உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 14 மே, 2011

மாற்றத்தை விரும்புகிறோம் இப்போதைக்கு...


* சிலர் முகச்சாயம் வெளுத்துவிட்டாலும்
எல்லோரும் ஒரே 
முகபாவம் கட்டுவாதாய் 
ஒரு உணர்வு...


* பாதிக்க பட்ட மக்களின்,
ஒவ்வொரு துளி 
கண்ணீரும் 
சாட்சி சொன்னது,
இன்று மாற்றமாய் வந்தது..


* அணைந்த விளக்கிலிருந்து 
மேலெழும்பும் புகைபோல,
ஆட்டம் முடிந்தாலும்,
பழிதீர்க்க துடிக்கிறது
பழைய பகை...  

* கெட்ட கனவாக பழைய 
நிலையை மறக்க 
நினைத்தாலும், 
உள்ளிருக்கும் உணர்வுகள் 
எல்லார் முகத்திலும் 
முகச்சாயம் ஒட்டிய
பொய்ப் புன்னகையையே
உதிர்ப்பதாய் ஓர்
உணர்வு...

* ஒவ்வொரு மோதலிலும் 
மாறி மாறி வரும் 
மாற்றங்கள்...
நீதிகேட்டும் கிடைக்காத 
கோவத்தின் தீக்கனல்கள்... 

* தீட்டிய வாளோடு
தெருவில் சண்டையிட 
திராணி இல்லை எங்களுக்கு...
சுரண்டலின் பின்னும்
எங்களுக்கான
எச்சங்களை கொஞ்சம் 
மிச்சம் வையுங்கள்....

 * ஒவ்வொரு புதிய தொடக்கமும் 
எதிர்பார்ப்போடு தொடங்குகிறது...
பழையதில் இருந்து மாறிட
ஒவ்வொரு மனமும்
மாற்றத்தை விரும்பிகிறது
இப்போதைக்கு...

பதிவுலக நாயகிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்....வாழ்த்து சொல்லி படையெடுக்கும் நண்பன் அன்பை விட ஆயதம் எதுவுமில்லை....கொஞ்சம் அங்கயும் போங்க.. ஹி ஹி

34 கருத்துகள்:

சௌந்தர் சொன்னது…

இப்போதைக்கு மாற்றம் தேவை தான் இப்பொழுது கட்சிக்கு மாற்றம் கிடைத்துள்ளது. மக்களுக்கும் மாற்றம் கிடைத்தால் சந்தோஷம் தான்....


* விளக்கிலிருந்து மேலெழுப்பும்
புகைபோல,
ஆட்டம் முடிந்தாலும்,
பழிதீர்க்க துடிக்கிறது
பழைய பகை... ////

நல்ல வரிகள் பிடித்த வரிகள்

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

மாற்றங்கள் தானே நம்மை புனிதமடைய வைக்கிறது...

ramalingam சொன்னது…

//விளக்கிலிருந்து மேலெழுப்பும் புகைபோல,//நல்ல கவிதை. "அணைந்த விளக்கிலிருந்து"என்றிருக்கலாமோ!

Unknown சொன்னது…

எதிர்கட்சிகளின் தூண்டுதல்
உங்கள் கவிதையில் தென்படுகிறது
எதை நாங்கள் வழி மொழிகிறோம்
வாழ்த்துக்கள் தோழி

Unknown சொன்னது…

தீட்டிய வாளோடு
தெருவில் சண்டையிட
திராணி இல்லை எங்களுக்கு...
சுரண்டலின் பின்னும்
எங்களுக்கான
எச்சங்களை கொஞ்சம்
மிச்சம் வையுங்கள்...//

வார்த்தைகள் ஜாலம் அருமை ரசித்தேன்....

A.R.ராஜகோபாலன் சொன்னது…

அற்புதமான கருத்துக் கவிதை , நிகழ் காலத்தின் நிஜத்தை சொல்லும் சொக்க கவிதை

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கவிதையிலும் மாற்றம். சூப்பர்...

பெயரில்லா சொன்னது…

////தீட்டிய வாளோடு
தெருவில் சண்டையிட
திராணி இல்லை எங்களுக்கு...
சுரண்டலின் பின்னும்
எங்களுக்கான
எச்சங்களை கொஞ்சம்
மிச்சம் வையுங்கள்..../// நல்ல வரிகள்

மனோவி சொன்னது…

பலரின் நெஞ்சத்து நிஜங்களை வரிகளாக்கி இருக்கிறீர்கள்..

வாழ்த்துகள்..!

