உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 8 மே, 2012

நன்றி மட்டும் சொல்லிட முடியுமா?!?



தொட தயங்கிய நிமிடங்கள்,
தொட்டுவிட்ட நாழிகைகள்...
கூண்டுக்குள் சிறைபட்ட வேளைகள்,
விடைதெரிந்து விடுபட்ட காலங்கள்,
ஓங்கிய கையை கண்டு பயந்த நேரங்கள்,
மீறுதல் மூலம்
வெல்லத்துணிந்த தருணங்கள்,
இப்படியா? அப்படியா?வென
குழம்பித்தவித்த தருணங்கள்,
எப்படியும் என்ற விருட்சத்தில்
வேர் விட்ட பொழுதுகள்..

பாதை அறியேன்
பயணம் புரியேன்,
எழுத்தின் மூலம் அதையும் அறிந்தேன்...

எதுவும் தெரியாது,
இதுவும் புரியாது,
எவையும் இங்கு லேசில் கிட்டாது...

வெல்லத்துணிந்தேன்,
வேட்கை கிடையாது,
சொல்லத்துணிந்தேன்
வார்த்தை அறியாது...

எடுத்துவந்தேன்
சில உணர்வுகளையும்
சில வார்த்தைகளையும்,
தொட நினைத்தேனோ?
தொட்டுவிட்டேனோ?
எவையும் அறிந்திட முயலாது
நடைபயில்கின்றேன்
இந்த மாயவுலகில்...

கவிதையென்றேன்
கைதட்டுகிறவர் பலர்
பெண் கவிதையில் காமமென்று
காரி உமிழ்கின்றனர் சிலர்..

பலரில் சிலரை வென்றிடும்
வேட்கையில்,
வில்லெடுத்தேன்,
சொல்லெடுத்தேன்
கவிதை கொண்டே
கணை தொடுத்தேன்...

பெண்ணெனும் வட்டத்தில்
என்னை அடைத்திட முடியாது,
அடைத்திடும் பலம்
அவ்வளவு எளிதில்
எவருக்கும் கிட்டாது..

காதல் கொண்டே
கவிதை தொடுத்தேன்
அந்த காதலையும்
கற்பனையில் நிறைத்தேன்...

அனுபவமா என்று ஆராய்ச்சியில்
ஆளுமைகள் இறங்க,
என்னையும் எழுத்தையும்
கண்ணெனத் தொடரும் நட்பாலே
ஏற்றம் கண்டேன்
இதோ என் பாதை விரிகிறது,
என் பயணம் தொடர்கிறது,
சிறை பட்ட சிறகுகள்
சீற்றம் கொண்டே உயரப்பறக்கிறது...
ஊர் குருவியென்றுயெமை
நினைத்திருந்தால்...?.....!!!!!,,,,,,?
இந்த வெற்றி கிட்டிடாது.................

இதை வெற்றியென்று
எம் சிந்தையில் ஏற்றாது,
இனி எதையும் சிறப்பாய் செய்ய
சித்தமாயிருக்க,
எமக்கு தெளிவுதந்த இவ்வுலகிற்க்கு
 நன்றிக்கடனாய்
என் உணர்வுகள் தைத்த
வார்தையை கொண்டு
கவிதையென்று வைக்கின்றேன்...

எப்போதும் போல
வாழ்த்துபவர்களை வணங்கி,
தூற்றுவோரை துதித்து,
இதோ பயணத்தை
ஆரம்பிக்கின்றேன்
நானாய்..........................


வணக்கம் பதிவுலக சகோக்களே, நன்றி சொல்லி இந்த பதிவை ஆரம்பிப்பதற்க்கான நோக்கம் இந்த பதிவு எண்ணிக்கையில் 200 தொட்டாலும், இப்போதே நடைபயில ஆரம்பித்திருக்கும் என் எழுத்துகளுக்கான களம் தான் இந்த தளம் என்பது மறுப்பதற்கில்லை....இதுவரை என்னை பின் தொடர்ந்தும் வாக்குகளிட்டும், கருத்துரையிட்டும் என்னை உற்சாகப்படுத்திய அத்தணை இதயங்களுக்கும் நன்றி என்ற ஒற்றை வார்த்தை சொல்லிட முடியாவிடுனும், என் மனமார்ந்த நன்றிகள்....

எனக்கான பாதை தெரியாமல் பயணித்த வேளைகளில் வலைச்சரம் மூலம்  முதல் முதலாய் என் தளத்தை அறிமுகப்படுத்தி என் வேரூன்றுதலுக்கு காரணமாய் இருந்த பன்னிகுட்டி ராமசாமி அண்ணனுக்கு இவ்விடம் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கின்றேன்...

எல்லாரும் எழுத்தின் மீதான காதலால் இவ்வுலகம் வந்தார்கள் என்றால், எனக்கு என்னை மறைத்துவைத்துக்கொள்ள ஒரு இடம் தேவைப்பட்டது அதுதான் என் தளம், நாள் செல்ல செல்ல எனக்கான தேடலுக்கான பதிலை இந்த பதிவுலகத்தில் பெற்றேன்..ஆரம்ப கால என் எழுத்துகளுக்கும் இப்போது இருக்கும் என் எழுத்துகளுக்கும் இங்கு நான் கற்றுக்கொண்டவைகள் ஏராளம் என்பதற்கு சாட்சி............

என் தவறுகளை சுட்டியும் கொட்டியும் என்னை திருத்திய என் நட்புகளுக்கு நன்றி......... என் பதிவுகள் அத்தனையும் படித்து தனிபட்ட முறையில் தகவல் சொன்ன சகோதரர்களுக்கு நன்றி..........என்னை பின் தொடரும் 201 இதயங்களுக்கும் நன்றி......... இதுவரை என் தளத்தில் 103484 பார்வை பதித்த பார்வையாளர்களுக்கு நன்றி........பாராட்டுகளே தனி ஒரு கலைஞனை உற்சாகப்படுத்தும் என்பதன் விதமாக எனக்கு இதுவரை மறுமொழியிட்ட நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி................உங்களாலே இது சாத்தியமாயிற்று.....

