உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 4 ஜூன், 2011

அவளின் சந்தேகத்தால்...

மாலைப் பொழுது லேசாய் அயர்ந்து கொண்டிருக்க, எப்பொழுதும் இந்த நேரத்தில் வந்திருக்கும் கணவன் வராததை நினைத்து வருத்தத்தில் இருந்தால் பவித்ரா..மணி 10 நெருங்கி கொண்டிருக்கையில்  கணவன் மாதவனிடம் இருந்து அழைப்பு வர... தாமதத்தின் காரணம் தெரிந்தவுடன் அமைதியானாள் பவித்ரா..

ஆனாலும் கண்ணுக்குள் தூக்கம் இருப்புக் கொள்ள மறுக்க, ஏதேதோ சிந்தனையில் முழ்கிப் போனாள்..லேசானா தென்றல் காற்று மெதுவாய் அவள் தேகம் நுழைய, விடிந்து விட்டதை உணர்ந்து எழுகையில், கணவன் மாதவன் ஒரு குழந்தையைப் போல் உறங்கிக் கொண்டிருந்தான்... எப்போது உறங்கிப் போனோம், இவர் வந்ததைக் கூட அறியாமல், என தன்னைத் தானே கேட்டுக் கொண்டு சமையல் வேலைகளில் மூ
ழ்கிப் போனாள்..

பவித்ராவுக்கும், மாதவனுக்கும் திருமணம் நடந்து பத்து வருடங்கள் கடந்து விட்டது, இருவருக்கும் குழந்தைப் பேறு இல்லாததை தவிர வேறு எந்த குறையும் இல்லை... மாதவனின் பெற்றோர் இவனை மறுமணத்திருக்கு எவ்வளவோ வற்புறுத்தியும் சம்மதிக்க மறுத்தான்.. அவ்வளவு காதல் பவித்ரா மீது..

பவியும் குறையாத அன்போடு அந்த குடும்பத்தை வலம் வருபவள்..தனக்கு குழந்தை இல்லை என்ற குறையை தன் அன்பான கணவனின் அன்பின் மூலம் போக்கி கொண்டவள்...

மாதவன் எதையும் தொலைநோக்கு பார்வையோடு சிந்திக்கும் ஒரு இளங்கலை பேராசிரியர்...பவித்ரா குடும்பம் அன்றி வேறு யாதும் அறியாதவள்... கண்மூடித் தனமான அன்பு அவள் கணவன் மீது..
சின்ன சின்ன விசயங்களை எல்லாம்  பெரிது படுத்தும் குணம் உடையவள்...பலகீனம் கொண்ட அவள் மனதில், எப்போதும் மாதவன் தனக்கு குழந்தையில்லாததை வைத்து பிரிந்து சென்று விடுவானோ, என்ற பயம்.. அதனாலேயே எப்போதும் மாதவனின் இன்னொரு நிழலாய் அவனைத் தொடர்வாள்

அவ்வப்போது சின்ன சின்ன சண்டைகள் எழுந்தாலும், மாதவன் எதையும் பெரிது படுத்தாது பொறுமை காப்பவன்... அன்றும் அப்படி தான், ஒரு விடுமுறை அன்று,  தன் கல்லூரியை சேர்ந்த இளங்கலை மாணவி, மது ஏதோ பாடம் நிமித்தமாக மாதவன் இல்லம் வர,  வழக்கம் போல் மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் மதுவுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை விளக்கி கொண்டிருந்தார் மாதவன்..இதனிடையே தன் வேலையில் இருப்புக் கொல்லாத பவித்ரா அங்கும் இங்குமாய் அலைந்து கொண்டிருந்தாள்... பாடம் நடத்தப் படும் அறையில் இருந்து சிரிப்பு சத்தமும், மதுவின் கிண்டல் பேச்சும் பவித்ராவுக்கு எரிச்சலை உண்டு பண்ண, மாதவன் பாடம் நடத்தும் அறையை நெருங்கிய பவித்ரா, சிறிதும் தாமதிக்காமல் மதுவின் மனதை காயப் படுத்தும் வார்த்தைகளை உதிர்க்க, மதுவின் கண்கள் கலங்கியதை அறிந்த மாதவன் சற்றும் எதிர்பார்க்காமல், பவியின் கன்னத்தில் அறைந்தான், இதை சற்றும் எதிர்பாராத பவித்ரா, இன்னொரு பெண் முன் தன் கணவன் தன்னை அடித்து விட்டான் என்ற காரணத்தால். மதுவை  அவள் வீட்டில் வெளியே விட்டு வீட்டுக்குள் வந்தாள் பவித்ரா...

