உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

வரமாய் வந்த நட்பு



நீ என்னைத் திருத்தி தான் 
கொடுத்தாய்,
உன் நட்பால் திருப்பம் பெற்றது
என் வாழ்க்கை...

எப்போதோ விட்டு போன
காதலை விட ,
விலகாமல் நீ தரும்
ஆறுதலில் அழுத்தமாய்
உன் நட்பு....

*
சண்டைகளுக்குப் பின்னும்
நான் தோள் சாயும்
இன்னொரு அன்னையாய்
உன் நட்பு...

*
எனக்கு வேண்டியதை
நான் வேண்டாமலே
நீ கொடுத்தபோதும்,
உனக்கு வேண்டியதை
உரிமையோடு 
நீ எடுத்த போதும்,
அழகாய் தெரிந்தது 
உன் நட்பு...

*
என் சந்தோஷத்தை
இரட்டிப்பாக்கவும்,
என் வேதனையை
இல்லாமல் போக்கவும்,
மருந்தாய் வந்தது
உன் நட்பு...

*
எனக்காய் நீயும்,
உனக்காய் நானும்,
உள்ளார்ந்த தோழமையில்,
உயிர் சிலிர்ந்த பொழுதுகளில்
காலம் மறந்த வேளைகளில்,
என அத்துணை காலங்களிலும் 
கூட இருந்தது 
 நட்பு...

*
என் புன்னகையில்
புன்னைக்கைக்கும்
இன்னொரு இதழாய்,
என் வலிகளை தாங்கும்
இன்னொரு இதயமாய்,
எனக்காய் இருப்பது 
உன் நட்பு.....

*
உணர்தலில் பேசி,
உயிர்வரை நேசித்து,
என் பிரச்சனையில் 
அவள் சிலுவை சுமந்து,
அன்பில் சிறகை 
எனக்காய் கொடுத்து,
என்னை அவளாய்
நேசிப்பது,
நட்பு...

*
வாழும் நேரத்திலும்,
நான் வீழும் நேரத்திலும்,
என்னைத் தாங்கிப் பிடிக்கும்,
இன்னொரு தோளாய்
நட்பு...

ஆம்............
என் வாழ்வின் 
வரமாய் வந்தது 
உன் நட்பு 




  பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்......................என் வாழ்வின் துணை நின்ற அத்துணை இனிய இதயத்திற்கும்  நண்பர்கள் தின வாழ்த்துக்கள்............... 

71 கருத்துகள்:

கோகுல் சொன்னது…

வரமாய் வந்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

erodethangadurai சொன்னது…

தாயிடமும் தந்தையிடமும்
மனைவியிடமும் செயிடமும்
உலகத்தில் யாரிடமும்
கிடைக்காத உறவு
நண்பர்களிடம் மட்டுமே கிடைக்கும் ..!

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ரேவதி ....!

மாணவன் சொன்னது…

அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வரமாய் வந்தது தான் நட்பு.
கவிதை அருமை...
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

Ram சொன்னது…

உன் நட்பால் திருப்பம் பெற்றது
என் வாழ்க்கை...//

நட்பு டிரைவரு உங்க வாழ்க்கை பஸ் ஆ மேடம்........ திருப்பம் வந்திருக்காம்...

Ram சொன்னது…

எப்போதோ விட்டு போன
காதலை விட ,//

எப்போதோனா உங்களுக்கு இப்ப வயசு என்ன ஒரு 62 இருக்குமா.?

Ram சொன்னது…

சண்டைகளுக்குப் பின்னும்
நான் தோள் சாயும்//

ஏன் உங்க வீட்டுல கட்டுலு தலையணைனு ஒண்ணும் இல்லயா.?

Ram சொன்னது…

//உனக்கு வேண்டியதை
உரிமையோடு
நீ எடுத்த போதும்,//

திருட்டுக்கு இப்படி ஒரு பெயர் இருக்கோ.?

vetha (kovaikkavi) சொன்னது…

சண்டைகளுக்குப் பின்னும்
நான் தோள் சாயும்
இன்னொரு அன்னையாய்
உன் நட்பு...
nalla nadpu..
Vetha. Elangathilakam
http://www.kovaikkavi.wordpress.com

Ram சொன்னது…

இரட்டிப் பாக்கவும்,//

இது ஒரே வார்த்தை.. இடையில் இடைவெளி வர கூடாது..

