ஹாய் நண்பர்ஸ்..... வழக்கம் போல காதல் கவிதையையே கிறுக்காமா, கொஞ்சம் வித்தியாசமா ஏதாவது கிறுக்கலாம்னு நினச்சுதான் இந்த பதிவு...நேத்து முகூர்த்த நாள்கிறதால ஏகப்பட்ட கல்யாணங்கள்..எங்க அம்மாவும், அப்பாவும் மாறி மாறி ஒவ்வொரு சொந்தக்காரங்க கல்யாணத்துக்கா கிளம்பிட்டு இருந்தாங்க...இதுல என்ன கண்டுக்கவே இல்லை....
பிள்ள கொழந்தயாச்சே, சாப்பாடுக்கு என்ன பண்ணும்னு நினைப்பே இல்லாமல் கிளம்பிட்டாங்க....சரி நானும் அம்மாவந்து ஏதாவது சமையல் செஞ்சு தருவாங்கன்னு சாப்பிடாம இருந்தேன்..மதியம் ஒரு 12 மணி இருக்கும், எங்க வீட்டு காலிங் பெல் அடிக்கிற சவுண்ட் கேட்டது, என்னடா வழக்கமா நம்ம வீட்டுல இந்த பழக்கத்த எல்லாம் பாலோவ் பண்ணுறது இல்லையே,பின்ன யாருன்னு பாத்தா கொழந்தைங்க...அவங்கள சத்தம் போட்டுட்டு வந்துட்டேன்...மறுபடியும் காலிங் பெல் அடிக்கிற சத்தம், அப்போ கண்டிப்பா எங்க வீட்டு பக்கத்துல இருக்கிற குட்டிப் பிசாசுங்க தான் இந்த வேலையப் பண்ணுங்கனு, கண்டுக்காம இருந்துட்டேன், மறுபடியும் காலிங் பெல் அடிக்கிற சவுண்ட், சரி இதுங்கள இப்படியே விட்டா சரிப்படாதுன்னு திட்டிகிட்டே போக, கடைசில பாத்தா எங்க அத்தை மாமா வந்துருக்காங்க...
நான் அப்படியே சாக் ஆயிட்டேன்.. வழக்கம் போல அவங்க கிட்ட குசலம் விசாரிச்சுக்கிட்டு கிளம்பிடுவாங்கனு இருந்தப்போ தான் என் தலைல அந்த பெரிய இடி விழுந்தது...ரேவதி உன் மாமா க்கு கல்யாண சாப்பாடு ஒத்துக்காது, அவருக்கு சுகர் இருக்கு, இங்க நீ சமைச்சுத் தறியா ?.....நீ நல்லா சமைப்பேன்னு அப்பா சொல்லிருக்கான்னு என் தலைல இடிய ஏறக்க, நானா நான் நான் நான்தானே நல்லாவே சமைப்பேன் அத்தை னு சொல்லி கிச்சன் போனவ தான்....(.அதோட அந்த அத்தைக்கு அழகான பையன் இருக்கான்...இப்போ நீங்களே சொல்லுங்க, சமைக்க தெரியாட்டியும், தெரியும்னு தானே சொல்லுவேங்க, நானும் அப்டித் தான் சொன்னேன்...)
சரி சமைக்கிறது என்ன பெரிய ஆரிய வித்தையானு களத்துல குதிச்சுட்டேன்...இந்நேரம் பாத்து வீட்டுல ஒண்ணுமே இல்ல, சரி ஒரு வெஜிடபிள் .பிரியாணி செய்யலாம்னு மேக்கிங் பவுடர் எடுத்து, அப்படி, இப்படின்னு கைக்கு கிடைச்சது, எனக்கு பிடிச்சதுன்னு எல்லாத்தையும் குக்கர்ல போட்டு, அரிசியையும் அதோடு போட்டு, கைடைசில ஒருவழியா குக்கர ஆன் பண்ணி, ஒரு டைம் பிக்ஸ் பண்ணிட்டேன்.....நேரம் ஆக ஆக மாமா டென்ஷன்ல,அத்தைய கத்துறது, எனக்கு இங்க கிச்சன்ல கேட்டது....ஆனாலும் நாமலாம் யாரு...இந்த சல சலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டோம்ல(அவ்வ்வ்வவ்வ்வ்வ்)..பின்ன அத்தை வந்து என்னமா ரெடி ஆகிடுச்சா, உன் மாமா கத்துறாரு, பரவா இல்லையே நல்ல வாசனை வருதேன்னு சொல்ல, இதுவேறயான்னு மனசுக்குல நினச்சுக்கிட்டு, அத்தை நீங்க போன இதோ ஒரு பத்து நிமிஷத்துல எல்லாத்தையும் ரெடி பண்ணிடுறேன், நீங்க போய் ரெஸ்ட் எடுங்கத்தனு, அவங்ககிட்ட சொன்னேனே தவிர எனக்கு ஒன்னும் தெரியாதே...அவ்வ்வ்வவ்வ்வ்வ் மீ பாவம்ல,
சரி எல்லாம் பண்ணிட லாம்னு பாத்தா, கடைசி நேரத்துல குக்கர்ல இருந்து அலாவுதீன் படத்துல பூதம் கிளம்புற மாதிரி ஒரே பொகையா கிளம்புச்சு...என்னடா இந்த ரேவதிக்கு வந்த சோதனைன்னு, வேண்டாத தெய்வத்தை எல்லாம் வேண்டிட்டேன்...இத சரியா பண்ணாட்டி இவங்க போய், அவங்க பையன்ட என் அருமை, பெருமைய எல்லாத்தையும் சொல்லிடுவாங்களே, நமக்கு இருக்கிற ஒரு அத்தை பையனும் இல்லாம போயிடுவாநேனு மனசு கெடந்து தவிக்க, இந்த பாழாப்போன குக்கரு பிசாசு வேற விசில் அடிக்கவே இல்ல, கடைசில குக்கர தொறந்து பாத்தா பாத்தா பாத்தா, அட இருங்க பாஸ், கொஞ்சம் பில்ட் அப் கொடுத்துக்கிறேன்...தொறந்து பாத்தா ஒரே தண்ணியா இருக்கு, கிட்டத்தட்ட ரெண்டு மணிநேரம் கழிச்சு, மாமாவே கிச்சன் வந்து ரேவா சாப்பாடு கிடைக்குமா, இல்லா கிடைக்காதானு கேக்க, அந்த நேரத்துல நான் காமிடி பன்னுரேணாம், அவர்ட்ட கிடைக்கும் ஆனா கிடைக்காதுன்னு அள்ளிவிட மனுஷன் டென்ஷன் ஆகிட்டார்...பின்ன எபப்டியோ சமாளிச்சு,
வேர்க்க, விறுவிறுக்க, கிட்ட தட்ட திர்ல்லர் படம் பாக்குற எபெக்ட் ல அந்த சமையல் அஹ செஞ்சு முடிச்சுட்டேன்..ஸ்ஸப்பா...முடியல...

என்ன மெனுன்னு கேக்குறேங்களா?(இம்க்கும் இதுவேறயான்னு நீங்க நினைக்கிறது எனக்கு தெரியுது...ஆனாலும் விடமாட்டோம்...ஏன்னா நாங்கலாம் மதுரை காரங்க ஹி ஹி )
பிரின்ஞ் ரைஸ், ஆனியன், அப்பறம் தயிர், அப்பறம் ஒயிட் ரைஸ், கொஞ்சம் உருளைக்கிழங்கு வறுவல் இவ்வளவும் கஷ்டப் பட்டு செஞ்சாச்சு..மாமாவுக்கு சாப்பாடு அத்தை போட, மாமா சாப்ட்டு டெரர் லுக் கொடுக்க, நான் மாமா சாப்பாடு எப்படி இருக்குனு தான் கேட்டேன்....மனுஷன் தார தாரையா கண்ணீர் அஹ கொட்ட ஆரம்பிச்சுட்டாரு...இத்தன வருசத்துல என் பொண்டாட்டி கூட இப்படி ஒரு சமையல் பண்ணது இல்ல ரேவதினு சொல்ல, எனக்கோ ஆகாயத்துல பறக்குற ஒரு பீலிங், என்ன பீலிங்க்னு நீங்க கேக்கலாம்...ஆனா நான் சொல்ல மாட்டேனே...
