் அதை ஆமோதித்து இருப்பேன். உண்மையான காதல் எது என்று கேட்கிறீர்களா? :-) தங்கள் தோழியின் காதல் உண்மை தான். ஆனால், அரவிந்தன் உண்மையானவராக இல்லையே. உண்மையாக இல்லாத ஒருத்தருக்காக தன்னை வருத்திக் கொள்வது நியாயம் இல்லை. தங்கள் தோழியின் மனதிற்கு ஏற்ப கண்டிப்பாக ஒரு சிறந்த வாழ்க்கை அமையும். அமைய வேண்டும். அனிதாவின் திருமணம் நடந்த பின் அவர் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்ற தகவலையும் தங்கள் பதிவு மூலம் அறிய காத்துக் கொண்டிருக்கிறேன்.

பி.கு : ராகினியின் நிலைமை குறித்தும் எனக்கு பயமாகத் தான் இருக்கிறது. வேறு ஏதோ ஒரு செல்வ மகளுக்காக அப்பெண்ணையும் விட்டுவிட்டு போகாமல் இருந்தால் சரி....

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

கண்டிப்பாக அந்த தோழி அதைச் செய்வார் என்று நம்புகிறேன்...நன்றி நண்பா உன் மறுமொழிக்கு

jayaram சொன்னது…

அன்பு தோழி..அனிதா..வாழ்க்கை நமக்கு கற்று தரும் பாடங்கள் ..வலிகளாய் ஆறாத வடுக்களாய் நெஞ்சில் அறைய பட்டிருக்கும் .. எல்லாம் அவன் செயல் தான் ...மேலிருந்து ஆடுவிப்பான் அவன்... கீழிருந்து அரங்கேற்றுகிறோம் ...நாடகம்... நடிப்பில் தேர்ச்சி பெற்று
பக்குவம் அடைய அடைய ....நம்மால் அதை உணர முடியும்...வாழ்கையில் எதுவுமே நிதர்சனம் கிடையாது... வரம் வாங்கி வந்தாலும்... சரி...உன் வாழ்வில் நடந்தது ஒரு விபத்து... காதல் குறித்து நீ தெரிந்து கொண்ட பாடம் அவ்வளவே... உன் காதலை புரிந்து கொள்ளும் பக்குவம் அவனுக்கு இல்லாது போனது அவனுடைய துரதிர்ஷ்டம் ....உன்னுடைய அதிர்ஷ்டம் .... இதுவும் கடந்து போகும்... யாரும் யாரையும் குற்றம் சொல்வதில் நடக்க போவது ஒன்றும் இல்லை...எல்லாம் அவன் செயல்...உனது காதல் உண்மை என்றால் நிச்சயம் அவன் உன்னை நாடி வருவான்... அதில் எள்ளளவு சந்தேகம் வேண்டாம்...

GOPI சொன்னது…

தோழி அனிதாவிற்கு,
இருக்கிறது ஒரு வாழ்க்கை,அதை ஏங்க ஏமாத்திட்டு போன ஒருத்தனுக்காக முடிச்சுக்க பாக்குறிங்க,நல்ல வேளை அவன் இப்படி பட்டவன்னு முன் கூட்டியே தெரியவந்துடுச்சு.
முதல் காதல் முற்றிலும் தோல்வியா?
இன்னொரு காதல் இல்லையா என்ன?
இது நான் சொல்லலை ங்க
கவிப் பேரரசு சொன்னது.
நீங்க அவனுக்கு மனைவியா அமையறதுக்கு அவனுக்கு கொடுத்து வைக்கல.அவளோதான்.
முடிஞ்ச அளவு சீக்கிரம் இந்த சிறைய விட்டு வெளிய வர பாருங்க.
எதுவும் சில காலம்.
உங்க வருங்கால வாழ்க்கை சிறப்பா அமைய என் வாழ்த்துகள்

suresh சொன்னது…

suresh...
கண்டிப்பாக தோழி அனிதாவுக்கு மீண்டும் ஒரு வசந்த களம் வாழ்வில் தொடங்க என் வாழ்த்துகள்..
அனிதாவைவிட ராகினி தான் துருதிர்ஷ்டசாலி என்னை பொறுத்த வரை..
உங்களின் கருத்தின் படி காதல் வெறும் காமத்தின் வெளிபடக இருந்தால் காமத்திற்கு பிறகு எந்த காதலும் இருக்க முடைத்து ஆனால் அப்படி இல்லையே. உதாரனதிருக்கு அனிதாவும் இன்னும் காதலை மறக்வில்லை .. பலர் இன்றைக்கும் காதலியை தொலைத்து காதலோடு வாழ்கிற ஆண்கள் ஏராளம் உண்டு..

பெயரில்லா சொன்னது…

அறிவுறை சொல்ர அளவுக்கு வயசில்ல. ஆனா மணச உறுத்துச்சி.

ALBERT சொன்னது…

நீங்க கதை சொன்ன நாள் செவ்வாய், 17 மே, 2011....

பணத்துக்காக ஆசைப்பட்டவன் வாழ்கை ஒரு வருசத்துக்கு மேல நல்ல இருக்கும்னு நேனைகுரிங்களா சத்தியமா இருக்காது...
நீங்க வேணும்ன அரவிந்த போய் பாத்துட்டு வாங்கலன்...

ரேவா சொன்னது…

ALBERT கூறியது...

நீங்க கதை சொன்ன நாள் செவ்வாய், 17 மே, 2011....

பணத்துக்காக ஆசைப்பட்டவன் வாழ்கை ஒரு வருசத்துக்கு மேல நல்ல இருக்கும்னு நேனைகுரிங்களா சத்தியமா இருக்காது...
நீங்க வேணும்ன அரவிந்த போய் பாத்துட்டு வாங்கலன்...

நான் விசாரித்தவரையில் அவன் நலமாய் இல்லை நண்பா, இங்கேயே அவனுக்கான நரக வாழ்க்கை நிச்சயிக்கபட்டுவிட்டது,...

Praveen சொன்னது…

உதட்டாலே, காதல் என்னும் சொல்லை
உரைத்தாலே, கூட வரும் தொல்லை
வாழும் மட்டும், விழிகளில் தூக்கம் கெடும்

உப்புக்கள் வைரம் என்று தான்
காட்டிடும் காதல் ஒன்று தான்
உண்டாகும் இன்பங்கள் உச்சம் உச்சம்
என்றாலும் துன்பம்தான் மிச்சம் மிச்சம்

//பா.விஜய்