நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.
என்னடா திருக்குறளோட ஆரம்பிக்கரானு பாக்குறேன்களா?....படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு. அப்படிப் பட்ட நண்பர்க்களுக்கு நன்றி சொல்லும் பதிவாய் இதைத் தொகுத்திருக்கின்றேன்....
இப்போ நண்பர்களுக்கு நன்றி சொல்ல, என்ன வந்ததுன்னு நீங்க கேக்குறது, எனக்கு புரியுது...இனி வலையுலகம் வரமுடியுமான்னு எனக்கு தெரியல, கொஞ்சம் இடைவெளி தேவைப் படுகிறது...இந்த இடைவெளி தற்காலிகம் தானா?...இல்லா நிரந்தர இடைவெளியானு எனக்கு தெரியல, அதனால, முகம் தெரியாமல், எனக்கு பதிவுலக முகவரி தந்த சகோதர நட்புகளுக்கு நன்றிகள் சொல்ல இந்த பதிவை பயன்படுத்திக்கிறேன்...
பதிவுலகம் வந்து கிட்டத் தட்ட ஒன்றை ஆண்டுகள் ஆன போதிலும், நான் முழுதாய் அறியப்பட்டது ஒரு நான்கு மாத காலம் தான்....சகோதரன் கார்த்திக் அவர்கள் உதவியாலே, திரட்டிகளில் பதிவுகளை இணைக்கும் முறையையும், பல பதிவர்களின் பதிவுகளுக்கு சென்று கருத்திடும் முறையையும் அறிந்தேன்...அவருக்கு நன்றிகள் பல......
அடுத்து முதல் பிரிவு நண்பன் ஆனந்துக்கு, என் எல்லா பதிவுக்களுக்கும், கருத்திட்டு என்னை வளர்த்த நண்பன் இவன்...என் எழுத்தில் என்னைவிட இவருக்கு காதல் அதிகம்....அதோடு நான் வலையுலகம் வந்து, கிடைத்த முதல் நட்பும் இதுவே...எவனோ ஒருவனாய் இருந்து, என் நண்பனான ஆனந்திருக்கும் நன்றிகள்...
அடுத்த நட்பாக, நண்பர் பிரியமுடன் வசந்த்....என் எண்ணங்களுக்கு புது வடிவம் கொடுத்த, என் பதிவுலக ஆசான்..இவர்..அவருக்கும் நன்றிகள்......நண்பன் சிவா, பதிவுலகில் எனக்கு கிடைத்த மற்றும் ஒரு உண்மை நண்பன்....அவருக்கும் நன்றிகள்....
சகோ கூர்மதியன்.....சண்டையில் ஆரம்பித்த எங்கள் உறவு, சமாதானம் என்னும் வார்த்தை மூலம், சகோதர பாசம் கொண்டு, நயமாய் செல்கிறது..உள்ளக் கருத்தை உள்ளபடியே சொல்லி, என் வளர்ச்சிக்கு வித்திட்ட இவருக்கும் நன்றிகள் பல....
சகோதரன் சௌந்தர்க்கும், ரஜீவனுக்கும், நிரூபனுக்கும், மனோவிற்கும், என் பதிவுக்கு மறுமொழியிட்டு, என்னை ஊக்கப் படுத்திய அனைத்து நண்பர்களுக்கும், நன்றி நன்றி நன்றி ...
மீண்டும் என்றேனும் சந்திப்போம்.. இடைவெளிக்கு வருந்தி விடை பெறுகின்றேன்....

பதிவுலகம் அல்லாமல், என் படைப்புக்கு ஊக்கம் கொடுத்த, என் உயிர் நண்பன் குணா விற்கும்,நண்பன் அருணுக்கும், முரசொலிக்கும், சகோதர நண்பன் குமார்க்கும், நன்றி சொல்கிறேன், இந்நேரத்தில்....
முகமறியாமல்.தோள் கொடுக்கும் தோழமையையும், உயிர் கொடுக்கும் சகோதர உறவையும் தந்த பதிவுலகத்திற்கு நன்றிகள் பல....நன்றி நன்றி நன்றி....மீண்டும் என்றேனும் சந்திப்போம்.. இடைவெளிக்கு வருந்தி விடை பெறுகின்றேன்....
மீண்டும் உங்களை சந்திப்பேன்....
அன்புடன்
பிரியத் தோழி
ரேவா
reva.believe2011@gmail.com
அன்புடன்
பிரியத் தோழி
ரேவா
reva.believe2011@gmail.com
11 கருத்துகள்:
விரைவில் மீண்டும் பதிவுலகம் வர வாழ்த்துக்கள்..
உங்கள் வாழ்வில் வென்றிட வாழ்த்துகள் நண்பர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு நன்றி கூறும் உங்கள் பக்குவம் எனக்குப்பிடித்திருக்கிறது முடிந்தவரை தொடருங்கள் வாழ்த்துகள்
என்னங்க இப்படி சொல்லிட்டீங்க...
பிரிவோம் சந்திப்போம்மீண்டும் வருக
என்னாச்சு சகோதரி ....!!
எப்படியோ மீண்டும் சீக்கிரம் பதிவுலகுக்கு வந்துவிடுங்கள் என்பதுவே அனைவரின் எதிர்பார்ப்பும் ...
வணக்கம் ரேவா...இந்த பிரிவு தற்க்காலிகமாக இருக்க விரும்புகிறேன்...
தமிழ்வாசியில்: அட்ராசக்க சி.பி. செந்திலின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்
ரேவா!
வலையுலகில் இருந்து விலகி செல்வதற்கு என்ன காரணம் என்று நீங்கள் சரியாக சொல்லவில்லை! காரணம் எதுவாக என்றாலும் இருக்கட்டும்! ஆனால் வலையை விட்டு விலகும் தீர்மானம் எடுத்தமைக்கு பலத்த கண்டனங்கள்! எனக்கு இது சுத்தமா பிடிக்கல!
சில நேரங்களில் ஒரு சின்ன break தேவைதான் ,அது மீண்டும் புத்துணர்ச்சியோடு திரும்பி வர உதவியா இருக்கும் .
Take care .
அக்காச்சி, நீ போறியா?
எனக்கு காரணம் தெரியுமே?
உனக்கு கலியாணம் தானே!
வாழ்த்துக்கள்!
இது பின்னூட்டம் அல்ல.
சந்தர்ப்பம் கிடைக்கும் போது சந்தோசமான பதிவுகளோடு மீண்டும் வர வாழ்த்துக்கள்!
மீண்டும் பதிவுலகம் வர வாழ்த்துக்கள்..
எழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.
மேலும் விபரம் அறியவும்....
இந்த மோசடியை வெளி உலகத்துக்கு தெரியப்படுத்தவும்.....
எனது வலைப்பக்கம் வாருங்கள்.ப்ளீஸ்...
கருத்துரையிடுக