உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

இது அதுவா?

 நன்றி : கூகிள்மூடிய விழிகளுக்குள்
ஒரு கருநிற 
போராட்டம்...

சொல்லமுடியா 
இடத்திற்கு என்னை
இழுத்து வருகிறது
அது...

கைகட்டி, விழி மூடி
பதுங்கிக் கிடக்கிறது 
அந்த அடர் இருட்டில்...

கொஞ்சம் கொஞ்சமாய்
தைரியம் கிளம்ப,
மெளனமாய் 
என் அருகில் வருகின்றது

அது.
 
பின்னர் வாய் திறந்து 
வசிய மொழி 
பேசிச்சிரிக்கின்றது ..

என் பக்கம் அமைதி தவழ
குரல் உயர்த்தி 
ஓலமிட்டு 

கவனமீர்க்க துணிகின்றது
அது..

என் கவனம் அதன் 
மீது திரும்ப,
கொடூர புன்னைகை ஒன்றை
உதிர்க்கிறது..

என்னோடு பேசிக்கொண்டே
பூட்டிய நெஞ்சத்தில்
புதைந்திருந்த 
என் ஆசைகளை
தூசிதட்டி எடுக்கிறது.

விடுவித்த மகிழ்ச்சியில்
கால் முளைத்த 
அதுவும்
நிற்காமல் ஓடிக்கொண்டே 
இருக்க..

கொஞ்சம் கொஞ்சமாய்
உள்ளுக்குளிருக்கும்
கற்பனைகுவியலை 
கண்டெடுத்துக்கொண்டே 
இருக்கிறது
அது...

பிடித்தும், பிடிக்காமலும்,
பிரியங்கள் தொலைத்தும்
காரணம் ஏதுமன்றி
அழிக்கப்பட்ட 
நினைவுகளை பரிசீலித்து
எடுத்த இடத்திலே வைக்கிறது
அது..

அழிக்கப்பட்ட பக்கமென
இருந்த ஒன்றில்,
பதப்படுத்தப்பட்ட நினைவுகள்
பத்திரமாய் இருப்பதை பார்த்து
அதை அவசர அவசரமாய்
புரட்டிப்பார்க்கிறது
அது..

கடைசியில் 
ஏதோ ஒன்றை 
கண்டெடுத்த மகிழ்ச்சியில்
அந்த நினைவுக்கு
புத்துயிர் அளித்துச்செல்கிறது
அது..

இயல்புகள் மீறி
ஏதோ ஒன்றின் வலி
நெஞ்சை கணக்க,
விழிகளை திறக்கையில்
மறந்த ஒன்றின்

 நினைவுகளில்
என்னை மீட்டிவிட்டுச்செல்கிறது
அது..

அது
அதுவொரு
கனவு...


24 கருத்துகள்:

Seeni சொன்னது…

athu
athu vantu
kanavu illa-
kaathal thaane..!

siva sankar சொன்னது…

அடடா இந்த புள்ள ரேவாவ்வுக்கு எதுவோ ஆகிட்டு
ஒரு வேலை எதுவாக இருக்கும் ?
அதுவாக இருக்குமோ.
எதுக்கும் ஜாக்கிரதையாக இருப்போம் :)
முதல ஒரு மந்திரிச்சு தாயத்து கட்டுமா
எது உன்னை பிடித்து இருந்தாலும்
அது உன்னைவிட்டு ஓடிவிடும்

siva sankar சொன்னது…

இயல்புகள் மீறி
ஏதோ ஒன்றின் வலி
நெஞ்சை கணக்க,
விழிகளில் திறக்கையில்
//

nice..but NO FEELINGS START MUSIC....

மனசாட்சி சொன்னது…

கவிதை பிடிச்சிருக்கு.

கனவு.... ம்

இந்த கனவு.... அதையும் தாண்டி காலத்தோடு இணைத்து பார்த்தேன்...ம்

நன்றி - படைப்பாளிக்கு வாழ்த்துக்கள்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ம்ம்ம்ம் வழக்கம் போல கவிதை அசத்தல்'ம்மா....!!!!

சசிகலா சொன்னது…

கொஞ்சம் கொஞ்சமாய்
உள்ளுக்குளிருக்கும்
கற்பனைகுவியலை
கண்டெடுத்துக்கொண்டே
இருக்கிறது //
நாங்கள் ரசித்துக் கொண்டே இருக்கிறோம் .

Dhana Sekaran சொன்னது…

நல்ல எண்ண ஓட்டக்கவிதை.

வாழ்த்துகள்.

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

ஒவ்வொர் மனதிற்குள்ளும் இருக்கும்...

நிகழ்கால இயலாமையின் நிழல்கால வாழ்க்கை...


அழகிய கவிதை...

மயிலன் சொன்னது…

அதேதான் தோழி...
கவிதை நன்று..

பள்ளி காலங்களில் இதே போல "மதிப்பெண்" பற்றிய ஒரு கவிதை எழுதிய நினைவு..
சுகம்..

சிட்டுக்குருவி சொன்னது…

கண்டு கொண்டேன்...கண்டு கொண்டேன்..சிறந்த கவிஞ்சனை கண்டு கொண்டேன்...

வாழ்த்துக்கள்...

