உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 19 மே, 2011

பிடித்த பத்து பெண்குரல் பாடல்கள் (தொடர்பதிவு)

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்....அனைவரும் நலம் தானே?...

என்னை பிடித்த பத்து பெண்குரல் பாடல்கள், தொடர்பதிவிற்கு அழைத்த முதல் பிரிவின் ஆனந்த நண்பனுக்கு நன்றிகள் பல...இசை  இயங்குகின்ற அனைத்து உயிர்களையும் மயங்க வைப்பது..தாய் மடியில் தவழும் நினைவைத் தரவல்லது...சோர்ந்து போன உயிரையும், மீட்டெடுப்பது...அப்படிப் பட்ட இசையோடு கலந்த பாடல்களில், எனக்கு பிடித்த பெண்குரல் பாடல்களை நான் இந்த பதிவில் பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சி...

எனக்கு பிடித்த பாடல்கள் பல இருந்தாலும், நெஞ்சோடு தவழும் சில பாடல்களை இந்த பதிவில் இணைக்கிறேன்...

 முதல் பாடலாய்: . அம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ

படம்: நான் கடவுள்
இசை: இளையராஜா
பாடல்: வாலி
பாடியவர்: சாதனா சர்கம்

இந்த பாடலில் பிடித்த வரிகள் என்று எதுவும் குறிப்பிட்டு சொல்லமுடியவில்லை, காரணம் இளையராஜா அவர்களின்  இசை தாய் மடியோடு தவழும் நினவைதரும் பாடல் இது...எவ்வளவு கேட்டாலும் சலிக்காத பாடல்.

********************************************

 இரண்டாவதாய் : வசீகரா என் நெஞ்சினிக்க....

எனக்குள் இருக்கும் கற்பனைக் காதலனுக்கு உயிர் கொடுக்கும் வரிகளாய் இந்த பாடல் அமைந்துள்ளது...எப்போதெல்லாம் இந்த பாடலைக் கேட்கின்றேனோ அப்போதெல்லாம் மனதோடு மயில் இறகு வருடுவதாய் ஓர் உணர்வு...

 படம் : வசீகரா.. 

பாடியவர் :பாம்பே ஜெயஸ்ரீ

பாடல் வரி : தாமரை ..

பிடித்த வரிகள் :  

அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு சிநேகம்
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே
மனம் அதையேதான் எதிர்ப்பார்க்கும்

********************************************** 

மூன்றாவது பாடல் . ஒன்றா ரெண்டா ஆசைகள்

இந்த பாடல் பதிவு செய்யப் பட்ட இடம், எனக்கு மிகவும் பிடிக்கும்...பெண்களின்  எதிர்பார்ப்புகளை கண்முன்னே கொண்டு வந்த பாடல் இது...

  படம் : காக்க காக்க. 

பாடியவர் :பாம்பே ஜெயஸ்ரீ

பாடல் வரி : தாமரை

பிடித்த வரிகள் :  

 பெண்களை நிமிர்ந்து பார்த்திடா
உன் இனிய கண்ணியம் பிடிக்குதே
கண்களை நேராய்ப் பார்த்துதான்
நீ பேசும் தோரணை பிடிக்குதே
தூரத்தில் நீ வந்தாலே
என் மனசில் மழையடிக்கும்
*************************************************

நான்காவது பாடல் :. கடவுள் தந்த அழகிய வாழ்வு

மனம் கணக்கும் தருணங்களில் எல்லாம் இந்த பாடல் கேட்டாள் ஏதோ புது உத்வேகம் பிறப்பதாய்  ஓரு உணர்வு..சென்னையில் நான் பணியாற்றிய சமயத்தில் எல்லாம் தனிமை உணர்வை நீக்கி, புது தெம்பு தரும் பாடல்...

 படம்: மாயாவி
பாடியவர்கள்:கல்பனா

பிடித்த வரிகள் :

 கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் மூடியே
வாழ்த்து பாடு
கருணை பொங்கும்.. உள்ளங்கள் உண்டு
கண்ணிர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழனும் நூறு ஆண்டு
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்
அழகே பூமியின் வாழ்க்கையை
அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம்...

*****************************************************

ஐந்தாவது .பாடல் : விடிகின்ற பொழுது தெரிந்திடுமா

இந்த பாடலின் இசை எனக்கு மிகவும் பிடிக்கும்...தனிமையில் நான் கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று...காதல் மீதான் ஒரு பெண்ணின் ஏக்கத்தை அழகாய் உணர்த்தும் பாடல் இது...

