உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 23 மார்ச், 2012

துளி துளியாய் காதல்

 என் கவிதைகள்
அனைத்தும்
உன் குறும்புத்தனத்தில்
விளைந்தவை..
ஒரு போதும் நிறுத்திவிடாதே,
உன் குறும்புத்தனத்தை
கோவித்துக்கொள்ளும்
என் கவிதைகள்...
           *
என்னை பார்க்காமல்
ஒதுக்கும்
உன் கண்களில் தான்
நமக்கான காதல்
ஒளிந்திருக்கின்றது..
           *
எழுதாக் கவியாகிறேன்
உன் ஒவ்வொரு
பார்வையிலும்...
         *

வேண்டாம் வேண்டாம்
என்றாலும்
வேண்டும் வேண்டுமென்ற
என் வேட்கையைத் தூண்டுகிறது
உன் பார்வை ..
     *

என் கவிதைகள்
அனைத்தும் கற்பனையே..
ஆனால்
என் காதல்
கற்பனையில் கிடைத்த
வரம்...
     *

என் எல்லாக்கவிதையை
விடவும்
உன் முத்தம் பெற்ற
என் முதல் கவிதையே
என் மொத்த கவிதைக்கான
முதலீடு...
     *

கந்துவட்டிக்காரன்
மாதிரி
பிச்சு பிச்சு
காதல் கொடுக்கிறாய்..
முத்தம் என்று வந்துவிட்டால்
மொத்தமாய் கேட்கிறாய்
கொலைகாரா?...!!!!
    *

உன் ஒரப்பார்வைக்காய்
தன்னை மேலும் மேலும்
அழகாக்கிகொண்டே
போகிறது
என் கவிதைகள்..
     *
உன் காதலை
என் கவிதையில்
மிஞ்சவேண்டுமென்பதே
என் வாழ்நாள் தவம்..
    *

சொர்க்கத்தையும்,
நரகத்தையும்
ஒரே மூச்சில்
எப்படி காட்டிவிட்டு போகிறாய்..
தூரப்புன்னகை,
கிட்ட வந்ததும்
அனல் பார்வையாய்...
     *

 ஆயிரம் முறை
என்னை
அழகு படுத்திய சந்தோஷம்
உன் அரை நிமிட
தலைகோதலில் கிடைத்துவிடுகிறது
எனக்கு...
     *

கடலலையில் காலடித்தடம்
தேடும் குழந்தையாய்
மாறிப்போகிறேன்,
உன்னுள்
என்னை
தொலைத்துவிட்டு...
     *

நானே மொழியாகிறேன்
நீ என்னை
வாசிக்கும் போதெல்லாம்..
நானே கவியாகிறேன்
நீ என்னை
நேசிக்கும் நேரங்களில்லெல்லாம்..
     *

உனக்கு பிடித்ததை
தெரிந்து வைத்திருக்கிறேனோ
இல்லையோ
உன் கோவத்தை
ரசிப்பதற்க்காகவே
உனக்கு பிடிக்காதவைகளை
நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றன
என் செய்கைகள்..
     *

இலக்கணங்கள் மீறும் போது
புதுக்கவிதையாகிறது,
நட்பு மாறும் போது
காதலாகிறது...
     *


முந்தைய பதிவு : இது அதுவா?


17 கருத்துகள்:

சிட்டுக்குருவி சொன்னது…

மிக அருமையான கவிதை......வாழ்த்துக்கள்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நானே மொழியாகிறேன்
நீ என்னை
வாசிக்கும் போதெல்லாம்..
நானே கவியாகிறேன்
நீ என்னை
நேசிக்கும் நேரங்களில்லெல்லாம்..//

ஆஹா ஆஹா ஆஹா.......!!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இலக்கணங்கள் மீறும் போது
புதுக்கவிதையாகிறது,
நட்பு மாறும் போது
காதலாகிறது...//

அய் இது புதுசா இருக்கே...!!!!