Ram சொன்னது…

என் வேதனையை,//

இதன் தொடர்பு அடுத்த வரியில் வருகிறது.. எனவே காற்புள்ளி இட கூடாது..

Ram சொன்னது…

மருந்தாய் வந்தது
உன் நட்பு...//

ஒருவேள டாக்டர் நட்ப பத்தி எழுதுறீங்களோ!!?

Ram சொன்னது…

என அத்துணை காலங்களிலும்
கூட இருந்தது
நட்பு...//

சரியான இம்ச புடிச்ச நட்பா இருக்கும் போல...

Ram சொன்னது…

எப்போது தொடக்கம்
என தெரியாமல்
தொடங்கும்
காதலிலும், நட்பிலும்
காலம் முடிந்தும்
இன்றும் கூடவே வருவது
உன் நட்பு......//

புரியல தெளிவுபட சொல்ல தவறிவிட்டீர்கள்.!!

Ram சொன்னது…

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

Prabu Krishna சொன்னது…

இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்....

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

சௌந்தர் சொன்னது…

நீ என்னைத் திருத்தி தான்
கொடுத்தாய்,
உன் நட்பால் திருப்பம் பெற்றது
என் வாழ்க்கை...//

ம்ம்ம் எந்த மாதரி திருப்பம்...????

சௌந்தர் சொன்னது…

என் சந்தோஷத்தை
இரட்டிப் பாக்கவும்,
என் வேதனையை,
இல்லாமல் போக்கவும்,
மருந்தாய் வந்தது
உன் நட்பு...//

என்ன மருந்து அது crocin... naaaa..??

சௌந்தர் சொன்னது…

தம்பி கூர்மதியன் சொன்னது…
இரட்டிப் பாக்கவும்,//

இது ஒரே வார்த்தை.. இடையில் இடைவெளி வர கூடாது..//

வந்துட்டாருய்யா டீச்சரு...

சௌந்தர் சொன்னது…

தம்பி கூர்மதியன் சொன்னது…
என அத்துணை காலங்களிலும்
கூட இருந்தது
நட்பு...//

சரியான இம்ச புடிச்ச நட்பா இருக்கும் போல...//

உன்ன மாதரி ஆளு கூட எல்லாம் நட்பா இருந்தா இப்படி தான் மச்சி இருக்கும்

சௌந்தர் சொன்னது…

தம்பி கூர்மதியன் சொன்னது…
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்///

எதுக்கு வாழ்த்து...???? எந்த விஷயத்திற்கு நீங்க வாழ்த்து சொல்றீங்க..????

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

மருந்தாய் வந்ததுநட்பு..

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

கூடல் பாலா சொன்னது…

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் மாப்ள !

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

சண்டைகளுக்குப் பின்னும்
நான் தோள் சாயும்
இன்னொரு அன்னையாய்
உன் நட்பு...//

அட....!!! சூப்பரப்பு......!!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

சண்டைகளுக்குப் பின்னும்
நான் தோள் சாயும்
இன்னொரு அன்னையாய்
உன் நட்பு...//

அட....!!! சூப்பரப்பு......!!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

சண்டைகளுக்குப் பின்னும்
நான் தோள் சாயும்
இன்னொரு அன்னையாய்
உன் நட்பு...//

அட....!!! சூப்பரப்பு......!!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

சூப்பர் கவிதை.......!!!!

உணவு உலகம் சொன்னது…

//என் வலிகளை தாங்கும்
இன்னொரு இதயமாய்,
எனக்காய் இருப்பது
உன் நட்பு.....//
ரசனை மிகு வரிகள்.

நிரூபன் சொன்னது…

வணக்கம் அக்காச்சி,
என் உளம் நிறைந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள் உங்களுக்கு உரித்தாகட்டும் என்று உங்களுக்கு எப்படிச் சொல்வது?
நீங்கள் தான் என் அக்காவாச்சே.