கடைசியா அவரும் சாப்டாச்சு, காபி போடவான்னு கேக்க வேணாமா கடைல வாங்கிடு வர சொல்லுனு சொல்லிடாரு(அவ்வ்வ்வவ்வ்வ்)
அப்பறம் காபி குடிச்சுட்டு கிளம்பும்போது, கிளம்பும் போது, அவ்வ அத எப்படி என் வாயல சொல்லுவேன்...எங்க மாமா பையன் சொல்லிருந்தேன்ல அவனுக்கு என்ன கட்டிகொடுக்கனும்னு நினச்சாங்களாம்,ஆனா உன்ன மாதிரி திறமையான பொண்ணுக்கு, அவன் சரி பட மாட்டான் ரேவதி...ஆனா ஒன்னு சொல்லுறேன், உனக்கு வரவன் ரொம்ப கொடுத்து வச்சவன்னு சொல்லிட்டு போயிட்டாங்க....அடப் பாவிங்களா?...இதுக்கா இந்த போராட்டாம்...நீங்களே சொல்லுங்க மீ பாவம்ல...

(ஒரு மாறுதலுக்காய் கற்பனைகலந்த நிஜத்தை நகைச்சுவையாய் பதிவு செய்துள்ளேன்...பிடித்திருந்தால் கருத்திடவும்...வரட்டா...ஹி ஹி...)
102 கருத்துகள்:
எங்க அம்மாவும், அப்பாவும் மாறி மாறி ஒவ்வொரு சொந்தக்காரங்க கல்யாணத்துக்கா கிளம்பிட்டு இருந்தாங்க...இதுல என்ன கண்டுக்கவே இல்லை....///
ஏன் உங்களுக்கும் கல்யாணமா? ஓ.... உங்கள கூட்டிக்கிட்டு போகல னு சொல்றீங்களா?
பிள்ள கொழந்தயாச்சே, சாப்பாடுக்கு என்ன பண்ணும்னு நினைப்பே இல்லாமல் கிளம்பிட்டாங்க....//
என்னாது கொழந்தையா? ஆமா ரேவாவுக்கு இப்போ எத்தனைவயசு?
(.அதோட அந்த அத்தைக்கு அழகான பையன் இருக்கான்...இப்போ நீங்களே சொல்லுங்க, சமைக்க தெரியாட்டியும், தெரியும்னு தானே சொல்லுவேங்க, நானும் அப்டித் தான் சொன்னேன்...)//
அடிப்பாவி! நல்ல சமையல் தெரிஞ்ச ஒருத்தன பார்த்து கல்யாணம் பண்ணுவியா! அத விட்டுப்புட்டு..... சமைச்சுபோடுவாவாம்.......!!
நிறைய நிஜம் கொஞ்சம் கற்பனை சேர்ந்தால் சுவாரஸ்யமாக தான் இருக்கும் ...
இந்த பாலாப்போன குக்கரு பிசாசு வேற விசில் அடிக்கவே இல்ல, ///
என்னது குக்கர் பாலாப் போச்சா?
எருமைப்பாலா? பசுப்பாலா?
( எப்புடி, எழுத்துப்பிழைய கண்டுபுடிச்சிட்டோம் ல )
அப்பறம் காபி குடிச்சுட்டு கிளம்பும்போது, கிளம்பும் போது, அவ்வ அத எப்படி என் வாயல சொல்லுவேன்...எங்க மாமா பையன் சொல்லிருந்தேன்ல அவனுக்கு என்ன கட்டிகொடுக்கனும்னு நினச்சாங்களாம்,ஆனா உன்ன மாதிரி திறமையான பொண்ணுக்கு, அவன் சரி பட மாட்டான் ரேவதி...ஆனா ஒன்னு சொல்லுறேன், உனக்கு வரவன் ரொம்ப கொடுத்து வச்சவன்னு சொல்லிட்டு போயிட்டாங்க....அடப் பாவிங்களா?...இதுக்கா இந்த போராட்டாம்...நீங்களே சொல்லுங்க மீ பாவம்ல...///
ஹா ஹா ஹா ஹா....... செம காமெடி போஸ்ட் ரேவா! ஒரு பெண் பதிவரிடம் இருந்து இப்படி ஒரு கலக்கல் காமெடியை எதிர்பார்க்கவேல்லை! அட அட அட....... தமிழ் வலையுலக வரலாற்றில் முதல் முறையாக........ வேணாம் ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது!ஹி ஹி ஹி ஹி!!!
me the firstu...
mee the secondu...
ஆனா உன்ன மாதிரி திறமையான பொண்ணுக்கு, அவன் சரி பட மாட்டான் ரேவதி...//appada eppothan unga athai mama nallavanga..
கடைசியா அவரும் சாப்டாச்சு, காபி போடவான்னு கேக்க வேணாமா கடைல வாங்கிடு வர சொல்லுனு சொல்லிடாரு(அவ்வ்வ்வவ்வ்வ்)
அப்பறம் காபி குடிச்சுட்டு கிளம்பும்போது, கிளம்பும் போது, அவ்வ அத எப்படி என் வாயல சொல்லுவேன்...எங்க மாமா பையன் சொல்லிருந்தேன்ல அவனுக்கு என்ன கட்டிகொடுக்கனும்னு நினச்சாங்களாம்,ஆனா உன்ன மாதிரி திறமையான பொண்ணுக்கு, அவன் சரி பட மாட்டான் ரேவதி///
நம்ம payan பிழைச்சு போகட்டும்னு சொல்லி இருக்காங்க..மறைமுகமா
இந்த ஒருவேளை சாப்பிட்டது அவங்க மனசுக்குள்ள எவ்ளோ மாற்றங்களை உண்டு பண்ணி இருக்கு ...ok Noted
இத்தன வருசத்துல என் பொண்டாட்டி கூட இப்படி ஒரு சமையல் பண்ணது இல்ல ரேவதினு சொல்ல, எனக்கோ ஆகாயத்துல பறக்குற ஒரு பீலிங்,//
at the time அத்தை அப்போ மாமாவ பார்த்து பாவி மனுசா எவ்ளோ கஷ்டபட்டு எத்தனை நாள் சமைச்சு போட்டு இருக்கேன்..என்ன ஒரு வார்த்தை பாராட்டி இருக்கியான்னு மனசுக்குல உங்க அத்தை புலம்பினது
உங்களுக்கு அவ்வளவு சந்தோசமா???kirr
நல்ல இருந்துச்சு பதிவு
சுட சுட வெச்சிபிரியாணி போல போட்டு அசத்திட்டீங்க
வாழ்த்துக்கள் ரேவதி
ரேவதி... ரொம்ப கஷ்டப்பட்டு சமையல் செஞ்சும் நல்ல பேர் வாங்க முடியலையே...
