உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 4 ஜூன், 2012

இறுதியாய் இது உனக்காக....................

 வார்த்தை வர சக்தியற்று கிடக்கும் 
இந்நாட்களின் வலிகளைப்போல்
இனிவரும் நாள் இருந்திடாது....

உடம்பெங்கும் இல்லாக்காயம்
உயிரில் வலிகொடுக்க
கண்ணீரில் கரைக்க நினைத்து
கவிதையில் முடிக்கிறேன்
இத்துயரை...

உள்ளுணர்வும் 
உயிர்க்கூடும் 
செயலற்றுக்கிடக்க,
செத்துகிடக்கும் 
என் வார்த்தைகளுக்கு
கொஞ்சம் உயிர்தந்து 
உழவவிடுகிறேன்..

எழுத நினைத்து ஏமாந்துபோவதும்
ஏமாந்தவை எழுத்தில் எட்டிப்பார்ப்பதும்
வாடிக்கையாய் நிகழ,
கிழித்தெரிகின்றேன் 
சில பல பக்கங்களை..

நிலைமையொன்றும் 
சரியில்லையென்றானபின்
தனிமையை துணைகொண்டு
காலாற நடக்கின்றேன்.

நடைபிணத்திற்கு துணையெதற்க்கென்று
நாட்டியமாடுகின்ற உந்தன்
நினைவுக்கு பயந்து
இருளச்செய்கின்றேன்

எந்தன் அறையை..

கவனிக்காமல் விட்ட 
சில கவிதைகள்
உன் முகம் காட்டி இரவை
மூர்ச்சையாக்க,
எழுதா பக்கங்களில் கரைக்கின்றேன்
இவ்விரவை...

உன்னை
தேடிகளைத்து பின் அலுத்துபோன
இந்நாட்களில்
அனைவரின் விசாரிப்பும் 
உன்னை பற்றியே என்றான பின்
எப்படி புரியவைப்பேன் 
இப்பிரிவை...
உன்னை பற்றி எதையும் 
இனி எழுத்தில் ஏற்றாதிருக்கயெண்ணி
தோற்றுப்போகிறேன்
இக்கவியிடம்..
இறுதியாய்
இது
உனக்காய்
இருந்துவிட்டு போகட்டும்...

25 கருத்துகள்:

சசிகலா சொன்னது…

கண்ணீரில் கரைக்க நினைத்து
கவிதையில் முடிக்கிறேன்
இத்துயரை...// மிக மிக ஆழமான வரிகள் அருமை மிகவும் ரசித்தேன் .

Seeni சொன்னது…

தவிர்க்க முடியாமல்-
தவிப்பு!

கவிதையோ -
சிறப்பு!

MARI The Great சொன்னது…

////உன்னை பற்றி எதையும்
இனி எழுத்தில் ஏற்றாதிருக்கயெண்ணி
தோற்றுப்போகிறேன்
இக்கவியிடம்..//////

நான் ரசித்த வரிகள் ..!

ஆத்மா சொன்னது…

Arumai
Solluvathukku vaarththaikal illai really nice

அனைவருக்கும் அன்பு  சொன்னது…

தனிமையின் தவிப்பும்
பிரிவின் துயரமும்
ஒரு சேர உலுக்கியது உங்கள் வார்த்தை உள்வான்கியத்தில் ..............ரசித்தேன்

அனுஷ்யா சொன்னது…

மீண்டும் மீண்டும் வாசிக்க வைத்த கடைசி பத்தி...:)

ஆத்மா சொன்னது…

மீண்டும் ஒரு முறை படிச்சேன்..:)

கோவி சொன்னது…

வலிகள்.. சுகமான வலிகள்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இனி எழுத்தில் ஏற்றாதிருக்கயெண்ணி
தோற்றுப்போகிறேன்
இக்கவியிடம்..

Athisaya சொன்னது…

வலித்துப்போகிறது மிகவே.இதுவரை கிரங்கப்படுத்தாத சில ஏற்க முடிணாத பிரிவுகள் நெருப்பாய் முளைக்கின்றனஃஅவன்று விட்டாய் சொந்தமே.
அருமையான பகிர்வு.ரசித்தேன்.வாழ்த்துகிறேன்.

SELECTED ME சொன்னது…

சகோதரியின் எண்ணங்களில் ஏன் இப்போதெல்லாம் இவ்வளவு சோகம்?

கீதமஞ்சரி சொன்னது…

மனதின் பாரத்தைக் கவிதையில் இறக்கிவைக்க முயன்றிருக்கிறீர்கள். வெற்றி கிட்டியதா இல்லையா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும். வாசித்து முடிக்கையில் என்னுள்ளும் அழுத்துகிறது பெரும்பாரம். இது உங்கள் கவிதையின் வெற்றிதான். கடைந்தெடுக்கும் பிரிவுத்துயரை ஒவ்வொரு வரிகளிலும் உணர்கிறேன். அருமை ரேவா.

Unknown சொன்னது…

Sasi Kala கூறியது...