கீதமஞ்சரி சொன்னது…

அது கனவென்று அடையாளப்படுத்தாதவரை கட்டுக்குள் அடங்காக் கற்பனைகளில் இன்னும் ரசிக்கிறது கவிதையின் ஆழம். இன்னதென அடையாளப்படுத்தும்வரை அவரவர் கற்பனைகளில் ஆயிரமாயிரம் உருவெடுக்கும் அதிசய வார்த்தைக்கோர்ப்புகள். பிரமாதம். பாராட்டுகள் ரேவா.

புத்துயிர் அழித்து? புத்துயிர் அளித்து?

ரேவா சொன்னது…

Seeni கூறியது...

athu
athu vantu
kanavu illa-
kaathal thaane..!


அடடா கனவு தான் சகோ... ஹி ஹி

ரேவா சொன்னது…

siva sankar கூறியது...

அடடா இந்த புள்ள ரேவாவ்வுக்கு எதுவோ ஆகிட்டு
ஒரு வேலை எதுவாக இருக்கும் ?
அதுவாக இருக்குமோ.
எதுக்கும் ஜாக்கிரதையாக இருப்போம் :)
முதல ஒரு மந்திரிச்சு தாயத்து கட்டுமா
எது உன்னை பிடித்து இருந்தாலும்
அது உன்னைவிட்டு ஓடிவிடும்

எனக்கே அது இது எதுன்னு வார்த்தை விளையாட்டா ரைட்டு...

ரேவா சொன்னது…

siva sankar கூறியது...

இயல்புகள் மீறி
ஏதோ ஒன்றின் வலி
நெஞ்சை கணக்க,
விழிகளில் திறக்கையில்
//

nice..but NO FEELINGS START MUSIC....

:) :)

ரேவா சொன்னது…

னசாட்சி கூறியது...

கவிதை பிடிச்சிருக்கு.

கனவு.... ம்

இந்த கனவு.... அதையும் தாண்டி காலத்தோடு இணைத்து பார்த்தேன்...ம்

நன்றி - படைப்பாளிக்கு வாழ்த்துக்கள்


மிக்க நன்றி சகோ உங்கள் கருத்துரைக்கு :)

ரேவா சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...

ம்ம்ம்ம் வழக்கம் போல கவிதை அசத்தல்'ம்மா....!!!!

நன்றி அண்ணா :)

ரேவா சொன்னது…

சசிகலா கூறியது...

கொஞ்சம் கொஞ்சமாய்
உள்ளுக்குளிருக்கும்
கற்பனைகுவியலை
கண்டெடுத்துக்கொண்டே
இருக்கிறது //
நாங்கள் ரசித்துக் கொண்டே இருக்கிறோம் .

மிக்க நன்றி தோழி உங்கள் மறுமொழிக்கு :)

ரேவா சொன்னது…

Dhana Sekaran கூறியது...

நல்ல எண்ண ஓட்டக்கவிதை.

வாழ்த்துகள்.


நன்றி தம்பி :)

ரேவா சொன்னது…

கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...

ஒவ்வொர் மனதிற்குள்ளும் இருக்கும்...

நிகழ்கால இயலாமையின் நிழல்கால வாழ்க்கை...


அழகிய கவிதை...

மிக்க நன்றி நண்பரே உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் :)

ரேவா சொன்னது…

மயிலன் கூறியது...

அதேதான் தோழி...
கவிதை நன்று..

பள்ளி காலங்களில் இதே போல "மதிப்பெண்" பற்றிய ஒரு கவிதை எழுதிய நினைவு..
சுகம்..


மிக்க நன்றி நண்பரே உங்கள் முதல் வருகைக்கும், மறுமொழிக்கும் தொடர்ந்துவாருங்கள் :)

ரேவா சொன்னது…

சிட்டுக்குருவி கூறியது...

கண்டு கொண்டேன்...கண்டு கொண்டேன்..சிறந்த கவிஞ்சனை கண்டு கொண்டேன்...

வாழ்த்துக்கள்...


சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு ரைட்டு... நன்றி சகோ உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் :)

ரேவா சொன்னது…

கீதமஞ்சரி கூறியது...

அது கனவென்று அடையாளப்படுத்தாதவரை கட்டுக்குள் அடங்காக் கற்பனைகளில் இன்னும் ரசிக்கிறது கவிதையின் ஆழம். இன்னதென அடையாளப்படுத்தும்வரை அவரவர் கற்பனைகளில் ஆயிரமாயிரம் உருவெடுக்கும் அதிசய வார்த்தைக்கோர்ப்புகள். பிரமாதம். பாராட்டுகள் ரேவா.


புத்துயிர் அழித்து? புத்துயிர் அளித்து?


மிக்க நன்றி தோழி உங்கள் முத்தான மறுமொழிக்கு மகிழ்ந்தேன்....

தவறு திருந்தப்பட்டது நன்றி தோழி,,, தொடர்ந்து வாருங்கள் :)

ராஜி சொன்னது…

கனவு கவிதை அருமை. ஒருவேளை நீங்க அப்துல கலாம் ரசிகரோ. அவர் வழியில் போறீங்களோ?!

எவனோ ஒருவன் சொன்னது…

அது என்னன்னு தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை தூண்டி விட்டுட்டீங்க ரேவா. அருமையான பகிர்வு :-)