 படம்: ராம்
பாடியவர்: மதுமிதா

பிடித்த வரிகள் : 

 காட்டு தீ போல கண்மூடி தனமாய்
என் சோகம் சுடர் விட்டு எறியுதடா
மனசுக்குள் சுமந்த ஆசைகள் எல்லாம்
வாய் பொத்தி வாய் பொத்தி கதருதடா
யாரிடம் உந்தன்கதை பேச முடியும்
வார்த்தைகள் இருந்தும் மௌனத்தில் கரையும்...

*******************************************************

ஆறாவது பாடல் : இதுதானா இதுதானா

எனது ஆசைக்கு உயிர் தந்த சாமிக்கு சுகமான லாலி.. ஹ ஹ

 படம்: சாமி

 பாடியவர்: சித்ரா

பிடித்த வரிகள் 

 ஞாயிறு மதியம் சமையல் உனது
விரும்பி நீ சமைத்திடுவாய்
வேடிக்கை பா என என்னை அமர்த்தி
துணிகளும் துவைத்திடுவாய்
ஊருக்குள் அனைவரும் உன்னை கண்டு நடுங்க

வீ
ட்டினில் நீ ஒரு குழந்தையாய் சிணுங்க
பெருமையில் என் முகம் இன்னும் மினுங்க
இருவரின் உலகமும் இருவரி சுருங்க
மகிழ்ச்சியில் எந்தன் மனம் மலர்ந்திடுமே
என் உயரமோ இன்னும்
கொஞ்சம் வளர்ந்திடுமே 

**********************************************

ஏழாவது பாடல் : என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு...

இப்பாடல் நாடகத்தில் வரும் பாடல்...வெகு சுலபத்தில் வெளித்திரைப் பாடல் பலரால் கவரப் பட்டதென்றால்  இந்த பாடலைத்தான் சொல்வேன்.பாடல் வரிகளும், அது படமாக்க பட்ட விதமும், பாடிய விதமும் எனக்கு மிகவும் பிடிக்கும்...

தொடர்: காதலிக்க நேரமில்லை 

பாடியவர்: சங்கீதா

பிடித்த வரிகள் : 

பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போலே நினைத்து கோள்கிறேன்
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்
கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொல்கிறேன்

ஏனோ என் இரவுகள் நீள்வது
ஏனோ ஒரு பகல் என சுடுவது
ஏனோ என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ
காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு
காதலிக்க அங்கு நேரமில்லையா?
இலையை போல் என் இதயம்
தவறி விழுதே..... 

**********************************************************

எட்டாவது பாடல் :  மாலையில் யாரோ மனதோடு பேச

இந்த  பாடலின்  இசையும் இசையோடு விருந்தளிக்கும் இயற்கையும் ரசிக்கும் படியாக இருக்கும்...

படம்: சத்ரியன்
இசை: இளையராஜா
பாடியவர்: ஸ்வர்ணலதா

பிடித்த வரிகள் :

 வருவான் காதல் தேவன் என்றும் காற்றும் கூர
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாட
ஒரு நாள் வண்ண மாலை சூட
வளர்த்தேன் ஆசை காதலை நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது...

***********************************************

ஒன்பதாவது பாடல் : சொல்லத்தான் நினைக்கிறேன்

சித்ரா அம்மாவோட பாடல்களை நாள் முழுதும் கேட்டுகிட்டே இருக்கலாம், அதற்க்கு சான்றாய் எனக்கு பிடித்த பாடல்

படம்: காதல் சுகமானது (2002)
பாடியவர்: சித்ரா

பிடித்த வரிகள் :

சின்ன பூவொன்று பாறையை தாங்குமா..
உன்னை சேராமல் என் உயிர் தூங்குமா..
தனிமை உயிரை வதைக்கின்றது..
கண்ணில் தீவைத்து போனது நியாயமா ..
என்னை சேமித்தவை நெஞ்சில் ஓரமா..
கொலுசும் உன் பெயர் சபிக்கின்றது..