செய்தாலி சொன்னது…

//நானே மொழியாகிறேன்
நீ என்னை
வாசிக்கும் போதெல்லாம்..
நானே கவியாகிறேன்
நீ என்னை
நேசிக்கும் நேரங்களில்லெல்லாம்.//

ம்ம்ம் மிக அருமையான வரிகள்
நல்ல கவிதை கவிதாயினி

சசிகலா சொன்னது…

உனக்கு பிடித்ததை
தெரிந்து வைத்திருக்கிறேனோ
இல்லையோ
உன் கோவத்தை
ரசிப்பதற்க்காகவே
உனக்கு பிடிகாதவைகளை
நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றன
என் செய்கைகள்..//
என்னைப்போலவே இருக்கிறீர்கள் ரசித்துப் படித்தேன் .

Seeni சொன்னது…

mmm..
nalla kavithai!
arumai!

ரேவா சொன்னது…

சிட்டுக்குருவி கூறியது...

மிக அருமையான கவிதை......வாழ்த்துக்கள்


மிக்க நன்றி சகோ உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

ரேவா சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...

நானே மொழியாகிறேன்
நீ என்னை
வாசிக்கும் போதெல்லாம்..
நானே கவியாகிறேன்
நீ என்னை
நேசிக்கும் நேரங்களில்லெல்லாம்..//

ஆஹா ஆஹா ஆஹா.......!!!

ஹி ஹி

ரேவா சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...

இலக்கணங்கள் மீறும் போது
புதுக்கவிதையாகிறது,
நட்பு மாறும் போது
காதலாகிறது...//

அய் இது புதுசா இருக்கே...!!!!

நன்றி அண்ணா :)

ரேவா சொன்னது…

செய்தாலி கூறியது...

//நானே மொழியாகிறேன்
நீ என்னை
வாசிக்கும் போதெல்லாம்..
நானே கவியாகிறேன்
நீ என்னை
நேசிக்கும் நேரங்களில்லெல்லாம்.//

ம்ம்ம் மிக அருமையான வரிகள்
நல்ல கவிதை கவிதாயினி


மிக்க நன்றி சகோ :)

ரேவா சொன்னது…

சசிகலா கூறியது...

உனக்கு பிடித்ததை
தெரிந்து வைத்திருக்கிறேனோ
இல்லையோ
உன் கோவத்தை
ரசிப்பதற்க்காகவே
உனக்கு பிடிகாதவைகளை
நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றன
என் செய்கைகள்..//
என்னைப்போலவே இருக்கிறீர்கள் ரசித்துப் படித்தேன் .

ரொம்ப நன்றி சசி

ரேவா சொன்னது…

Seeni கூறியது...

mmm..
nalla kavithai!
arumai!


நன்றி சகோ :)

மனசாட்சி சொன்னது…

கவிதை.. காதல்... பார்வை.. ரசனை..

படைப்பாளிக்கு வாழ்த்துக்கள்

சே.குமார் சொன்னது…

கவிதை அழகு...

கீதமஞ்சரி சொன்னது…

துளித்துளியாய்க் காதல், பெருவெள்ளமெனக் கவிதைகள். ஒவ்வொன்றிலும் நனைந்து குளிர்ந்தேன். பாராட்டுகள் ரேவா.

நிலவன்பன் சொன்னது…

துளி துளியாய் காதல் பெருகி அருவியாக வாழ்த்துக்கள்!

எவனோ ஒருவன் சொன்னது…

இது நம்ம ஏரியா :-) காதல் கவிதைகள்ல உங்கள அடிச்சுக்க ஆளே இல்ல ரேவா. அசத்தல் :-)

எல்லாக் கவிதைகளும் அருமை.

என்னை மிகவும் கவர்ந்தது,

உனக்கு பிடித்ததை
தெரிந்து வைத்திருக்கிறேனோ
இல்லையோ
உன் கோவத்தை
ரசிப்பதற்க்காகவே
உனக்கு பிடிக்காதவைகளை
நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றன
என் செய்கைகள்..