உங்கள் சமையலை போலவே பதிவும் அருமை , உங்க பதிவ படிக்கற நாங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க சகோதரி
ஹா ஹா ஹா ஹா சூப்பரு...
hehehe :)
வாழ்த்துக்கள்! கைய குடுங்க! இப்படி ஒரு சமையல் சமைச்ச கைய புடிச்சி, கண்ணீர் சிந்தி, இனிமே கஷ்டபட்டோ இல்லை இஷ்டப்பட்டோ கூட சமைக்கதீங்க அப்படின்னு சொல்ல வந்தேன் :) :) :) எல்லாம் வரவரு பாத்துப்பரு....
http://karadipommai.blogspot.com/
வாழ்த்துக்கள்! கைய குடுங்க! இப்படி ஒரு சமையல் சமைச்ச கைய புடிச்சி, கண்ணீர் சிந்தி, இனிமே கஷ்டபட்டோ இல்லை இஷ்டப்பட்டோ கூட சமைக்காதீங்க அப்படின்னு சொல்ல வந்தேன் :) :) :) எல்லாம் வரவரு பாத்துப்பாரு. .
http://karadipommai.blogspot.com/
>>அப்போ கண்டிப்பா எங்க வீட்டு பக்கத்துல இருக்கிற குட்டிப் பிசாசுங்க தான் இந்த வேலையப் பண்ணுங்கனு,
குழந்தைகளை பிசாசு என அபாண்டமாக கூறிய பதிவர்.. பதிவுலகம் பரபரப்பு.. ஹி ஹி இப்படிக்கு வீண் வம்புக்கு அலைவோர் சங்கம்
>>...எங்க மாமா பையன் சொல்லிருந்தேன்ல அவனுக்கு என்ன கட்டிகொடுக்கனும்னு நினச்சாங்களாம்
நல்லவேளை அவன் தப்பிச்சான் ஹா ஹா ஹா
பொதுவாக பெண்களிடம் நகைச்சுவை உணர்வு குறைவு என்று ஒரு பேச்சு உண்டு.. அதை தகர்க்க்கிறது உங்க காமெடி எழுத்துக்கள்
ஹாய் நண்பர்ஸ்..... வழக்கம் போல காதல் கவிதையையே கிறுக்காமா, கொஞ்சம் வித்தியாசமா ஏதாவது கிறுக்கலாம்னு நினச்சுதான் இந்த பதிவு...//
அப்போ நீங்களும் உட்கார்ந்து யோசிக்க வெளிக்கிட்டீங்க.
நீ நல்லா சமைப்பேன்னு அப்பா சொல்லிருக்கான்னு என் தலைல இடிய ஏறக்க, நானா நான் நான் நான்தானே நல்லாவே சமைப்பேன் அத்தை னு சொல்லி கிச்சன் போனவ தான்....//
ஆஹா...அத்தைப் பையனுக்கு ஆப்பா.
சரி சமைக்கிறது என்ன பெரிய ஆரிய வித்தையானு களத்துல குதிச்சுட்டேன்...இந்நேரம் பாத்து வீட்டுல ஒண்ணுமே இல்ல, சரி ஒரு வெஜிடபிள் .பிரியாணி செய்யலாம்னு மேக்கிங் பவுடர் எடுத்து, //
நிஜமாத் தான் கேட்கிறேன் சமைக்கிறதுக்கு, பேக்கிங் பவுடா, இல்லை மேக்கிங் பவுடரா.
நல்ல வேளை மேக்கப் பவுண்டேசன் பவுரை நீங்க யூஸ் பண்ணலை.
எனக்கோ ஆகாயத்துல பறக்குற ஒரு பீலிங், என்ன பீலிங்க்னு நீங்க கேக்கலாம்...ஆனா நான் சொல்ல மாட்டேனே...//
அந்தாள் ஆகாயத்திலை பறந்தாரா இல்ல, டாய்லெட்டு வாளியை எடுத்துக் கொண்டு வயிற்றுக் குழப்பத்திலை போனாரா,எனக்கு டவுட்டாக இருக்கே.

ஆனா உன்ன மாதிரி திறமையான பொண்ணுக்கு, அவன் சரி பட மாட்டான் ரேவதி...//
இதை நாம நம்பனுமாக்கும்.
அவ்..
நம்புறோம் சகோ,
உண்மையில் ஒரு கலக்கலான வித்தியாசமான காமெடிப் பதிவு. வாழ்த்துக்கள் சகோ. தொடர்ந்தும் வெரைட்டியான ரைப்பில் எதிர்பார்க்கிறேன்.
சகோ பர்சனல் பின்னூட்டம்.
தமிழ் மணத்தில் நீங்க உங்களுக்கு ஒரு ஓட்டுப் போடுங்க,
அவங்களுக்குள்ள என்னமோ இருந்திருக்கு பாருங்க,,,,,
ரேவா ரொம்ப நாளுக்கு பிறகு வர்றேன் கடிச்சிடாத.. போய் பதிவ படிச்சிட்டு ரிட்டன் ஆகுறேன்..
வழக்கம் போல காதல் கவிதையையே கிறுக்காமா, கொஞ்சம் வித்தியாசமா ஏதாவது கிறுக்கலாம்னு நினச்சுதான் இந்த பதிவு...//
என்னது ரேவா கடையில கவிதை இல்லையா.? அதுவும் காதல் கவிதை இல்லையா.? ஆச்சர்யமா இருக்கே!!
எங்க அம்மாவும், அப்பாவும் மாறி மாறி ஒவ்வொரு சொந்தக்காரங்க கல்யாணத்துக்கா கிளம்பிட்டு இருந்தாங்க...//
கிளம்பிட்டே இருந்தாங்க சரி.. எந்த கல்யாணத்துக்கும் போகலியா.? நேரா இப்ப நம்ம அம்மா அப்பாகின்ன போயி கிளம்பினா போகாம இருக்க கூடாதுனு கூர்னு ஒருத்தன் கூவினான்னு சொல்லு போ..
பிள்ள கொழந்தயாச்சே,//
மக்களே இதுக்கு நான் எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டேன்.. கேட்டுகிடுங்க கொழந்தையாம்..
//சரி நானும் அம்மாவந்து ஏதாவது சமையல் செஞ்சு தருவாங்கன்னு சாப்பிடாம இருந்தேன்.//
எத்தன வருசமா.?
யாருன்னு பாத்தா கொழந்தைங்க...//
ஓ.. ஒரு கொழந்தைக்கு இன்னொரு கொழந்தை பெல் அடிக்கிதா.?
//மறுபடியும் காலிங் பெல் அடிக்கிற சத்தம், //
எங்க ஊர்ல இருக்குற வயசான பாட்டியை சின்ன பசங்க இப்படி தான் கிண்டல் பண்ணுவாங்க.. உன்னயும் அப்படிதான் பண்ணியிருக்காங்க.. ஹி ஹி
//கடைசில பாத்தா எங்க அத்தை மாமா வந்துருக்காங்க... //
ஏன் கடைசில பாத்த.. கதவ திறந்ததும் பக்கத்துலயே இருந்திருக்க போறாங்க.. ஏன் கடைசியில பாத்த.?
அந்த பெரிய இடி விழுந்தது//
அதுக்கு தான் எங்க தமிழ் தலைவர் மாதிரி தலையில ஹெல்மெட் போட்டுகிடணும்.. இடியே வழுக்கி விழுந்திருக்கும்..
, இங்க நீ சமைச்சுத் தறியா ?.//
சுகர் மட்டும் தானே இருக்கு.!? இன்னும் ஏன் வியாதிய வர வைக்க பாக்குறீங்க.?
அந்த அத்தைக்கு அழகான பையன் இருக்கான்..//
எந்த பொண்ணும் இப்படிலாம் ஒத்துகிடாது.. உண்மைய சொல்லு உண்மையிலே அத்தைக்கு பையன் இருக்காரா.? அப்படியே இருந்தாலும் ரெண்டு வயசு மூணு வயசு குழந்தையா இருக்க போகுது.!!
களத்துல குதிச்சுட்டேன்...//
ஹி ஹி.. நீ சொல்றத எல்லாம் அப்படியே உருவக படுத்தி பாத்தா.!! ஐயோ.! சரி காமெடி.. நீ களத்துல குதிச்சத நான் குளத்துல குதிச்சதா நினச்சு பாத்தேன்.. ஹி ஹி..அப்பப்பா..