இன்னும் சிறந்த பதிவுகளை எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில்
உங்கள் ஆதரவை நோக்கி இந்த பதிவுடன் ஆரம்பமாகிறேன்..................



16 கருத்துகள்:

Avargal Unmaigal சொன்னது…

வாழ்த்துக்கள்....முதன் முதலாக வருகின்றேன்....மீண்டும் வருகிறேன்

செய்தாலி சொன்னது…

200வது பதிவுக்கும்
உங்கள் தொடர் கவிதை பயணத்திற்கும்
வாழ்த்ந்துக்கள் சகோ

இன்னும் சிறந்த கவிதைகள் படைக்க
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் சகோ

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

எவ்வளவோ பெரிய உதவிகளையும் அடுத்த கணமே மறந்துவிடும் இக்காலத்தில், வலைச்சரத்தில் அறிமுகம் செய்தது என்ற மிகச்சிறிய விஷயத்தை இன்னும் ஞாபகம் வைத்து நன்றி சொல்லி இருப்பது ஆச்சர்யப்படுத்துகிறது. வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள்.....!

Unknown சொன்னது…

தொடரட்டும்
உங்கள்
பயணம்
இமயம் நோக்கி
வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

தங்கைக்கு வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள்....!!!

Unknown சொன்னது…

Avargal Unmaigal கூறியது...

வாழ்த்துக்கள்....முதன் முதலாக வருகின்றேன்....மீண்டும் வருகிறேன்


மிக்க நன்றி சகோ உங்கள் முதல் வருகைக்கு... தொடர்ந்து வாருங்கள் :)

Unknown சொன்னது…

செய்தாலி கூறியது...

200வது பதிவுக்கும்
உங்கள் தொடர் கவிதை பயணத்திற்கும்
வாழ்த்ந்துக்கள் சகோ

இன்னும் சிறந்த கவிதைகள் படைக்க
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் சகோ


மிக்க நன்றி சகோ உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்...மகிழ்ந்தேன்:)

Unknown சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

எவ்வளவோ பெரிய உதவிகளையும் அடுத்த கணமே மறந்துவிடும் இக்காலத்தில், வலைச்சரத்தில் அறிமுகம் செய்தது என்ற மிகச்சிறிய விஷயத்தை இன்னும் ஞாபகம் வைத்து நன்றி சொல்லி இருப்பது ஆச்சர்யப்படுத்துகிறது. வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள்.....!


முதலில் மிக்க நன்றி அண்ணா உங்கள் வருகைக்கு, இது முகஸ்துதிக்காக இல்லை எனக்கு பதிவுலகம் என்றால் நான் நன்றி சொல்ல கடமை பட்டவர்களில் நீங்களும் ஒருவர்... வெளிப்படையான என் பேச்சுகள் சிலருக்கு பிடிக்காமல் போகலாம் ஆனால் இது தான் நான்.... மிக்க மகிழ்ச்சி அண்ணா உங்கள் வருகைக்கும் வாழ்த்தி கருத்திட்ட உங்கள் அன்பிற்கும்... தொடர்ந்து வாருங்கள் :)

Unknown சொன்னது…

Siva sankar கூறியது...

தொடரட்டும்
உங்கள்
பயணம்
இமயம் நோக்கி
வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்

மிக்க நன்றி சிவா :)

Unknown சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...

தங்கைக்கு வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள்....!!!


மிக்க நன்றி அண்ணா வெகு நாள் கழித்து என் தளம் வந்ததிற்கும் வாழ்த்துக்கும், தொடர்ந்து வாருங்கள் அண்ணா :)

Unknown சொன்னது…

வலைஞன் கூறியது...

வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

நன்றி

வலையகம்

முயற்சிக்கிறேன் நண்பரே

சசிகலா சொன்னது…

காதல் கொண்டே
கவிதை தொடுத்தேன்
அந்த காதலையும்
கற்பனையில் நிறைத்தேன்// அழகான வரிகள் அசத்திடிங்க போங்க .வாழ்த்துகள்.

Seeni சொன்னது…

ezhunga yaar venaamnu-
sonnathu!

ini thaan neenga kalakka vendiyullathu...!

Vijayan Durai சொன்னது…

//வெல்லத்துணிந்தேன்,
வேட்கை கிடையாது,
சொல்லத்துணிந்தேன்
வார்த்தை அறியாது...//

உங்கள் பயணம் இனிதே தொடர என் வாழ்த்துக்கள்...

ஆத்மா சொன்னது…

மைல்கள் தொட்டிட வாழ்த்துகிறேன்...தொடர்ந்தும் எழுதுங்கள்....
//என்னை பின் தொடரும் 201 இதயங்களுக்கும் நன்றி.........

என்னையும் சேர்த்துக் கொண்டமைக்கு நன்றிகள் கோடி

மகேந்திரன் சொன்னது…

தூற்றுவோரையும் துதிக்கும் தன்மை
தேர்ந்த எழுத்தாளனுக்கே வரும் குணம்...
தொடர்க சகோதரி..
தங்கள் விரல்விட்டு வரும்
வார்த்தைக் குவியல்களை
நெஞ்சமெனும் மஞ்சத்தில்
உள்வாங்கிக் கொள்ள
எப்போதும் காத்திருக்கிறேன்...

இன்னும் பல்லாயிரம் படைப்புகள்
படைத்திட என் அன்பார்ந்த வாழ்த்துக்கள்...