நிரூபன் சொன்னது…

ஒவ்வோர் தடவையும் இந்த கூகுள் ப்ளாக்கர் டாஷ்போர்ட் கடுப்பேற்றுகிறது,.
என் டாஷ்போர்ட்டில் உங்கள் பதிவுகள் தெரியாமல் மிஸ்ட் ஒவ்வோர் புதிய பதிவுகளையும் மிஸ்ட் பண்றேன்.

நிரூபன் சொன்னது…

எப்போதோ விட்டு போன
காதலை விட ,
விலகாமல் நீ தரும்
ஆறுதலில் அழுத்தமாய்
உன் நட்பு....//

நட்பின் பெருமையினை எடுத்துரைக்க இதனை விட வேறு வார்த்தைகளா வேண்டும்?
காதல் வலியினைத் தரும்,
நட்பு எப்போதுமே இனிமை தரும் என்பதனை அற்புதமாக்ச் சொல்லியிருக்கிறீங்க.

நிரூபன் சொன்னது…

நட்பின் பெருமைதனைத் தத்ரூபமாகக் கவிதை மூலம் விளக்கியிருக்கிறீங்க. அருமை.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

வாழ்வின்
வரமாய் வந்த நட்புக்கு
இனிய நண்பர்தின வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

simply super.

சக்தி கல்வி மையம் சொன்னது…

வாழ்த்துக்கள் தொழி..

பெயரில்லா சொன்னது…

///என் வலிகளை தாங்கும்
இன்னொரு இதயமாய்,///

மிக அழகிய வரிகள் ரேவா....

அழகிய நட்பு அனைவருக்கும் அமைவதில்லை
அழகாய் அமைந்த உனக்கு என் நட்பின் தின வாழ்த்துக்கள்!

எவனோ ஒருவன் சொன்னது…

நான் ரொம்ப லேட். Belated wishes Revaa.

உண்மை தான் என்றாலும் இந்த வரிகள் ஏதோ நெருடலாய் இருக்கின்றது,

எப்போதோ விட்டு போன
காதலை விட ,
விலகாமல் நீ தரும்
ஆறுதலில் அழுத்தமாய்
உன் நட்பு....

Unknown சொன்னது…

வாழ்க்கையில் பராமரிப்பது மிகவும் கடினம் இவை எல்லாவற்றையும் தாண்டி, நட்பு பட்டியலில் வகிக்கிறது. ரஜினி தனது தொழில் மற்றும் தனிப்பட்ட நட்பு பராமரிக்கப்படுகிறது எப்படி என்று இங்கே சொடுக்கவும்.
http://bit.ly/n9GwsR

Senthil Kumar M சொன்னது…

நல்ல கவிதை..நல்ல நண்பர்களுக்காக..அன்புடன்,மு.செந்தில்குமார்தமிழன் என்பதில்தான் எத்தனை பெருமை!!!

Senthilkumar M சொன்னது…

நல்ல கவிதை..நல்ல நண்பர்களுக்காக..அன்புடன்,மு.செந்தில்குமார்தமிழன் என்பதில்தான் எத்தனை பெருமை!!!

ரேவா சொன்னது…

கோகுல் கூறியது...

வரமாய் வந்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

உங்களுக்கும் என் வாழ்த்துக்களும் நன்றிகளும் நண்பரே

ரேவா சொன்னது…

ஈரோடு தங்கதுரை கூறியது...

தாயிடமும் தந்தையிடமும்
மனைவியிடமும் செயிடமும்
உலகத்தில் யாரிடமும்
கிடைக்காத உறவு
நண்பர்களிடம் மட்டுமே கிடைக்கும் ..!

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ரேவதி ....!


உங்களுக்கும் மனமார்ந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பரே

ரேவா சொன்னது…

மாணவன் கூறியது...

அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்!

உங்களுக்கும் மனமார்ந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பரே

ரேவா சொன்னது…

'பரிவை' சே.குமார் கூறியது...

வரமாய் வந்தது தான் நட்பு.
கவிதை அருமை...
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.


வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி, நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பரே

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் கூறியது...