********************************************************

இறுதிப் பாடலாய்கற்பூர பொம்மை ஒன்று 

படம் : கேளடி கண்மணி 

பிடித்த வரிகள் :

தாயன்பிற்கே ஈடேதம்மா
ஆகாயம் அட அது போதாது
தாய் போல யார் வந்தாலுமே
உன் தாயைப்போலே அது ஆகாது
என் மூச்சில் வாழும் புல்லாங்குழல்
உன் பேச்சு நாளும் செந்தேன்குழல்
முத்தே என் முத்தாரமே சபையேரும் பாடல்
நீ பாடம்மா நீ பாடம்மா

என்ன நண்பர்களே, இவ்வளவு நேரம் எனக்கு பிடித்த பத்து பாடல்களை ரசித்தீர்களா?....மறுபடியும் என்னைத் தொடர்பதிவிருக்கு அழைத்த நண்பன் ஆனந்திற்கு நன்றிகள் பல.. 

  

28 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அனைத்தும் அருமையான பாடல்கள். இசைக்கு மட்டும் அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கும் இக்காலத்திலே, அருமையான அர்த்தங்கள் நிறைந்த பாடல்களை தெரிவு செய்துள்ளீர்கள்..

பெயரில்லா சொன்னது…

///நான்காவது பாடல் :. கடவுள் தந்த அழகிய வாழ்வு/// எனக்கு மிகவும் பிடித்த பாடல் ...

எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்
அழகே பூமியின் வாழ்க்கையை
அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம்..

Chitra சொன்னது…

lovely song collection. :-)

A.R.RAJAGOPALAN சொன்னது…

நல்ல தேர்வுகள் சகோதரி
ஒரே ஒரு திருத்தம்
வசீகரா பாடல் கவிஞர் தாமரை எழுதியது
ரசனையான பாடல்களை வரிசை படுத்தி ரசிக்க வைத்ததற்கு நன்றி
மிக குறிப்பாய் ...
கற்பூர பொம்மை ஒன்று .........
இன்றும் கண்ணீர் வரவைக்கும் பாடல் அது

பலே பிரபு சொன்னது…

எல்லாமே மனதை வருடும் பாடல்கள் தோழி. அருமையான தொகுப்பு, ரசனை.

தமிழ்வாசி - Prakash சொன்னது…

பத்து பாடல்களுமே முத்தான பாடல்கள். நல்ல தொகுப்பு.

நிரூபன் சொன்னது…

உங்கள் பாடல் ரசனையோடு நானும் சில இடங்களில் ஒத்துப் போகிறேன் சகோ.

மாலையில் யாரோ, வசீகரா,
கடவுள் தந்த அழகிய வாழ்வு,
விடிகின்ற பொழுது...
இவை நானும் ரசிக்கும் பாடல்கள் சகோ.

உங்கள் ரசனையை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் சகோ.

நிரூபன் சொன்னது…

உங்கள் பாடல் ரசனையோடு நானும் சில இடங்களில் ஒத்துப் போகிறேன் சகோ.

மாலையில் யாரோ, வசீகரா,
கடவுள் தந்த அழகிய வாழ்வு,
விடிகின்ற பொழுது...
இவை நானும் ரசிக்கும் பாடல்கள் சகோ.

உங்கள் ரசனையை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் சகோ.

நிரூபன் சொன்னது…

உங்கள் பாடல் ரசனையோடு நானும் சில இடங்களில் ஒத்துப் போகிறேன் சகோ.

மாலையில் யாரோ, வசீகரா,
கடவுள் தந்த அழகிய வாழ்வு,
விடிகின்ற பொழுது...
இவை நானும் ரசிக்கும் பாடல்கள் சகோ.

உங்கள் ரசனையை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் சகோ.

♔ம.தி.சுதா♔ சொன்னது…

மிகவும் ரசனையோடு பகிர்ந்துள்ளீர்கள் அதிலும் ராம் பாடல் எனக்கு ரொம்பவே பிடிக்கும்...

வேங்கை சொன்னது…

அன்பு ரேவா
அனைத்து பாடல்களும் அருமையான தேர்வு ...

இதில் எனக்கு ரொம்ப புடிச்ச பாடல் மாலையில் யாரோ மனதோடு பேச
ஸ்வர்ணலதா மேடம் குரலும் ராஜா சார் இசையும் மனதை கொள்ளை கொள்ளும் .....
அடுத்து அம்மா பாடல் ந ராஜா சார் தான் அடிச்சுக்க யார் இருக்கா ?..

"ரொம்ப நாலாக பதிவ படிப்பேன் ஆனால் மறுமொழி இடவே நேரம் இல்லை கொஞ்சம் வேளை அதிகம் ஆனால் படிசுரமல்ல...இனிமேல் எவ்ளோ வேளை இருந்தாலும் மறு மொழி இட மறக்க மாட்டேன் !?"