தன் வகுப்பு மாணவி, முன் தனக்கு நேர்ந்த அவமானம் பற்றி சிறிதும் எண்ணாமல், இது வாடிக்கை தான் என்பது போல் மாதவன் தன் வேலைகளை தொடர்ந்தான், இந்த விசயமே தன் வாழ்க்கையில் பெரிய இடியாய் இறங்கும் என்பதை அறியாமல்...

காலை எப்பொழும் போல் கல்லூரி செல்ல ஆயத்தமாகிகொண்டு இருந்தான். பவித்ரா வீடு வேலைகள் எதவும் செய்யாமல் தன் அறையிலேயே இருந்தாள். பவித்ராவின் குணம் அறிந்த மாதவன் கல்லூரி கிளம்பி செல்ல, தன் கோவத்தின் காரணம் கேட்காமல், தன்னை தனிமையில் விட்டு சென்றதை நினைத்து பவித்ராவுக்கு அதிக கோவம் வந்தது..

அன்றில் இருந்து பவித்ராவின் செயல் முறையில் மாற்றம் தோன்றியது. எப்போதும் கணவனின் கைபேசியிலிருந்து, எல்லாவற்றிலும் சந்தேகம் கொள்ள ஆரம்பித்தாள். தன் சக நண்பனிடம் மாதவன் பேசினாலும் பெண்ணிடம் பேசுவதாய் சண்டை இட்டாள். மாதவன் கல்லூரியில் இருக்கும் பெண் பேராசிரியர்களின் கைபேசிக்கும் தொடர்பு கொண்டு தன் கணவனைப் பற்றி தாறு மாறாக சொல்லி இனி அவரோட தாங்கள் எந்த தொடர்பும் கொள்ளத் தேவை இல்லை, அப்பொழுதே எங்கள் வாழ்க்கை சுகமாய் இருக்கும்  என்பதை போல சொல்லி முடித்தாள்...

அன்றில் இருந்து மாதவனை கல்லூரி வளாகம் ஏதோ விஷ ஜந்துவை பார்ப்பதை போல் பார்த்தனர்.  அவனிடம் சகஜமாய் பழகும் யாரும் அவனிடம் பேசுவதை தவிர்த்தனர்.. முதல் முறை மாதவன் நரகத்தின் இருப்பை அந்த கல்லூரியில் உணர்ந்தான்.. எந்த தீய பழக்கமும் இல்லாத மாதவன் குடிப் பழக்கத்திற்கு  அடிமையாகிப் போனான்... தன் வாழ்க்கையில் சந்தோஷம் வெறும் வார்த்தையாகிப் போனாதாய் உணர்ந்தான்...

இதனால் பவித்ராவிற்க்கும், மாதவனிற்கும்   அன்றாடம் சண்டைகள்... பவித்ராவின் சந்தேகத்தால் அந்த குடும்பம் முழுமையும் நிம்மதி இழந்து தவித்து வருகிறது.. மாதவன் தன் பேராசிரியர்.வேலையை விட்டு மதுக் கடையே கெதியென இருக்கின்றான். பவித்ரா கிடைத்த வாழ்க்கையை சந்தேகத்திற்கு அடகு வைத்து சந்தோஷம் இழந்து தவிக்கின்றாள்...இன்று .குடும்பம் மொத்தமும் சிதைந்து போய் கிடக்கிறது
அவளின் சந்தேகத்தால்..

நண்பர்களே இது கதை தான்.....ஆனால் இந்த கதைக்குள் இருக்கும் நிதர்சன உண்மையை பெரும்பாலான பலர் சந்தித்துக் கொண்டு தான் இருக்கின்றனர்...ஆம் சந்தேகம் மனித குலத்தை அழிக்க வந்த ஒட்டுண்ணி.... உள்ளுக்குள்ளே இருந்து உயிர் அறுக்கும் ஒரு  கொடுமையான வலி...

