உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 21 மே, 2012

எனக்குள் தான் நீ...



இதுவரை
உன் பெயர்  நான் அறிந்ததில்லை,
வாய்வலிக்க உன்னோடு
வாயாடிப் பார்த்ததில்லை..
அணு அணுவாய் எனை இம்சிக்கும் 
சிணுங்கலின் இனிமை அறிந்ததில்லை..
எப்போது உன் அழைப்புவரும்
என்ற சிந்தனையில்  சிக்கவில்லை...
அன்பு வைத்து பின் அழுதுவடிக்கும்
அனுபவம்  வாய்க்கவில்லை.
சம்பிராதாய குறும்செய்திகளில்
என் கைப்பேசி  நிறையவில்லை..
எனக்கு மட்டும் என்ற சாட்டையடிகளின்
வலி கொஞ்சமும் உணர்ந்ததில்லை..
உனக்காய் என் சுயம் மறைக்க
இதுவரை நானும் பழகவில்லை
பொய் சொல்லி பின் சிக்கும்
செல்லச்சித்திரவதைகளில் சிக்கவில்லை..
உன் முகவரி தெரியாது
முகவுரையும் அறியாது
கேட்டு தெரிந்துகொண்ட
விக்கிரமாதித்தன் கதை வேதாளமாய்
கவியெழுதும்போதெல்லாம்
காதல் மரத்தில் ஏறிக்கொள்கிற
இந்த மனதிற்கு ஏற்றவனை
இதுவரை நான் காணவில்லை..
என்றாலும்
” நீ ”
எனக்குள் தான் இருக்கிறாய்...






37 கருத்துகள்:

செய்தாலி சொன்னது…

//இதுவரை நான் காணவில்லை..
என்றாலும்
” நீ ”//
எனக்குள் தான் இருக்கிறாய்...

ம்ம்ம்.... அருமை சகோ

ஆத்மா சொன்னது…

நல்ல கவிதை வாழ்த்துக்கள் இந்த கவி வாசகனின்

MARI The Great சொன்னது…

அருமையான ஆக்கம் சகோ ..!

Unknown சொன்னது…

சிக்காத வரைக்கும் சிக்கல் இல்லை

ராஜி சொன்னது…

இந்த மனதிற்கு ஏற்றவனை
இதுவரை நான் காணவில்லை..
>>>
சீக்கிரமே காண வாழ்த்துக்கள்

முத்தரசு சொன்னது…

கவிதை நல்லா இருக்கு

மனசாட்சியின் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ

சுதா சொன்னது…

//கவியெழுதும்போதெல்லாம்
காதல் மரத்தில் ஏறிக்கொள்கிற
இந்த மனதிற்கு ஏற்றவனை
இதுவரை நான் காணவில்லை..//

அருமை வாழ்த்துக்கள்

செய்தாலி சொன்னது…

வலைச் சரத்தில் உங்கள் வலைப்பூவை அறிமுகம் செய்துள்ளேன்
நேரம் இருப்பின் வாருங்கள் (வலைச்சரத்திற்கு )

அன்புடன் மலிக்கா சொன்னது…

ரேவாவின் கவிதைகள் அழகான இருக்கின்றன வாழ்த்துகள் ரேவா. தொடர்ந்து தொடருங்கள் கவிப்பயணத்தை..

vetha (kovaikkavi) சொன்னது…

நல்வாழ்த்து சகோதரி.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com

Unknown சொன்னது…

//எனக்கு மட்டும் என்ற சாட்டையடிகளின்
வலி கொஞ்சமும் உணர்ந்ததில்லை..
உனக்காய் என் சுயம் மறைக்க
இதுவரை நானும் பழகவில்லை
பொய் சொல்லி பின் சிக்கும்
செல்லச்சித்திரவதைகளில் சிக்கவில்லை..//

//இதுவரை நான் காணவில்லை..
என்றாலும்
” நீ ”
எனக்குள் தான் இருக்கிறாய்...//

ரொம்ப.. ரொம்ப.. அழகாய் இருக்கிறது தோழி.. கவிதை..

சசிகலா சொன்னது…

சிந்தனை சிறப்பு .

