உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

தூரமாகிப் போனவன்...


*** புன்னகை சிந்தியே,
என் உயிர் பறித்தவன்,
வாழ்வியல் வளர்ச்சிக்கு,
முழு வடிவம் தந்தவன்...
பசாங்கில்லா அன்பை
பருக தந்தவன்...
என் பத்து மாத கருவறைக்கு,
மதிப்பை தந்தவன்..
 தாய்மையின் அன்பினை
அறிய காரணமானவன்...
மனதின் சோகங்களை,
அருகில் இருந்து
களையக் கற்றுத் தந்தவன்...

** இன்று,
என் அன்பின் பிடியில் இருந்து,
விரும்பிப்பிரிகின்றான்....
எவனோ ஒருவனைப் போல
அவன் நகர்ந்தவேளை,
தூரமாக்கியது 
என் அன்பை என்று, 
அன்று
தெரியாமலே போயிற்று....
கண்குளிர அவன் 
கல்யாண கோலத்தை
காண ஆசைப்பட்டு,
இன்று கரைந்து 
கொண்டிருக்கிறேன்,
கானல் நீர் கனவுகளில்...

** நிதர்சன உணமைகளை
தாங்கிக்கொண்டு,
எதிர்கால வாழ்விற்காய்,
நினைவுகளை துரத்தி,
நிஜங்களை கொளுத்தி,
பொய்யாய் சிரிக்க,
காலம் எனக்கு
வாழ்வியல் முறையைக்
கற்றுக்கொடுத்திருக்கிறது....

** ஆனாலும்
சில வேலைகளில்,
பழைய நினைவுகள்,
என் இதயத்தை பிளக்கும் 
வலியை உணர்கின்றேன்.....
பத்து மாதம் சுமந்த
வயிராயிற்றே.....எங்கனம்
மறப்பேன்....
தூரமாகிப் போன
என் மகனை...


அன்புடன்
ரேவா

12 நேசித்த உள்ளங்கள்:

{ # கவிதை வீதி # சௌந்தர் } at: 6/06/2011 10:15 முற்பகல் சொன்னது…

மகனை பிரிந்து வரடும் ஒரு தாயின் கண்ணீர்...

கவிதை வடிவமும் அருமை..

வாழ்த்துக்கள்...

{ ரியாஸ் அஹமது } at: 6/06/2011 12:31 பிற்பகல் சொன்னது…

அன்றுதெரியாமலே போயிற்று....//கண்குளிர அவன் கல்யாண கோலத்தைகாண ஆசைப்பட்டு,இன்று கரைந்து கொண்டிருக்கிறேன்கானல் நீர் கனவுகளில்...// சூப்பர் வரிகள்

{ எவனோ ஒருவன் } at: 6/06/2011 12:54 பிற்பகல் சொன்னது…

மிக மிக அருமை ரேவா.... வழக்கம் போலவே :-)

{ கந்தசாமி. } at: 6/06/2011 1:33 பிற்பகல் சொன்னது…

மகனை பிரியும் ஒரு தாயின் வேதனை ,ஏக்கம் --நல்லாய் இருக்கு கவிதை சகோதரி ..

{ சௌந்தர் } at: 6/06/2011 3:18 பிற்பகல் சொன்னது…

ஒரு தாயின் பாசத்தை அழகிய வரிகளில் கொண்டு வந்து இருக்கீர்கள்....


பசாங்கில்லா அன்பை
பருக தந்தவன்...////

மிக மிக்க பிடித்த வரி..!!

{ தமிழ்வாசி - Prakash } at: 6/07/2011 6:25 முற்பகல் சொன்னது…

ஒரு தாயின் ஏக்கம் கவிதை வடிவில்....

{ siva } at: 6/07/2011 7:17 முற்பகல் சொன்னது…

ம் வார்த்தைகள்
எல்லாம்
உணரும் கவிதயாய்
கலக்குறீங்க
வாழ்த்துக்கள்
மேடம்

{ நிரூபன் } at: 6/07/2011 9:31 முற்பகல் சொன்னது…

மணம் செய்து, மறு வீடு போகும் ஒரு மகனினைப் பிரிந்த தாயின் உணர்வுகளை, அற்புதமான கவிதையால், உணர்வு, பாசம் வெளிப்பட்டு நிற்கும் வகையில் பகிர்ந்துள்ளீர்கள்.


கவிதை பிரிவின் துயரைச் சுட்டி நிற்கிறது.

{ தம்பி கூர்மதியன் } at: 6/07/2011 8:10 பிற்பகல் சொன்னது…

புன்னகை சிந்தியே,
என் உயிர் பறித்தவன்,
வாழ்வியல் வளர்ச்சிக்கு,
முழு வடிவம் தந்தவன்...
பசாங்கில்லா அன்பை
பருக தந்தவன்...
என் பத்து மாத கருவறைக்கு,
மதிப்பை தந்தவன்..
தாய்மையின் அன்பினை
அறிய காரணமானவன்...
மனதின் சோகங்களை,
அருகில் இருந்து
களையக் கற்றுத் தந்தவன்...//

இயல்பான வார்த்தைகள்.. இயல்பான நடை.. சிறப்பு..

{ தம்பி கூர்மதியன் } at: 6/07/2011 8:10 பிற்பகல் சொன்னது…

பசாங்கில்லா அன்பை
பருக தந்தவன்...//

அது என்ன பசாங்கு.?

{ Lakshmi } at: 6/08/2011 10:24 முற்பகல் சொன்னது…

உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்
படுத்தி இருக்கேன். நேரம் கிடைக்கும்
போது பார்க்கவும்.

http://blogintamil.blogspot.com/2011/06/1.html

{ SheikFaizaldheen } at: 1/10/2012 2:59 முற்பகல் சொன்னது…

Nenjin valil
nigizhum uanvau............!!!!