1)  பவித்ராவை போன்ற பல பெண்கள் நம்மில் இருக்க தான் செய்கின்றனர்,  கண்மூடித் தனமான அன்பும் அதன் விளைவாய் வந்த சந்தேகமும் அவள் வாழ்வை புரட்டி போட்டது உண்மைதானே....

2) தன் கணவன் தனக்கு மட்டும் தான் என்று நினைக்க, மனித உயிர் ஒன்றும் பூட்டி வைக்கும் சொத்துப் பத்திரம் இல்லை...கொடுக்கும் அன்பை நிலையாய்க் கொடுத்தால், தனக்கான ஒன்று தன்னிடமே இருக்கும் என்பது உணமைதானே...

3 ) ஒருவர் மீது நாம் வைக்கும் அன்பு என்பது, காற்றை போல இருக்கவேண்டும்... கடிவாளம் இட்டால், புயாலாய் மாறி சேதப்படுத்துவது நிச்சயம்...உண்மையான அன்பிற்கு உண்மைகள் தெரியும்...அன்பு உணர்தலில் இருக்கிறதே அன்றி புரியவைத்தலில் அல்ல...

4 ) தன் வாழ்க்கை பறிபோவதாய் நினைத்து பவித்ரா கொடுத்த சந்தேக அழுத்தம், அவர்களின் அன்பின் ஆழத்தை குழைத்தது உண்மை தானே...

5 ) வாழ்கையில் எந்த உறவுக்குள்ளும்  சந்தேகம் இருக்க கூடாது... இருந்தால் மனம் விட்டு பேசுங்கள்... அன்பு காட்டுங்கள்... எங்கு தனக்கான அன்பு குறைகிறது என்ற எண்ணம் வளர்கிறதோ,அங்கு வாழ்வை தரிசாக்கும் சந்தேகக்
களையும் வளரத் தான் செய்யும்.

6 ) பிடித்தமானவர்களிடம் எப்பொழுதும் பிடித்தம் வையுங்கள்...எதை உங்களால் கடைசி வரை பின்பற்ற முடிகிறதோ அதை மட்டுமே உங்கள்  பிரியமானவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்...

அழகான நம் குடும்பம் பாலாய்ப் போன சந்தேகத்தால் பாழாகலாமா.... 

7 ) உறவுக்குள் சந்தேகம் தோன்றின் மனது விட்டு பேசுங்கள்...உண்மை நிலையை உங்கள் உறவுக்கு புரியவையுங்கள்.... புரிதலில் தானே வாழ்க்கை இனிக்கும்...எனவே  சந்தேகம் ஆட்சி செய்யும் எண்ணங்களை  களை எடுப்போம்.. சந்தோஷ விதை விதைத்து, குடும்ப அமைப்பை செழிப்பாக்கி அழகான வாழ்க்கை வாழ்வோம்

இங்கு பலர் கிடைத்த வாழ்வை, பயன்படுத்த தெரியாமல், தானும் கெட்டு, தன்னை சேர்ந்தோரையும்,நிம்மதி இல்லாமல், சந்தேகத்தால் வதைத்து, நரக வாழ்க்கை வாழ்கின்றனர்...ஏன் இந்த கோவம், எதற்கு இந்த சந்தேகம்...இருக்கும் ஒற்றை வாழ்வில், அன்பாய் இருந்து, அன்போடு செல்வோம்....
இயன்ற வரையில், இணைந்திடுவோம்.....வணக்கங்களுடன் ரேவா....

59 கருத்துகள்:

ரியாஸ் அஹமது சொன்னது…

நல்ல பதிவு .நன்றி சகோ

ரியாஸ் அஹமது சொன்னது…

முதல் ஒட்டு

பெயரில்லா சொன்னது…

சந்தேகம் கொடிய பிராணி...

கதை மூலம் சொன்னது அருமையாக இருந்தது....

பெயரில்லா சொன்னது…

////மனித உயிர் ஒன்றும் பூட்டி வைக்கும் சொத்துப் பத்திரம் இல்லை...கொடுக்கும் அன்பை நிலையாய்க் கொடுத்தால், தனக்கான ஒன்று தன்னிடமே இருக்கும் என்பது உணமைதானே.../// நல்ல வசனம் ...