மகேந்திரன் சொன்னது…

வணக்கம் சகோதரி..
இன்றுதான் தங்கள் தளம் வருகிறேன்..
வசந்தமண்டம் வந்து என்னை வாழ்த்திவிட்டு சென்றதற்கு
நன்றிகள் பல..

சிறகடிக்கும் சிந்தனைகளை
தங்கள் கவிதையில் கண்டேன்..
அள்ளி அள்ளி அமுதம் பருக தொடர்ந்து வருகிறேன்..

Unknown சொன்னது…

செய்தாலி கூறியது...

//இதுவரை நான் காணவில்லை..
என்றாலும்
” நீ ”//
எனக்குள் தான் இருக்கிறாய்...

ம்ம்ம்.... அருமை சகோ


மிக்க நன்றி சகோ உங்கள் வருகைக்கும், வழமை மாறா அன்பிற்கும்.............

Unknown சொன்னது…

சிட்டுக்குருவி கூறியது...

நல்ல கவிதை வாழ்த்துக்கள் இந்த கவி வாசகனின்


நன்றி சகோ உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் :)

Unknown சொன்னது…

வரலாற்று சுவடுகள் கூறியது...

அருமையான ஆக்கம் சகோ ..!


சுவடுகள் இங்கே தடம் பதித்ததில் மகிழ்ந்தேன்..... தொடர்ந்து வாருங்கள் :)

Unknown சொன்னது…

இரவு வானம் கூறியது...

சிக்காத வரைக்கும் சிக்கல் இல்லை

ஹ ஹா சரி தான்.... ஆனாலும் சிக்கலில் தானே எப்போதும் சிக்கிக்கொள்கிறது மனது...... நன்றி இரவு வானம் உங்கள் வருகைக்கும் உற்சாக மறுமொழிக்கும் :)

Unknown சொன்னது…

ராஜி கூறியது...

இந்த மனதிற்கு ஏற்றவனை
இதுவரை நான் காணவில்லை..
>>>
சீக்கிரமே காண வாழ்த்துக்கள்


ஹா ஹா நன்றி சகோதரி.... தொடர்ந்து வாருங்கள்......

Unknown சொன்னது…

மனசாட்சி™ கூறியது...

கவிதை நல்லா இருக்கு

மனசாட்சியின் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ

மிக்க நன்றி சகோ உங்கள் மனமார்ந்த வாழ்த்தில் மகிழ்ந்தேன்.... தொடர்ந்து வாருங்கள் :)

Unknown சொன்னது…

ܔஇளந்தமிழன்ܔܢܜܔ கூறியது...

//கவியெழுதும்போதெல்லாம்
காதல் மரத்தில் ஏறிக்கொள்கிற
இந்த மனதிற்கு ஏற்றவனை
இதுவரை நான் காணவில்லை..//

அருமை வாழ்த்துக்கள்


உங்களின் முதல் வருகைக்கும் அன்பான மறுமொழிக்கும் நன்றி சகோ தொடர்ந்து வாருங்கள் :)

Unknown சொன்னது…

செய்தாலி கூறியது...

வலைச் சரத்தில் உங்கள் வலைப்பூவை அறிமுகம் செய்துள்ளேன்
நேரம் இருப்பின் வாருங்கள் (வலைச்சரத்திற்கு )

நன்றி சகோ என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு... உங்களின் அன்பிற்க்கு என் நன்றிகள் :)

Unknown சொன்னது…

அன்புடன் மலிக்கா கூறியது...

ரேவாவின் கவிதைகள் அழகான இருக்கின்றன வாழ்த்துகள் ரேவா. தொடர்ந்து தொடருங்கள் கவிப்பயணத்தை..

மிக்க நன்றி அக்கா உங்களின் முதல் வருகைக்கு, அன்பானவர்கள் பயணம் என் பக்கத்தில் இருக்கும் வரை நீண்டுகொண்டே இருக்கும் இந்த ரேவாவின் பக்கம்.........தொடர்ந்து வாருங்கள் சகோதரி \:)

Unknown சொன்னது…

kavithai (kovaikkavi) கூறியது...

நல்வாழ்த்து சகோதரி.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com


மிக்க நன்றி சகோதரி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் :)

Unknown சொன்னது…

sathish prabu கூறியது...

