உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஒரு துளி

இருப்பின் வாயிலை
உடைத்து வெளியேறுகிறது
நம்பிக்கையின் விருட்சம்
இன்னதென்று சொல்லத்தெரிய
ஓப்பீடுகளால்
உடைந்த மெளனத்தின் கணத்தை
உதடுகளால் கடந்து செல்வது
அவ்வளவு சுலபமில்லாது போயினும்
வெறித்து தொடரும்
எல்லோரின் பார்வைக்கு பின்னும்
இன்னும் பருகப்படாமலே இருக்கிறது
நீங்களறியா
உண்மையின்
ஒரு துளி
விஷம்....

-ரேவா
6 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_3.html) சென்று பார்க்கவும்... நன்றி...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

அருமையான வரிகள் ரேவா

இளமதி சொன்னது…

வணக்கம் அன்புத்தோழி...
வலைச்சரத்தில் உங்கள் கலைச்சர அறிமுகங்கண்டு இங்குவந்தேன்...

வந்ததும் ஒருதுளி பலதுளியாய் அதுவுதேன்துளியாய் எனக்கு(ள்)...
உங்கள் கவித்துளி!அருமை!

வாழ்த்துக்கள் தோழி....

கீதமஞ்சரி சொன்னது…

தேர்ந்த வார்த்தைப் பிரயோகம். உண்மையின் ஒரு துளி விஷம் பருகப்படாமலேயே போகட்டும், நம்பிக்கையின் விருட்சம் தழைக்கட்டும். பாராட்டுகள் ரேவா.

Surenthirakumar Kanagalingam சொன்னது…

ஆழமான கவிதை, அதற்குப் பின்னால் பல பரிமாணங்கள்...!

கவியாழி கண்ணதாசன் சொன்னது…

ஒருதுளியில் எல்லாவற்றையும் சொல்லிவிட்டீர்கள்