உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 27 மார்ச், 2012

தீயிலெறியும் ஆசைகள்

 நன்றி : கூகிள்


பிறந்த அன்றே
கள்ளிப்பாலுக்கு
காவுகொடுக்கப்பட்டது
என் வாழ்க்கை..

விதியின் பயனாய்
வழியில்லா இடத்தில்
வக்கற்று பிறந்தேன்..

கருவில் இருக்கையிலே,
சிங்கமென்றான் அப்பன்,
சீமானென்றாள் அம்மா,
குலம் தழைக்க வரும்
வித்தென்றாள் பாட்டி..

நாள் தள்ளத் தள்ள
கருப்பையை முத்திக்கொண்டு
வந்து விழுந்த
என்  உடலைக்கண்டு
அரைமயக்கத்தில்
ஆனந்த கண்ணீர்விட்டாள்
அன்னை..

ச்சீ பெண் என்றாள் பாட்டி
தானும் பெண்னென்பதை
மறந்து..

நகைவிற்கிற காசில்,
இதுக்கு கல்யாணமுடிக்கவா
கேள்வியோடு,
நாலு நெற்மணிகளை
அள்ளிக்கொண்டு வந்தார்
ஊர் பெரியவர்..

கொடிசுத்திவேற
பொறந்திருக்கு என்ற குரலால்
தாய்மாமன் இரக்கத்திற்க்கும்
இரங்கல் வாசிக்கப்பட்டது,
அங்கு..

பாரபச்சமின்றி,
எல்லார் குரலும் ஓங்கியடங்க,
புரிந்ததுயெனக்கு
பிறக்கையிலே
பாசக்கயிறோடு
வந்தவள நான் என்று..

தாயின் தனத்தில்
ஒரு சொட்டு பாலும்
அருந்தியறியா
எனக்குள் கள்ளிப்பால்
சொட்டு சொட்டாய்
செல்லச்செல்ல,
 நான் வந்த உலகிற்கே
திரும்பிச்செல்கின்றேன்..

மங்கையராய் பிறப்பதற்கே
மாதவம் செய்திட 
வேண்டுமாம்
எங்கே அந்த பாரதி,
கூட்டி வாருங்கள் 
என் சிதைக்கு,
தீயிலெறியும் என் ஆசைக்கு
ஒரு இரக்கல்பா 
எழுத...
23 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

பல நூற்றாண்டுகளாய் மாறாத அவலம்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

தற்போதை சூழலில் சிசு கொலை குறைந்திருக்கிறது என்று நினைக்கிறேன்..

இன்னும் முழுமையாக இந்த சமுதாயத்தை விட்டு நீங்கி விட்டால் நன்றாகத்தான் இருக்கும்..

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

//////தாயின் தனத்தில்
ஒரு சொட்டு பாலும்
அருந்தியறியா
எனக்குள் கள்ளிப்பால்
சொட்டு சொட்டாய்
செல்லச்செல்ல,
நான் வந்த உலகிற்கே
திரும்பிச்செல்கின்றேன்.
/////


கலங்க வைக்கும் வரிகள்...
கவிதை வீரியத்துடன் இருக்கிறது

இதை சமூகம் படித்து உணர வேண்டும்

ரேவா சொன்னது…

கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...

பல நூற்றாண்டுகளாய் மாறாத அவலம்...

உடன் வருகை கண்டு மகிழ்ந்தேன் சகோ...இன்னும் சிசுக்கொலை இங்கே நாகரீக பெயரால் நடந்துகொண்டு தானே இருக்கிறது :)

செய்தாலி சொன்னது…

ஒரு சில
கவிதைகளை வாசிக்கையில்
வெடித்து சிதறும் உணர்ச்சியால்
விழிகளில் தேங்கும்
கண்ணீர்

இன்று
நாடாளும் காலம்வந்தும்
நசுக்கப்பட்டு கொண்டாத்தான் இருக்கிறது
பெண்ணினம்

கவிதையின்
சில வரி சொற்களை
கண்டும் கேட்டும் உணர்ந்தலாலோ
வசித்த போது கனத்தது
மனம்

ரேவா சொன்னது…

கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...

தற்போதை சூழலில் சிசு கொலை குறைந்திருக்கிறது என்று நினைக்கிறேன்..

இன்னும் முழுமையாக இந்த சமுதாயத்தை விட்டு நீங்கி விட்டால் நன்றாகத்தான் இருக்கும்..

கள்ளிப்பால் கொலைகள் குறைந்து கார்பிரேட் கொலைக்கு தாவி விட்டது

ரேவா சொன்னது…

கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...

தற்போதை சூழலில் சிசு கொலை குறைந்திருக்கிறது என்று நினைக்கிறேன்..

இன்னும் முழுமையாக இந்த சமுதாயத்தை விட்டு நீங்கி விட்டால் நன்றாகத்தான் இருக்கும்..


வறுமையின் காரணமாய் பெண் சிசுக்கொலை ஏற்படின் அந்த நிலை இன்று கொஞ்சம் மாறி இருக்கிறது...

ஆனாலும் நாகரீக கொலைகள் நகருக்குள் நடந்தேறிக்கொண்டுதான் இருக்கிறது.... உங்கள் மறுமொழி உற்சாகம் தந்தது சகோ... நன்றி உங்கள் வருகைக்கும் முத்தான கருத்துரைக்கும் :)

ரேவா சொன்னது…

செய்தாலி கூறியது...