//எனக்கு மட்டும் என்ற சாட்டையடிகளின்
வலி கொஞ்சமும் உணர்ந்ததில்லை..
உனக்காய் என் சுயம் மறைக்க
இதுவரை நானும் பழகவில்லை
பொய் சொல்லி பின் சிக்கும்
செல்லச்சித்திரவதைகளில் சிக்கவில்லை..//

//இதுவரை நான் காணவில்லை..
என்றாலும்
” நீ ”
எனக்குள் தான் இருக்கிறாய்...//

ரொம்ப.. ரொம்ப.. அழகாய் இருக்கிறது தோழி.. கவிதை..


அன்பான ஒரு இதயத்தின் வருகையால் மகிழ்ச்சி கொண்டேன்... உங்களின் ஏனைய மறுமொழிகளாலும் உங்களின் அன்பிற்கு நன்றி...தொடர்ந்து வாருங்கள் :)

Unknown சொன்னது…

சசிகலா கூறியது...

சிந்தனை சிறப்பு .


வாருங்கள் கவிதைத்தோழி.... நலமா? மிக்க நன்றி சசி உங்கள் வருகைக்கு :)

Unknown சொன்னது…

மகேந்திரன் கூறியது...

வணக்கம் சகோதரி..
இன்றுதான் தங்கள் தளம் வருகிறேன்..
வசந்தமண்டம் வந்து என்னை வாழ்த்திவிட்டு சென்றதற்கு
நன்றிகள் பல..

சிறகடிக்கும் சிந்தனைகளை
தங்கள் கவிதையில் கண்டேன்..
அள்ளி அள்ளி அமுதம் பருக தொடர்ந்து வருகிறேன்..


முதலின் உங்களின் வருகையால் மகிழ்ந்தேன் அண்ணா... இந்த கவித் தென்றலின் வருகையால் உற்சாகம் கொண்டது என் தளம்... தொடர்ந்து வாருங்கள் சகோதரா.... :)

கோவி சொன்னது…

அழகு.

மாலதி சொன்னது…

அருமை

Athisaya சொன்னது…

விக்கிரமாதித்தன் கதை வேதாளமாய்
கவியெழுதும்போதெல்லாம்
காதல் மரத்தில் ஏறிக்கொள்கிற
இந்த மனதிற்கு ஏற்றவனை//
அழகாய் இருக்கிறது தோழி.அற்புதமான படைப்பு.தொடர்ந்தும் சந்திப்போம் சொந்தமே!!

Unknown சொன்னது…

கோவி கூறியது...

அழகு.


முதல் வருகையில் உளமகிழ்ந்தேன்... தொடரட்டும் இந்த வரவு :) நன்றிகள் சகோ :)

Unknown சொன்னது…

மாலதி கூறியது...

அருமை


மிக்க நன்றி சகோதரி உங்கள் வருகைக்கு, தொடரட்டும் இந்த வரவு :)

Unknown சொன்னது…

Athisaya கூறியது...

விக்கிரமாதித்தன் கதை வேதாளமாய்
கவியெழுதும்போதெல்லாம்
காதல் மரத்தில் ஏறிக்கொள்கிற
இந்த மனதிற்கு ஏற்றவனை//
அழகாய் இருக்கிறது தோழி.அற்புதமான படைப்பு.தொடர்ந்தும் சந்திப்போம் சொந்தமே!!

அதிசியத்துப்போனேன் இந்த தோழியின் வரவால்... தொடரட்டும் இந்த சொந்தம்...வாழ்த்துகளுக்கும் வருகைக்கும் நன்றி தோழி :)

Athisaya சொன்னது…

நிச்சயமாய்...!:) தொடரும் சொந்தங்கள் என்றும் தொலையாது தோழி

Seeni சொன்னது…

இந்த பதிவை-
வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்!

வலைச்சரத்திற்கு -
வருகை தாருங்கள்!
தலைப்பு;
கவிதை......

http://blogintamil.blogspot.sg/

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_23.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Unknown சொன்னது…

வரிகள் அருமை... தோழர் சீனா மூலம் அறிமுகம் கண்டேன்.. வாழ்த்துக்கள்!
www.ayeshafarook.blogspot.com

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

அருமையான கவிதை ரேவா