தமிழ்வாசி - Prakash சொன்னது…

நல்ல கதை. அது பற்றிய தங்கள் கருத்தும் அருமை.

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

அசத்தல் கதை..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

சந்தேகம் வந்துச்சுன்னா வாழ்க்கை நரகம்தான்.....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

சந்தேகம் நிறைந்த வாழ்க்கை நிறைந்த வாழ்க்கையே இல்லை! அருமையா புரிய வச்சீங்க ரேவா!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பொஸசிவ்நெஸ் கூடாதுங்கறீங்க? ,ம் ம்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>) வாழ்கையில் எந்த உறவுக்குள்ளும் சந்தேகம் இருக்க கூடாது... இருந்தால் மனம் விட்டு பேசுங்கள்... அன்பு காட்டுங்கள்..

குட் ஒன்

தம்பி கூர்மதியன் சொன்னது…

அய்யோ.!! எத்தே தத்தி.. சரி போய் படிச்சிட்டு வர்றேன்..

தம்பி கூர்மதியன் சொன்னது…

தாமதத்தின் காரணம் தெரிந்தவுடன் அமைதியானாள் பவித்ரா..//

அட சிறுகதையா.? கொடுமை கொடுமை..

தம்பி கூர்மதியன் சொன்னது…

தேகம் நுழைய,//

தேகத்துல நுழையுதா.? அதெப்படி.?

தம்பி கூர்மதியன் சொன்னது…

சமையல் வேலைகளில் முழ்கிப் போனாள்.//

சமையல் வேலையில மூழ்கியா.? ஹி ஹி..

தம்பி கூர்மதியன் சொன்னது…

அவ்வளவு காதல் பவித்ரா மீது..//

இது போன்ற கொசுறுகளை சிறுகதையில் தவிர்க்கலாம். மேலும் எழுதும் போது இரட்டை புள்ளி வைப்பது பத்தியின் அழகை கெடுக்கும்

தம்பி கூர்மதியன் சொன்னது…

பவியும்//

அவள் பெயரை சுருக்கி அழைக்க உனக்கு யார் உரிமை கொடுத்தார்.. ஹி ஹி..

தம்பி கூர்மதியன் சொன்னது…

தொலைநோக்கு பார்வையோடு சிந்திக்கும் ஒரு இளங்கலை பேராசிரிய//

பார்வை கொண்டு பாக்க தானே முடியும்.. எப்படி சிந்திக்க முடியும்.. ஹி ஹி..

தம்பி கூர்மதியன் சொன்னது…

சென்று விடுவானோ//

உன்ன மாதிரியே எல்லாரையும் நினைக்க கூடாது.. சென்று விடுவா'ரோ' என்று எழுதணும்.. புரியுதா.?

தம்பி கூர்மதியன் சொன்னது…

மாதவனின் இன்னொரு நிழலாய் அவனைத் தொடர்வாள் //

பாருங்க மக்களே.!! அவ அவளோட புருசன சந்தேகபடுறத எப்படி சொல்லுறானு பாருங்க

தம்பி கூர்மதியன் சொன்னது…

மதுவை அவள் வீட்டில் வெளியே விட்டு வீட்டுக்குள் வந்தாள் பவித்ரா... //

ஆமாம்.. ரெண்டு வயசு பாப்பாவ கொண்டு போய் இறக்கிவிட்டுட்டு வந்தாப்புல சொல்லுற..? கழுத்த புடிச்சு வெளியே தள்ளினானு சொல்லவேண்டியது தானே

தம்பி கூர்மதியன் சொன்னது…

மாதவன் தன் வேலைகளை தொடர்ந்தான்//

அவனும் என்னை போல ஒரு உன்னதமான மானங்கெட்டவன் போல

தம்பி கூர்மதியன் சொன்னது…

அவனிடம் சகஜமாய் பழகும் யாரும் அவனிடம் பேசுவதை தவிர்த்தனர்..//

ஏன் அவன் பெண் ஆசிரியைகளிடம் மட்டும் தான் பேசுவாரா.? மானங்கெட்ட பயலா இருப்பாரு போல

தம்பி கூர்மதியன் சொன்னது…

எந்த தீய பழக்கமும் இல்லாத மாதவன் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகிப் போனான்..//

இல்ல ரேவா.. இப்படி ஒன்று எழுதும்போது அவனின் நிலையை நன்கு உணர்த்தவேண்டும்.. எடுத்தோம் கவுத்தோம் என்று கூடாது..

