உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 21 நவம்பர், 2011

என்ன தான் இருக்கிறது உன் கண்களில்....




உன்னைக் காணும் போதெல்லாம்
கர்வப் படச்செய்யும்
அந்த கண்களில்
என்ன தான் ஒளித்துவைத்திருக்கிறாய்...

பட்டாம்பூச்சியாய் படபடக்கிறது
என் கண்கள்
உன் விழிகண்டு..

உன் பார்வை தீண்டும
ஒவ்வொரு நிமிடத்திலும்
பலவாறாய் எனக்குள்
நீ...

சிலநேரப் பார்வை
அரவணைப்பாய்,
சிலநேரப் பார்வை
கதகதப்பாய்..
சிலநேரப் பார்வை
குறுகுறுப்பாய்...
சிலநேரப் பார்வை
கண்டிப்பாய்...
என பலவாறு என்னை
மயக்கியும், கடத்தியும்,
கட்டளையிட்டும், காதலிட்டும்
பாடாய்படுத்தும் அந்த பார்வைக்குள்
என்ன (னைத்) தான் ஒழித்து
வைத்திருகிறாய்
சொல்.

13 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

இன்னும் கண்கள் கவிக்கூட பாடும்...

அழகிய கவிதை...

rishvan சொன்னது…

அருமை.... வாழ்த்துக்கள்.. ரிஷ்வன்.

Tamilthotil சொன்னது…

"கட்டளையிட்டும், காதலிட்டும் "காதலிட்டும் கவிதையாய் இருக்கிறது இந்த வார்த்தையே..."எங்கிருந்து கண்டுபிடித்தீர்கள் இந்த வார்த்தையை, முதல் முறை உங்கள் வார்த்தை உபயோகத்தில் தான் இப்படி பார்க்கிறேன் அருமை....

http://tamilraja-thotil.blogspot.com/

ம.தி.சுதா சொன்னது…

எதிர் பார்ப்பைப் பிரதிபலிக்கும் அழகான வரிகள்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கவிபாடும் அழகிய கண்களின் காதல், தொடரட்டும் அட்டகாசம்...!!!

நிரூபன் சொன்னது…

வணக்கம் அக்காச்சி,
நல்லா இருக்கிறீங்களா?
அவர் கண்களில் தொலைந்து போனது நீங்கள் என்று அறியாது தேடுகின்றீர்களோ?

நிரூபன் சொன்னது…

இறுதி வரிகளில் சிலேடை கலந்து கண்களில் தொலைந்த உள்ளத்தின் உணர்வுகளை மீட்டிப் பார்க்கும் கவிதை அருமை!

நம்பிக்கைபாண்டியன் சொன்னது…

வழக்கம் போல் அழகான காதல் கவிதை!

kiramatthu kallan சொன்னது…

kangalaal kalavadiya manathu indru kathalai puram thalli pona pennai ennavendru kooruvathu ippadikku pethaiyal nirakarikkapattavanarumaiya kavithai anbudan k.muthukumar tirupur....

சித்தாரா மகேஷ். சொன்னது…

ஒவ்வொரு வரிகளும் மிகவும் அருமையாக இருக்கிறது அக்கா.வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

ம் பார்வைகள் பலவிதம்:) அருமை ....

எவனோ ஒருவன் சொன்னது…

வாவ்!! சூப்பர் ரேவா :-)

ஒரு சின்னப் பார்வைக்குள்ள இவ்வளவு விஷயங்கள் இருக்கா!!!! ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க வழக்கம் போல :-)

SELECTED ME சொன்னது…

என்ன (னைத்) தான் ஒழித்து
வைத்திருகிறாய்
சொல்.//// nice