வெஜிடபிள் .பிரியாணி//
இத ஒரு குட்டி பாப்பா கூட செய்யும்..
எனக்கு பிடிச்சதுன்னு எல்லாத்தையும் குக்கர்ல போட்டு, //
உனக்கு பவுடர் டப்பாலாம் புடிக்கும்.. அதுக்குனு அதையும் தூக்கி போட்டுடுவியா.?
எனக்கு ஒன்னும் தெரியாதே..//
இத செய்ய ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில தனி கோர்ஸ் ஆ படிக்கமுடியும்.?
பிரின்ஞ் ரைஸ், ஆனியன், அப்பறம் தயிர், அப்பறம் ஒயிட் ரைஸ், கொஞ்சம் உருளைக்கிழங்கு வறுவல் இவ்வளவும் கஷ்டப் பட்டு செஞ்சாச்சு..//
இத கஷ்பட்டு வேற.!! உனக்கு மனசாட்சியே இல்லையா.? இல்ல தெரியாம தான் கேக்குறன் உனக்கு மனசாட்சி இல்லையா.. என்கிட்ட கொடுத்திருந்தா அரை மணிநேரத்துல முடிச்சிருப்பேன்..
//இத்தன வருசத்துல என் பொண்டாட்டி கூட இப்படி ஒரு சமையல் பண்ணது இல்ல ரேவதினு//
அவுங்க நல்லா சமைச்சிருப்பாங்க போல..
என்ன பீலிங்க்னு நீங்க கேக்கலாம்..//
இத கேட்டு வேற தெரிஞ்சிகிடணுமா.? அந்த அத்தை குழந்தை தானே.!!
காபி போடவான்னு கேக்க வேணாமா கடைல வாங்கிடு வர சொல்லுனு சொல்லிடாரு//
அவரு உஷார் ஆயிட்டாரு.. சோத்த போட்டு கொன்னது இல்லாம- காபி வேறயானு நினச்சிருப்பாரு..
.எங்க மாமா பையன் சொல்லிருந்தேன்ல அவனுக்கு என்ன கட்டிகொடுக்கனும்னு நினச்சாங்களாம்,//
மக்களே எந்த ஊட்டுல இப்படி வெளிப்படையா சொல்றாங்கோ!!
ஆனா உன்ன மாதிரி திறமையான பொண்ணுக்கு,//
இந்த இடத்தில் அந்த திறமை என்ற வார்த்தை கவனிக்கபட வேண்டியது.. அதாவது உன்னய மாதிரி ஆளுக்கு கட்டிகொடுத்து அப்பரம் காலம்பூரா தன் பையன கஷ்டபடுத்த வேண்டாம்னு நினச்சதை எப்படி சொல்றா பாருங்க..
ரொம்ப கொடுத்து வச்சவன்னு சொல்லிட்டு போயிட்டாங்க...//
இதையும் அப்படியே ஸ்லாங்க் மாத்தி படிச்சு பாருங்க புரியும்..
(ஒரு மாறுதலுக்காய் கற்பனைகலந்த நிஜத்தை நகைச்சுவையாய் பதிவு செய்துள்ளேன்...//
அது படிக்கும் போதே தெரியுது ரேவா.. உங்க மாமாவும், அத்தையும் வீட்டுக்கு வந்து நீ சமைச்சு போட்டவரைக்கும் தான் உண்மைனு நினைக்கிறேன்.. மத்தபடி எல்லாம் கப்சா..
super....
:)
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
எங்க அம்மாவும், அப்பாவும் மாறி மாறி ஒவ்வொரு சொந்தக்காரங்க கல்யாணத்துக்கா கிளம்பிட்டு இருந்தாங்க...இதுல என்ன கண்டுக்கவே இல்லை....///
ஏன் உங்களுக்கும் கல்யாணமா? ஓ.... உங்கள கூட்டிக்கிட்டு போகல னு சொல்றீங்களா?
ஹ ஹ அதே அதே....
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
பிள்ள கொழந்தயாச்சே, சாப்பாடுக்கு என்ன பண்ணும்னு நினைப்பே இல்லாமல் கிளம்பிட்டாங்க....//
என்னாது கொழந்தையா? ஆமா ரேவாவுக்கு இப்போ எத்தனைவயசு?
என்னாது வாயசா?...எனக்கா நேத்தோட பத்து முடிஞ்சு அஞ்சு நடக்குது....ஹி ஹ
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
(.அதோட அந்த அத்தைக்கு அழகான பையன் இருக்கான்...இப்போ நீங்களே சொல்லுங்க, சமைக்க தெரியாட்டியும், தெரியும்னு தானே சொல்லுவேங்க, நானும் அப்டித் தான் சொன்னேன்...)//
அடிப்பாவி! நல்ல சமையல் தெரிஞ்ச ஒருத்தன பார்த்து கல்யாணம் பண்ணுவியா! அத விட்டுப்புட்டு..... சமைச்சுபோடுவாவாம்.......!!
அட ஆமாம்ல இத நான் யோசிக்கவே இல்லா பாத்தியா?...இதுக்கு தான் நண்பன் வேணும்கிறது...நண்பன் டா..
ரியாஸ் அஹமது said...
நிறைய நிஜம் கொஞ்சம் கற்பனை சேர்ந்தால் சுவாரஸ்யமாக தான் இருக்கும்
உண்மைதான்...மிக்க நன்றி உங்கள் கருத்துக்கும், முதல் வருகைக்கும், இனி தொடர்ந்து வாருங்கள்
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
இந்த பாலாப்போன குக்கரு பிசாசு வேற விசில் அடிக்கவே இல்ல, ///
என்னது குக்கர் பாலாப் போச்சா?
எருமைப்பாலா? பசுப்பாலா?
( எப்புடி, எழுத்துப்பிழைய கண்டுபுடிச்சிட்டோம் ல )
உங்க கமெண்ட் பாத்ததும் மாத்திடோம்ல...நன்றி நன்றி :-)
ஒரு உண்மைய கற்பனைன்னு சொல்லிடீங்க ...
ஆனால் " இது ஒரு உண்மை சம்பவம் " ன்னு சொல்லி இருந்தீங்கனா உங்க நேர்மைய பாராட்டி இருக்கலாம் ...
நல்ல காமிடி ஹி ஹி ஹி
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
அப்பறம் காபி குடிச்சுட்டு கிளம்பும்போது, கிளம்பும் போது, அவ்வ அத எப்படி என் வாயல சொல்லுவேன்...எங்க மாமா பையன் சொல்லிருந்தேன்ல அவனுக்கு என்ன கட்டிகொடுக்கனும்னு நினச்சாங்களாம்,ஆனா உன்ன மாதிரி திறமையான பொண்ணுக்கு, அவன் சரி பட மாட்டான் ரேவதி...ஆனா ஒன்னு சொல்லுறேன், உனக்கு வரவன் ரொம்ப கொடுத்து வச்சவன்னு சொல்லிட்டு போயிட்டாங்க....அடப் பாவிங்களா?...இதுக்கா இந்த போராட்டாம்...நீங்களே சொல்லுங்க மீ பாவம்ல...///
ஹா ஹா ஹா ஹா....... செம காமெடி போஸ்ட் ரேவா! ஒரு பெண் பதிவரிடம் இருந்து இப்படி ஒரு கலக்கல் காமெடியை எதிர்பார்க்கவேல்லை! அட அட அட....... தமிழ் வலையுலக வரலாற்றில் முதல் முறையாக........ வேணாம் ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது!ஹி ஹி ஹி ஹி!!!
நன்றி ரஜீவன்...நகைச்சுவையா ஏதாவது எழுதலாம்னு பாத்தேன்...அதுல யாரும் முகம் சுளிக்கிற மாதிரி சொல்ல கூடாதுன்னு தான் ரேவா கேரக்டர் அஹ என் பதிவில கொண்டு வந்தேன்..ஹி ஹி...