தம்பி கூர்மதியன் சொன்னது…

நண்பர்களே இது கதை தான்..//

நல்ல வேள சொன்ன தேங்க்ஸ்.. ஹி ஹி.. முடிவே இல்ல ரேவா..

தம்பி கூர்மதியன் சொன்னது…

அளிக்க வந்த ஒட்டுண்ணி...//

அளிக்கவா.? அழிக்கவா.?

தம்பி கூர்மதியன் சொன்னது…

ரேவா கதை அவ்வளவு சிறப்பா இல்லை.. இவ்வளவு சந்தேகபடும் அவளை அவன் எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசாமலிருப்பது, உடன் ஆசிரியைகள் பேசாததால் தண்ணி அடிப்பது, அந்த மாணவியை திட்டியதால் அடித்தவன் அவளை வெளியே இழுத்து விட்டபோது கண்டுகிடாமல் இருப்பது போன்ற பல கீச்சுமூச்சு கச்சாமுச்சா.. கடைசி கருத்துக்கள் ஓகே.!! நீ இதுக்கு சரிபட்டு வரமாட்ட..

நிரூபன் சொன்னது…

சகோ, வழமையான பாணியிலான பின்னூட்டங்களை இட முடியலை, ஆணி அதிகம் மன்னிக்கவும்,

இது பின்னூட்டமல்ல.

நிரூபன் சொன்னது…

சந்தேகம் என்றால் என்ன என்பதை விளக்கும் வகையில் ஒரு கதையினையத் தந்து,

அதன் கீழே சந்தேகம் பற்றி விளக்கங்களும் தந்திருக்கிறீங்களே. அருமையான பதிவு சகோ.

சாகம்பரி சொன்னது…

ரேவா, சந்தேகம் ஒரு வியாதி, சிலசமயம் உடல் சம்பந்தப்பட்ட கோளாறாகவும் இருக்கும் - கருப்பை கோளாறு - போன்றவை மனச்சிதைவை ஏற்படுத்தும். நான் பவியை மட்டும் குறை சொல்ல மாட்டேன். அதை சரி செய்ய முயற்சிக்காத மாதவனிடமும் தவறு உள்ளது. அவன் ஆரோக்கியமாகத்தானே இருந்தான். கடலில் விழுந்தவரை காப்பாற்றுவதுதான் நல்ல தாம்பத்தியம். இது போன்ற புதை மணலில் இருந்து விடுபட்டவர்கள், மற்றவரை நேசிக்கத் தெரிந்தவர்களாவார்கள்.

மாலதி சொன்னது…

அசத்தல் கதை..

ரேவா சொன்னது…

ரியாஸ் அஹமது said...

நல்ல பதிவு .நன்றி சகோ

நன்றி சகோ உங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும்

ரேவா சொன்னது…

ரியாஸ் அஹமது said...

முதல் ஒட்டு

நன்றி சகோ

ரேவா சொன்னது…

கந்தசாமி. said...

சந்தேகம் கொடிய பிராணி...

கதை மூலம் சொன்னது அருமையாக இருந்தது....

நன்றி சகோ

ரேவா சொன்னது…

கந்தசாமி. said...

////மனித உயிர் ஒன்றும் பூட்டி வைக்கும் சொத்துப் பத்திரம் இல்லை...கொடுக்கும் அன்பை நிலையாய்க் கொடுத்தால், தனக்கான ஒன்று தன்னிடமே இருக்கும் என்பது உணமைதானே.../// நல்ல வசனம் ...

மிக்க நன்றி சகோ

ரேவா சொன்னது…

vதமிழ்வாசி - Prakash said...

நல்ல கதை. அது பற்றிய தங்கள் கருத்தும் அருமை.

நன்றி vதமிழ்வாசி நண்பரே

ரேவா சொன்னது…

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அசத்தல் கதை..