கண்ணீரில் கரைக்க நினைத்து
கவிதையில் முடிக்கிறேன்
இத்துயரை...// மிக மிக ஆழமான வரிகள் அருமை மிகவும் ரசித்தேன் .

உடன் வருகை தந்து என்னை உற்சாகமூட்டும் உங்கள் அன்புக்கு நன்றி தோழி :)

Unknown சொன்னது…

Seeni கூறியது...

தவிர்க்க முடியாமல்-
தவிப்பு!

கவிதையோ -
சிறப்பு!

கவிதைக்கு அதன் போக்கில் வீரியம் கொடுத்த உங்கள் மறுமொழிக்கு நன்றி சகோ :)

Unknown சொன்னது…

வரலாற்று சுவடுகள் கூறியது...

////உன்னை பற்றி எதையும்
இனி எழுத்தில் ஏற்றாதிருக்கயெண்ணி
தோற்றுப்போகிறேன்
இக்கவியிடம்..//////

நான் ரசித்த வரிகள் ..!

மிக்க நன்றி சகோ உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் :)

Unknown சொன்னது…

சிட்டுக்குருவி கூறியது...

Arumai
Solluvathukku vaarththaikal illai really nice

மிக்க நன்றி சகோ :)

Unknown சொன்னது…

கோவை மு.சரளா கூறியது...

தனிமையின் தவிப்பும்
பிரிவின் துயரமும்
ஒரு சேர உலுக்கியது உங்கள் வார்த்தை உள்வான்கியத்தில் ..............ரசித்தேன்

மிக்க நன்றி தோழி கவின்மிகு கவி படைக்கும் தோழியின் பாராட்டுதலின் மகிழ்ந்தேன் :)

Unknown சொன்னது…

மயிலன் கூறியது...

மீண்டும் மீண்டும் வாசிக்க வைத்த கடைசி பத்தி...:)

மிக்க நன்றி மயிலன் உங்கள் வருகைக்கு :0

Unknown சொன்னது…

சிட்டுக்குருவி கூறியது...

மீண்டும் ஒரு முறை படிச்சேன்..:)

சந்தோஷமாயிட்டு உண்டு :)

Unknown சொன்னது…

கோவி கூறியது...

வலிகள்.. சுகமான வலிகள்.

மிக்க நன்றி முனைவரே :)

Unknown சொன்னது…

இராஜராஜேஸ்வரி கூறியது...

இனி எழுத்தில் ஏற்றாதிருக்கயெண்ணி
தோற்றுப்போகிறேன்
இக்கவியிடம்..

சகோ என் கவிதைக்கு என் கவியில் இருந்தே மறுமொழியா மகிழ்ந்தேன் சகோ :)

Unknown சொன்னது…

Athisaya கூறியது...

வலித்துப்போகிறது மிகவே.இதுவரை கிரங்கப்படுத்தாத சில ஏற்க முடிணாத பிரிவுகள் நெருப்பாய் முளைக்கின்றனஃஅவன்று விட்டாய் சொந்தமே.
அருமையான பகிர்வு.ரசித்தேன்.வாழ்த்துகிறேன்.

மிக்க நன்றி அதிசயா உங்கள் புரிந்துணர்வோடு தந்த மறுமொழிக்கு உற்சாகம் கொண்டேன்.. இனி தொடர்ந்து வாருங்கள் :)

நிலவன்பன் கூறியது...

சகோதரியின் எண்ணங்களில் ஏன் இப்போதெல்லாம் இவ்வளவு சோகம்?

ஏனோ தெரியலை சகோ, சீக்கிரம் இந்த பிரிவுத்துயரில் இருந்து மீள முயல்கிறேன் நன்றி சகோ உங்கள் வருகைக்கு :)

Unknown சொன்னது…

கீதமஞ்சரி கூறியது...

மனதின் பாரத்தைக் கவிதையில் இறக்கிவைக்க முயன்றிருக்கிறீர்கள். வெற்றி கிட்டியதா இல்லையா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும். வாசித்து முடிக்கையில் என்னுள்ளும் அழுத்துகிறது பெரும்பாரம். இது உங்கள் கவிதையின் வெற்றிதான். கடைந்தெடுக்கும் பிரிவுத்துயரை ஒவ்வொரு வரிகளிலும் உணர்கிறேன். அருமை ரேவா.

மிகச்சரியான புரிந்துணர்வு அக்கா என்னை தவிர என்னை சரியாய் புரிந்துகொண்டவை என் எழுத்துகள் தான்... ஏதோ பாரம் நெஞ்சை அழுத்த வலி பொருக்காமல் இறக்கி வைத்தேன் இக்கவியில்.... உங்கள் மறுமொழி அன்பில் வெற்றி கிட்டியதாய் உணர்ந்தேன் அக்கா...மிக்க நன்றி... உங்களின் மறுமொழி ஒவ்வொன்றிற்க்கும் என் பக்கங்கள் காத்துக்கிடக்கின்றன....... தொடர்ந்து வாருங்கள் சகோதரி..........