சகோ நீ சொன்ன அனைத்து பிழைகளும் திருத்தப்பட்டது...மிக்க நன்றி சகோ

ரேவா சொன்னது…

kavithai கூறியது...

சண்டைகளுக்குப் பின்னும்
நான் தோள் சாயும்
இன்னொரு அன்னையாய்
உன் நட்பு...
nalla nadpu..
Vetha. Elangathilakam
http://www.kovaikkavi.wordpress.com


உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழி..தொடர்ந்து வாருங்கள்,

ரேவா சொன்னது…

பலே பிரபு கூறியது...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்....

மிக்க நன்றி நண்பரே...உங்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

ரேவா சொன்னது…

Rathnavel கூறியது...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.


உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா

ரேவா சொன்னது…

சௌந்தர் கூறியது...

தம்பி கூர்மதியன் சொன்னது…
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்///

எதுக்கு வாழ்த்து...???? எந்த விஷயத்திற்கு நீங்க வாழ்த்து சொல்றீங்க..????


சௌந்தர் உன்னோட கமெண்ட் அஹ இன்னும் கூர் பாக்கல, பாத்தா இருக்குடி உனக்கு... ஹி ஹி நன்றி தம்பி

ரேவா சொன்னது…

முனைவர்.இரா.குணசீலன் கூறியது...

மருந்தாய் வந்ததுநட்பு..


உங்கள் முதல் வருக்கைக்கும் மிக்க நன்றி முனைவர்.இரா.குணசீலன் அவர்களே...

ரேவா சொன்னது…

தமிழ்வாசி - Prakash கூறியது...

அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்


வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா...உங்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

ரேவா சொன்னது…

koodal bala கூறியது...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் மாப்ள !

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் மச்சி... ஹி ஹி

ரேவா சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...

சண்டைகளுக்குப் பின்னும்
நான் தோள் சாயும்
இன்னொரு அன்னையாய்
உன் நட்பு...//

அட....!!! சூப்பரப்பு......!!!


வாங்க மனோ அண்ணா, நலமா? என்ன எங்க பக்கம் இப்போ வரவே மாற்றேங்க?... ஹி ஹி

இந்திரா சொன்னது…

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
(லேட்டா சொன்னாலும்.....)

ரேவா சொன்னது…

FOOD கூறியது...

//என் வலிகளை தாங்கும்
இன்னொரு இதயமாய்,
எனக்காய் இருப்பது
உன் நட்பு.....//
ரசனை மிகு வரிகள்.

நன்றி ஆபீசர்...உங்கள் முதல் வருகை நண்பர்கள் தினத்தில்...இனி தொடர்ந்து வாருங்கள்...மிக்க நன்றி உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்

ரேவா சொன்னது…

நிரூபன் கூறியது...

வணக்கம் அக்காச்சி,
என் உளம் நிறைந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள் உங்களுக்கு உரித்தாகட்டும் என்று உங்களுக்கு எப்படிச் சொல்வது?
நீங்கள் தான் என் அக்காவாச்சே.


ஏன் அக்கா னா, நல்ல தோழியாவும் இருக்க முடியாதா சகோ? இரு இரு உன்ன வேற மாதிரி டீல் பண்ணிக்கிறேன்..ஹ ஹ

ரேவா சொன்னது…

நிரூபன் கூறியது...

ஒவ்வோர் தடவையும் இந்த கூகுள் ப்ளாக்கர் டாஷ்போர்ட் கடுப்பேற்றுகிறது,.
என் டாஷ்போர்ட்டில் உங்கள் பதிவுகள் தெரியாமல் மிஸ்ட் ஒவ்வோர் புதிய பதிவுகளையும் மிஸ்ட் பண்றேன்.


ஆமாம் சகோ நான் கூட உன் மறுமொழிகளை ரொம்ப மிஸ் பண்ணுறேன்,,, இதுக்கு என்ன பண்ணலாம்? நீயே ஒரு ஐடியா சொல்லேன்

ரேவா சொன்னது…

நிரூபன் கூறியது...