ரேவா சொன்னது…

கந்தசாமி. said...

அனைத்தும் அருமையான பாடல்கள். இசைக்கு மட்டும் அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கும் இக்காலத்திலே, அருமையான அர்த்தங்கள் நிறைந்த பாடல்களை தெரிவு செய்துள்ளீர்கள்..

மிக்க நன்றி சகோ :-)

ரேவா சொன்னது…

கந்தசாமி. said...

///நான்காவது பாடல் :. கடவுள் தந்த அழகிய வாழ்வு/// எனக்கு மிகவும் பிடித்த பாடல் ...

எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்
அழகே பூமியின் வாழ்க்கையை
அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம்..


எனக்கு இந்த பத்து பாடல்களில் அதிகம் பிடித்ததே இந்த பாடல்...நான் வாழ்க்கையில் பின்பற்ற நினைக்கும் வரிகளும் இவை தான்..அழகே பூமியின் வாழ்க்கையை
அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம்..

ரேவா சொன்னது…

Chitra said...

lovely song collection. :-)

நன்றி சித்ராக்கா:-)

ரேவா சொன்னது…

A.R.RAJAGOPALAN said...

நல்ல தேர்வுகள் சகோதரி
ஒரே ஒரு திருத்தம்
வசீகரா பாடல் கவிஞர் தாமரை எழுதியது
ரசனையான பாடல்களை வரிசை படுத்தி ரசிக்க வைத்ததற்கு நன்றி
மிக குறிப்பாய் ...
கற்பூர பொம்மை ஒன்று .........
இன்றும் கண்ணீர் வரவைக்கும் பாடல் அது


உங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ...பிழைகளை சரி செய்து விட்டேன்...அதற்கும் நன்றிகள்...

ரேவா சொன்னது…

பலே பிரபு said...

எல்லாமே மனதை வருடும் பாடல்கள் தோழி. அருமையான தொகுப்பு, ரசனை.

நன்றி நண்பா

ரேவா சொன்னது…

தமிழ்வாசி - Prakash said...

பத்து பாடல்களுமே முத்தான பாடல்கள். நல்ல தொகுப்பு.

நன்றி தமிழ்வாசி நண்பா

ரேவா சொன்னது…

நிரூபன் said...

உங்கள் பாடல் ரசனையோடு நானும் சில இடங்களில் ஒத்துப் போகிறேன் சகோ.

மாலையில் யாரோ, வசீகரா,
கடவுள் தந்த அழகிய வாழ்வு,
விடிகின்ற பொழுது...
இவை நானும் ரசிக்கும் பாடல்கள் சகோ.

உங்கள் ரசனையை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் சகோ.

apo same same sweet...give me a sweet ha ha...நன்றி. சகோ.

ரேவா சொன்னது…

♔ம.தி.சுதா♔ said...

மிகவும் ரசனையோடு பகிர்ந்துள்ளீர்கள் அதிலும் ராம் பாடல் எனக்கு ரொம்பவே பிடிக்கும்...

மிக்க நன்றி சகோ உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் :-)

ரேவா சொன்னது…

வேங்கை said...

அன்பு ரேவா
அனைத்து பாடல்களும் அருமையான தேர்வு ...

இதில் எனக்கு ரொம்ப புடிச்ச பாடல் மாலையில் யாரோ மனதோடு பேச
ஸ்வர்ணலதா மேடம் குரலும் ராஜா சார் இசையும் மனதை கொள்ளை கொள்ளும் .....
அடுத்து அம்மா பாடல் ந ராஜா சார் தான் அடிச்சுக்க யார் இருக்கா ?..

"ரொம்ப நாலாக பதிவ படிப்பேன் ஆனால் மறுமொழி இடவே நேரம் இல்லை கொஞ்சம் வேளை அதிகம் ஆனால் படிசுரமல்ல...இனிமேல் எவ்ளோ வேளை இருந்தாலும் மறு மொழி இட மறக்க மாட்டேன் !?"


