உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

புதன், 3 அக்டோபர், 2012

உனக்கான பதில்


என்னை கடந்த ஓராயிரம்
கேள்விகளைத்தான்
நீயும் கேட்கிறாய்
இக்கேள்விக்கான பதிலென்று
என்னிடம் எதுவுமில்லை என்பதை  
அறிந்தும்...

ஒரு நேசத்தை மறுதலித்தலில்
உண்டாகும் வலி
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை..

ஆகப் பெரும் மகிழ்வின் பின் 
ஆனந்தக்கூத்தாடவோ
ஒரு தோல்வியின் பொருட்டு
மண்டியிட்டு அழவோ
எனக்கென்று எதுவுமேயில்லை
என்னைத்தவிர...

உள்ளத்தை 
எரித்து வாழும் வாழ்க்கையில் 
எனக்கு உடன்பாடுயில்லை என்பதை 
உள்ளதைச்சொல்வதால் அறிக...

எப்படியும் இதை முகம்பொருத்துப்பார்க்கும்
இவ் ஓராயிரம் முகங்களுக்கும் 
சொல்கின்றேன்

என்னை கடந்த ஓராயிரம்
கேள்விகளைத்தான்
 நீங்களும் கேட்கின்றீர்
இக்கேள்விக்கான பதிலென்று
என்னிடம் எதுவுமில்லை என்பதை  
அறிந்தும்...
 

8 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல வரிகள்...

மிகவும் பிடித்த வரிகள் :

/// ஆகப் பெரும் மகிழ்வின் பின்
ஆனந்தக்கூத்தாடவோ
ஒரு தோல்வியின் பொருட்டு
மண்டியிட்டு அழவோ
எனக்கென்று எதுவுமேயில்லை
என்னைத்தவிர... ///

எல்லோருக்கும் இது தான் வேண்டும்...

Vijayan Durai சொன்னது…

பதில் இல்லா கேள்வி குறிகளில் தான் வாழ்க்கை பெறும்பாலும் தொங்கி கொண்டிருக்கிறது.பல கேள்விகளுக்கு பதில்கள் இல்லை... (என்னிடம் எதையோ சொல்ல வந்து ஏதேதோ சொல்கிறது உங்கள் கவிதை!).

சசிகலா சொன்னது…

என்னை கடந்த ஓராயிரம்
கேள்விகளைத்தான்
நீங்களும் கேட்கின்றீர்
இக்கேள்விக்கான பதிலென்று
என்னிடம் எதுவுமில்லை என்பதை
அறிந்தும்...
எல்லோருக்குமே பொருந்தக் கூடிய வரிகள்.

வெற்றிவேல் சொன்னது…

அனைவரின் எண்ணம்:

ஒரு தோல்வியின் பொருட்டு
மண்டியிட்டு அழவோ
எனக்கென்று எதுவுமேயில்லை
என்னைத்தவிர...

அருமை..

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

அருமை

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஆகப் பெரும் மகிழ்வின் பின்
ஆனந்தக்கூத்தாடவோ
ஒரு தோல்வியின் பொருட்டு
மண்டியிட்டு அழவோ
எனக்கென்று எதுவுமேயில்லை
என்னைத்தவிர...//

ஆஹா அசத்தல், சத்தியமான உண்மை...!

அ. வேல்முருகன் சொன்னது…

உள்ளத்தை
எரித்து வாழும் வாழ்க்கையில்
எனக்கு உடன்பாடுயில்லை என்பதை
உள்ளதைச்சொல்வதால் அறிக...

நல்லதொரு பதில்
ஆயினும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை

ezhil சொன்னது…

##ஒரு நேசத்தை மறுதலித்தலில்
உண்டாகும் வலி
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை..


நிராகரிப்பின் வலியை அதனைப் பெற்றவர் மட்டுமே உணரக்கூடியது