
இருள் சூழ்ந்த
இவ்வடர்காட்டின்
ஆழமறியாமல்
கடக்க துணிகின்றேன்
நான்...
புலங்கியறியா
பாதையாதனால்,
எவ்வளவு தொலைவு
என்று புலனாகாமலே
சிறிது சிறிதாய்
கடக்கின்றேன்..
ஆழமாய்ச்செல்லச் செல்ல
புதையுண்ட
ஆசைகள், கனவுகளென,
அத்தனை நிகழ்வுகளும்
கிளைபரப்பி,
தன் நிகழ்வுகளை
தக்கவைத்திருக்கின்றன
அக்காட்டில்..
மேலும்...

ஏதேதோ
பேச நினைத்த
வேளைகள்,
புரிந்தும் புரியாமலுமாய்
பல உரையாடல்கள்..
உனக்கு மட்டுமே
புரிந்த
என் மெளனம்,
இன்னும் இன்னும்
என தாகம் கொண்ட
பேசித் தீர்க்கா
வார்த்தைகள்,
எதைச் சொல்ல,
எதை மெல்லவென
புரியாத பதட்டம்..
என அத்தனையும்
அரங்கேறும்
காதலர் பேச்சில்...
முந்தைய பதிவு...

நன்றி : கூகிள்
பிறந்த அன்றே
கள்ளிப்பாலுக்கு
காவுகொடுக்கப்பட்டது
என் வாழ்க்கை..
விதியின் பயனாய்
வழியில்லா இடத்தில்
வக்கற்று பிறந்தேன்..
கருவில் இருக்கையிலே,
சிங்கமென்றான் அப்பன்,
சீமானென்றாள் அம்மா,
குலம் தழைக்க வரும்
வித்தென்றாள் பாட்டி..
நாள் தள்ளத் தள்ள
கருப்பையை...

அன்னையின் வடிவில் நண்பன்,அழைக்கும் நேரத்தில் ஆறுதல்,பசிக்கும் பொழுதில் உணவு,படிக்கும் நேரத்தில் புத்தகம்,படுத்தவுடன் உறக்கம்,கொஞ்சம் கொஞ்சம் சந்தோஷம்,சரிபரிணாமத்தில் முன்னேற்றம்,நண்பனை போன்ற எதிரிகள்,எதிரியை தாங்கும் வலிமைகள்,உரக்க்ப் பேசும் உதடுகள்,உண்மையை உரைக்க உரிமைகள்,எளிமையை நாடும் இதயம்,பழையதை...

என் கவிதைகள்
அனைத்தும்
உன் குறும்புத்தனத்தில்
விளைந்தவை..
ஒரு போதும் நிறுத்திவிடாதே,
உன் குறும்புத்தனத்தை
கோவித்துக்கொள்ளும்
என் கவிதைகள்... *என்னை பார்க்காமல்
ஒதுக்கும்
உன் கண்களில் தான்
நமக்கான காதல்
ஒளிந்திருக்கின்றது.. ...

நன்றி : கூகிள்
மூடிய விழிகளுக்குள்ஒரு கருநிற போராட்டம்...சொல்லமுடியா இடத்திற்கு என்னைஇழுத்து வருகிறதுஅது...கைகட்டி, விழி மூடிபதுங்கிக் கிடக்கிறது அந்த அடர் இருட்டில்...கொஞ்சம் கொஞ்சமாய்தைரியம் கிளம்ப,மெளனமாய் என் அருகில் வருகின்றது
அது. பின்னர் வாய் திறந்து வசிய...

நன்றி : கூகிள் டீச்சர்
ரேவதி மணி எட்டாச்சு எந்திரி, ஆயாம்மா வந்திடுவாங்க, ஸ்கூலுக்கு போகன்னும்ல,
போமா இன்னைக்கு எனக்கு காய்ச்சல் நான் போகமாட்டேன்...
ஒழுங்கா எந்திரி இல்லாட்டி அடி வாங்குவ,
ஜய்ய போ, நான் போகமாட்டேன்.....
எழுந்திரிடி, பொம்பள பிள்ளைக்கு என்ன வீம்பு, கொன்னுடுவேன்...
நான்...

ஆண்டிற்க்கொரு முறைமகளிர் தினம்,அங்கலாய்க்கவோ, ஆனந்தக்கூத்தாடவேமுடியவில்லை எமக்கு...
கைகளை கட்டிவிட்டு,கர்ணம் பாயச்சொல்கிறஉலகிது...
சாதனைகள் புரிந்திடாலும்சாகச வாய்களுக்குசாக்கடை புழுவானோம்...
கிடைத்தனயாவும் யாம்நினைத்தனயன்றி,இருப்பதைக் கொண்டே மகிழ்ந்திட்டோம்...
அழுதிடும் மனதில்சிரித்திடும் உதட்டினின் துணையினால்,துயரினை...

Thanks :Google
அவசியம் ஏதும் இல்லாவிடினும் என்னை ஆண்ட என் கனவு வீட்டை கவிதை செய்து வைக்கிறேன்...
கூரை வேய்ந்த வீட்டிலிருந்து, மாடிவீடாய் மறுஜென்மம் கொண்டதுஅப்பாவின் வியர்வை காசில்...
அது வ்ரை வாயடைத்த கூட்டம் நான் பிறந்த வேளை என்றது....
என்ன சொல்ல என்வீட்டைப்பற்றி,எனக்கு...

THANKS: Google
இந்த நேரம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்துவிடும் நித்யா இன்று தான் அலுவலகம் கிளம்பும் நேரமாகியும் வராததை அடுத்து அவளுக்கு போன் செய்தான் பிரபஞ்சன்... அவள் போன் அணைத்து வைக்கப்பட்டது என்ற செய்தி அவனுக்கு பதட்டத்தை வரவைக்க, நித்யாவின் அலுவலகத்திற்க்கு தொடர்பு கொண்டான், அங்கும் அவள் கிளம்பி...

வணக்கம் பதிவுலக உறவுகளே.... இன்னைக்கு ரொம்ப சந்தோசமான நாட்கள்ல ஒன்னுன்னு சொல்லலாம்.. என் நண்பனோட திருமணம் இன்னும் கொஞ்ச நேரத்துல நடக்க போகுது...தவிர்க்க முடியாத சூழ்நிலை அதால என்னால போகமுடியாட்டியும் மனசு முழுசும் வசந்தோட கல்யாண நிகழ்வுகளில் வட்டமிட்டுகிட்டு இருக்குன்னு தான் சொல்லணும்.. இத ஒரு வாழ்த்து...