Ram சொன்னது…

பாதிக்க பட்ட மக்களின்,
ஒவ்வொரு துளி
கண்ணீரும்
சாட்சி சொன்னது,
இன்று மாற்றமாய் வந்தது..//

இந்த மாற்றம் தான் மாறி மாறி வந்துட்டே தானே இருக்கு

Ram சொன்னது…

அணைந்த விளக்கிலிருந்து
மேலெழும்பும் புகைபோல,
ஆட்டம் முடிந்தாலும்,
பழிதீர்க்க துடிக்கிறது
பழைய பகை... //

இல்லாம இருக்குமா.!! ஹி ஹி

Ram சொன்னது…

ஒவ்வொரு புதிய தொடக்கமும்
எதிர்பார்ப்போடு தொடங்குகிறது...
பழையதில் இருந்து மாறிட
ஒவ்வொரு மனமும்
மாற்றத்தை விரும்பிகிறது
இப்போதைக்கு...//

மாற்றம் சிறப்பாக அமைந்தால் நல்லது.!!

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

ம.தி.சுதா சொன்னது…

////கெட்ட கனவாக பழைய
நிலையை மறக்க
நினைத்தாலும்,////

சிலதை எப்படி நினைத்தாலும் மறக்க முடியாது சகோதரம்... வடுக்களல்லவா ?

Angel சொன்னது…

கவிதை நல்லா இருக்கு . //ஒவ்வொரு புதிய தொடக்கமும் எதிர்பார்ப்போடு தொடங்குகிறது..//.உண்மைதான் .நம்பிக்கைதான் வாழ்க்கை.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

மக்களுக்கும் மாற்றம் கிடைத்தால் சந்தோஷம்...

poem nice reva.

நிரூபன் சொன்னது…

தீட்டிய வாளோடு
தெருவில் சண்டையிட
திராணி இல்லை எங்களுக்கு...
சுரண்டலின் பின்னும்
எங்களுக்கான
எச்சங்களை கொஞ்சம்
மிச்சம் வையுங்கள்....//

ஏக்கங்கள் நிறைந்த, இனியாவது மக்கள் பிரச்சினைகளை மட்டும் பார்த்து நாட்டினை முன்னேற்றுங்கள் எனக் கேட்பது போன்ற வரிகள் இவை...

மாற்றங்கள் வேண்டும், தேர்தலின் பின்னரான எதிர்பார்ப்புக்கள்ச் சொல்லுகிறது. அம்மா என்ன செய்கிறா என்பதைச் சிறிது காலம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ரேவா சொன்னது…

சௌந்தர் said...

இப்போதைக்கு மாற்றம் தேவை தான் இப்பொழுது கட்சிக்கு மாற்றம் கிடைத்துள்ளது. மக்களுக்கும் மாற்றம் கிடைத்தால் சந்தோஷம் தான்....


* விளக்கிலிருந்து மேலெழுப்பும்
புகைபோல,
ஆட்டம் முடிந்தாலும்,
பழிதீர்க்க துடிக்கிறது
பழைய பகை... ////

நல்ல வரிகள் பிடித்த வரிகள்...

நன்றி சகோ உன் மறுமொழிக்கும், வருகைக்கும் :-)

ரேவா சொன்னது…

# கவிதை வீதி # சௌந்தர் said...

மாற்றங்கள் தானே நம்மை புனிதமடைய வைக்கிறது...

உண்மை தான் நண்பா...நன்றி உங்கள் வருகைக்கு :-)

ரேவா சொன்னது…

ramalingam said...

//விளக்கிலிருந்து மேலெழுப்பும் புகைபோல,//நல்ல கவிதை. "அணைந்த விளக்கிலிருந்து"என்றிருக்கலாமோ!

நன்றி நண்பரே உங்கள் வருகைக்கு...உங்கள் பின்னோட்டம் கண்டதும் நீங்கள் சொன்னது போல் மாற்றி விட்டேன்...மிக்க நன்றி...இனி தொடர்ந்து வாருங்கள் :-)

ரேவா சொன்னது…

siva said...

எதிர்கட்சிகளின் தூண்டுதல்
உங்கள் கவிதையில் தென்படுகிறது
எதை நாங்கள் வழி மொழிகிறோம்
வாழ்த்துக்கள் தோழி

ஹ ஹ வந்துட்டயா சிவா \:-)

ரேவா சொன்னது…

siva said...

தீட்டிய வாளோடு
தெருவில் சண்டையிட
திராணி இல்லை எங்களுக்கு...
சுரண்டலின் பின்னும்
எங்களுக்கான
எச்சங்களை கொஞ்சம்
மிச்சம் வையுங்கள்...//

வார்த்தைகள் ஜாலம் அருமை ரசித்தேன்....

நன்றி நன்றி நன்றி சிவா உன் கருத்துக்கு

ரேவா சொன்னது…

A.R.RAJAGOPALAN said...

அற்புதமான கருத்துக் கவிதை , நிகழ் காலத்தின் நிஜத்தை சொல்லும் சொக்க கவிதை

நன்றி நண்பரே :-)

ரேவா சொன்னது…

MANO நாஞ்சில் மனோ said...