ஒரு சில
கவிதைகளை வாசிக்கையில்
வெடித்து சிதறும் உணர்ச்சியால்
விழிகளில் தேங்கும்
கண்ணீர்

இன்று
நாடாளும் காலம்வந்தும்
நசுக்கப்பட்டு கொண்டாத்தான் இருக்கிறது
பெண்ணினம்

கவிதையின்
சில வரி சொற்களை
கண்டும் கேட்டும் உணர்ந்தலாலோ
வசித்த போது கனத்தது
மனம்

மிக்க நன்றி சகோ உங்கள் உள்ளம் தொடும் கருத்துரைக்கு...

மனசாட்சி™ சொன்னது…

கவிதை சுடுகிறது......

சசிகலா சொன்னது…

மங்கையராய் பிறப்பதற்கே
மாதவம் செய்திட
வேண்டுமாம்
எங்கே அந்த பாரதி,
கூட்டி வாருங்கள்
என் சிதைக்கு,
தீயிலெறியும் என் ஆசைக்கு
ஒரு இரக்கல்பா
எழுத... //
ஆதங்க வரிகள் .

அபி சொன்னது…

வலிகள் நிறைத்த வரிகள்
சிறந்த பதிவு வாழ்த்துக்கள்

அபி சொன்னது…

வலிகள் நிறைத்த வரிகள்
சிறந்த பதிவு வாழ்த்துக்கள்

சிட்டுக்குருவி சொன்னது…

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அசத்திட்ட்ங்க....ஆமா இந்த நிலை இப்பவும் இருக்கா///

சிராஜ் சொன்னது…

இன்று தான் உங்கள் தளத்துக்கு முதல் தடவை வருகிறேன்.
அற்புதமா இருக்குங்க கவிதை.....

/* தாயின் தனத்தில்
ஒரு சொட்டு பாலும்
அருந்தியறியா
எனக்குள் கள்ளிப்பால்
சொட்டு சொட்டாய்
செல்லச்செல்ல,
நான் வந்த உலகிற்கே
திரும்பிச்செல்கின்றேன்..
*/

என்ன சொல்ல???? வார்த்தைகள் வரவில்லை.

Seeni சொன்னது…

pennentraal-
peyum irangum enpaarkal!

inge uravukale peykalaaka..!
kavalai kolla seythathu!

pukai padam arumai!

ரேவா சொன்னது…

மனசாட்சி™ கூறியது...

கவிதை சுடுகிறது......


உண்மைகள் சுடும் சகோ :)

ரேவா சொன்னது…

சசிகலா கூறியது...

மங்கையராய் பிறப்பதற்கே
மாதவம் செய்திட
வேண்டுமாம்
எங்கே அந்த பாரதி,
கூட்டி வாருங்கள்
என் சிதைக்கு,
தீயிலெறியும் என் ஆசைக்கு
ஒரு இரக்கல்பா
எழுத... //
ஆதங்க வரிகள் .

ஆதங்க வரிகள் தான் சசி, பிறக்கும் எல்லாருக்கும் என்றேனும் ஒரு நாள் மரணம், பெண்ணாய் பிறந்தவர்க்கோ ஒவ்வொரு நாளும் மரணம், தினம் தினம் புது ஜனனம் :) நன்றி சசி உங்கள் மறுமொழிக்கு :)

ரேவா சொன்னது…

அபி கூறியது...

வலிகள் நிறைத்த வரிகள்
சிறந்த பதிவு வாழ்த்துக்கள்

மிக்க நன்றி சகோ உங்கள் முதல் வருகைக்கும், கருத்துரைக்கும் தொடர்ந்து வாருங்கள் )

ரேவா சொன்னது…

சிட்டுக்குருவி கூறியது...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அசத்திட்ட்ங்க....ஆமா இந்த நிலை இப்பவும் இருக்கா///


சகோ இந்த நிலை குறைச்சிருக்குன்னு சொல்லலாம் ஆனால் முற்றிலும் வேரறுக்கப்பட்டதுன்னு சொல்லமுடியாதே, நன்றி சகோ உங்கள் வருகைக்கு :)

ரேவா சொன்னது…

சிராஜ் கூறியது...

இன்று தான் உங்கள் தளத்துக்கு முதல் தடவை வருகிறேன்.
அற்புதமா இருக்குங்க கவிதை.....

/* தாயின் தனத்தில்
ஒரு சொட்டு பாலும்
அருந்தியறியா
எனக்குள் கள்ளிப்பால்
சொட்டு சொட்டாய்
செல்லச்செல்ல,
நான் வந்த உலகிற்கே
திரும்பிச்செல்கின்றேன்..
*/

என்ன சொல்ல???? வார்த்தைகள் வரவில்லை.

ரொம்ப நன்றி சகோ உங்கள் முதல் வருகைக்கு, தொடர்ந்து வாருங்கள், நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் :)

ரேவா சொன்னது…

{ Seeni } at: Wednesday, March 28, 2012 சொன்னது…

pennentraal-
peyum irangum enpaarkal!

inge uravukale peykalaaka..!
kavalai kolla seythathu!

pukai padam arumai!

நன்றி சகோ உங்கள் ஆதங்க வரிகளுக்கு... புகைப்படம் கூகிளில் இருந்து பெற்றது, ஆனாலும் ரொம்ப அழகான தூக்கத்தில இருக்கிற இந்த குழந்தையை இக்கவிதைக்கு போடவா வேண்டாமான்னு பல தடவை யோசிக்கவச்சது :)

கீதமஞ்சரி சொன்னது…

மனம் நிறைக்கும் அவலம். அதை வார்த்தைகளால் கீறியவிதம் பாராட்டுக்குரியது.

எவனோ ஒருவன் சொன்னது…

அழ வச்சிடுவீங்க போல :( இப்படி ஒரு நிலைமை இப்பொழுது இருக்கக் கூடாது என்று வேண்டிக் கொள்கிறேன்....