வேணாம் ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது!ஹி ஹி ஹி ஹி!!!
ஆமாம்ல ஹி ஹி ஹி ஹி! நன்றி நண்பா உன் அத்துணை மறுமொழிக்கும்....
siva said...
me the firstu...
வாங்கோ சார் வாங்கோ
siva said...
ஆனா உன்ன மாதிரி திறமையான பொண்ணுக்கு, அவன் சரி பட மாட்டான் ரேவதி...//appada eppothan unga athai mama nallavanga..
ஒய்...நான் தான் பாவம்...
siva said...
கடைசியா அவரும் சாப்டாச்சு, காபி போடவான்னு கேக்க வேணாமா கடைல வாங்கிடு வர சொல்லுனு சொல்லிடாரு(அவ்வ்வ்வவ்வ்வ்)
அப்பறம் காபி குடிச்சுட்டு கிளம்பும்போது, கிளம்பும் போது, அவ்வ அத எப்படி என் வாயல சொல்லுவேன்...எங்க மாமா பையன் சொல்லிருந்தேன்ல அவனுக்கு என்ன கட்டிகொடுக்கனும்னு நினச்சாங்களாம்,ஆனா உன்ன மாதிரி திறமையான பொண்ணுக்கு, அவன் சரி பட மாட்டான் ரேவதி///
நம்ம payan பிழைச்சு போகட்டும்னு சொல்லி இருக்காங்க..மறைமுகமா
இந்த ஒருவேளை சாப்பிட்டது அவங்க மனசுக்குள்ள எவ்ளோ மாற்றங்களை உண்டு பண்ணி இருக்கு ...ok Noted
ஹ ஹ ஆமாம் ல...பாவம் பொழச்சு போகட்டும்...
siva said...
இத்தன வருசத்துல என் பொண்டாட்டி கூட இப்படி ஒரு சமையல் பண்ணது இல்ல ரேவதினு சொல்ல, எனக்கோ ஆகாயத்துல பறக்குற ஒரு பீலிங்,//
at the time அத்தை அப்போ மாமாவ பார்த்து பாவி மனுசா எவ்ளோ கஷ்டபட்டு எத்தனை நாள் சமைச்சு போட்டு இருக்கேன்..என்ன ஒரு வார்த்தை பாராட்டி இருக்கியான்னு மனசுக்குல உங்க அத்தை புலம்பினது
உங்களுக்கு அவ்வளவு சந்தோசமா???kirr
இருக்காதா பின்னே...ஹ ஹ
siva said...
நல்ல இருந்துச்சு பதிவு
சுட சுட வெச்சிபிரியாணி போல போட்டு அசத்திட்டீங்க
வாழ்த்துக்கள் ரேவதி
நன்றி சிவா...உன் வருகைக்கும் மறுமொழிக்கும் :-)
--
தமிழ்வாசி - Prakash said...
ரேவதி... ரொம்ப கஷ்டப்பட்டு சமையல் செஞ்சும் நல்ல பேர் வாங்க முடியலையே...
ஹ்ம்ம்..ஆமாம் நண்பா அது தான் கஷ்டமா இருக்கு..ஹி ஹி நன்றி நண்பா உங்கள் வருகைக்கு
A.R.ராஜகோபாலன் said...
உங்கள் சமையலை போலவே பதிவும் அருமை , உங்க பதிவ படிக்கற நாங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க சகோதரி
சகோ இதுல உள்க்குத்து எதுவும் இல்லையே..ஹ ஹ நன்றி நன்றி
MANO நாஞ்சில் மனோ said...
ஹா ஹா ஹா ஹா சூப்பரு...
என்ன மக்கா வெறும் சிரிப்பா மட்டும் பதிலா கொடுத்துட்டு போயிட்டேங்க..ஒரு அஞ்சாறு மொழியில மறுமொழி போட்டுருக்கலாம்ல..ஹ ஹ நன்றி மனோ...உங்கள் வருகைக்கு
Niroo said...
hehehe :)
நன்றி நண்பர், உங்கள் வருகைக்கும்,
மறுமொழிக்கும் :-)
Lali said...
வாழ்த்துக்கள்! கைய குடுங்க! இப்படி ஒரு சமையல் சமைச்ச கைய புடிச்சி, கண்ணீர் சிந்தி, இனிமே கஷ்டபட்டோ இல்லை இஷ்டப்பட்டோ கூட சமைக்காதீங்க அப்படின்னு சொல்ல வந்தேன் :) :) :) எல்லாம் வரவரு பாத்துப்பாரு. .
http://karadipommai.blogspot.com/
ஹி ஹி இந்த டிலிங் எனக்கு பிடிச்சிருக்கு... நன்றி தோழி உங்கள் வருகைக்கு
சி.பி.செந்தில்குமார் said...
>>அப்போ கண்டிப்பா எங்க வீட்டு பக்கத்துல இருக்கிற குட்டிப் பிசாசுங்க தான் இந்த வேலையப் பண்ணுங்கனு,
குழந்தைகளை பிசாசு என அபாண்டமாக கூறிய பதிவர்.. பதிவுலகம் பரபரப்பு.. ஹி ஹி இப்படிக்கு வீண் வம்புக்கு அலைவோர் சங்கம்
ஆனாலும் பிசாசுங்கனு செல்லமா தான் சொன்னேன்...அவ்வ்வ்வ் நான் அழுவேன்...
பிரபல பதிவர் திட்டியதால் மனமுடைந்த பெண் பதிவர்...இன்று முதல் அழுவாச்சி விரதம்....பதிவுலகில் பெண் பதிவர்கள் பிரபல பதிவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்...
இப்படிக்கு
அழுதாலும்
மேக்கப் கொலையாமல்
பதுகாபோர் சங்கம்.... ஹி ஹி சகோ எப்புடி......
சி.பி.செந்தில்குமார் said...
>>...எங்க மாமா பையன் சொல்லிருந்தேன்ல அவனுக்கு என்ன கட்டிகொடுக்கனும்னு நினச்சாங்களாம்
நல்லவேளை அவன் தப்பிச்சான் ஹா ஹா ஹா....
இல்லாத ஒருவனுக்கு ஆயுசு கெட்டி... ஹ ஹ...
சி.பி.செந்தில்குமார் said...
பொதுவாக பெண்களிடம் நகைச்சுவை உணர்வு குறைவு என்று ஒரு பேச்சு உண்டு.. அதை தகர்க்க்கிறது உங்க காமெடி எழுத்துக்கள்...
மிக்க நன்றி...எதையும் எழுத முடியும் என்று என்னவே இந்த பதிவு...நன்றி நன்றி நன்றி உங்கள் வருகைக்கும்...மனமார்ந்த பாராட்டுக்கும் :-)
நிரூபன் said...
ஹாய் நண்பர்ஸ்..... வழக்கம் போல காதல் கவிதையையே கிறுக்காமா, கொஞ்சம் வித்தியாசமா ஏதாவது கிறுக்கலாம்னு நினச்சுதான் இந்த பதிவு...//
அப்போ நீங்களும் உட்கார்ந்து யோசிக்க வெளிக்கிட்டீங்க.
ஹி ஹி ஆமாம்,இதுல உக்காந்து யோசிக்க வேற செய்யணுமா? ஹி ஹி ஹி ஹி
நிரூபன் said...
நீ நல்லா சமைப்பேன்னு அப்பா சொல்லிருக்கான்னு என் தலைல இடிய ஏறக்க, நானா நான் நான் நான்தானே நல்லாவே சமைப்பேன் அத்தை னு சொல்லி கிச்சன் போனவ தான்....//
ஆஹா...அத்தைப் பையனுக்கு ஆப்பா.
பின்ன அத்த பையனுக்கு ஆப் வாங்கிகொடுத்தாத்தான் தப்பு, ஆப்பு வச்ச தப்பு இல்ல சகோ..
