உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

புதன், 22 ஜூன், 2011

காதலோடு நான்...


நீ பேசிவிட்டு போனதிலிருந்து
இருப்புக் கொள்ளவில்லை
இதயம்....
மறுபடி ஒருமுறை
உன் குரல் கேட்க
காத்திருக்கிறது ஆவலோடு..
.

நான் சொல்லவருவதை
சொல்லி முடிப்பதற்குள்,
சிக்கிகொண்ட என் வார்த்தைகளை,
அழகாய் கண்டெடுத்து
விடுகிறது,
உன் வெட்க்கச் சிரிப்பு...
.
அனைவரிடமும் நட்பாய்
பழகும் நீ,
என்னிடம் என் எண்ணம்
அறிய, சாமர்த்தியமாய்,
வார்த்தைகளில்  வேவு
பார்ப்பது ஏன்?....   
.

அளவின்றி பேசுபவள் நான்,
உன் , பார்வை
தாக்கத்திருக்கு பிறகு
அளந்து அளந்தே  பேசிகின்றேன்...
 .

சத்தம் இல்லாமல் யுத்தம்
செய்வது காதலாம்...
கற்றுத் தந்தது,
நீ கொடுத்த ஓற்றை 
முத்தம்...
.

நீ விரும்பி கேட்கும் 
பாடல்கள் யாவும்,
நான் கேட்கையில்
இரட்டை அழகு கொள்கிறது...
உன் நினைவோடு....
. 

உன் விசாரிப்புகளுக்கு
பிறகு,
சுகமாய் தெரிகிறது
என் காய்ச்சல்.....
 .

மழையில் உன் குடைக்குள்,
வரவேண்டும்
என்ற எண்ணத்தில்,
நான் மறைத்து வைத்த குடையை,
என்னைப் போல்
நீயும் மறைத்து வைத்ததால்,
மழையில் நனைந்த,
நம் காதலை என்ன செய்வது....
 .

எண்ணிக்கை முக்கியமில்லை
என்று,  மிட்டாய்க் கேட்க்கும்
பிள்ளைபோல்,
அழுது வடித்து,
நீ முத்தம்
கேட்க்கும்  அழகுக்கே
ஆயிரம் முத்தம் கொடுக்கலாம்....
  .  

நம் காதலை மறைக்க
ஆயிரம் பொய்கள் 
சொல்லியாகிவிட்டது,
என்றால்,
அரைக் கல்யாணம் முடிந்து
விட்டதா என்று,
கண் சிமிட்டி காதல் செய்கிறாய்....
.  

காதல் அவஸ்த்தையானது தான்,
காத்திருக்க சொல்லிவிட்டு,
வேலைப் பளு என்று
நீ அனுப்பும்
குறுந்தகவலை எரிச்சலோடு
பார்க்கும் போது....
. 

கவிதையில் எல்லாம்
சொல்லிவிட முடியாத
உன் காதலை,
உன்னோடு இருக்கும் போது
உணர்கின்றேன்..
இது உனக்கே உண்டான
ஒன்று...
 .

விலகி விலகி
சென்றாலும்,
விருச்சமாய் நீ
எனக்குள்ளே...
.

( வணக்கம் நண்பர்களே நலம் தானா?.....மறுபடியும் பதிவுலகம் வந்தாச்சு, இனி வழக்கம் போல, என் பதிவுகளுக்கு வருகை தாருங்கள்.... )

56 கருத்துகள்:

சௌந்தர் சொன்னது…

நீ பேசிவிட்டு போனதிலிருந்து
இருப்புக் கொள்ளவில்லை
இதயம்....
மறுபடி ஒருமுறை
உன் குரல் கேட்க
காத்திருக்கிறது ஆவலோடு..///


உடனே போன் போட்டு பேச வேண்டி தானே...!!!

சௌந்தர் சொன்னது…

அனைவரிடமும் நட்பாய்
பழகும் நீ,
என்னிடம் என் எண்ணம்
அறிய, சமர்த்தியமாய்
வார்த்தைகளில் வேவு
பார்ப்பது ஏன்?.... ////

ஜேம்ஸ் பான்ட் லவ் பண்ணா அப்படி தான்

சௌந்தர் சொன்னது…

அளவின்றி பேசுபவள் நான்,
உன் , பார்வை
தாக்கத்திருக்கு பிறகு
அளந்து அளந்தே பேசிகின்றேன்...///

ஏன் பயந்துட்டியா...???

சௌந்தர் சொன்னது…

மழையில் உன் குடைக்குள்,
வரவேண்டும்
என்ற எண்ணத்தில்,
நான் மறைத்து வைத்த குடையை,
என்னைப் போல்
நீயும் மறைத்து வைத்ததால்,
மழையில் நனைந்த,
நம் காதலை என்ன செய்வது....///

ம்ம்ம் ரெண்டு பேரும் நல்லா இருங்க..!!!