நன்றி கருன்

ரேவா சொன்னது…

MANO நாஞ்சில் மனோ said...

சந்தேகம் வந்துச்சுன்னா வாழ்க்கை நரகம்தான்.....

உண்மைதான் மனோ....

ரேவா சொன்னது…

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சந்தேகம் நிறைந்த வாழ்க்கை நிறைந்த வாழ்க்கையே இல்லை! அருமையா புரிய வச்சீங்க ரேவா!

நிறைய அனுபவங்களை கண்முன்னே பார்த்திருக்கிறேன் ரஜீவன் அதனாலே இந்த பதிவு...

ரேவா சொன்னது…

சி.பி.செந்தில்குமார் said...

பொஸசிவ்நெஸ் கூடாதுங்கறீங்க? ,ம் ம்

ஹிஹி ஆமாம் ஆமாம்

ரேவா சொன்னது…

சி.பி.செந்தில்குமார் said...

>>) வாழ்கையில் எந்த உறவுக்குள்ளும் சந்தேகம் இருக்க கூடாது... இருந்தால் மனம் விட்டு பேசுங்கள்... அன்பு காட்டுங்கள்..

குட் ஒன்

நன்றி சகோ

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

அய்யோ.!! எத்தே தத்தி.. சரி போய் படிச்சிட்டு வர்றேன்..

ஹி ஹி வந்துட்டியா

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

தாமதத்தின் காரணம் தெரிந்தவுடன் அமைதியானாள் பவித்ரா..//

அட சிறுகதையா.? கொடுமை கொடுமை..

:(

சித்தாரா மகேஷ். சொன்னது…

அருமையான பதிவு அக்கா.
வீண் சந்தேகத்தால் வாழ்க்கையில் ஏற்படப்போகும் விளைவுகளை சந்தேகப்படும்போது எவரும் உணர்வதில்லை.அப்புறம் உணர்ந்து வருந்துவதால் எந்த பயனுமில்லை.

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

தேகம் நுழைய,//

தேகத்துல நுழையுதா.? அதெப்படி.?

அது அப்படி தான்

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

சமையல் வேலைகளில் முழ்கிப் போனாள்.//

சமையல் வேலையில மூழ்கியா.? ஹி ஹி..

பிழைகள் திருத்தப்பட்டன...ஹி ஹி..

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

அவ்வளவு காதல் பவித்ரா மீது..//

இது போன்ற கொசுறுகளை சிறுகதையில் தவிர்க்கலாம். மேலும் எழுதும் போது இரட்டை புள்ளி வைப்பது பத்தியின் அழகை கெடுக்கும்

இனி இது போன்ற தவறு வராமல் தவிர்க்கிறேன்

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

பவியும்//

அவள் பெயரை சுருக்கி அழைக்க உனக்கு யார் உரிமை கொடுத்தார்.. ஹி ஹி..

கதாப்பாத்திரங்களை, உருவாக்கியவள் நான்...எனக்கு யாரு உரிமை தரனும் சகோ

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

தொலைநோக்கு பார்வையோடு சிந்திக்கும் ஒரு இளங்கலை பேராசிரிய//

பார்வை கொண்டு பாக்க தானே முடியும்.. எப்படி சிந்திக்க முடியும்.. ஹி ஹி..

ஸ்ஸ்ஸபப்பா இந்த கொசுத்தொல்ல தாங்க முடியல...ஹ ஹ

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

சென்று விடுவானோ//

உன்ன மாதிரியே எல்லாரையும் நினைக்க கூடாது.. சென்று விடுவா'ரோ' என்று எழுதணும்.. புரியுதா.?