கவிதையிலும் மாற்றம். சூப்பர்...

நன்றி. மனோ ..

ரேவா சொன்னது…

கந்தசாமி. said...

////தீட்டிய வாளோடு
தெருவில் சண்டையிட
திராணி இல்லை எங்களுக்கு...
சுரண்டலின் பின்னும்
எங்களுக்கான
எச்சங்களை கொஞ்சம்
மிச்சம் வையுங்கள்..../// நல்ல வரிகள்

மிக்க நன்றி நண்பரே...

ரேவா சொன்னது…

மனோவி said...

பலரின் நெஞ்சத்து நிஜங்களை வரிகளாக்கி இருக்கிறீர்கள்..

வாழ்த்துகள்..!

நன்றி மனோவி

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

பாதிக்க பட்ட மக்களின்,
ஒவ்வொரு துளி
கண்ணீரும்
சாட்சி சொன்னது,
இன்று மாற்றமாய் வந்தது..//

இந்த மாற்றம் தான் மாறி மாறி வந்துட்டே தானே இருக்கு...

ஆமாம் சகோ...இனியும் இந்த மாற்றம் தொடராமல் இருக்க அரசிடம் மாற்றம் வேண்டும்....

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

அணைந்த விளக்கிலிருந்து
மேலெழும்பும் புகைபோல,
ஆட்டம் முடிந்தாலும்,
பழிதீர்க்க துடிக்கிறது
பழைய பகை... //

இல்லாம இருக்குமா.!! ஹி ஹி


ஹி ஹி ஹி ஹி

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

ஒவ்வொரு புதிய தொடக்கமும்
எதிர்பார்ப்போடு தொடங்குகிறது...
பழையதில் இருந்து மாறிட
ஒவ்வொரு மனமும்
மாற்றத்தை விரும்பிகிறது
இப்போதைக்கு...//

மாற்றம் சிறப்பாக அமைந்தால் நல்லது.!!


கண்டிப்பாக அமையும் என்று எண்ணுவோம்...மக்கள் சக்தி மாபெரும் சக்தி என்பதை இன்று அனைவரும் அறிந்திருப்பர்...நன்றி சகோ உன் வருகைக்கும் மறுமொழிக்கும் :-)

ரேவா சொன்னது…

Rathnavel said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி ஐயா.....

ரேவா சொன்னது…

♔ம.தி.சுதா♔ said...

////கெட்ட கனவாக பழைய
நிலையை மறக்க
நினைத்தாலும்,////

சிலதை எப்படி நினைத்தாலும் மறக்க முடியாது சகோதரம்... வடுக்களல்லவா ?

கண்டிப்பாக மறக்க முடியாது தான் சகோதரம்...ஆனாலும் காலத்தின் பின் மறந்ததுபோல நடிக்கவாவது செய்யத்தானே வேணும்....நன்றி சகோ உன் வருகைக்கும் வாழ்த்துக்கும்....

ரேவா சொன்னது…

angelin said...

கவிதை நல்லா இருக்கு . //ஒவ்வொரு புதிய தொடக்கமும் எதிர்பார்ப்போடு தொடங்குகிறது..//.உண்மைதான் .நம்பிக்கைதான் வாழ்க்கை.

உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி...இனி தொடர்ந்து வாருங்கள் தோழி

ரேவா சொன்னது…

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

மக்களுக்கும் மாற்றம் கிடைத்தால் சந்தோஷம்...

poem nice reva.

கண்டிப்பாக கிடைக்கும் என்று நம்புவோம் தோழி பிரஷா :-)

ரேவா சொன்னது…

நிரூபன் said...

தீட்டிய வாளோடு
தெருவில் சண்டையிட
திராணி இல்லை எங்களுக்கு...
சுரண்டலின் பின்னும்
எங்களுக்கான
எச்சங்களை கொஞ்சம்
மிச்சம் வையுங்கள்....//

ஏக்கங்கள் நிறைந்த, இனியாவது மக்கள் பிரச்சினைகளை மட்டும் பார்த்து நாட்டினை முன்னேற்றுங்கள் எனக் கேட்பது போன்ற வரிகள் இவை...

மாற்றங்கள் வேண்டும், தேர்தலின் பின்னரான எதிர்பார்ப்புக்கள்ச் சொல்லுகிறது. அம்மா என்ன செய்கிறா என்பதைச் சிறிது காலம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


நலமா சகோ?...கண்டிப்பாக பொறுத்திருந்து தான் பார்க்கவேணும்...ஆனாலும் மக்கள் சக்தி பற்றி எல்லோரும் அறிந்திருப்பர்...அதற்காக வேணும் நல் மாற்றம் கிடக்கும் என்று எதிர்பார்ப்போம்..நன்றி சகோ உன் வருகைக்கு...