மிக்க நன்றி நண்பா, உங்கள் மறக்காத வருகைக்கும், மறுக்காத அன்புக்கும்..இனி தொடர்ந்து வாருங்கள்

siva சொன்னது…

enaku adra adra naaku mukkaa... songthan pidikum.....:)

தறுதலை சொன்னது…

1. திங்கள் மாலை வெண்குடையான்
2. நானே நானா யாரோ தானா
3. யமுனை யாற்றிலே ஈரக்காற்றிலே
4. மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
5. வசீகரா...
6. பாடறியேன் படிப்பறியேன்
7. நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா
8. நின்னுக்கோரி வரனும்
9. பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா
10.ஒரு தெய்வம் தந்த பூவே


------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் -மே '2011)

Nesan சொன்னது…

நீங்கள் ரசிக்கும் பாடலில் எனக்குப் பிடித்தது மாலையில் யாரோ!,சொல்லத்தான் நினைக்கிறேன்,ராம் பாடல் ,வசிகரா,கற்பூரபொம்மை என்பன பின்னிரவில் கேட்க ஒருதனிச்சுகம்!

எவனோ ஒருவன் சொன்னது…

மிக்க நன்றி ரேவா என் வேண்டுகோளை ஏற்றமைக்கு.

வேலைப்பளு அதிகமாக இருந்ததால் தங்கள் வலைப் பதிவு பக்கம் வர இயலவில்லை. மன்னிக்கவும்.

தங்களுக்கு பிடித்த பத்து பாடல்களில் ஒன்றை மட்டும் நான் இதுவரை கேட்டது இல்லை. பாலா படம் என்றாலே ஒரு பயம் யாரையாவது சாகடித்து விடுவார் என்று. அதனால் ''நான் கடவுள்' பாடலை கேட்டது இல்லை. பாடல்களின் தொகுப்பு அருமை தோழி.

தங்கள் பத்து பாடல்கள் தொகுப்பில் இரண்டு பாடல்கள் என்னுடைய தொகுப்பிலும் இருப்பது ஒரு சின்ன மகிழ்ச்சி :-)

ரேவா சொன்னது…

siva said...

enaku adra adra naaku mukkaa... songthan pidikum.....:)


ha ha good song

ரேவா சொன்னது…

தறுதலை said...

1. திங்கள் மாலை வெண்குடையான்
2. நானே நானா யாரோ தானா
3. யமுனை யாற்றிலே ஈரக்காற்றிலே
4. மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
5. வசீகரா...
6. பாடறியேன் படிப்பறியேன்
7. நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா
8. நின்னுக்கோரி வரனும்
9. பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா
10.ஒரு தெய்வம் தந்த பூவே


------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் -மே '2011)

நல்ல பாடல்கள் நண்பரே

ரேவா சொன்னது…

Nesan said...

நீங்கள் ரசிக்கும் பாடலில் எனக்குப் பிடித்தது மாலையில் யாரோ!,சொல்லத்தான் நினைக்கிறேன்,ராம் பாடல் ,வசிகரா,கற்பூரபொம்மை என்பன பின்னிரவில் கேட்க ஒருதனிச்சுகம்!

cஉண்மைதான் நண்பரே..பின்னிரவில் பாடல்கள் கேட்பது தனி சுகம் தான்...நன்றி உங்கள் வருகைக்கு

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

மிக்க நன்றி ரேவா என் வேண்டுகோளை ஏற்றமைக்கு.

வேலைப்பளு அதிகமாக இருந்ததால் தங்கள் வலைப் பதிவு பக்கம் வர இயலவில்லை. மன்னிக்கவும்.

தங்களுக்கு பிடித்த பத்து பாடல்களில் ஒன்றை மட்டும் நான் இதுவரை கேட்டது இல்லை. பாலா படம் என்றாலே ஒரு பயம் யாரையாவது சாகடித்து விடுவார் என்று. அதனால் ''நான் கடவுள்' பாடலை கேட்டது இல்லை. பாடல்களின் தொகுப்பு அருமை தோழி.தங்கள் பத்து பாடல்கள் தொகுப்பில் இரண்டு பாடல்கள் என்னுடைய தொகுப்பிலும் இருப்பது ஒரு சின்ன மகிழ்ச்சி :-)

நன்றி நண்பா...நேரம் கிடைக்கும் போது அந்த பாடலைக் கேட்டுப் பாருங்கள்...நீங்கள் சொல்ல்வது உண்மைதான்...ஆனால் அவரது படங்கள் எதார்த்தம் கலந்த முகங்கள்...நம்மில் உலவும் மனிதர்களிடம், நாம் பார்க்க தவறிய, தவறும் முகங்கள்....நன்றி நண்பா உங்கள் மறுமொழிக்கு..நானும் தங்கள் வலைத்தளத்தில் அந்த பதிவைப் பார்த்தேன்....அத்தனையும் எனக்கு பிடித்த பாடல்கள் தான்...