புரியுது சகோ புரியுது

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

மாதவனின் இன்னொரு நிழலாய் அவனைத் தொடர்வாள் //

பாருங்க மக்களே.!! அவ அவளோட புருசன சந்தேகபடுறத எப்படி சொல்லுறானு பாருங்க

ஹி ஹி வேற எப்படி சொல்லுறது

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

மதுவை அவள் வீட்டில் வெளியே விட்டு வீட்டுக்குள் வந்தாள் பவித்ரா... //

ஆமாம்.. ரெண்டு வயசு பாப்பாவ கொண்டு போய் இறக்கிவிட்டுட்டு வந்தாப்புல சொல்லுற..? கழுத்த புடிச்சு வெளியே தள்ளினானு சொல்லவேண்டியது தானே

இம்ம்

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

மாதவன் தன் வேலைகளை தொடர்ந்தான்//

அவனும் என்னை போல ஒரு உன்னதமான மானங்கெட்டவன் போல

உண்மையை ஒத்துக்கொண்டவர்...உன்னத தலைவர் சகோ கூர் வாழ்க

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

எந்த தீய பழக்கமும் இல்லாத மாதவன் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகிப் போனான்..//

இல்ல ரேவா.. இப்படி ஒன்று எழுதும்போது அவனின் நிலையை நன்கு உணர்த்தவேண்டும்.. எடுத்தோம் கவுத்தோம் என்று கூடாது..

சரி சகோ இனி சரியாய்ச் செய்கிறேன்

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

ரேவா கதை அவ்வளவு சிறப்பா இல்லை.. இவ்வளவு சந்தேகபடும் அவளை அவன் எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசாமலிருப்பது, உடன் ஆசிரியைகள் பேசாததால் தண்ணி அடிப்பது, அந்த மாணவியை திட்டியதால் அடித்தவன் அவளை வெளியே இழுத்து விட்டபோது கண்டுகிடாமல் இருப்பது போன்ற பல கீச்சுமூச்சு கச்சாமுச்சா.. கடைசி கருத்துக்கள் ஓகே.!! நீ இதுக்கு சரிபட்டு வரமாட்ட..

அப்டியா, அடுத்த முறை சிறப்பாய் செய்திருக்கிறேன் என்று உன்னிடமே பெயர் வாங்குகிறேன்,, சரியா

ரேவா சொன்னது…

நிரூபன் said...

சகோ, வழமையான பாணியிலான பின்னூட்டங்களை இட முடியலை, ஆணி அதிகம் மன்னிக்கவும்,

இது பின்னூட்டமல்ல.

its ok sako

ரேவா சொன்னது…

நிரூபன் said...

சந்தேகம் என்றால் என்ன என்பதை விளக்கும் வகையில் ஒரு கதையினையத் தந்து,

அதன் கீழே சந்தேகம் பற்றி விளக்கங்களும் தந்திருக்கிறீங்களே. அருமையான பதிவு சகோ.

உங்களுக்காவது புரிஞ்சதே...மிக்க நன்றி சகோ

ரேவா சொன்னது…

சாகம்பரி said...

ரேவா, சந்தேகம் ஒரு வியாதி, சிலசமயம் உடல் சம்பந்தப்பட்ட கோளாறாகவும் இருக்கும் - கருப்பை கோளாறு - போன்றவை மனச்சிதைவை ஏற்படுத்தும். நான் பவியை மட்டும் குறை சொல்ல மாட்டேன். அதை சரி செய்ய முயற்சிக்காத மாதவனிடமும் தவறு உள்ளது. அவன் ஆரோக்கியமாகத்தானே இருந்தான். கடலில் விழுந்தவரை காப்பாற்றுவதுதான் நல்ல தாம்பத்தியம். இது போன்ற புதை மணலில் இருந்து விடுபட்டவர்கள், மற்றவரை நேசிக்கத் தெரிந்தவர்களாவார்கள்.

நன்றி சகோதரி..உங்கள் முதல் வருகைக்கும்...கருத்துக்கும்...இனி தொடர்ந்து வாருங்கள்

ரேவா சொன்னது…

மாலதி said...

அசத்தல் கதை..
நன்றி சகோதரி..உங்கள் முதல் வருகைக்கும்...கருத்துக்கும்...இனி தொடர்ந்து வாருங்கள்

ரேவா சொன்னது…

சித்தாரா மகேஷ். said...

அருமையான பதிவு அக்கா.
வீண் சந்தேகத்தால் வாழ்க்கையில் ஏற்படப்போகும் விளைவுகளை சந்தேகப்படும்போது எவரும் உணர்வதில்லை.அப்புறம் உணர்ந்து வருந்துவதால் எந்த பயனுமில்லை.

உண்மைதான் சகோதரி...அழகாய் சொன்னாய்...நன்றி