உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 4 மார்ச், 2012

என் நண்பன் போல யாரு மச்சான்...


வணக்கம் பதிவுலக உறவுகளே.... இன்னைக்கு ரொம்ப சந்தோசமான நாட்கள்ல ஒன்னுன்னு சொல்லலாம்.. என் நண்பனோட திருமணம் இன்னும் கொஞ்ச நேரத்துல நடக்க போகுது...தவிர்க்க முடியாத சூழ்நிலை அதால என்னால போகமுடியாட்டியும் மனசு முழுசும் வசந்தோட கல்யாண நிகழ்வுகளில் வட்டமிட்டுகிட்டு இருக்குன்னு தான் சொல்லணும்.. இத ஒரு வாழ்த்து பதிவாவோ, இல்ல எனக்கும் வசந்துக்கும் இருக்கிற நட்ப தெரிய படுத்துறதுக்காகவோ இத பதிவ எழுதல, முழுக்க முழுக்க சந்தோஷம் என்ன தொற்றிக் கொள்ள, வசந்தோட  மண வாழ்க்கை ரொம்ப சந்தோசமா அமையணும்னு எனக்கு தெரிஞ்ச வழிகளில் என் சந்தோசத்த பகிர்ந்துக்கிறேன்...

எனக்கு பதிவுலகம் வந்து கிடச்ச நல்ல நட்புல வசந்தோட நட்பும் முக்கியமான ஒன்று... என்னோட குறைகளையும், நிறைகளையும் சுட்டிக்காட்டுற  நண்பன்னா அதுல கண்டிப்பா வசந்த்தும் இருப்பார்.. கல்யாணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுதோ இல்லையோ அது எனக்கு தெரியாது, ஆனா நல்ல நட்பு சொர்க்கத்தையே நம்ம காலடியில கொண்டு போடுற சக்தி படைச்சது... என்னோட நட்பும் அப்படித்தான்.. ஒரு நட்புக்குள்ள கண்டிப்பான தந்தையும், அன்பான அம்மாவும், பாசத்த கொடுக்கிற சகோதர உறவுகளும், ஒழிஞ்சிருக்கும்.... ஒரு ஆணுக்கும் பொண்ணுக்கும் இடையே இருக்கிற நட்ப, மத்தவங்க அவங்க பார்வைக்கு ஏத்த மாதிரி ஈஸி யா விமர்சனம் பண்ணிடலாம்... ஆனா நட்போட கண்ணியம் மாறாம நடக்குற பல நல்ல நட்புல வசந்தோட நட்பும் ஒன்று... ஏதோதோ எழுதனும்னு வந்தேன், ஆனா வார்த்தைகள் தடுமாறுது..

வசந்தோட அன்புள்ளத்துக்கு, எல்லாமும் நல்லாவே நடக்கும்கிறது என் திடமான எண்ணம்.. என் நண்பனோட மணவாழ்க்கை மிகச் சிறப்பாய் அமையும், அமையட்டும், அதற்க்கு எல்லாரும் சேர்ந்து வாழ்த்துவோம்....
எண்ணங்கள் வலிமையானால் எல்லாமே இனிமையாகும் இது என்னோட ஆழமான நம்பிக்கை...வசந்தோட எண்ணங்கள் என்னைக்கும் அழகானவை... அவர் நினைச்ச அத்துணை மாற்றங்களும், ஆசைகளும், கனவுகளும், இன்னும் தொட ஏங்கிற வெற்றிகளும், ஆக மொத்தம் அத்துணை எதிர்பார்ப்புகளும், இந்த மணவாழ்க்கை மூலம் கிட்டட்டும், கிட்டுவதற்கு அன்பெனும் கடவுள் அருள் புரியட்டும்...

ஆயிரம் தான் சொல்லுக என் நண்பன போல யாரும் கிடையாது.... i know you are the best vasanth... happy married life.....

ஏதோதோ யோசிச்சும் கவிதை கைக்கு வர மாட்டிக்குது... நல்ல நட்பே ஒரு கவிதை மாதிரி தான், அதால இன்னைக்கு நோ கவிதை...மணமக்கள் புறப்பட தயாராகிறார்கள்...வழிவிடுங்கள்....வசந்தங்கள் அவர்கள் வாசல் வீசட்டும்...திருமண நாள் வாழ்த்துக்கள் வசந்த், ஜோதி 
 
 
 
 
 

12 கருத்துகள்:

மனசாட்சி சொன்னது…

முதலில் - வாழ்த்துக்கள்

மனசாட்சி சொன்னது…

\\நல்ல நட்பே ஒரு கவிதை மாதிரி தான்//

அட...நீங்களே சொல்லிடீக.. அப்ப நா என்னதான் சொல்றது..

ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW சொன்னது…

முதலில் உன்னோட நண்பனுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள் ரேவா!

வசந்த் - ஜோதி தம்பதியினர் என்னிக்குமே மகிழ்ச்சியோட, நீண்டகாலம் வாழணும்னு வாழ்த்தறேன்!

ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW சொன்னது…

பதிவு மிகவும் உணர்ச்சிபூர்வமா இருந்திச்சு! நல்ல நட்பு கெடைப்பதே அரிது! சொல்லப் போனால் நல்ல நட்புக் கெடைப்பதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும்! உனக்கு அந்த பாக்கியம் கெடைச்சிருக்கு ரேவா! அருமையான பதிவு! இன்று நான் படித்த முதலாவது பதிவும் உன்னோடதுதான்!

ரேவா சொன்னது…

மனசாட்சி கூறியது...

முதலில் - வாழ்த்துக்கள்மிக்க நன்றி சகோ உங்கள் வாழ்த்துக்கு...

ரேவா சொன்னது…

மனசாட்சி கூறியது...

\\நல்ல நட்பே ஒரு கவிதை மாதிரி தான்//

அட...நீங்களே சொல்லிடீக.. அப்ப நா என்னதான் சொல்றது..

நான் சொன்ன என்ன மனசாட்சி சொன்ன என்ன சகோ... நன்றி சகோ உங்கள் வருகைக்கும், என் நண்பனுக்கான உங்கள் வாழ்த்துக்கும் :)

ரேவா சொன்னது…

ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW கூறியது...

முதலில் உன்னோட நண்பனுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள் ரேவா!

வசந்த் - ஜோதி தம்பதியினர் என்னிக்குமே மகிழ்ச்சியோட, நீண்டகாலம் வாழணும்னு வாழ்த்தறேன்!


ரொம்ப நன்றி ரஜீவன் உன் மனமார்ந்த வாழ்த்துக்கு....

ரேவா சொன்னது…

ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW கூறியது...

பதிவு மிகவும் உணர்ச்சிபூர்வமா இருந்திச்சு! நல்ல நட்பு கெடைப்பதே அரிது! சொல்லப் போனால் நல்ல நட்புக் கெடைப்பதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும்! உனக்கு அந்த பாக்கியம் கெடைச்சிருக்கு ரேவா! அருமையான பதிவு! இன்று நான் படித்த முதலாவது பதிவும் உன்னோடதுதான்!

கண்டிப்பா ரஜீவன்.. நட்பின் முன் நான் ரொம்ப பெரிய அதிஷ்டசாலி தான்...எனக்கு கர்வப்படுற அளவுக்கு நல்ல நட்பு பல கிடைச்சிருக்கு... நன்றி நண்பா உன் வருகைக்கும், மனமார்ந்த வாழ்த்துக்கும் :)

Seeni சொன்னது…

vaazhka valamudan!

எவனோ ஒருவன் சொன்னது…

வாழ்த்துக்கள் வசந்த் - ஜோதி. பல்லாண்டு வாழ்க எல்லா வளமும் பெற்று :)

krishy சொன்னது…

அருமையான பதிவு

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள்
தமிழ் போஸ்ட் செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

தமிழ் போஸ்ட்

To get the Vote Button

தமிழ் போஸ்ட் Vote Button

உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …

நன்றி
தமிழ் போஸ்ட்

sathish prabu சொன்னது…

//ஒரு நட்புக்குள்ள கண்டிப்பான தந்தையும், அன்பான அம்மாவும், பாசத்த கொடுக்கிற சகோதர உறவுகளும், ஒழிஞ்சிருக்கும்.... ஒரு ஆணுக்கும் பொண்ணுக்கும் இடையே இருக்கிற நட்ப, மத்தவங்க அவங்க பார்வைக்கு ஏத்த மாதிரி ஈஸி யா விமர்சனம் பண்ணிடலாம்... ஆனா நட்போட கண்ணியம் மாறாம நடக்குற பல நல்ல நட்புல வசந்தோட நட்பும் ஒன்று... ஏதோதோ எழுதனும்னு வந்தேன், ஆனா வார்த்தைகள் தடுமாறுது..//

உங்கள் நண்பருக்கு வாழ்த்துக்கள்..