நிரூபன் said...
சரி சமைக்கிறது என்ன பெரிய ஆரிய வித்தையானு களத்துல குதிச்சுட்டேன்...இந்நேரம் பாத்து வீட்டுல ஒண்ணுமே இல்ல, சரி ஒரு வெஜிடபிள் .பிரியாணி செய்யலாம்னு மேக்கிங் பவுடர் எடுத்து, //
நிஜமாத் தான் கேட்கிறேன் சமைக்கிறதுக்கு, பேக்கிங் பவுடா, இல்லை மேக்கிங் பவுடரா.
நல்ல வேளை மேக்கப் பவுண்டேசன் பவுரை நீங்க யூஸ் பண்ணலை.
சகோ பிரியாணி பொடி கடைல கிடைக்குதே அத சொன்னேன்...ஹ ஹ
நிரூபன் said...
எனக்கோ ஆகாயத்துல பறக்குற ஒரு பீலிங், என்ன பீலிங்க்னு நீங்க கேக்கலாம்...ஆனா நான் சொல்ல மாட்டேனே...//
அந்தாள் ஆகாயத்திலை பறந்தாரா இல்ல, டாய்லெட்டு வாளியை எடுத்துக் கொண்டு வயிற்றுக் குழப்பத்திலை போனாரா,எனக்கு டவுட்டாக இருக்கே.
ஹி ஹி எனக்கும் மையில்டா டவுட் இருக்கு சகோ
நிரூபன் said...
ஆனா உன்ன மாதிரி திறமையான பொண்ணுக்கு, அவன் சரி பட மாட்டான் ரேவதி...//
இதை நாம நம்பனுமாக்கும்.
அவ்..
நம்புறோம் சகோ,
அவ்வ...என்ன சகோ இப்படி சொல்லிட்ட :-)
நிரூபன் said...
உண்மையில் ஒரு கலக்கலான வித்தியாசமான காமெடிப் பதிவு. வாழ்த்துக்கள் சகோ. தொடர்ந்தும் வெரைட்டியான ரைப்பில் எதிர்பார்க்கிறேன்.
நன்றி சகோ... தொடர்ந்து முயற்ச்சிக்கிறேன்....
BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...
அவங்களுக்குள்ள என்னமோ இருந்திருக்கு பாருங்க,,,,,
ஹ ஹா ஆமாம்
தம்பி கூர்மதியன் said...
ரேவா ரொம்ப நாளுக்கு பிறகு வர்றேன் கடிச்சிடாத.. போய் பதிவ படிச்சிட்டு ரிட்டன் ஆகுறேன்..
ஹ ஹ வந்துட்டியா?வா சகோ வா...
தம்பி கூர்மதியன் said...
வழக்கம் போல காதல் கவிதையையே கிறுக்காமா, கொஞ்சம் வித்தியாசமா ஏதாவது கிறுக்கலாம்னு நினச்சுதான் இந்த பதிவு...//
என்னது ரேவா கடையில கவிதை இல்லையா.? அதுவும் காதல் கவிதை இல்லையா.? ஆச்சர்யமா இருக்கே!!
இருக்காதே பின்ன, உனக்கு சகோ ஆனா பிறகு, உன் நிழல் என் மேலயும் படும்ல..ஹி ஹி...
தம்பி கூர்மதியன் said...
எங்க அம்மாவும், அப்பாவும் மாறி மாறி ஒவ்வொரு சொந்தக்காரங்க கல்யாணத்துக்கா கிளம்பிட்டு இருந்தாங்க...//
கிளம்பிட்டே இருந்தாங்க சரி.. எந்த கல்யாணத்துக்கும் போகலியா.? நேரா இப்ப நம்ம அம்மா அப்பாகின்ன போயி கிளம்பினா போகாம இருக்க கூடாதுனு கூர்னு ஒருத்தன் கூவினான்னு சொல்லு போ..
இதோ போயி சொல்லிடுறேன் சகோ...ஆனா அம்மா கல்யாணத்துக்கு பொண்ணுக்கு போடுற அந்த அஞ்சு பவுன் சங்கிலிய உன்ன கொடுக்க சொல்லுறாங்களே...
தம்பி கூர்மதியன் said...
பிள்ள கொழந்தயாச்சே,//
மக்களே இதுக்கு நான் எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டேன்.. கேட்டுகிடுங்க கொழந்தையாம்..
(((( ஹா ஹா ஹ ஹா.. )))))
//சரி நானும் அம்மாவந்து ஏதாவது சமையல் செஞ்சு தருவாங்கன்னு சாப்பிடாம இருந்தேன்.//
எத்தன வருசமா.?
((( அணைக்கு மட்டும் தான் ))))
யாருன்னு பாத்தா கொழந்தைங்க...//
ஓ.. ஒரு கொழந்தைக்கு இன்னொரு கொழந்தை பெல் அடிக்கிதா.?
((((ஆமாம் ))))
//மறுபடியும் காலிங் பெல் அடிக்கிற சத்தம், //
எங்க ஊர்ல இருக்குற வயசான பாட்டியை சின்ன பசங்க இப்படி தான் கிண்டல் பண்ணுவாங்க.. உன்னயும் அப்படிதான் பண்ணியிருக்காங்க.. ஹி ஹி
(((( அவ்வ்வ்வவ்வ்வ் )))))
//கடைசில பாத்தா எங்க அத்தை மாமா வந்துருக்காங்க... //
ஏன் கடைசில பாத்த.. கதவ திறந்ததும் பக்கத்துலயே இருந்திருக்க போறாங்க.. ஏன் கடைசியில பாத்த.?
ஒய் சகோ...கடைசில னா அந்த கடைசி இல்ல, கடுப்பான பின்னாடின்னு அர்த்தம்...ஹி ஹி
தம்பி கூர்மதியன் said...
அந்த பெரிய இடி விழுந்தது//
அதுக்கு தான் எங்க தமிழ் தலைவர் மாதிரி தலையில ஹெல்மெட் போட்டுகிடணும்.. இடியே வழுக்கி விழுந்திருக்கும்..
, இங்க நீ சமைச்சுத் தறியா ?.//
சுகர் மட்டும் தானே இருக்கு.!? இன்னும் ஏன் வியாதிய வர வைக்க பாக்குறீங்க.?
((( ஹ ஹ பாவம் சகோ அவங்களுக்கு என் கைப்பக்குவம் தெரியாதுல)))
அந்த அத்தைக்கு அழகான பையன் இருக்கான்..//
எந்த பொண்ணும் இப்படிலாம் ஒத்துகிடாது.. உண்மைய சொல்லு உண்மையிலே அத்தைக்கு பையன் இருக்காரா.? அப்படியே இருந்தாலும் ரெண்டு வயசு மூணு வயசு குழந்தையா இருக்க போகுது.!!
((( அத்தைக்கு பையன் இருக்கு ஆனா அவன் இப்போ தான் செவன்த் போறான்....ஹி ஹி ))))
தம்பி கூர்மதியன் said...
களத்துல குதிச்சுட்டேன்...//
ஹி ஹி.. நீ சொல்றத எல்லாம் அப்படியே உருவக படுத்தி பாத்தா.!! ஐயோ.! சரி காமெடி.. நீ களத்துல குதிச்சத நான் குளத்துல குதிச்சதா நினச்சு பாத்தேன்.. ஹி ஹி..அப்பப்பா..
(((ஹி ஹி ஹி ஹி ஹி )))))
வெஜிடபிள் .பிரியாணி//
இத ஒரு குட்டி பாப்பா கூட செய்யும்..
((((அப்டியா..)))))
எனக்கு பிடிச்சதுன்னு எல்லாத்தையும் குக்கர்ல போட்டு, //
உனக்கு பவுடர் டப்பாலாம் புடிக்கும்.. அதுக்குனு அதையும் தூக்கி போட்டுடுவியா.?