சௌந்தர் சொன்னது…

காதல் அவஸ்தயானது தான்,
காத்திருக்க சொல்லிவிட்டு,
வேலைப் பளு என்று
நீ அனுப்பும்
குறுந்தகவலை எரிச்சலோடு
பார்க்கும் போது....///

ஹி ஹி ஹி ஹி :))

A.R.ராஜகோபாலன் சொன்னது…

அழகான கவிதைகளின் அற்புத அணிவகுப்பு

சௌந்தர் சொன்னது…

விலகி விலகி
சென்றாலும்,
விருச்சமாய் நீ
எனக்குள்ளே...///

சரி தான்.... :))

எல்லாமே நல்லா இருக்கு :))

sulthanonline சொன்னது…

welcome back.
வந்ததும் அசத்தலான காதல் கவிதைகள். அனைத்து கவிதை தொகுப்புகளும் சூப்பர்.

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

வாங்க தோழி..

தமிழ்வாசி - Prakash சொன்னது…

பதிவுலகிற்கு மீண்டும் வந்தாச்சா...

தமிழ்வாசி - Prakash சொன்னது…

நீ முத்தம்
கேட்க்கும் அழகுக்கே
ஆயிரம் முத்தம் கொடுக்கலாம்....>>>

ஆகா...ஆகா....ஆகா....

மாலதி சொன்னது…

//அனைவரிடமும் நட்பாய்
பழகும் நீ,
என்னிடம் என் எண்ணம்
அறிய, சமர்த்தியமாய்
வார்த்தைகளில் வேவு
பார்ப்பது ஏன்?....//

நல்லா இருக்கு

angelin சொன்னது…

welcome back revaa !!
சின்ன ப்ரேக்குக்கு அப்புறம் அருமையான காதல் கவிதை ..

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

////
கவிதையில் எல்லாம்
சொல்லிவிட முடியாத
உன் காதலை,
உன்னோடு இருக்கும் போது
உணர்கின்றேன்..
இது உனக்கே உண்டான
ஒன்று.../////

அசத்தல் வரிகள்..

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

மீண்டும் பதிவுலகம் வந்ததற்க்கு வாழ்த்துக்கள்...

உங்கள் வருகை பிரகாசிக்கட்டும்..

தம்பி கூர்மதியன் சொன்னது…

மறுபடி ஒருமுறை
உன் குரல் கேட்க
காத்திருக்கிறது ஆவலோடு..//

என்னது மாமா பேசிட்டாரா.!!?

தம்பி கூர்மதியன் சொன்னது…

உன் வெக்கச்சிரிப்பு...//

வெட்கமா.!!? ஹி ஹி

தம்பி கூர்மதியன் சொன்னது…

உன் வெக்கச்சிரிப்பு...//

வெட்கம்

தம்பி கூர்மதியன் சொன்னது…

சமர்த்தியமாய்//

சாமர்த்தியமாய்

தம்பி கூர்மதியன் சொன்னது…

கேட்க்கும் //

தம்பி கூர்மதியன் சொன்னது…

சொல்லியாகிவிட்டது,
என்றால்,//

காற்புள்ளி தேவையற்றது..

தம்பி கூர்மதியன் சொன்னது…

அவஸ்தயானது//

அவஸ்தை..

தம்பி கூர்மதியன் சொன்னது…

தான்,
காத்திருக்க //

தொடர்குறி வந்திருக்க வேண்டும்..

தம்பி கூர்மதியன் சொன்னது…

சமர்த்தியமாய்
வார்த்தைகளில் வேவு
பார்ப்பது ஏன்?....//

உன்னய சந்தேக படுறாரு லூசு.!!

நிரூபன் சொன்னது…

சிறிய இடைவேளையின் பின்னர் மீண்டும் வந்திருக்கிறீங்க..
வருக! வருக! அக்காச்சி

நிரூபன் சொன்னது…

ஒவ்வோர் பந்திக் கவிதைகளிலும் காதலின் வித்தியாசமான உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறீங்க.

அருமையான கவிதை சகோ.

நிரூபன் சொன்னது…

ஒவ்வோர் பந்திக் கவிதைகளிலும் காதலின் வித்தியாசமான உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறீங்க.

அருமையான கவிதை சகோ.

விக்கியுலகம் சொன்னது…

அழகான கவிதை நன்றி!