எப்போதோ விட்டு போன
காதலை விட ,
விலகாமல் நீ தரும்
ஆறுதலில் அழுத்தமாய்
உன் நட்பு....//

நட்பின் பெருமையினை எடுத்துரைக்க இதனை விட வேறு வார்த்தைகளா வேண்டும்?
காதல் வலியினைத் தரும்,
நட்பு எப்போதுமே இனிமை தரும் என்பதனை அற்புதமாக்ச் சொல்லியிருக்கிறீங்க.


நட்பு என்னைக்கும் இனிமையான விடயம் தான். நன்றி சகோ உன் அன்பான மறுமொழிக்கு, வழக்கம் போல நீ பார்முக்கு வந்துட்ட போல, ஹ ஹ

ரேவா சொன்னது…

இராஜராஜேஸ்வரி கூறியது...

வாழ்வின்
வரமாய் வந்த நட்புக்கு
இனிய நண்பர்தின வாழ்த்துக்கள்.


நன்றி தோழி உங்களுக்கும் என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..அதோடு நன்றிகள் உங்கள் வருகைக்கு...தொடர்ந்து வாருங்கள் தோழி

ரேவா சொன்னது…

siva கூறியது...

simply super.

நன்றி சிவா உனக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

ரேவா சொன்னது…

!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

வாழ்த்துக்கள் தொழி..


நன்றி நண்பரே உங்களுக்கும் என் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

ரேவா சொன்னது…

ஷீ-நிசி கூறியது...

///என் வலிகளை தாங்கும்
இன்னொரு இதயமாய்,///

மிக அழகிய வரிகள் ரேவா....

அழகிய நட்பு அனைவருக்கும் அமைவதில்லை
அழகாய் அமைந்த உனக்கு என் நட்பின் தின வாழ்த்துக்கள்!


நன்றி நண்பரே உங்களுக்கும் என் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் கூறியது...

நான் ரொம்ப லேட். Belated wishes Revaa.

உண்மை தான் என்றாலும் இந்த வரிகள் ஏதோ நெருடலாய் இருக்கின்றது,

எப்போதோ விட்டு போன
காதலை விட ,
விலகாமல் நீ தரும்
ஆறுதலில் அழுத்தமாய்
உன் நட்பு....


சுடும் உண்மைகள் நண்பா...நிதர்சனம் அறிவாய்...நன்றி நண்பா உன் வருகைக்கு, உனக்கும் என் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

ரேவா சொன்னது…

Unknown கூறியது...

வாழ்க்கையில் பராமரிப்பது மிகவும் கடினம் இவை எல்லாவற்றையும் தாண்டி, நட்பு பட்டியலில் வகிக்கிறது. ரஜினி தனது தொழில் மற்றும் தனிப்பட்ட நட்பு பராமரிக்கப்படுகிறது எப்படி என்று இங்கே சொடுக்கவும்.
http://bit.ly/n9GwsR


முகமறியா நட்பின் வருகைக்கு நன்றி,,,அதோடு என் நண்பர்கள் தின வாழ்த்துக்களும்

ரேவா சொன்னது…

Senthil Kumar M கூறியது...

நல்ல கவிதை..நல்ல நண்பர்களுக்காக..அன்புடன்,மு.செந்தில்குமார்தமிழன் என்பதில்தான் எத்தனை பெருமை!!!

முதலில் உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி... நிச்சயம் தமிழன் என்பதில் தமிழனுக்கு பெருமையே, தமிழால் இணைந்திடுவோம்...வருக்கைக்கு நன்றி தொடர்ந்து வாருங்கள்

ரேவா சொன்னது…

இந்திரா கூறியது...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
(லேட்டா சொன்னாலும்.....)


உங்களின் சமீபத்திய வருகையால் மகிழ்கின்றேன் தோழி...உங்களுக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.....

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) சொன்னது…

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்....

கவிதை பூக்கள் பாலா சொன்னது…

அழகிய நட்பின் ஆழம் இதுதான் கவிதை உங்கள் நட்பிற்கு நன்றி பாராட்டும் தோழன்

சாகம்பரி சொன்னது…

என் மனம் கவர்ந்த இந்தப் பதிவை நாளைய (3/11/11 -வியாழக்கிழமை) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். நேரம் கிட்டும்போது வந்து பாருங்கள். http://blogintamil.blogspot.com/