(( எனக்கு பவுடர் லம் பிடிக்காது போ ))) ஹி ஹி )))
எனக்கு ஒன்னும் தெரியாதே..//
இத செய்ய ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில தனி கோர்ஸ் ஆ படிக்கமுடியும்.?
(( படிச்ச நல்லத் தான் இருக்கும்...நீதான் நிருபர் ஆச்சே, என்ன சேத்து விடுறையா?....ஹ ஹ...பழைய உயிர் தப்பிக்கும்...இல்லாட்டி, நீ பண்ண போற ஆராய்ச்சிக்கு, நானே உனக்கு நிறைய ஹெல்ப் பண்ணுவேன்,....))) சகோ...
தம்பி கூர்மதியன் said...
பிரின்ஞ் ரைஸ், ஆனியன், அப்பறம் தயிர், அப்பறம் ஒயிட் ரைஸ், கொஞ்சம் உருளைக்கிழங்கு வறுவல் இவ்வளவும் கஷ்டப் பட்டு செஞ்சாச்சு..//
இத கஷ்பட்டு வேற.!! உனக்கு மனசாட்சியே இல்லையா.? இல்ல தெரியாம தான் கேக்குறன் உனக்கு மனசாட்சி இல்லையா.. என்கிட்ட கொடுத்திருந்தா அரை மணிநேரத்துல முடிச்சிருப்பேன்..
((((( அப்படியா?...அப்போ அண்ணி கொடுத்து வச்சவங்கன்னு சொல்லு....)))))
//இத்தன வருசத்துல என் பொண்டாட்டி கூட இப்படி ஒரு சமையல் பண்ணது இல்ல ரேவதினு//
அவுங்க நல்லா சமைச்சிருப்பாங்க போல..
((( ஆமாம் )))
என்ன பீலிங்க்னு நீங்க கேக்கலாம்..//
இத கேட்டு வேற தெரிஞ்சிகிடணுமா.? அந்த அத்தை குழந்தை தானே.!!
((( ஹி ஹி ஆமாம் )))
தம்பி கூர்மதியன் said...
காபி போடவான்னு கேக்க வேணாமா கடைல வாங்கிடு வர சொல்லுனு சொல்லிடாரு//
அவரு உஷார் ஆயிட்டாரு.. சோத்த போட்டு கொன்னது இல்லாம- காபி வேறயானு நினச்சிருப்பாரு..
*********ஹி ஹி ஆமாம் ஆமாம்..பாவம் மனுஷன் கொஞ்ச காலம் வாழ ஆசைப் பட்டுருக்கார்... *********
.எங்க மாமா பையன் சொல்லிருந்தேன்ல அவனுக்கு என்ன கட்டிகொடுக்கனும்னு நினச்சாங்களாம்,//
மக்களே எந்த ஊட்டுல இப்படி வெளிப்படையா சொல்றாங்கோ!!
***** அது சும்மா சகோ ******
ஆனா உன்ன மாதிரி திறமையான பொண்ணுக்கு,//
இந்த இடத்தில் அந்த திறமை என்ற வார்த்தை கவனிக்கபட வேண்டியது.. அதாவது உன்னய மாதிரி ஆளுக்கு கட்டிகொடுத்து அப்பரம் காலம்பூரா தன் பையன கஷ்டபடுத்த வேண்டாம்னு நினச்சதை எப்படி சொல்றா பாருங்க..
*** ஆமாம் அவரு திறமையானவருல அதான் அப்டி சொல்லிருக்காரு ****
ரொம்ப கொடுத்து வச்சவன்னு சொல்லிட்டு போயிட்டாங்க...//
இதையும் அப்படியே ஸ்லாங்க் மாத்தி படிச்சு பாருங்க புரியும்..
ஹி ஹி நீயே சொல்லிகொடுப்ப போல...
தம்பி கூர்மதியன் said...
(ஒரு மாறுதலுக்காய் கற்பனைகலந்த நிஜத்தை நகைச்சுவையாய் பதிவு செய்துள்ளேன்...//
அது படிக்கும் போதே தெரியுது ரேவா.. உங்க மாமாவும், அத்தையும் வீட்டுக்கு வந்து நீ சமைச்சு போட்டவரைக்கும் தான் உண்மைனு நினைக்கிறேன்.. மத்தபடி எல்லாம் கப்சா..
ஹி ஹி சகோ எல்லாமே கப்பசா தான்...எங்க வீட்டுக்கு யாரும் வரல, நான் சமைச்சது உண்மை...நல்லா சமைச்சேன்...நம்பு...ஹி ஹி...மத்தது எல்லாம் பொய்.....
உண்மைய சொல்லனும்னா, நான் பதிவு எழுதும் பொது கூட இவ்ளோ சிரிக்கல, உன் மறுமொழி எல்லாத்தையும் பாத்து, பாத்து விழுந்து விழுந்து சிரிச்சேன்...ஹி ஹி நன்றி நன்றி நன்றி சகோ...உன் அத்துணை கருத்துக்கும்...
மாணவன் said...
super....
:)
நன்றி சகோ
வேங்கை said...
ஒரு உண்மைய கற்பனைன்னு சொல்லிடீங்க ...
ஆனால் " இது ஒரு உண்மை சம்பவம் " ன்னு சொல்லி இருந்தீங்கனா உங்க நேர்மைய பாராட்டி இருக்கலாம் ...
நல்ல காமிடி ஹி ஹி ஹி
அவ்வ்வ்வ் இது ஒன்னும் உண்மை சம்பவம் இல்லையே...ஹி ஹி நன்றி நண்பா உங்கள் வருகைக்கு
ஆனா அம்மா கல்யாணத்துக்கு பொண்ணுக்கு போடுற அந்த அஞ்சு பவுன் சங்கிலிய உன்ன கொடுக்க சொல்லுறாங்களே...// இதெல்லாம் ஓவரு.!! நான் கல்யாணத்துக்கு போறதே சாப்பாடு சாப்பிட மட்டும் தான் என்னய போய் அம்மா கேக்குறாங்கன்னு சொல்றியே.!! ஹி ஹி.. அம்மாவுக்கு அவுங்க பையன பத்தி நல்லாவே தெரியும்.. அதெல்லாம் கேக்க மாட்டாங்க

இல்ல நெசமாத்தான்... வேணும்னா _____ணியக் கேட்டுப் பாரு... ஹி ஹி....
((( அத்தைக்கு பையன் இருக்கு ஆனா அவன் இப்போ தான் செவன்த் போறான்....ஹி ஹி ))))//
நினச்சேன்.. இப்படி தான் ஏதாச்சும் இருக்கும்னு..
//எங்க வீட்டுக்கு யாரும் வரல, நான் சமைச்சது உண்மை...நல்லா சமைச்சேன்...நம்பு...ஹி ஹி...மத்தது எல்லாம் பொய்.....//
என்னது.? ஏ வானகமே.! ஏ வையகமே.! ஏ காற்றே.! ஏ மழையே.! எல்லாரும் கேட்டீங்களா ரேவா நல்லா சமைச்சாளாம்.. ஹி ஹி.. ரேவா இத சொன்னதும் வெளிய சூரியன் பல்ல காட்டிகிட்டு சிரிக்கிது(ஓவரு வெயிலு)..
ஆனா ஒரே ஒரு கரண்டிய புடிச்சு சமச்சுபுட்டு அதுக்கு இந்த அளவுக்கு பொய் எடுத்துவிட்ட உனக்கு பாராட்டுகள்..(பாராட்டி தானே ஆகணும்.! எப்பவாவது வீட்டுக்கு போனா சாப்பாடு போடாம விட்டுட்டானா.!!)

ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி
ஆனா ஒரே ஒரு கரண்டிய புடிச்சு சமச்சுபுட்டு அதுக்கு இந்த அளவுக்கு பொய் எடுத்துவிட்ட உனக்கு பாராட்டுகள்..(பாராட்டி தானே ஆகணும்.! எப்பவாவது வீட்டுக்கு போனா சாப்பாடு போடாம விட்டுட்டானா.!!)
ஹி ஹி நன்றி சகோ...வீட்டுக்கு வா சமைச்சு போட்டுறலாம்...விதி யார விட்டது...உனக்கு என் கையால தான்... ஹி ஹி சமைச்சு கொடுக்கணும்னு இருந்தா விதிய, மாத்த முடியுமா?ஹ ஹ
அப்பவே சொல்லணும்னு இருந்தேன்.. அந்த படம் ஸோ க்யூட்..!!!
உனக்கு என் கையால தான்... ஹி ஹி சமைச்சு கொடுக்கணும்னு இருந்தா விதிய, மாத்த முடியுமா?ஹ ஹ //
:))))))))(((((((((
சிரிக்கிறதா அழுகுறதானு தெரியலையே.!!
//உனக்கு வரவன் ரொம்ப கொடுத்து வச்சவன்னு சொல்லிட்டு //
ஆகா இது உலகமகா உள்குத்தா இருக்கும் போலவே.
சிலருக்கு சமையல் நல்லா வரலாம். ஆனால், பதிவு எழுதுறதுல உங்களை யாருமே அசைக்க முடியாது. அதனால, நிஜமாவே உங்களுக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரு தான் :-)
சூப்பர் நல்ல இருக்கு நல முயற்சி , நகைசுவை அருமையா வருது எழுத்துல ரசிக்கிராமாதிரி வேற இருக்கு வாழ்த்துக்கள் ,
அவ்வ்வ்வ்வ்வ்வ் அவ்வவ்வ அவ்வ்வ்வ்
உங்க வீட்டுக்கு வர்ற விருந்தாளிகளான நாங்கலாம் பாவம்
//என்னது எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....//
கொடுத்துவச்சவருங்க அவரு வாழ்த்துகள் பாஸ் ரேவதி அவர கண்கலங்காம பார்த்துக்கம்மா :))
ஹாஹாஹா!! உண்மையிலேயே உங்க எதிர்கால ஹப்பி ”ரொம்ப குடுத்துவெச்சவர்”தான்.
இந்த புலிக்கு எந்த ஆடோ?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...!!
இப்போதான் முதல் முறை வருகிறேன்.. ப்ளாக் சூப்பரு.. ஒரு வாரத்துக்கு உங்க பேஜஸ்தான்.. லாலாலா!!
தம்பி கூர்மதியன் said...
அப்பவே சொல்லணும்னு இருந்தேன்.. அந்த படம் ஸோ க்யூட்..!!!
அது நான் தான்னு சொன்ன நீ நம்பவா போற.. ஹி ஹி
தம்பி கூர்மதியன் said...
உனக்கு என் கையால தான்... ஹி ஹி சமைச்சு கொடுக்கணும்னு இருந்தா விதிய, மாத்த முடியுமா?ஹ ஹ //
:))))))))(((((((((
சிரிக்கிறதா அழுகுறதானு தெரியலையே.!!
ரொம்ப சிம்பிள் சகோ நான் சமைக்கிறத பாத்து சிரி, சாப்பிட்ட பிறகு அழு... ஹ ஹ
பலே பிரபு said...
//உனக்கு வரவன் ரொம்ப கொடுத்து வச்சவன்னு சொல்லிட்டு //
ஆகா இது உலகமகா உள்குத்தா இருக்கும் போலவே.
உள்க்குத்தா அப்டிலாம் இல்லப்பா?.... ஹ ஹ
எவனோ ஒருவன் said...
சிலருக்கு சமையல் நல்லா வரலாம். ஆனால், பதிவு எழுதுறதுல உங்களை யாருமே அசைக்க முடியாது. அதனால, நிஜமாவே உங்களுக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரு தான் :-)
ஹ ஹ அப்படியா சொல்லுறேங்க நண்பா....இதுக்குத் தான் நண்பன் வேணும்கிறது...ஹி ஹி நன்றி நன்றி
bala said...
சூப்பர் நல்ல இருக்கு நல முயற்சி , நகைசுவை அருமையா வருது எழுத்துல ரசிக்கிராமாதிரி வேற இருக்கு வாழ்த்துக்கள் ,
மிக்க நன்றி நண்பா
ப்ரியமுடன் வசந்த் said...
அவ்வ்வ்வ்வ்வ்வ் அவ்வவ்வ அவ்வ்வ்வ்
உங்க வீட்டுக்கு வர்ற விருந்தாளிகளான நாங்கலாம் பாவம்
//என்னது எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....//
கொடுத்துவச்சவருங்க அவரு வாழ்த்துகள் பாஸ் ரேவதி அவர கண்கலங்காம பார்த்துக்கம்மா :))
ஹி ஹி கண்கலங்காமத்தானே பாத்துக்கிறேன்...வெங்காயம் மட்டும் நான் கட் பண்ணிக்கிறேன்...ஓகே யா பாஸ்...
ரங்கன் said...
ஹாஹாஹா!! உண்மையிலேயே உங்க எதிர்கால ஹப்பி ”ரொம்ப குடுத்துவெச்சவர்”தான்.
இந்த புலிக்கு எந்த ஆடோ?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...!!
இப்போதான் முதல் முறை வருகிறேன்.. ப்ளாக் சூப்பரு.. ஒரு வாரத்துக்கு உங்க பேஜஸ்தான்.. லாலாலா!!
ஹ ஹ அப்டியா சொல்லுறேங்க....நன்றி நன்றி...
.//அதோட அந்த அத்தைக்கு அழகான பையன் இருக்கான்...இப்போ நீங்களே சொல்லுங்க, சமைக்க தெரியாட்டியும், தெரியும்னு தானே சொல்லுவேங்க, நானும் அப்டித் தான் சொன்னேன்...)//ஆனாலும் விடமாட்டோம்...ஏன்னா நாங்கலாம் மதுரை காரங்க ஹி ஹி //
இப்பதான் காரணம் புரியுது இன்னிக்கு உங்களால சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணா போச்சு
.அருமையான நகைச்சுவை பதிவு .
angelin said...

ஹ ஹ அப்படியா?...நன்றி நன்றி நன்றி தோழி
ரேவா மா உங்க படைப்ப படிச்சிடு நான் சமைக்க எடுத்த முயற்சியின் விளைவு
சமைப்பதை விட அதை சாப்பிடற எவ்ளோ கஷ்டம் இன்றுதான் தெரிந்தது
25 வருடங்களாகியும் கடைசியாக அம்மா சாப்பிடுவதின் அர்த்தம் புரிந்த்து
என்ன இருந்தாலும் நல்ல தான் இருந்ததுனு அம்மா சொல்லும்போது(நான் பாவும் ஒரு mind voice கேட்டுசு)
அப்பா கடைசிவரை அது என்ன குழம்புனு அதன் பெயரை தேடுறாங்க
அப்பா டீனு கேட்டா நான் டீ சாப்புடுறதவிட்டு பல மாதம் ஆயிட்டுனு escape
அடுத்த கட்ட ஆராய்ச்சிக்கு எலியை தான் பயன்படுத்தனும் நான்
அருமையான படைப்பு மா
எனக்கு ரொம்ப பிடிச்சுருந்தது
ஹே தொனுற்று ஒன்பது
ஹே நூறு
100.
century
வடை எனக்குதான்
உனக்கு வர போறவன்... நிச்சயம் சமையல் தெரிஞ்சவனா தான் இருப்பான்... அதனால நீ செஞ்சி கொடுத்த பிரியாணி தான் அவங்கள அப்டி வாழ்த்த சொல்லி இருக்கு...போதுமா.?
கருத்துரையிடுக