ரேவா சொன்னது…

சௌந்தர் said...
நீ பேசிவிட்டு போனதிலிருந்து
இருப்புக் கொள்ளவில்லை
இதயம்....
மறுபடி ஒருமுறை
உன் குரல் கேட்க
காத்திருக்கிறது ஆவலோடு..///


உடனே போன் போட்டு பேச வேண்டி தானே...!!

அதானே இது எனக்கு தோணலையே தம்பி...ஹி ஹி நன்றி

ரேவா சொன்னது…

சௌந்தர் said...
அனைவரிடமும் நட்பாய்
பழகும் நீ,
என்னிடம் என் எண்ணம்
அறிய, சமர்த்தியமாய்
வார்த்தைகளில் வேவு
பார்ப்பது ஏன்?.... ////

ஜேம்ஸ் பான்ட் லவ் பண்ணா அப்படி தான்

ஜேம்ஸ் பான்ட் லவ் அஹ நம்ம அந்த அளவுக்கெல்லாம் வொர்த் இல்லையே

ரேவா சொன்னது…

சௌந்தர் said...

அளவின்றி பேசுபவள் நான்,
உன் , பார்வை
தாக்கத்திருக்கு பிறகு
அளந்து அளந்தே பேசிகின்றேன்...///

ஏன் பயந்துட்டியா...???

பயமா எனக்கா?....

ரேவா சொன்னது…

சௌந்தர் said...

மழையில் உன் குடைக்குள்,
வரவேண்டும்
என்ற எண்ணத்தில்,
நான் மறைத்து வைத்த குடையை,
என்னைப் போல்
நீயும் மறைத்து வைத்ததால்,
மழையில் நனைந்த,
நம் காதலை என்ன செய்வது....///

ம்ம்ம் ரெண்டு பேரும் நல்லா இருங்க..!!!

ஹி ஹி ஏதோ உன் புண்ணியம்

ரேவா சொன்னது…

சௌந்தர் said...

காதல் அவஸ்தயானது தான்,
காத்திருக்க சொல்லிவிட்டு,
வேலைப் பளு என்று
நீ அனுப்பும்
குறுந்தகவலை எரிச்சலோடு
பார்க்கும் போது....///

ஹி ஹி ஹி ஹி :))


சகோ இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்...

ரேவா சொன்னது…

A.R.ராஜகோபாலன் said...

அழகான கவிதைகளின் அற்புத அணிவகுப்பு

நன்றி சகோ உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்

ரேவா சொன்னது…

சௌந்தர் said...

விலகி விலகி
சென்றாலும்,
விருச்சமாய் நீ
எனக்குள்ளே...///

சரி தான்.... :))

எல்லாமே நல்லா இருக்கு :))

நன்றி நன்றி நன்றி சௌந்தர்,...உனது வருகைக்கும் வாழ்த்துக்கும்

ரேவா சொன்னது…

sulthanonline said...

welcome back.
வந்ததும் அசத்தலான காதல் கவிதைகள். அனைத்து கவிதை தொகுப்புகளும் சூப்பர்.

நன்றி நண்பரே...உங்கள் அன்புக்கும், வருகைக்கும்

ரேவா சொன்னது…

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

வாங்க தோழி..

வந்தேன் நண்பரே

ரேவா சொன்னது…

தமிழ்வாசி - Prakash said...

பதிவுலகிற்கு மீண்டும் வந்தாச்சா...

ஹ ஹ வந்தாச்சு நண்பா

ரேவா சொன்னது…

தமிழ்வாசி - Prakash said...

நீ முத்தம்
கேட்க்கும் அழகுக்கே
ஆயிரம் முத்தம் கொடுக்கலாம்....>>>

ஆகா...ஆகா....ஆகா....

ஹ ஹ நன்றி தமிழ்வாசி நண்பரே, உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்....

ரேவா சொன்னது…

மாலதி said...

//அனைவரிடமும் நட்பாய்
பழகும் நீ,
என்னிடம் என் எண்ணம்
அறிய, சமர்த்தியமாய்
வார்த்தைகளில் வேவு
பார்ப்பது ஏன்?....//

நல்லா இருக்கு

நன்றி மாலதி உங்கள் வருகைக்கும், அன்பான மறுமொழிக்கும்

ரேவா சொன்னது…

angelin said...

welcome back revaa !!
சின்ன ப்ரேக்குக்கு அப்புறம் அருமையான காதல் கவிதை ..

நன்றி தோழி....

ரேவா சொன்னது…

# கவிதை வீதி # சௌந்தர் said...

////
கவிதையில் எல்லாம்
சொல்லிவிட முடியாத
உன் காதலை,
உன்னோடு இருக்கும் போது
உணர்கின்றேன்..
இது உனக்கே உண்டான
ஒன்று.../////

அசத்தல் வரிகள்..

