உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 30 செப்டம்பர், 2010

எங்கே சென்றாய் நீ?



* காதலே!
உன்னை நேசிக்க வேண்டி,
நீ,
வந்து வந்து காதல்
பேசிய காலங்கள்...

* பொய்யை கூட
மெய்யாய் நம்பும் படி
சொன்ன வேலைகள்...

* வண்டி வண்டியாய் 
நலம் விசாரித்து,
அக்கறை காட்டிய தருணங்கள்...

* உன் பெயரோடு  என் பெயரையும்
சேர்த்து நீ உச்சரித்த பொழுதுகள்...

* என் சிரிப்பிற்காய்  நீ
சேஷ்டை செய்த நிமிடங்கள்...

* என அள்ள அள்ளக் குறியாத
உன் நினைவுகள் என்னை
வதைக்க...

* உன் காதலை உணர்ந்தவளாய்
என் காதலை உன்னிடம் சொல்லவரும்
போது என்னை விட்டு 
எங்கே சென்றாய் நீ?

* உனக்கொரு துயர் என்றால்
என் உயிர் கொண்டு துடைப்பேன்
என்று சொல்லி, என்னை தூரமாக்கி
எங்கே சென்றாய்?...

* உன் அக்கறை, நலம் விசாரிப்புகள்
விலாசமின்றி தொலைந்து போனதை
போல்..நீயும்
எனைவிடுத்து எங்கே சென்றாய்?...

* என்னை விட்டு நீ சென்றாலும்,
உன் அன்பை விட்டுகொடுக்காதவளாய்,
உன் நினைவை விடாது தொடர்பவளாய்,
உணர்வுகளை உணர்தலும்,
உனக்காய் உருகுவதும்,
உனையே உயிராய் நினைத்தலும்,
என என் காதல்,
என்னுள் ஆழமாய் தொடர,
****நீ மட்டும்****
காதலை கானலாக்கி
எங்கே காணமல் சென்றாய்...
 
* காதலே!!!
உன் உருவமில்லாமல்
தொடரும் என் நினைவுகளை
தொலைதூரம் ஆக்கி
என்னை தூரமாக்கி
கொண்ட தூயவனே.....
என்னை நிராகரித்ததின்
பொருள் கேட்டு நித்தமும்
என் மனம் போராடுகிறது....

* விருச்சமாய் நான் வளர்த்துக்கொண்ட
உன்னோடான என் காதல் கனவுகளை
வெட்டியெறிய நினைத்தாலும்
துளிர்விடும் வேராய்
உன் நினைவுகள்....

* காதலே!
*** அறிதுகொண்டேன்
காலத்தில் சொல்லாத காதலும்,
சரியான காலத்தில் கொடுக்க
படாத மன்னிப்பும்...
நம்மை மீளா நினைவுத் துயரில்
ஆழ்த்தும் என்பதை புரிந்துகொண்டேன்...

* காதலனே!!!!!
 உன் அன்பை விட்டுகொடுக்காதவளாய்,
உன் நினைவை விடாது தொடர்பவளாய்,
உணர்வுகளை உணர்தலும்,
உனக்காய் உருகுவதும்,
உனையே உயிராய் நினைத்தலும்,
என என் காதல்,
என்னுள் ஆழமாய் தொடர,
****நீ மட்டும்****
காதலை கானலாக்கி
எங்கே காணமல் சென்றாய்???...

அன்புடன் 
ரேவா 
( ஒரு இணைய நட்பின் வேண்டுகோளுக்காய் இந்த கவிதை)

2 கருத்துகள்:

எவனோ ஒருவன் சொன்னது…

நெகிழ வச்சுட்டீங்க தோழி. ரொம்ப நல்லா இருக்கு :-)

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

நெகிழ வச்சுட்டீங்க தோழி. ரொம்ப நல்லா இருக்கு :-)


நன்றி நண்பா