நன்றி நண்பரே...உங்கள் அன்புக்கும் வருகைக்கும்

ரேவா சொன்னது…

# கவிதை வீதி # சௌந்தர் said...

மீண்டும் பதிவுலகம் வந்ததற்க்கு வாழ்த்துக்கள்...

உங்கள் வருகை பிரகாசிக்கட்டும்..


மிக்க நன்றி நண்பரே....

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

மறுபடி ஒருமுறை
உன் குரல் கேட்க
காத்திருக்கிறது ஆவலோடு..//

என்னது மாமா பேசிட்டாரா.!!?


ஆமாம் பேசுனாரு....அட போ பா

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

உன் வெக்கச்சிரிப்பு...//

வெட்கமா.!!? ஹி ஹி

சரி விடு, எனக்கு வராத ஒன்னு அதன்.. ஹி ஹி உன் கமெண்ட் எல்லாம் பப்ளிஷ் பண்ணுறதுக்கு முன்னாடியே, நீ சொன்ன அத்தனை பிழைகளையும் சரி செய்து விட்டேன் கூர்.... நன்றி

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

சமர்த்தியமாய்
வார்த்தைகளில் வேவு
பார்ப்பது ஏன்?....//

உன்னய சந்தேக படுறாரு லூசு.!!

அப்படியா?...இந்நேரம் நீ அருவாள எடுத்துட்டு கிளம்பிருக்க வேணாம்... ஹி ஹி

ரேவா சொன்னது…

நிரூபன் said...

சிறிய இடைவேளையின் பின்னர் மீண்டும் வந்திருக்கிறீங்க..
வருக! வருக! அக்காச்சி


நன்றி நன்றி நன்றி சகோ...நலமா?

ரேவா சொன்னது…

நிரூபன் said...

ஒவ்வோர் பந்திக் கவிதைகளிலும் காதலின் வித்தியாசமான உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறீங்க.

அருமையான கவிதை சகோ.

நன்றி சகோ, உன் வருகைக்கும், மறக்காத அன்பிற்கும்

ரேவா சொன்னது…

விக்கியுலகம் said...


அழகான கவிதை நன்றி!


நன்றி சகோ உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்

சௌந்தர் சொன்னது…

சௌந்தர் said...

காதல் அவஸ்தயானது தான்,
காத்திருக்க சொல்லிவிட்டு,
வேலைப் பளு என்று
நீ அனுப்பும்
குறுந்தகவலை எரிச்சலோடு
பார்க்கும் போது....///

ஹி ஹி ஹி ஹி :))


சகோ இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்...////

இல்ல உன்ன நினைச்சு பார்த்தேன் அதான் சிரிப்பு வருது ஒரு அஞ்சு நிமிஷம் குறுஞ்செய்தி வரலைனா நீ எப்படி ஆகுறா எனக்கு தெரியும் ல :))

சௌந்தர் சொன்னது…

சௌந்தர் said...
நீ பேசிவிட்டு போனதிலிருந்து
இருப்புக் கொள்ளவில்லை
இதயம்....
மறுபடி ஒருமுறை
உன் குரல் கேட்க
காத்திருக்கிறது ஆவலோடு..///


உடனே போன் போட்டு பேச வேண்டி தானே...!!

அதானே இது எனக்கு தோணலையே தம்பி...ஹி ஹி நன்றி///

நீ எல்லாம் என் அக்கா... வேதனை அவமானம் வெட்கம்...!!!

வேங்கை சொன்னது…

வருகைக்கு வாழ்த்துக்கள் ரேவா ...
கவிதை அனைத்துமே அருமை அருமை அருமை

சே.குமார் சொன்னது…

அருமையான கவிதை.

எவனோ ஒருவன் சொன்னது…

மீண்டும் உங்கள் பதிவுகளைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ரேவா....

கலக்கல் ரேவா. ஒவ்வொரு கவிதையும் அழகு. அதிலும் குறிப்பாக இந்த கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தன.... Back with a bang!!!

உன் விசாரிப்புகளுக்கு
பிறகு,
சுகமாய் தெரிகிறது
என் காய்ச்சல்.....
.
மழையில் உன் குடைக்குள்,
வரவேண்டும்
என்ற எண்ணத்தில்,
நான் மறைத்து வைத்த குடையை,
என்னைப் போல்
நீயும் மறைத்து வைத்ததால்,
மழையில் நனைந்த,
நம் காதலை என்ன செய்வது....

விஜயன் சொன்னது…

அழகான கவிதை நயம்,காதல் ஊறித் ததும்பும் வரிகள்...அருமை சகோதரி

Kavi Tendral சொன்னது…

ஒவ்வோர் பந்திக் கவிதைகளிலும் காதலின் வித்தியாசமான உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறீங்க.